Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அவுஸ்திரேலியாவிடம் வசமாக மாட்டிய கோத்தபாய: நடந்தது என்ன ? SPECIAL REPORT
Page 1 of 1

கடந்த வாரம் கிரிபத்கொடவில் வைத்துக் கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் என்னும்
நபர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார். இலங்கைப் புலனாய்வுத்துறையால்
கடத்தப்பட்ட இவர், எவ்வாறு இவ்வளவு சீக்கிரம் விடுவிக்கப்பட்டார் ?
கடத்தப்படுபவர்கள் காணமல் போவதும், அவர்கள் சடலமாக மீட்க்கப்படுவதும் தானே
இலங்கையில் காலாதி -காலமாக நடக்கிறது. இவர் மட்டும் எவ்வாறு
விதிவிலக்கானார் என்று கேட்கிறீர்களா ? நடந்து முடிந்தது ஒரு சுவாரஷியமான
விடையம் தான். சரி வாருங்கள் நடந்தது என்ன என அறிந்துகொள்ளலாம்.
இலங்கையில்
செயல்பட்டுவரும் ஜே.வி.பி கட்சியில் இருந்து சில அங்கத்தவர்கள் பிரிந்து
முன்நிலை சோஷலிசக் கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பித்தனர். இதில் முக்கிய
உறுப்பினராக குமார் குணரட்னம் செயல்பட்டு வந்தார். இவரைக் கடத்தினால் இக்
கட்சியினர் தானா அடங்கிவிடுவார்கள் என விமல் வீரவன்ச கோத்தபாயவிடம்
தெரிவிக்க , கோத்தபாய முன்னப் பின்ன யோசிக்காமல் சரி கடத்துங்கள் என்று
தனது கூலிப்படைக்கு தெரிவித்துவிட்டாராம். புலனாய்வுப் பிரிவினரும் குமாரை
சிம்பிளாகக் கடத்திவிட்டனர். ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் பூதாகரமானது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட குமார், இலங்கை வரும்போது தனது இலங்கை
கடவுச்சீட்டை(பாஸ்போட்டைப்) பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அவுஸ்திரேலிய
பிரஜாவுரிமை கொண்டவர் என்பதும், அவுஸ்திரேலியா இதில் தலையிடும் என்பதும்
கோத்தபாயவுக்கு அறிவிக்கப்படவில்லையாம்.
குமார்
கடத்தப்பட்டதும், விரைந்து செயல்பட்ட அவரது மனைவி மற்றும் மகள்,
அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய மனித உரிமைச் சபைக்கும் பகிரங்க முறைப்பாடுகளை
மேற்கொண்டனர். இதனால் இலங்கை அரசு மீது கடும் அழுத்தங்கள்
பிரயோகிக்கப்பட்டது. அவுஸ்திரேலியத் தூதுவர் கோத்தபாயவோடு நேரடியாகத்
தொடர்புகொண்டு, குமாரை விடுவிக்குமாறு கோரியது பெரும் சங்கடத்தை
தோற்றுவித்தது. கோத்தபாய கடும் கோபம்கொண்டு, அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை
பெற்ற நபர் ஒருவர் இலங்கையில் அரசியல் செய்யமுடியாது என காட்டுத்தனமாகக்
கத்தினார். இதனை அவுஸ்திரேலியா திருப்பிக்கேட்டால் என்ன செய்ய முடியும் ?
அதாவது இலங்கைப் பிரஜாவுரிமை மற்றும் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்ட
இலங்கைத் தூதுவர் எவ்வாறு அவுஸ்திரேலியாவில் அரசியல் செய்கிறார் என்று
அவர்கள் திருப்பிக்கேட்டால் கோத்தபாய என்ன செய்திருக்க முடியும் ?
கடந்த
வாரம் கடத்தப்பட்ட குமார் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார். இங்கேதான்
கோத்தபாய தான் புத்திசாலி எனக் காட்ட முற்பட்டுள்ளார். அதாவது இவரை விடுதலை
செய்துவிட்டு, பொலிஸ் நிலையம் சென்று சரணடையுமாறு கூறியுள்ளார். இதனை
அடுத்து நேற்றைய தினம் இரவு சுமார் 7.30 மணியளவில் அவர் பொலிஸ் நிலையத்தில்
சென்று தான் விடுவிக்கப்பட்டதை தெரிவித்துள்ளார். இதனை வைத்து இலங்கை அரசு
அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் என்ற சொல்பதத்தைப் பாவித்துள்ளனர்.
குமார் ஒன்றும் தேடப்படும் குற்றவாளி இல்லை பொலிஸ் நிலையம் சென்று சரணடைய.
அவர் காணமல் போயிருந்தார். எனவே அவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்று தான்
இலங்கை அரசு தெரிவித்திருக்கவேண்டும்.
இது எல்லாம் போக, இவரைத்
தெரியாத்தனமாகக் கடத்தி பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட கோத்தபாய தனது
ஆத்திரத்தை காட்ட தவறவில்லை. குமாரை உடனே நாடுகடத்துமாறு
உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் நிலையம் சென்ற குமாரை அங்கிருந்தே வீமனநிலையம்
கொண்டுசென்ற அதிகாரிகள், அவரை அவுஸ்ரேலியா செல்லும் யுஎல்.882 என்னும்
விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியுள்ளனர். அவர் தனது பொருட்களைக்கூட
எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று அதிர்வு இணையம்
அறிகிறது. கடத்தப்பட்ட குமார் விரைவாக விடுதலையானதற்கு மேலும் ஒரு காரணம்
இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் அட்மிரல்
திசார சமரசிங்க இவ்விடையம் தொடர்பாக கடும் முயற்சிகளை மேற்கொண்டாராம் !
அவுஸ்திரேலிய
அரசுடன் இப்போதுதான் தாம் நல்லுறவுகளைக் கட்டியெழுப்பி வருவதாகவும்,
இதற்கிடையில் இவ்வாறு ஒரு பிரச்சனை வந்தால் தனது முயற்சிகள் அனைத்தும்
பாழாகிவிடும் என்றும் அவர் மாரடித்துப் புலம்பியுள்ளார். இவர்
பிரத்தியேகமாக கோத்தபாயவை தொடர்புகொண்டு குமாரை உடனே விடுவிக்குமாறு
கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய அரசோடு முண்டுவது பெரும்
பாதிப்புகளை இலங்கைக்கு ஏற்படுத்தும் எனவும் இவர், கோத்தபாயவுக்கு பாடம்
எடுத்துள்ளாராம் ! என்ன செய்ய முடியும் கடைசியில் பணிந்தார் கோத்தபாய !
எதுக்கெடுத்தாலும் ஆட்கடத்தலில் ஈடுபடும் கோத்தபாயவுக்கு இது ஒரு நல்ல
பாடம் !

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்!
» நிலக்கரி ஊழலில் வசமாக மாட்டிய மன்மோகன் சிங்
» வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் நடந்தது என்ன
» கொலைகாரன் ராசபக்சேக்கு என்ன நடந்தது?
» கூகுளில் பேய் - நடந்தது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum