Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எது நாடகம்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
Page 1 of 1
எது நாடகம்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
சென்னை.,
மார்ச்.23: இலங்கையில் நடக்கும் உள் நாட்டுப் போரை நிறத்துவதற்கான
அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று சொல்லிவிட்டு இப்போது இலங்கைத்
தமிழர்களை கொன்றதற்காக அமெரிக்காவின் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவேண்டுமென்று கடிதம் எழுதுவதுதான் நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 23.3.2012
20-3-2012 தேதிய இதழ்களில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட நீண்ட
அறிக்கையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா. சபையில் அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று நமது பிரதமர் டாக்டர்
மன்மோகன் சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் கூறியதை பற்றி, ஒரு மழுப்பலான
பயனில்லாத ஒரு பதில் என்றும், கருணாநிதியின் நாடகத்திற்கு பிரதமரே துணை
போகும் வகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே
குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும்
வருத்தத்திற்குரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறு அறிக்கை
விடுத்த அதே ஜெயலலிதா மூன்றே நாட்களில் இன்று ஏடுகளில் விடுத்துள்ள
அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக்
கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்தமைக்காக
பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீண்டதோர் அறிக்கை விடுத்துள்ளார்.20ஆம்
தேதி பிரதமரை வசை பாடியதும் இதே ஜெயலலிதா தான் - 23ஆம் தேதி பிரதமருக்கு
நன்றி கூறியிருப்பதும் இதே ஜெயலலிதா தான். 20ஆம் தேதிய அறிக்கையில்
8-6-2011 அன்று இந்தப் பிரச்சினைக் காக தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கைத்
தமிழர்களுக்கு ஆதரவாக தன்னால் தீர்மானம் முன் மொழியப்பட்டு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். சட்டப் பேரவையில்
ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தை மட்டுமா முன்மொழிந்தார்? 16-4-2002 அன்று இதே
ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையிலே முன் மொழிந்த தீர்மானம் என்ன தெரியுமா?
இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக
இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி
நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தையே அ.தி.மு.க. ஆட்சியிலே
சட்டப் பேரவையிலேயே நிறைவேற்றி, விடுதலைப் புலிகள் தமிழகத்திலேயே நடமாடக்
கூடாது என்று தடுப்பதற்கு முதன் முதலாக வழி வகுத்து, விடுதலைப் புலிகளுக்கு
ஆதரவாக நடந்து கொண்டவர்களை யெல்லாம் பொடா சட்டத்திலே கைது செய்து சிறையிலே
வைத்தப் பெருமைக்கும் உரியவர் தான் ஜெயலலிதா.தமிழர்களும்,
தமிழ்நாட்டு மக்களும் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் தான் கடிதம் எழுதினேன், தான் தான்
தீர்மானம் கொண்டு வந்தேன், தான் தான் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்
என்றெல்லாம் தற்புகழ்ச்சி பாடி அறிக்கை விட்டு ஏமாற்ற எண்ணுகிறார்.நாடாளுமன்றத்தில்
பிரதமர் தெரிவித்த கருத்துப் பற்றி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா
தேவையில்லாமல் அந்த அறிக்கையிலே என்னையும் இழுத்து; நான் நாடகம் போடுவதாகச்
சொல்ல வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது?யார் போடுவது நாடகம்?
இலங்கையிலே நடைபெற்ற இறுதிப் போரில் இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம்
கொன்று குவித்துக் கொண்டிருந்த போது, 17-1-2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த
அறிக்கையிலே என்ன சொன்னார்?இலங்கைத் தமிழர்களைக் கொல்ல
வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால் அப்பாவிப் பொது
மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்; விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி
செயல் படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.
இலங்கையில் நடக்கும் உள் நாட்டுப் போரை நிறத்துவதற்கான அதிகாரம் இந்திய
அரசிடம் இல்லை என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? அதை யெல்லாம் அப்படியே
மறைத்து விட்டு, இப்போது இலங்கைத் தமிழர்களைக் கொன்றதற்காக அமெரிக்காவின்
தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று கடிதம் எழுதினால், அறிக்கை
விடுத்தால் அதற்குப் பெயர் தானே நாடகம்?
Similar topics
» முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம்
» தி.மு.க.,வின் அடுத்த தலைவர் யார்? அழகிரி பேட்டிக்கு கருணாநிதி பதில்
» "நானா கபட நாடகம் ஆடுகிறேன்! மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!- கருணாநிதி ஆவேசம்"
» பதில் அளிப்பாரா தமிழ் இன துரோகி கருணாநிதி
» பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? கருணாநிதி பதில்
» தி.மு.க.,வின் அடுத்த தலைவர் யார்? அழகிரி பேட்டிக்கு கருணாநிதி பதில்
» "நானா கபட நாடகம் ஆடுகிறேன்! மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!- கருணாநிதி ஆவேசம்"
» பதில் அளிப்பாரா தமிழ் இன துரோகி கருணாநிதி
» பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? கருணாநிதி பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum