Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மோசமான கருத்துக்களை சென்சார் - ட்விட்டர் அதிரடி
Page 1 of 1

இந்தியாவில்
எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று
கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில்
முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான
கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.
இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.
இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இணையவெளியில்
கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும்
தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு
கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன. இந்த
நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines) எல்லா வகையான
தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை
செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.
பெரும்பாலான
முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான
கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத்
தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.
சீனாவில்
90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும்
சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது
கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு
கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு
எச்சரித்ததால் அடங்கிப் போனது.
அதேபோல,
ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை
சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு
நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை
வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.
ஆனால்
இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும்
இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக்
கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
கருத்து
சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக
இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள்
மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள்
கருத்து தெரி்வித்து வருகின்றனர்.
இந்த
நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும்
சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும்
தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த
குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி
வருகின்றன.
இணையவெளியை
கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா
ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின்
வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து
பண்ணியது.
ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்திய
அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்-
படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ட்விட்டர்
சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி
வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர்
கருத்து தெரிவித்துள்ளனர்.
கூகுளும்
யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி?
சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான
கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுகின்றன என்பது கவனத்தில்
கொள்ளத்தக்கது.
300
மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள்
இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது
அவசியமாகியுள்ளது. இப்படி ஒரு சட்டம் வந்தால், கூகுள் உள்ளிட்ட அனைத்து
நிறுவனங்களும் தாமாகவே இணையதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில்
தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வார்கள்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 9/06/2011 ட்விட்டர் போஸ்ட்களை பேஸ்புக்கில் Auto Publish செய்ய புதிய வசதி
» புலிவேஷத்துக்கு யு / ஏ சான்றிதழ் தந்த சென்சார்!
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» ஜெயலலிதாவின் கருத்துக்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை-இலங்கை
» பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தள பிரசாரங்களுக்கும் கட்டுப்பாடு போட்டது தேர்தல் ஆணையம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum