Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழர்களின் முன் உள்ள பெரும் சவால்கள். சந்திக்குமா தமிழினம்?
2 posters
Page 1 of 1

நேற்றைய விடுமுறை நாள் நன்றாகவே சிந்தனைக்கு வழி செய்தது.நம் நாட்டில் தான் இந்த ஏமாற்றா?இல்லை உலகெங்கும் நம்மை முட்டாளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களா? நாம் கேள்வி கேட்க,கருத்தை சொல்ல தயங்குகிறோம்.எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுகிறோம்.தஞ்சாவூர் பொம்மை போல் தலையை மேலும் கீழும் ஆட்டுகிறோம்.திருவிளையாடலில் தருமி கேட்டு சிவன் பதில் சொல்வதாக காட்சி வருகிறது.இதுவே மாறி சிவன் கேட்டு தருமி பதில் சொல்லி இருந்தால்,சிந்தித்து பாருங்கள்.என்ன பதில் கிடைத்திருக்கும்? மக்களால் தெரிவு செய்யப்படும் அரசு கேள்வியும் நானே பதிலும் நானே என்று தானே கேள்வியை கேட்டு பதிலையும் தானே சொல்லி விடுகிறது. கேட்க வேண்டிய மக்கள் சிவனே என்று கண்னை மூடிக் கொண்டு அடுத்த தேர்தல் வரை பணம்,சலுகை,பிரியாணிக்காக காத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளும், சாமியார்களும் சொல்லவே வேண்டியதில்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்க்காது மற்றவர்கள் மீது பழியை சுமத்தி விட்டு அடுத்த ஆட்சிக்கு கனவு காண்கிறது அரசு.நாமோ 35007 ஆக இருந்து விடுகிறோம்.ஏன்?
கருத்து சொல்வது பற்றி இந்த இணையத்தள நிர்வாகக் குழுவினருடன் முட்டி மோதிக் கொண்டேன்.அவர்கள் பதிலில் எனக்கு திருப்தி இல்லை.35007,35007 எழுதிக் கிழித்தது போதும் என்று என்னை சொல்லி இருக்க வேண்டும். இல்லை எழுது என்று சொல்லி இருக்க வேண்டும்.ஆனாலும் இது ஒரு சாதாரண விசயம்.
ஆனால் ஒரு நாடும் சமூகமும் சாதாரண விசயமா? கேள்வி கேட்பதும் கருத்து சொல்வதும் ஊடக கடமை மட்டுமல்ல,மக்களின் கடமையும் கூடத்தான். வினா கேட்பதில் இரு வகை உண்டு.அறிவினா, அறியாவினா. ஆசிரியர் போல் அறிந்து கேட்பது ஒன்று.மாணவர்கள் போல் அறியாமல் கேட்பது இன்னொன்று. ஆசிரியனும் கேட்பதில்லை, மாணவனும் கேட்பதில்லை முடிவு?இது தான் இன்றைய உலக அரசுகளும் அரசியல்வாதிகளும் நடந்து கொள்ளும் முறை.அரசும் கேட்பதில்லை, தன்னிச்சையாக நடக்கிறது. மக்களும் கேட்பதில்லை,நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள். சரித்திரங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன,மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யாருக்கும் கவலை இல்லை. வியட்னாம் யுத்தத்தை நடத்திய கீசிங்கருக்கு பல எதிர்ப்புக்கள் இருந்தும் நோபல் சமாதானப் பரிசு. தனது சுய நலத்திற்காக மனித நேயம் பேசிய மியன்மார் சூ அம்மையாருக்கு இன்று நோபல் சமாதனப் பரிசு. நாளை ராஜபக்சேக்கு நோபல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. நாம் தான் தூங்கிக் கொண்டிருக்கிறோமே.
எத்தனை வரலாறுகள் மாற்றப்பட்டன. நாம் கவலை கொண்டோமா,தலையைத் தானே ஆட்டினோம்.இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆட்டிய தலை இப்போது தானாகவே ஆடத் தொடங்கி விட்டது. இராமனையும், கண்ணனையும் அவதாரம் என்றார்கள் ஆரியர்கள்.ஆமாம் போட்டோம்.ஆதாம் பாலம் இராமர் பாலம் என்றார்கள் தலையை ஆட்டினோம். தாஜ்மகால் காதலின் சின்னம் என்றார்கள் அதற்கும் ஆமாம் ஆமாம் என்றோம். இரண்டு மாற்றுத் துணிகளுடன் சென்னைக்கு வந்த கருணானிதி கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கேட்க முடியவில்லை. 65 ரூபாய் மாத சம்பளத்தில் நாடக நடிகையாக இருந்த இராசாத்தி அம்மாள் இன்று பல கோடிகளுக்கு அதிபதி.எப்படி வந்தது யாரும் கேட்கவில்லை.
இராமேஸ்வரத்தில் இராணுவ முகாம் கேட்கும் கருணானிதி இலங்கையில் இருக்கும் சீன மீனவர்கள் என்ற பெயரில் நடமாடும் சீன இராணுவத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை. பங்களாதேசில் அமைக்கப்பட இருக்கும் சீன இராணுவ முகாமைப் பற்றி கேட்கவில்லை.சீன மீனவர்கள் என்று இலங்கையால் சொல்லப்பட்டவர்களை சீன தூதரகத்திடம் ஒப்படைத்த இலங்கை,தமிழக மீனவர்களை (அவர்கள் இந்திய மீனவர்கள் அல்லர்) சிறையில் அடைக்கிறது.அதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை. படு வேகமாக TESO வை ESO வாக மாற்றினார், வாழ்வாதிகாரம் என்று பேசுகிறார்.இரண்டு நாட்களில் ராஜா சொன்னதை அப்படியே மாற்றி போட்டார். ஏன்? அவர் அரசியல் வியாபாரம் நடத்த விரும்புகிறார்.நாம் தான் கண்களை மூடிக் கொண்டு கனவு காண்கிறோமே.
கேட்க வேண்டிய நாம் கேட்பதில்லை. கேட்கப்பட வேண்டிய அவர்கள் நம்மைக் கேட்கிறார்கள். அதனால் தான் அதிகாரம்,பணபலம்,ஆயுதபலம் வரலாற்றை மாற்றிக் கொண்டிருக்கிறது. இன்று நாம் தூங்கி விட்டால் ராஜபக்சே என்ன பலர் வீரர்களாக மாமனிதர்களாக வரலாற்றில் எழுதப்படத்தான் போகிறார்கள். அப்படி எழுதப்பட்ட சிலரை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இவை எல்லாம் உண்மையான ஆதாரங்களுடன் எழுதப்படுகின்றன என்பதையும்,எல்லா ஆதாரங்களையும் இடம் கருதி தவிர்த்துள்ளேன் என்பதையும் அறியத் தருகிறேன்.
இந்திய தீபகற்பத்தின் வளங்களை குறி வைத்து ஐரோப்பியர்கள் கண்ட கனவுக்கு உயிரூட்டினான் வஸ் கொட காமா என்ற போர்த்துக்கீசியன். மிளகு போன்ற பொருட்களை முன் வைத்து இந்தியாவைக் கண்டறிய புறப்பட்ட அவனின் வருகையால் பல நூறு ஆண்டுகள் அன்னியரின் சுரண்டலுக்கு இந்தியா,இலங்கை போன்ற நாடுகள் உட்பட்டன. ஆனால் அவனால் சுரண்டப்பட்ட வளங்களை விட,அழிக்கப்பட்ட மக்கள் கூட்டமே அதிகமாகும். தங்கள் உயிர்களையும் நாட்டின் வளங்களையும் பறி கொடுத்த அந்த மனித உயிர்களை இன்று உலகம் கண்டு கொள்ளாது,இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தவன் என்ற உயரிய பட்டத்தை கொடுத்து வரலாற்றையே மாற்றி எழுதியது.
அமெரிக்காவை கண்டு பிடித்ததாக பெருமை பேசப்படும் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமி, அமெரிக்காவைக் கண்டு பிடித்தானா? அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆதிக் குடிகளுக்கும், சிவப்பு இந்தியர்களுக்கும் நடந்த கொடுமைகளை மறந்து விட்டு,அமெரிக்காவை கண்டு பிடித்ததாக மகுடம் சூட்டப்பட்டு சரித்திரத்தில் உயர்ந்த இடம் பிடித்துக் கொண்டானே அந்த ஐரோப்பியன், செய்த கொடுமைகளை இந்த வரலாறு மறந்து விட்டு இன்று விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.அவன் அமெரிக்காவை கண்டு பிடிக்கவில்லை, படை எடுத்த அமெரிக்காவின் முதல் பயங்கரவாதி ஆகவும்,உலகின் முதல் இனப் படுகொலையாளியாகவும் இருந்தான் என்பதே உண்மையாகும். அவன் செய்த படுகொலைகள் நெஞ்சை உருக்கும் செயலாக வரலாற்று ஆசிரியர்கள் சித்தரிக்கிறார்கள். பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம்,பிஞ்சுக் குழந்தைகள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்ததையும்,பெண்களை அடிமையாக தன் வேலைக்காரர்களுக்கு பரிசாக கொடுத்ததும்,அவர்களை உயிருடன் தன் நாய்களுக்கு தீனியாக்கியதையும் தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக் கொணர ஆரம்பித்துள்ளார்கள். இப்படிப்பட்ட மனித மிருகம், இன்று அமெரிக்காவைக் கண்டு பிடித்த மாவீரனாக புகழப்படுகிறான்.
1606 ல் இருந்து எழுதப்பட்ட அவுஸ்திரேலிய வரலாற்றின்படி, அந்த நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தரை இறங்கியவர்களில் Willem Janszoon, Pedro Fernandez de Quiros, James Cook பெயர்கள் இடம் பெறுகின்றன. அங்கிருந்த ஆதிவாசிகள் இவர்களின் கொடுமைகளுக்கு உள்ளான சோக சம்பவங்கள் இன்னமும் சரியாக வைக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளானதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர்.
இந்த நாடுகள் எல்லாம் கண்டு பிடிக்கப்பட்டவை என்று சரித்திரத்தில் மாற்றப்பட்டு, அவர்களுக்கு புகழாரம் சூட்டப்பட்டாலும்,இல்லை இவை எல்லாம் படையெடுப்புத்தான்,ஏற்கனவே வாழ்ந்தவர்களை துரத்தி அழித்து விட்டு கைப்பற்றப்பட்டவை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களை வைக்கிறார்கள். இந்த நிலை ஈழத்திற்கு வந்து விடாது என்பது என்ன நிச்சயம்?
இப்படி வரலாறுகள் மாற்றப்பட்டுக் கொண்டு வந்த நிலையிலும், பல வெளி நாட்டவர்கள் மனித உரிமகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க செய்தி நிறுவனமொன்றின் செய்தியாளர் Tim Kim தந்த கட்டுரை ஒன்றின் பகுதியை இங்கே தருகிறேன்.
…......இனப் படுகொலைகளுக்கு பேர் போன புத்த இராணுவம் தனது கொடிய முகத்தை மீண்டும் ஒரு முறை பர்மா என்ற மியன்மாரில் காட்டத் தொடங்கி உள்ளது.மூன்று வருடங்களுக்கு முன்னர் சிங்கள பௌத்த இராணுவம் தனது இனப் படுகொலையை சிறீலங்காவில் நடத்தி, பாரம்பரிய கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு இனத்தை கொடூரமாக கொன்று குவித்தது.அந்த இனத்தை முற்றாக அழித்து இல்லாமல் செய்ய, 160,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போக்கடிக்கப்பட்டும் பலியாக்கப்பட்டனர்.
…............................உலகின் மிக மோசமான காடுமிராண்டித் தனமான முறையில் கூட்டமாக தாக்கும் குணத்தை இந்த பௌத்த தீவிரவாதிகள் சிறீ லங்காவில் முடித்து விட்டு இன்று பர்மாவிற்கு சென்றுள்ளனர்.
எண்ணிப் பார்க்கிறேன்,29 ஆண்டுகளுக்கு முன் 3000 ற்கு மேற்பட்ட அப்பாவி நிராயுதபாணிகளாக இருந்த தமிழர்களை கொன்றதுடன் அவர்களின் சொத்துக்களையும் கொள்ளை அடித்தனர்.எனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் இருந்து பெற்ற தகவல்களின்படி தீயிட்டதும்,கற்பளித்ததும்,கடத்தி கொலை செய்ததும், சித்திரவதைக்குள்ளானதும் மறக்க முடியாத உண்மைகளாகும். இதை முறியடிக்கப் புறப்பட்ட விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்திற்கு கிடைத்த பரிசு பயங்கரவாதிகள் என்பதாகும்.
…................என்று அந்தக் கட்டுரை தொடர்ந்து இன்றைய பர்மாவின் அட்டூழியங்களையும் விபரிக்கிறது.
அன்று பர்மாவில் தமிழர்கள் துரத்தப்பட்ட பின் ,இன்று மியன்மாராக உருவெடுத்திருக்கும் பர்மா,முஸ்லீம்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.எத்தனை குழந்தைகள் துண்டு துண்டாக வெட்டி எறியப்படுகின்றனர்.கேட்க நாதியில்லை.அரக்கான் என்ற பர்மாவின் ஒரு பகுதியில் ரோகிங்கியா என்ற இனத்தவர்கள் வாழுகிறார்கள். இவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது.குடியுரிமை அற்ற இவர்களின் மதம் வேறு,மொழி வேறு,உருவ அமைப்பும் வேறு.அதனால் இவர்கள் பர்மாவை சேர்ந்தவர்கள் அல்ல என்று ஒதுக்கப்படுகிறார்கள்.
ஜனநாயகம் பேசுவோர்,மனிதநேயம் பேசுவோர் கண்ணை மூடிக் கொண்டு சுயநலவாதிகள் ஆகின்றனர்.இதில் ஆச்சரியம் என்னவென்றால்,மனித உரிமைகள் பேசி சமாதான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட சூ குயி அம்மையார் இந்த படுகொலைகளை மறைத்து பேசியது மட்டுமல்ல,சமீபத்தைய லண்டன் நேர்காணலில் அவர்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் தான். தனது அரசியலுக்காக ஈழத்தை கையில் எடுத்துக் கொண்ட திருக்குவளை தட்சணாமூர்த்தி போல்,இந்த சூ குயி அம்மையாரும் தனது அரசியலுக்காக மனித உரிமைகள் பேசி விட்டு,இன்று தனது நாட்டு மக்கள் சித்திரவதைக்கும் படுகொலைக்கும் உள்ளாகும் போது கண்னை மூடிக் கொண்டாரே. தங்கள் சுயநலத்திற்காக மனித உயிர்களைக் கொன்று குவிப்போரும்,அதற்கு துணை போவோரும் புனிதர்களாக,கதாநாயகர்களாக ஆக்கப்பட்டு ராஜபோக வாழ்க்கை வாழுவதற்கு இந்த உலகமும் வரலாறும் துணை போகிறது என்பது என்னவோ உண்மைதான். இந்த உண்மைகளை நாம் இனம் காண வேண்டாமா? சரித்திர நிகழ்வுகள் மாற்றப்படுகிறது என்பது தெரிந்தும் வாழா இருப்பது முறையா?
லிபியா,எகிப்து என தற்போது சிரியாவிவின் கிளர்ச்சியாளர்களுக்கு அள்ளி அள்ளி ஆயுதம் வழங்கும் அமெரிக்க நாடு, அவர்களை ஜனநாயக போராளிகள் என வர்ணித்து உதவி புரிந்து வருகிறது. ஆனால் அன்று நம் ஈழத்து உறவுகள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட போது பயங்கரவாதிகளாய் சித்தரித்து பாராமுகம் காட்டியது.இவை எல்லாம் வரலாற்றில் எப்படி எழுதப்படப் போகின்றன என்ற கேள்வி எழவே செய்கிறது.
இதே போல் இலங்கைக்குள் நுழைந்த ஆரிய சிங்களர்,இலங்கையை தங்களதாக்கியதுடன்,இன்று தமிழர்கள் வாழும் ஈழப் பகுதியையும் இனப்படுகொலையாலும் ஊடுருவலாலும் கைப்பற்றியதை வரலாறு வேறு விதமாக எழுதி வைத்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் தேவை என வரலாற்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இப்படி பல மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை நாம் எடுத்துப் பார்க்கும் போது,ஈழ தமிழ் மக்களின் இனப்படுகொலையும்,துயரங்களும் அதற்கு எதிராக சிங்களத்தின் ஓங்கி ஒலிக்கும் பிரச்சாரங்களும்,போலி ஆதாரங்களும், அதற்குத் துணை போகும் சோனியா இந்தியாவின் செயல்களும், தமிழர்களாக இருந்தும் இவர்களுக்கு துணை போகும் போலிகளினாலும், பல உண்மைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போது வரலாற்றை எழுதும் ஆசிரியர்களின் மனதில் சந்தேகமாக எழ ஆரம்பித்துள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் பணமும், அதிகார பலமும்,சுயநலம் கொண்ட அரசுகளும் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறார்கள் எழுதியும் விடுவார்கள் என்பது தான்.
இன்று உலகத் தமிழர்களின் முன் இருக்கும் சவால்களை தமிழினம் எதிர் கொண்டு, ஈழத் தமிழர்களின் மட்டுமன்றி அனைத்துலக தமிழர்களின் உண்மை நிலையை,வரலாற்று தவறுகளில் இருந்து காப்பாற்றுமா? இந்தக் கேள்வி பெரும் சவாலாக கேள்விக்குரியதாக இருக்கிறது. இதிலிருந்து தமிழினம் தன்னைக் காத்துக் கொள்ளாவிடின்,சரித்திரத்தில் அழியா அவமானத்தை பொறித்து அவப் பெயருடன் தலை குனிந்து நிற்க வேண்டி வரும். லண்டனில் தொடர்ந்து வரும் போராட்டங்களூம்,இன உணர்வாளர்களின் அயரா முயற்சியும்,அவற்றை சிதறடிக்க முயலும் போலிகளின் நடிப்பினாலும், எதிரிகளின் ஓயாத பிரச்சாரத்தினாலும், நாம் வழி தவறி விடுவோமோ என்ற அச்சம் தலை தூக்கி நிற்கிறது.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழர்களின் முன் உள்ள பெரும் சவால்கள். சந்திக்குமா தமிழினம்?
உங்களின் கருத்துகளை நான் வர வேற் கிறேன்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: தமிழர்களின் முன் உள்ள பெரும் சவால்கள். சந்திக்குமா தமிழினம்?
35007 எழுதிக் கிழித்தது போதும் என்று என்னை சொல்லி இருக்க வேண்டும்.
இல்லை எழுது என்று சொல்லி இருக்க வேண்டும்.ஆனாலும் இது ஒரு சாதாரண விசயம்.
சக்தி இது 35007 என்ன என்று சொல்லவும்
இல்லை எழுது என்று சொல்லி இருக்க வேண்டும்.ஆனாலும் இது ஒரு சாதாரண விசயம்.
சக்தி இது 35007 என்ன என்று சொல்லவும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: தமிழர்களின் முன் உள்ள பெரும் சவால்கள். சந்திக்குமா தமிழினம்?
35007 என எழுதி விட்டு தலை கீழாக பிடித்துப் பாருங்கள். தயவு செய்து அப்படி மட்டும் என்னை திட்டாதீர்கள். நான் பாவம் இங்கு யாருமற்று தனியாக வெள்ளைக்காரிகளின் மத்தியில் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழர்களின் முன் உள்ள பெரும் சவால்கள். சந்திக்குமா தமிழினம்?
நீங்கள் அங்கு வெள்ளைக்காரிகளின் மத்தியில் திண்டாடிக் கொண்டு இருக்கிரிங்க நாங்க கொள்ளை காரங்க கிட்ட மாட்டிகிட்டு இருக்கோம்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» புதிதாக அமைய உள்ள மோடி அரசு முன் காத்திருக்கும் 10 சவால்கள்
» மயானத்தில் உள்ள தமிழர்களின் கல்லறைகளுக்கும் நிம்மதியில்லை! - விஷமிகளால் சேதம்.
» வடக்கில் தமிழர்களின் மாபெரும் வெற்றி! மகிந்தவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் அடையாளம்... தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் தமிழர்கள் : அல்-ஜெசீரா
» 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான்
» மலேசியாவில் உள்ள முழு இலங்கை தமிழர்களின் ரகசியங்களை தேடும் இலங்கை அரசு !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum