TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:50 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Apr 14, 2024 1:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 13, 2024 5:11 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:33 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

2 posters

Go down

தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள். Empty தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

Post by sakthy Sun Sep 09, 2012 8:18 pm

தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த இணைய நிர்வாக குழுவில் இருந்து ஒருவர்,சொன்ன செய்தி ஒன்று நினைவுக்கு வரவே,நானும் என் மூளைக் கணினியில் இருந்த சில செய்திகளைத் தருகிறேன்.அதாவது பொது அறிவு செய்திகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் அப்பத்தா சொன்ன அறிவுரைக்கேற்ப இதோ சில..................

*** பரமபதம்,(Mokshapat) என்று அழைக்கப்படும் ஏணியும் பாம்பும்(Snake and the Ladders) விளையாட்டு முதலில் இந்தியாவில் தான் ஆரம்பிக்கப்பட்டது.கிமு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருந்தும்,13 ம் நூற்றாண்டு, கவி (poet saint Gyandev ) சில மாற்றத்துடன் செயல்படுத்தியதாக சொல்லப்படுகிறது. நல்லது செய்தால் மோட்சம் செல்லலாம் என்ற கருத்தை சொல்வதாக கூறப்படுகிறது.

*** அந்நியர் ஆதிக்கத்திற்கு முன் இந்தியாவிற்குள் இருந்த எல்லா நாடுகளும் மிக பெரிய பணக்கார நாடுகளாக இருந்தன.அதனால் தான் கொலம்பஸ் இந்தியாவைத் தேடி வந்த போது வழி தவறி அமெரிக்காவிற்கு சென்று விட்டான். அமெரிக்க ஆதிக்குடியினரின் கஷ்ட காலம்,இந்திய நாடுகளில் இருந்தவர்களின் நல்ல காலம் பெரிய இன அழிவில் இருந்து தப்பித்தது.

*** பை- 3.14159......22/7, என்று சொல்லப்படும் கணித மாறிலி, கிரேக்க சொல்லின் முதலெழுத்தால்,பெரிமீற்றர், எழுதப்பட்டாலும் கூட, இந்திய அறிஞர் ஆரியபட்டா என்பவரால் கிபி 400 அளவில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

*** Formula1 எனப்படும் கார் ஓட்டப் பந்தயம் உலகெங்கும் பெயர் போனது அனைவருக்கும் தெரிந்ததே.இந்தப் போட்டியில் கோயம்புத்தூரை சேர்ந்த நாராயணன்(நரேன்) கார்த்திகேயன் தொடர்ந்து பங்குபற்றி வருகிறார்.விளையாட்டுக்காக பத்மசிறி விருது பெற்ற இவர் இன்றைய ஆட்டத்திலும்,இத்தாலி, பங்குபற்றிக் கொண்டிருக்கிறார். சென்ற வார பந்தயத்தில்,பெல்ஜியம், சிறிய விபத்தினால் இடையிலே விலக வேண்டி வந்தது.இந்தப் போட்டியில் பங்குபற்றும் இவர் ஒரே தமிழரும்,ஒரே இந்தியரும் ஆவர்.

***WWN – Weekly World News – இது ஒரு அமெரிக்கப் பத்திரிகை 2007 ம் ஆண்டு வரை இயங்கி தற்போது இணையப் பக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உண்மை போல் இருக்கும் உண்மையல்ல,செய்திகளை படங்களுடன் வெளியிட்டு அமெரிக்காவை மட்டுமல்ல முழு உலகத்தையுமே கவர்ந்து இழுத்தது,இழுத்தும் வருகிறது. பல ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடும் போது,இந்த இணையம் கேலியாக செய்திகளை வெளியிடுகிறது.சமீபத்தில் ஹரி மற்றும் ஒபாமாவும் ,பர்னிங்க் மான் ல்,Burning Man (இது பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன்) இருந்ததாக படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.பெண்கள் எல்லோரும் ஹரியைப் பார்த்து “yah, yah, bing, bing, goo,” என சத்தமிட்டபடி சென்றார்களாம். இன்றைய தொழில்நுட்பம் எப்படி எல்லாம் விளையாடுகிறது.

***உலக தடகள ஓட்டப் போட்டியில் உலக சாதனையாக 100 மீ. 9.58 விநாடிகளாக இருக்கும் நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான100 மீ ஓட்டப் போட்டியில் (Paralympic) இரண்டு கால்களையும் இழந்த தென் ஆபிரிக்க வீரர், ஒஸ்கார் பிஸ்டோரியஸ், 11.17 விநாடிகளில் பொய்க்காலுடன் ஓடி தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

*** Cloning முறையில் உருவாக்கப்பட்ட முதல் உயிரினம் டோலி என்ற செம்மறியாட்டுக்குட்டி ஆகும்.முதல் மனிதக் குழந்தை 2002 மார்கழி 26 ல் பிறந்தது.இதன் பெயர் ஏவா.ஆனாலும் அப்போது அவர் டி என் ஏ ஐ சமர்ப்பிக்காததால் சிலர் அது பொய்யானது என மறுத்துள்ளனர்.இந்த ஏவாளின் பிறந்த நாள் 2002.12.26. அந்த ஏவாள்?

*** Postmortem ,Autopsy என்று சொல்லப்படும் பிரேதப் பரிசோதனையை சீசர் இறந்த போது நடத்தி அவர் உடலில் 23 கத்திக்குத்துக்கள் இருந்ததாக ஆண்டிஸ் டியஸ் என்ற மருத்துவர் அறிவித்தார். ஆனாலும் ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதா இந்தியாவில் அன்றைய நாளில்,கிமு 800 அளவில் பிரேதப் பரிசோதனை பற்றி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.அவர் அறுவை சிகிச்சை பற்றியும்,சம்கிதை என்ற மருத்துவ நூலையும் எழுதி உள்ளார்.

*** பெண்கள் ஒரு முறை காலரை,இருந்தால் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.ஏனெனில் முதல் கணினி ப்ரொக்ரமர்
computer programmer, பிரபலமான ஆங்கிலக் கவி பைரன் பிரபுவின் மகள், அகஸ்டா அட கிங்க் தான், 1830 ல் Analytical Engine ல் கணினி அறிவுறுத்தல்களை எழுதினார்.

*** உலகின் அதி நீள, மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாய் சீனாவில் உள்ள Grand Canal of China,செயற்கை நதி என கூறப்படும் இது, கிமு 486 ல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட இதன் நீளம் 1795 கி.மீ.,Beijing to Hangzhou. இணைக்கப்பட்டுள்ளது.கொஞ்சம் மௌனசாமிக்கு சொல்லுங்கப்பா, தண்ணீர் தராதவங்க நதிகளை எல்லாம் இணைக்கட்டும்.

*** Footbaal,soccer என்று சொல்லப்படும் கால்பந்தாட்டம் உலகின் பல பாகங்களில் வெவ்வேறு விதமாக ஆடப்படுகிறது.நமக்கு தெரிந்த உலக கால்பந்தாட்டம்(11 பேர் ஒரு அணியில் ஆடுவது) ஒன்று,அவுஸ்திரேலிய நாட்டில்( ஒரு அணியில் 18 வீரர்கள்) அமெரிக்காவில் வேறொன்று(ஒரு அணியில் 11 பேர்). இதை விட வேறு பல கால்பந்தாட்டமும்,5,8 வீரர்களுடன் ஆடுவது பல்வேறு நாடுகளில் உண்டு.

*** இது ஒரு கணக்கு முறை.அதாவது ஒரு திகதியில் என்ன கிழமை வருகிறது என்பதை அறிய ஒரு முறை. 09.09.2012 என்ன கிழமை நாள்? கலண்டரை புரட்டாது அறிய ஒரு கணக்கு முறை.
தை-5 , மாசி-1 , பங்குனி -1 , சித்திரை-4 , வைகாசி-6 , ஆனி -2 , ஆடி-4 , ஆவணி- 0 , புரட்டாதி-3 , ஐப்பசி-5 , கார்த்திகை -1 , மார்கழி-3 .
திங்கள்- 1 , செவ்வாய்-2 , புதன்-3 , வியாழன்- 4 வெள்ளி- 5 , சனி- 6 , ஞாயிறு -0 .
இப்போது ஆண்டை 4 ல் வகுத்து, ஆண்டையும் திகதியையும் கூட்டி,மாதத்திற்கு உரிய எண்ணையும் கூட்டி 7 ஆல் பிரிக்கவும். பிரித்த பின் வரும் மிகுதி எண்ணிற்கு உரிய கிழமையைப் பாருங்கள்.
2012 /4 = 503 + 2012 + 09 + 3 =2027/7 = 0 . 0 is ஞாயிறு.
லீப் வருடமானால் தை மாசி மாதங்கள் மட்டும் ஆண்டை நான்கால் பிரித்து ஒன்றை கழித்து விட்டு தொடரவும்.

உங்கள் மூளை என்ற கணினி பல ஆயிரம் TB அளவுடையது. வாழ்நாள் முழுவதும் படிப்பவை அனைத்தையும் சேமிக்க முடியும். படியுங்கள்.சேமியுங்கள். அப்பத்தா சொன்னது போல் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுங்கள்.

சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.

Post by அருள் Mon Sep 10, 2012 7:38 am

சக்தி உங்களின் பதிவுகள் அனைத்தும் பயன்தருபவை தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள். 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum