Latest topics
» நாவல் தேவைby jayaragh Yesterday at 11:09 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
தினம் ஒரு தகவல் (தொடர்)
Page 1 of 16
Page 1 of 16 • 1, 2, 3 ... 8 ... 16
தினம் ஒரு தகவல் (தொடர்)
பொதுஅறிவை மேம்படுத்திக் கொள்ள நாளொரு தகவல்கள்.
பேர்விடின் (Pervitin) இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிற்லரின் நாசிப்படைகள் பாவித்த ஸ்பீட் போதைப் பொருளாகும்.பெர்விடின் என்ற இந்த ஸ்பீட் வேகத்தை அதிகரிக்கும் போதைப் பொருள் மூன்று நாட்களுக்கு மேல் தூக்கம் இல்லாமல் செயல்பட வைக்கும்.Methamphetamine என்ற போதைப்பொருள் 1887 இல் ADHD (attention deficit hyperactivity disorder) என்ற நோய்க்காக பாவிக்கப்பட்டது.அது உருமாறி பெர்விடின் ஆயிற்று.
உலக யுத்தத்தின் போது ஹிற்லர் பாவித்ததாக கூறி மேற்குலகம் தன்னை காப்பாற்றிக் கொண்டது.ஆனால் பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்த போதைப் பொருளை பாவித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹிற்லரின் வெற்றிக்கும் அதேசமயம் தோல்விக்கும் பேர்விடின் காரணமாயிற்று.
ஹிற்லர் கால பேர்லினில் உள்ள பெர்விடின் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இது.
[You must be registered and logged in to see this image.]
இருமுகன் படத்தில் இந்த ஸ்பீட் பாவனை பற்றி காட்டப்பட்டிருக்கும்.

Last edited by வாகரைமைந்தன் on Sun Jul 11, 2021 11:13 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1404
Join date : 23/05/2021
துங்குசுக்கா நிகழ்வு
துங்குசுக்கா நிகழ்வு (Tunguska event,துங்குஸ்கா விண்வீழ்கல்) எனும் சொற்றொடரால் குறிப்பிடப்படுவது 1908ம் ஆண்டு, ஜூன் 30, காலை உருசிய நாட்டின் மாநிலமான யெனிசெய்ஸ்க்கில் ஓடும் டுங்குஸ்க்கா நதியின் அருகாமையில் நிகழ்ந்த பாரிய வெடிப்பு நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்வினால் கிட்டத்தட்ட கிழக்கு சைபீரிய காட்டின் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதி தரை மட்டமாக்கப்பட்டது.எனினும் இப்பிரதேசத்தின் சனத்தொகை அடர்த்தி குறைவு காரணமாக இதுவரை மனித உயிரிழப்புகள் எதுவும் பதியப்படவில்லை.
ஜூன் 30ம் திகதி காலை 07:17 மணியளவில் பைக்கால் ஏரிக்கு வடமேற்கே வசிக்கும் ரஷ்ய குடியேறிகள் மற்றும் எவான்கி ஆதிக்குடி மக்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் நீல நிற ஒளிப்பிழம்பொன்று வானில் செல்வதை அவதானித்தனர்.பத்து நிமிடங்களின் பின் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் இராணுவ ஏவுகணையின் ஒலி போன்ற பெரும் சப்தமொன்று கேட்டது.வெடிப்பு நிகழ்வுக்கு அண்மையில் வசித்தவர்களின் கூற்றுப்படி அவ்வொலி கிழக்கிலிருந்து வடக்காக சென்றுள்ளது.அவ்வொலி ஏற்படுத்திய அதிர்வலைகள் சில நூறு கிலோமீட்டர்கள் அப்பாலிருந்த மனிதர்களைத் தள்ளாட வைத்ததுடன் ஜன்னல்களையும் உடைத்தது.பெரும்பாலான மக்கள் வெடிப்பைத் தவிர்த்து சத்தத்தையும் நடுக்கத்தையும் மட்டுமே உணர்ந்துள்ளனர். ஆனாலும் அங்கு எந்தவித பள்ளமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் இவ்வெடிப்புக்கு காரணம் விண்கல் தாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் சில எதிர் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன;வானியற்பியலாளர் வுல்ஃப்கேங் குண் இவ்வெடிப்புக்கு புவியோட்டிற்குள் இருந்த பத்து மில்லியன் தொன் அளவிலான இயற்கை வாயுவின் வெடிப்பே காரணம் என்கிறார்.
2013 பெப்ரவரி 15 இல் ரூசிய நாட்டில் இப்படியான சிறிய நிகழ்வு நடந்தது.மெக்சிக்கோவிலும் சிறிய விண்கல்? விழுந்தது.அதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.
(நாசாவும் தனது ஆய்வுகளை நடத்தி விண்கல் அல்லது விண்கல் துண்டுகள் விழுந்திருக்கும் எனத் தெரிவித்தது.அமெரிக்கா நாசா எது சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.வெள்ளைக்காரன் சொன்னால் அது சரியாக உண்மையாக இருக்கும் என நாமும் ஆமாம் போடுகிறோம்.நிலாவுக்கு அமெரிக்க சென்றதை இன்னமும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.அன்று நிலவுக்கு சென்றிருந்தால்,இதுவரை இத்தனை ஆண்டுகளாகியும் அமெரிக்கா ஏன் மறுபடி நிலவுக்கு செல்ல முயற்சிக்கவில்லை என்ற கேள்வி அமெரிக்கர்களிடையே இன்றும் சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.)

Teleprompter
Teleprompter
தொலைக்காட்சி நிலையங்களில் செய்தி வாசிப்பவர், கையில் எதையும் வைத்துப் படிக்காமல் நேரடியாக படிப்பதற்கு உதவுவது டெலிப்ரொம்ப்டர் ஆகும்.நினைவில் செய்தியை வைத்திருக்காமல் நேரே பேசுவது போல் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
இதைவிட கூட்டங்களில் வாசிக்காமல் நேரே பேசுவது போல் படிக்கவும் உதவும்.சிலர் ஆங்கிலம் போன்ற மொழி தெரியாதவர்கள் தங்கள் மொழியில் எழுதி (ammaa-appaa…) படிக்கலாம். சிலர் (உங்களுக்குத் தெரிந்த ஒருவர்) ஆங்கில உரையை இப்படி கூட்டங்களில் முக்கியமாக வெளிநாடுகளில் படிப்பார்.முன்னால் இருப்பவர்கள் நல்ல ஆங்கில மொழி அறிவு உள்ளவர் எனக் கூறிக் கொள்வர்.இப்படி ஆங்கில உரையை தமிழில் எழுதிப் படிக்கும் போது உண்மையிலேயே ஆங்கிலத்தில் உரையாற்றுவது போல் இருக்கும்.
இதற்கு தேவையானவை teleprompter mirror + display.
நாமாகவும் அல்லது செயலி மூலமாகவும் சுலபமாக பாவிக்க முடியும்.
மோடி,பைடன் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த முறையில் உரையாற்றுகிறார்கள்.தேர்தல் காலத்தில் ஜோ பைடன் டெலிப்ரொம்ப்டர் தடையான போது சிரமப்பட்டார். ஊடகங்களால் இது விமர்சிக்கப்பட்டது.கொஞ்சம் நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
மோடி பேசும் போது டெலிப்ரொம்ப்டர் மிரர் இரண்டு பக்கங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
சிலசமயம் நன்றாக மொழி அறிவு இல்லையேல் தவறாக சொல்லி விடுவதுண்டு.Mrs.Srisena என்பதை எம்.ஆர்.எஸ் படித்த்தை…

Jib
jimmy jib or jib or crane shot… எனச் சொல்லப்படுவது படம் பிடிப்பதற்கான முறையாகும்.வெவ்வேறு இடங்களில் இருந்து படம் பிடிப்பதற்காகவும் நீரில் படம் பிடிப்பதற்காகவும் பாவிக்கிறார்கள்.பொதுவாக கிரேன் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது உயர் கட்டிடங்கள் அமைக்க பாவிக்கப்படும் பழுத்தூக்கி ஆகும்.அதுபோல் காமெராக்களை உயர்ந்த இடங்களில் இருந்து இயக்க பயன்படுகிறது ஜிப்
Jib அல்லது crane இல் காமெராவை அமைத்து படம் பிடிப்பது கிரேன் ஷொட் எனவும் நேர் உயரத்தில் கிரேன் அல்லது ஜிப்பில் வைத்து எடுப்பது boom shot எனவும் சொல்வார்கள்.
Jib அல்லது crane இல் காமெராவை அமைத்து படம் பிடிப்பது கிரேன் ஷொட் எனவும் நேர் உயரத்தில் கிரேன் அல்லது ஜிப்பில் வைத்து எடுப்பது boom shot எனவும் சொல்வார்கள்.
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1404
Join date : 23/05/2021
பல்லுருப்பெறல்(polymorphism)
பல்லுருப்பெறல்(polymorphism)
பொதுவாக கல்லூரியில் பயிலும் ஆண்மாணவர்கள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய புதிய நண்பர்களுடனான நட்பினை தொடங்குவார்கள் .
ஆயினும் அதே கல்லூரியில் பயிலும் மாணவிகள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய நண்பர்களுடனான நட்பினை முடித்து கொள்வார்கள்.ஆக இருதரப்பு மாணவர்களும் பயன்படுத்திடும் ஆங்கில சொல் “friendship” என்பது ஒன்றுதான் ஆனால் அதனை அவரவர்கள் பயன்படுத்திடும் முறை அல்லது வழி மட்டும் வித்தியாசமானதாகும்
அதனையே D எனும் கணினிமொழியில் பல்லுருப்பெறல்(polymorphism) என அழைப்பார்கள் அதாவது ஒரே கட்டளைசொல் ஆனால் அதன் முடிவு மட்டும் பலஉருபெறும்,இதேபோல் ஜாவா மொழியிலும் கணினித் துறை,உயிரியலிலும் பாவனையில் உள்ளது.
ஒளியின் வேகம் மாறுபடுமா?
ஒளியின் வேகம் (c-constant) , காற்று, நீர்,கண்ணாடி போன்ற வெளிப்படையான,ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய ஊடகம்(transparent media) ஒன்றின் ஊடாக பயணிக்கும் போது வேகமாற்றம் ஏற்படும்.
சாதாரணமாக நாம் ஒளியின் வேகம் என்ன எனக் கேட்டால்,300,000 km/s (186,000 mi/s) எனச் சொல்வோம்.சரியான அளவு 299,792,458 m/s ஆகும்.இது வெற்றிடத்தில் (vacuum) அளக்கும் வேகம் ஆகும்.
கலிலியோ அளந்த முறையால் சரியான வேகத்தை கண்டறிய முடியவில்லை.அவருக்கு முன்னரும் பின்பும் பலர் வேகத்தை அளவிட்டனர். ஆயினும் 1972 இல் ஈவின்சன் லேசர் முறையை பயன்படுத்தி சரியான வேகத்தைக் கண்டறிந்தார்.
[You must be registered and logged in to see this image.]
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு - E=mc2 இன் படி..
ஒளி காற்று,நீர்,கண்ணாடி ஊடாக வேகம் குறைவாகிறது.குறையும் வேக விகிதம் the refractive index of the medium,இது ஒன்றுக்கு மேலாக இருக்கும்.இதை Jean Foucault என்பவர் 1850 இல் கண்டறிந்தார்.

இணையம்
முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.
1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபி (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.
1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டது.இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அவாவும் அமெரிக்காவுக்கு பிறந்தது.எனவே,அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர்,உடனடியாக ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார்.அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA – Advanced Research Project Agency) எனப்பட்டது.
ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணையத் தந்தையாக அறியப்படுகிறார்.
இந்த சூழலில் பாஸ்டன் நகரின் எம்ஐடீயில் (MIT – Massachusetts Institute of Technology) பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் லியோனார்டு கிளெய்ன்ராக் என்பார் ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணினிகளுக்கிடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டினார்
Tim Berners-Lee, பிரித்தானிய விஞ்ஞானி World Wide Web (WWW) ஐ 1989 மார்ச்சில் CERN இல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உருவாக்கினார்.

CERN
அரசுகளுக்கிடையேயிலான UNESCO கூட்டம் 1951 டிசம்பர் மாதம் பாரிஸ் சில் நடந்தது. அதில் .The European Organization for Nuclear Research (French: Organisation européenne pour la recherche nucléaire ) உள்ளடக்கிய European Council for Nuclear Research (in French Conseil Européen pour la Recherche Nucléaire) அமைப்பை அனுமதித்தது.
இந்த European research organization, உலகிலேயே மிகப் பெரிய particle physics ஆய்வு அமைப்பை 1954 செப்டெம்பர் 29 இல் உருவாக்கியது.இது ஜெனிவாவை தளமாக கொண்டு பிரான்ஸ்-ஸ்விற்செலாந்து நாட்டு எல்லையில் அமைந்தது.இதில் ஐரோப்பிய நாடல்லாத இஸ்ரேல் உட்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.CERN நிறுவனம் United Nations Observer ஆக இருக்கும்.தலைமை அலுவலகம் Meyrin, Canton of Geneva, Switzerland இல் இருக்கிறது. அலுவலக மொழிகள் ஆங்கிலம்,பிரென்ச்
முதல் ip router
[You must be registered and logged in to see this image.]
முதல் web server

இரண்டு மாதங்களின் பின்னர் e provisional Council – the acronym CERN பிறந்தது.

cern முன்பகுதி

CERN Hostel, building 39 – வரவேற்புப் பகுதியில் இருக்கும் சிலை

இங்கிருந்து முதல் இணையப் பக்கம் (web page) 1991 ஆக்ஸ்ட் 6 இல் வெளியானது.European Organization for Nuclear Research, CERN. இல் உள்ள NeXT
கணினி மூலம் Tim Berners-Lee உருவாக்கிய World Wide Web project தனது இணையச் சேவையை தொடங்கியது எனலாம்.

கூகிளின் கதை
கூகிளைப் பற்றி ஏற்கனவே சில பதிவுகள் வந்து விட்டன.வரலாறு மறைத்த சில தகவலுடன் கூகிளின் கதை இது.
கூகிளை ஆரம்பித்தவர்கள் ஆய்வுக் கட்டுரையை எழுதினாலும்,அவர்களுடன் கூட இருந்து கூகிளின் code இன் பெரும்பகுதியை எழுதியவர் Scott Hassen.அவர் தொடக்கத்திலேயே விலகியதால்,அவர் பெயர் மறைக்கப்பட்டது. இன்றும் பல இடங்களில் மின் அஞ்சலை கண்டு பிடித்தவர் பெயர்,விமானத்தைக் கண்டு பிடித்தவர் என பல மறைக்கப்பட்டுள்ளது. ஏன்? தெரியவில்லை.
கூகிள் மென்லோ பார்க் ,கலிபோர்னியாவில் Larry Page,Sergey Brin என்பவர்களால் 1998 செப்டெம்பர் 4 இல் உருவானது.அதற்கு அவர்களின் ஸ்டாண்ட்போட் பல்கலைக்கழக ஆய்வு அடித்தளம் அமைத்தது.
கூகிள் முதலில் BackRub என்ற பெயரில் (backlinks ஐ தேடுவதால்) தொடங்கப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
இது BackRub இன் முதல் அலுவலகம்…. அதாவது கூகிளின் முதல் அலுவலகம்.

பின்னர் பேராசிரியர் ஒருவரால் googleplex என பெயர் சூட்டப்பட்டது.அதை விரும்பாமல் googol என பெயரை சூட்டினார்கள். அங்கேயும் சிக்கல் வர,(ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு,அதை விட்டுக் கொடுக்க மறுத்ததால் )Google என மாற்றம் செய்தார்கள்.
அவர்களுக்கு பிடித்த பெயர் Googol என்பதாகும்.அதற்குக் காரணம் கணினி முறையில்….

முதல் கூகிள் பக்கம்….
இப்படி திட்டமிட்டு ……

இப்படி உருவானது.

கூகிள் வியாபார நோக்குடன் செயல்பட்ட 1999 மார்ச்சில் தொடங்கிய போது …

165 University Avenue in Palo Alto இல் இருந்தது.
பின்னர் சொந்தமாக ……

2001 ஏப்ரல் 1 இல் Gmail

2006 இல் YouTube ஐ வாங்கியது கூகிள். YouTube ஐ PayPal இல் வேலை பார்த்த Steven Chen, Chad Hurley,இருவருடனும் Jawed Karim ம் இணைந்து கொண்டார்.
Karim met fellow YouTube co-founders while working at PayPal. YouTube co-founder
அதன் முதல் பக்கம் …

முதல் காணொலி -"Me at the zoo", என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
23.04.2005 இல் சண்டியாகோ மிருககாட்சிச்சாலையில் இருந்து கரீம்-
Karim says: "Alright, so here we are in front of the elephants. "The cool thing about these guys is that they have really, really, really long trunks.
"And that's, that's cool." ஒலி சரியில்லாமல் பதிவான காணொலி...
2008 இல் முதல் ஆன்றொயிட் கைபேசி உருவானது.
[You must be registered and logged in to see this image.]
அதே 2008 இல் கூகிள் குரோம் உலாவி….

2010 இல் சாரதி இல்லா கார்………..

2012 இல் கூகிள் கண்ணாடி + டயபிட்டிஸ் நோயாளிகளுக்கான குளுக்கோஸ் அளவிடும் contact lens .

2015 அக்டோபர் 2 இல் Alphabet நிறுவனத்தை கூகிள் அறிவித்ததை தொடர்ந்து Google Inc இல் இருந்து Google LLC ஆக கூகிள் மாறியது. இந்த அறிவிப்பை 2015 ஆகஸ்ட் 10 இல் அப்போதைய CEO Larry Page வெளியிட்டார்.
கூகிளை ஆரம்பித்தவர்கள் ஆய்வுக் கட்டுரையை எழுதினாலும்,அவர்களுடன் கூட இருந்து கூகிளின் code இன் பெரும்பகுதியை எழுதியவர் Scott Hassen.அவர் தொடக்கத்திலேயே விலகியதால்,அவர் பெயர் மறைக்கப்பட்டது. இன்றும் பல இடங்களில் மின் அஞ்சலை கண்டு பிடித்தவர் பெயர்,விமானத்தைக் கண்டு பிடித்தவர் என பல மறைக்கப்பட்டுள்ளது. ஏன்? தெரியவில்லை.
கூகிள் மென்லோ பார்க் ,கலிபோர்னியாவில் Larry Page,Sergey Brin என்பவர்களால் 1998 செப்டெம்பர் 4 இல் உருவானது.அதற்கு அவர்களின் ஸ்டாண்ட்போட் பல்கலைக்கழக ஆய்வு அடித்தளம் அமைத்தது.
கூகிள் முதலில் BackRub என்ற பெயரில் (backlinks ஐ தேடுவதால்) தொடங்கப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
இது BackRub இன் முதல் அலுவலகம்…. அதாவது கூகிளின் முதல் அலுவலகம்.
[You must be registered and logged in to see this image.]
பின்னர் பேராசிரியர் ஒருவரால் googleplex என பெயர் சூட்டப்பட்டது.அதை விரும்பாமல் googol என பெயரை சூட்டினார்கள். அங்கேயும் சிக்கல் வர,(ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு,அதை விட்டுக் கொடுக்க மறுத்ததால் )Google என மாற்றம் செய்தார்கள்.
அவர்களுக்கு பிடித்த பெயர் Googol என்பதாகும்.அதற்குக் காரணம் கணினி முறையில்….
[You must be registered and logged in to see this image.]
முதல் கூகிள் பக்கம்….
இப்படி திட்டமிட்டு ……
[You must be registered and logged in to see this image.]
இப்படி உருவானது.
[You must be registered and logged in to see this image.]
கூகிள் வியாபார நோக்குடன் செயல்பட்ட 1999 மார்ச்சில் தொடங்கிய போது …
[You must be registered and logged in to see this image.]
165 University Avenue in Palo Alto இல் இருந்தது.
பின்னர் சொந்தமாக ……
[You must be registered and logged in to see this image.]
2001 ஏப்ரல் 1 இல் Gmail
[You must be registered and logged in to see this image.]
2006 இல் YouTube ஐ வாங்கியது கூகிள். YouTube ஐ PayPal இல் வேலை பார்த்த Steven Chen, Chad Hurley,இருவருடனும் Jawed Karim ம் இணைந்து கொண்டார்.
Karim met fellow YouTube co-founders while working at PayPal. YouTube co-founder
அதன் முதல் பக்கம் …
[You must be registered and logged in to see this image.]
முதல் காணொலி -"Me at the zoo", என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
23.04.2005 இல் சண்டியாகோ மிருககாட்சிச்சாலையில் இருந்து கரீம்-
"And that's, that's cool."
2008 இல் முதல் ஆன்றொயிட் கைபேசி உருவானது.
[You must be registered and logged in to see this image.]
அதே 2008 இல் கூகிள் குரோம் உலாவி….
[You must be registered and logged in to see this image.]
2010 இல் சாரதி இல்லா கார்………..
[You must be registered and logged in to see this image.]
2012 இல் கூகிள் கண்ணாடி + டயபிட்டிஸ் நோயாளிகளுக்கான குளுக்கோஸ் அளவிடும் contact lens .
[You must be registered and logged in to see this image.]
2015 அக்டோபர் 2 இல் Alphabet நிறுவனத்தை கூகிள் அறிவித்ததை தொடர்ந்து Google Inc இல் இருந்து Google LLC ஆக கூகிள் மாறியது. இந்த அறிவிப்பை 2015 ஆகஸ்ட் 10 இல் அப்போதைய CEO Larry Page வெளியிட்டார்.
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1404
Join date : 23/05/2021
floating solar panel / miracle fruit
[You must be registered and logged in to see this image.]
சிங்கப்பூரில் மிதக்கும் Solar panels நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.இதிலிருந்து 60 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும்.நிலம் இல்லையே என்ற கவலை வேண்டாம்.நீரில் மிதக்கும் சூரிய பனல்களை உருவாக்கி மின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும்,மின் கட்டணத்தையும்,கார்பனால் ஏற்படும் மாசையும் குறைத்து சுற்றுச்சூழலையும் காப்ப்ற்ற முடியும் என்கிறார்கள்.
இதைப்போல் சீனாவில் பிரான்ஸ் நாட்டு நிறுவனம் Ciel & Terre உதவியுடன் உலகின் மிகப் பெரிய சூரிய மின் ஆலையை ( floating solar panel farms, ) முன்னைய நிலக்கரி சுரங்கப் பகுதியில் நிறுவி உள்ளனர்.
மிதக்கும் சூரிய மின் ஆலையால் ஏற்படும் சாதக பாதகம் என்ன?
ஆமைக்கப்பட்டிருக்கும் நீர் நிலையின் தரத்தை மேம்படுத்தி சுத்தமாக வைக்கலாம்,ஆலையின் பனல்களை குளிரூட்டவும்,நிலத்தை மீதப் படுத்தவும் (சிங்கப்பூரைப் பொறுத்தவரை) முடியும்.அதேசமயம்
நிர்வக்கும் செலவு,நீர் வாழ் உயிரினங்களை பாதிக்கவும் கூடும்.
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது,தேர்மக்கோல் கொண்டு மூடத்தான் தெரியும்.

Synsepalum dulcificum -miracle fruit or miracle berry
அற்புதப் பழ மரம் 6 முதல் 14 அடி உயரம் வளரக்கூடியது.வீட்டில் தொட்டியிலும் சிறிய மரமாக வளர்க்கிறார்கள். இதனுடைய இலைகள் 10 முதல் 15 செ.மீ. நீளம் வரை இருக்கும். இலைப் பக்கத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் வருகின்றன. இதில் சிறிய சிவந்த சதைப்பற்றுள்ள பழங்கள் வருகின்றன. இப்பழத்தில் ஒரு விதை இருக்கும். முதலில் சாப்பிடும் போது புளிப்பான அமிலத்தன்மையுடன் இருக்கும். எலுமிச்சை, சுண்ணாம்பு கலந்தது போல் இருக்கும். பிறகு இனிப்பது போன்று தோன்றும். பிறகு எதைச் சாப்பிட்டாலும் இனிப்பாகவே இருக்கும். ஆப்பிரிக்காவில் இதை மக்காச்சோள ரொட்டியில் சேர்க்கிறார்கள். இதே போல் புளிப்புக்களில் இனிப்பு வருவதற்காக இதைச் சேர்க்கிறார்கள்.

தூத்துமக் கொத்தான் / கொடியார் கூந்தல்
தூத்துமக் கொத்தான் என தமிழிலும் ஆங்கிலத்தில் கஸ்குட்டா (Dodder) என அழைக்கப்படும் தாவரமானது 100-700 வரையான இனங்களைக் கொண்ட மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத் தாவரங்களைக் கொண்ட ஒரு ஒட்டுண்ணித் தாவரப் பேரினமாகும். இது இதன் நுகரியிலிருந்து உணவையும் நீரையும், கனியுப்பையும் எடுத்துக்கொள்கின்றது. இது ஒரு முழு ஒட்டுண்ணித் தாவரமாகும். இவை பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
இதுபோல் கொடியார் கூந்தல் அல்லது அம்மையார் கூந்தல் (Cuscuta reflexa) எனப்படுவது தூத்துமக் கொத்தான் பேரினத்திலுள்ள 100-170 வரையான இனங்களில் ஒன்று ஆகும்.
இத்தாவர இனங்கள் இந்திய துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படுகிறன. இவ் ஒட்டுண்ணித் தாவர இனங்கள் இலையற்ற இரட்டை படரும் மெல்லிய கொடிகள் மரங்களில் படர உதவுகிறது. இதற்கு வேர்களும் தண்டும் காணப்படுவதில்லை.

இதேபோல் அமெரிக்காவில் காணப்படும் Monotropa uniflora,( indien pipe ghost plant ) என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பச்சையம் இல்லாத ஒட்டுண்ணித் தாவரம்

albino redwoods ( Humboldt Redwoods State Park, California)

இவை அனைத்தும் மருத்துவ பயன்பாட்டுக்காக பாவிக்கப்படுகின்றன.
கனபிஸ் கலாச்சாரமாக- சமய சம்பந்தமாக பயன்படுத்தப்பட்டு வந்த கஞ்சா (Cannabis) சேர்மானிய மக்கள்(இந்தியாவில் ஆரிய வட இந்தியர்கள்) ,நேபாளம், எகிப்து (Hashish எனவும்),மெசொப்பத்தோமிய,தென் அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. வேதங்களில் இது சோமபானம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த கஞ்சா போதையேற்றும் பொருளாக மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது.இன்றும் சமய நம்பிக்கைகளை மீறி சில நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது.

காலண்டர்
கடந்த 400 ஆண்டுகளாக கிரிகோரியன் காலண்டர் முறையே பாவனையில் உள்ளது.12 மாதங்கள்,365 நாட்கள்.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் வருடத்தில் ஒரு நாள் கூடவாக இருக்கும். Pope Gregory XIII in 1582 இல் ஜூலியன் காலண்டருக்கு மாற்றாக கொண்டு வந்தார்.
[You must be registered and logged in to see this image.]
ரோமன் காலண்டர் 12 மாதங்கள் 355 நாட்களாக இருந்தது.அதற்கு மாற்றாக ஜூலியஸ் சீசர் கி.மு.46 இல் ஜூலியன் காலண்டரை அறிமுகப்படுத்தினார்.ரோமன் காலண்டரில் சூரிய காலண்டரில் ஏற்பட்ட குறைந்த நாட்களை ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை 22/23 நாட்கள் அதிகப்படுத்தினர்.அதனால் 355-377-378 ஆக மாறியது.

ஜனவரி 1 கி.மு.45 இல் ஜூலியன் காலண்டர் தொடங்கியது.அதற்கு முன்னர் மார்ச்சில் வருடத் தொடக்கமாக இருந்ததை ஜனவரிக்கு மாற்றியதால் கி.மு.46 இல் 67 நாட்களைக் கூட்ட வேண்டி வந்தது.அதனால் மக்கள் “year of confusion” or annus confusionis என அழைத்தனர். சீசர் கொல்லப்பட்ட பின்னர் காலண்டரில் Quintilis - Julius என சீசரைக் கௌரவப்படுத்தும் வகையில் மார்க் அந்தோனி மாற்றினார்.தொடர்ந்து வந்தவர் Sextilis- Augustus எனவும் மாற்றினார்.

லீப் நொடி
லீப் வினாடி-லீப் நொடி ( leap seconds ) என்றால் என்ன?
IERS ( International Earth Rotation and Reference Systems Service) ஏற்கனவே அறிவித்தபடி இந்த ஆண்டு (2021) டிசம்பரில் லீப் விநாடிகள் இல்லை என அறிவித்துள்ளது.அதன்படி அடுத்த லீப் செகண்ட்ஸ் (leap second ) 2022 ஜூன் 30 இல் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு நாள் 365.242199 solar days,அதாவது பூமி 940 மில்லியன் கி.மீ.தூரத்தை 108,000 km/h, வேகத்தில் சுற்றுகிறது.இதனால் நாட்களை சரிசெய்ய லீப் வருடமும்,நேரத்தை சரிசெய்ய லீப் நொடிகளும் பயன்படுகிறது.பூமி மெதுவாக சுழல்வதால் ஒரு நாளுக்கு 24 மணியில் 0.002 நொடிகள் வேறுபாட்டை சரிசெய்ய வேண்டி இருக்கிறது.அதன்படி 1.5 வருடங்களுக்கு 1 நொடி வேறுபாட்டை பெறும்.
லீப் நொடி அல்லது லீப் வினாடி (leap second) என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஓர் ஆண்டில் அமுல்ப்படுத்தப்படும் கால அளவு ஆகும். சர்வதேச நேரமானது சூரிய நேரத்திற்கு அண்மித்து அமைவதற்காக லீப் நொடி அமுல்படுத்தப்படுகின்றது. இந்நொடி இடம்பெறாவிடின் புவிச்சுழற்சியை அளவிடுகின்ற அணுக்கடிகாரத்தின் நேரத்துடன் சாதாரண நேரம் பொருந்தாமல் போய்விடும். பின் புவிச் சுழற்சி வீதத்திலும் மாற்றங்கள் இடம்பெறும். ஆகையாலேயே 1972 ஆம் ஆண்டு முதல் இக்கால அளவு அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் இவ்வாறு 27 லீப் நொடிகள் சர்வதேச நேரத்தில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர் தற்போது 2016 திசம்பர் 31, 23:59:60 இல் ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது.

சிலீப்பிங்க் பியுட்டி காசில்
[You must be registered and logged in to see this image.]
தூங்கும் அழகி-Sleeping Beauty-( “la Belle au bois dormant”) கதை அனைவருக்கும் தெரிந்ததே.1697 ஆம் ஆண்டில் சார்லஸ் பெரால்ட் வெளியிட்ட "மதர் கூஸ் கதைகள்" தொகுப்பில் இது முதலாவதாகும்.ஆனாலும் அதற்கு முன்னர்
Perceforest or Le Roman de Perceforest என்ற கதை இருந்ததாகவும் அதை மாற்றி எழுதப்பட்டதே இந்த தூங்கும் அழகி எனச் சொல்லப்படுகிறது.இதைப் போல் பலரால் எழுதப்பட்ட இப்படியான கதைகள் பல உண்டு.

சிலீப்பிங்க் பியுட்டி என்ற அந்தக் கதைக்கு வித்திட்டது Château d'Ussé என்ற கோட்டை ஆகும்.இந்த Château d'Ussé Castle பிரான்ஸ் Chinon Forest பகுதியில் ஓடும் நதிகளான Indre-et-Loire இல் உள்ள கோட்டையாகும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்தக் கோட்டை (அரண்மனை) 15 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.

அதை நினைவு கூர்ந்து சில நாடுகளில் உள்ள டிஸ்னிலாந்தில் இப்படி வடிவமைக்கப்பட்ட அரண்மனைக் கோட்டை..(Disneyland's Sleeping Beauty Castle - Le Château de la Belle au Bois Dormant) உண்டு.
பகலில் டிஸ்னிலாந்து அமெரிக்கா..

இரவில் டிஸ்னிலாந்து அமெரிக்கா

இதேபோன்று டிஸ்னிலாந்து பாரிஸ்,கொங்கொங்கிலும் அரண்மனைக் கோட்டைகள் உள்ளன.வால்ட் டிஸ்னியின் நினைவில் இந்த டிஸ்னிலாந்து உள்ளது.சிலீப்பிங்க் பியுட்டி பெயரில் ஒரு ஹாலிவூட் சினிமாவும் வெளிவந்தது. (பார்க்காதவர்கள் விரும்பினால் இங்கே பதிவிடப்படும்)

இந்த காசில் அமைப்பில் துருக்கி நாட்டில் முடுர்னு என்ற பகுதியில் Burj Al Babas என்ற வீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. Sarot Property Group நிறுவனம் 2014 இல் 732 மூன்று மாடி வீடுகளை இந்த அமைப்பில் உருவாக்கத் தொடங்கியது.

2500 பேருக்கு மேல் வேலை பார்த்து பெரும் பணத்தை முதலீடு செய்த நிலையில்,துருக்கியின் பணம் பெறுமதி குறைவடையவே 2019 இல் கைவிடப்பட்டது.200 மில்லியன் டாலர்கள் செலவான நிலையில் கடனைக் கட்ட முடியாமல்,100 வீடுகளையாவது விற்று கடனை சரிசெய்ய முயன்றும் முடியாத நிலையில்,இப்போது பேய் நகரமாக காட்சி தருகிறது.

சென்னைத் தமிழ்
ஒரு மொழி தம்முடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்கிறது. சென்னை, பல்வேறு ஊர்களைச் சேர்ந்தோர் குழுமிய இடம்; பல்வேறு நாட்டினர் கூடிய இடம். அதனால் சென்னைத் தமிழ் பல்வேறு மொழிகளை உள்வாங்கி, புதிய சொற்களை தனக்கே உரிய புரிதலோடு வெளியிட்டது.
சென்னையில், மூன்று விதமான பேச்சுத்தமிழ் நடைமுறையில் உள்ளது. ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, மின்ட், இப்ராஹிம் சாகர் தெரு, துறைமுகம், சைனா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தான், தமிழ் பணியாட்கள் வாழ்ந்தனர். அது தான், தொடக்க கால மெட்ராசாக இருந்தது. சாந்தோம், டுமீல் குப்பம், ஆல்காட் குப்பம், அயோத்தியா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வாழ்ந்தனர். வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, வடஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிழைப்புத் தேடி சென்னை வந்தவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி, புளியந்தோப்பு வரை, கூவம் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் குடியேறினர்.
சென்னைத் தமிழாக அறியப்படும், பேமானி, சோமாரி, கஷ்மாலம், பொறம்போக்கு, கம்முன்னு கெட போன்ற வார்த்தைகளுக்கு பின், பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.
'பேமானி' என்பது, பெர்ஷிய வார்த்தை. அதற்கு, நாணயமில்லாதவன், சொன்ன வாக்கை காக்காதவன் என்று பொருள்.
1. பரதேசி = பர +தேசி = இதன் அர்த்தம் தேஷ் என்றால் நாடு என்று அர்த்தம் பரதேசி என்றால் வேற்று நாட்டுகாரன் என்று அர்த்தமாம் .
2. பேமானி = பே +ஈமானி = இதன் அர்த்தம் ஈமானி என்றால் நம்பிக்கையான என்று அர்த்தம் பே + ஈமானி என்றால் நம்பிக்கை இல்லாதவனே என்று அர்த்தமாம் .
கஷ்மாலம் என்பது, வடமொழி வார்த்தை. அதற்கு, உடலில் உள்ள தேவையில்லாத பொருள் என்று பொருள்.
பொறம்போக்கு என்பதற்குப் பின், ஒரு வரலாறு உள்ளது. அது, ஆங்கில வார்த்தை. அதாவது, 1800களில், இங்கிலாந்தில் இருந்து, பலர் தங்கள் நிலங்களை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டனர். லார்டு பென் புரோக் என்பவர், நிலங்களுக்கேற்ற வரி வசூலாகாததை விசாரித்து, ஆளில்லா நிலங்களை அரசு நிலமாக்க, 'பென் புரோக்' என்னும் சட்டத்தை இயற்றினார். அதேபோல, 1820களில், சென்னை மாகாண கவர்னராக இருந்த மன்றோ, ரயத்வாரி சட்டம் மூலம், மேய்ச்சல், காடு, கல்லாங்குத்து ஆகிய இடங்களை, பென் புரோக் சட்டத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கினார். அரசு இடங்களில் குடியேறியவர்களை, 'பென் புரோக்' என அழைத்தனர். பின், அது, புறம்போக்கு என்று ஆகி, தகுதி இல்லாத, கேட்பதற்கு ஆளில்லாதவர்களை திட்டும் வார்த்தையாக புறம்போக்கு ஆகிவிட்டது.
'கம்முன்னு கிட' என்பது, 'காம்' என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து, காமா இரு, கம்முனு கெட என மருவியது.
கிண்டி என்பது, ஒரு ஆங்கில வார்த்தையிலிருந்து மருவியது. வெள்ளச்சேரி, சென்ட் தாமஸ் மவுன்ட் உள்ளிட்டவை அடங்கியது தான், ஒயிட் டவுன் எனப்பட்டது. அடையாற்றுக்கு மேற்கு பகுதியை, 'கன்ட்ரி சைடு' என, அழைத்தனர். அது, காலப்போக்கில், கன்ட்ரி, கன்டி, கிண்டி என மாறியது. இவ்வாறு சென்னையில் மட்டுமே புழக்கத்தில் உள்ள சில வார்த்தைகளின் பின்னுள்ள வரலாறாகும்.
'சொன்னா மாரியா' : மேற்கிந்திய தீவுகளில், ஸ்பானிஷ், பிரிட்டிஷ், ஏனாம், ஆப்ரிக்க மொழிக் கலப்பால், 'கிரியோ' என்ற மொழி உருவாயிற்று. கிரியோ மொழி பேசுவோர், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பாண்டிச்சேரிக்கு வந்துவிட்டு, சென்னைக்கும் பீர் பாட்டில்களோடு வருவர். அவர்களில் பலர் இளைஞர்களாக இருந்தனர். அவர்கள், உல்லாச விரும்பிகளாக இருந்தனர். அவர்கள், இளம்பெண்களிடம், 'சொன்னா மாரியா' என்பர். அதாவது, தற்காலிக திருமணத்துக்கு தயாரா என்பர். அதற்கு உடன்படும் பெண்களுடன், அவர்களை, கடற்கரை வழியாக ஆற்காடு தெரு விடுதிகளுக்கு, ரிக் ஷாக்காரர்கள் சுற்றிக்கொண்டு அழைத்துச் சென்று, அதிக பணம் பெற்றனர். இப்படி சம்பாதிப்பவர்களை, சொன்னா மாரியா என்று அழைத்து, பின், 'சோமாரியா' என மாற்றி, தற்போது, 'சோமாரி' எனக் கூறத் துவங்கி விட்டனர்.
வடசென்னை, சிந்தாதிரிப்பேட்டை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில், சகவாசம், சங்காத்தம், சினேகிதம் உள்ளிட்ட வடமொழி சொற்கள் அதிகமாக வழக்கில் இருக்கும். அழகான குஜராத்தி பெண்களை, குஜிலி என்பர். அழகான பெண்களை, ஜெகஜோதியாக, அம்சமாக என்றும் சொல்வர். அவை, வடமொழி சொற்கள். அதேபோல, சாங்கியம், ஸ்வஸ்தம் போன்றவையும் வழங்கப்படும். தாரை வார்த்தல் என்றதில் இருந்து, தொலைந்து போதலையும், தொலைத்து விடுவேன் என்பதையும், 'தாதாம் போச்சு, தாடாம் துாருவே' என்று சொல்லத் துவங்கினர்.
டோரர் - துரை : அண்ணாதுரை, தம்பிதுரை போன்ற பெயர்களுக்குப்பின் உள்ள வரலாற்றையும், இன்னபிற ஆங்கில சொல் கலப்பாகும். இங்கிலாந்தில், நீண்ட நாட்களுக்குப் பின் பிறக்கும் குழந்தைகளை, 'டோரர்' என அழைத்தனர். இங்கிலாந்தில், இளைஞர்களின் குற்றங்கள் அதிகரித்ததால், அவர்கள், கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுப்பப்பட்டனர். பிரிட்டிஷாருக்குள் வழங்கப்பட்ட டோரர் என்ற வார்த்தை, தோரர், தொரை என மாற்றப்பட்டு, வெள்ளைக்காரர்கள், அவர்களிடம் வேலை பார்த்தவர்கள், அந்தஸ்தில் இருந்தவர்களை எல்லாம், 'இன்னா தொரை' என, அழைக்கத் துவங்கினர். தொரை, துரையாயிற்று.
கப்பலில் இருந்து இறங்கிய வெள்ளையர்களிடம், பிச்சைக்காரர்கள் தொல்லை செய்வர். அவர்கள், 'டோன்ட் பாதர் மீ' என்பர். பாதர் என்பது பாஜர் என மருவி, 'பேஜார் பண்ணாதேப்பா' என, புழக்கத்தில் உள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளோரில் பலர், கட்டப்பஞ்சாயத்து செய்வர். அவர்களை சிந்தாதிரிப்பேட்டை ரவுடி என்றும், பின், பேட்டை ரவுடி என்றும் கூறத்துவங்கினர். 'செக்யூர்' என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து, சாலைப்பணியாளர், வீடு கட்டுவோர் மூலம், 'சொகுரு' என்றாகியது.முகலாயர்கள் ஆட்சி புரிந்த சென்னையில், அரபி, உருது இல்லாமலா... 'தாபா' தபா என்றும், 'தக்கரார்' தகராறு என்றும், 'கேளாடி' கிள்ளாடி என்றும், 'பேவ கூப்' பேக்கு என்றும், 'கிர்கத்' கிராக்கி என்றும், பஜாரில் சண்டை போடுபவர் பஜாரி என்றும், உருது வார்த்தைகள், சென்னைத் தமிழில் விளையாடின.
கூடவே, 'காலி' போன்ற அரபி வார்த்தைகளும் கலந்தன. கோட்டையில் உள்ள வேலைக்காரர்களுக்கு, வேலைக்கு ஏற்ப பல வண்ண தொப்பிகள் வழங்கப்பட்டு, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவர்கள் தங்களுக்குள் தொப்பிகளை மாற்றி ஏமாற்றி உதவியை பெறுவர். அப்படி ஏமாற்றுபவர்களை, 'கேப் மாறி' என்றனர்.இவ்வாறு, சென்னைத் தமிழின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு.
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மருவிய தமிழ் சொற்கள் : 'தெனாவட்டு, அல்லோலக்கல்லோலம், ஏடாகூடம்' போன்ற தமிழ் வார்த்தைகள் உள்ள இதே சென்னையில், மருவிய சில தமிழ்ச் சொற்களும் அதன் பொருளும் ஆச்சரியப்பட வைக்கும். இதேக்கண்டி - இதேபோல், காண்டு - கோபம், அப்பேல்பட்ட - அப்படிப்பட்ட, மீ - துப்பு, துண்ணு - சாப்பிடு, கூவு - கூப்பிடு, மே - அன்பு, கோபத்தில் வரும் ஒட்டு சொல், வளிச்சி - அப்படி, சண்டை வழிச்சி - வீண் வம்பு, இஸ்; இச்சு - இழு, குடிகுடிச்சு - பிரசவம், நோக்காடு - பிரசவ வலி, கோராம் - பயம், பாப்பா வீட்டு அய்யர் - வேலைக்கு செல்லும் பிராமின், நாட்டுதல், புட்டுக்குதல் - இறத்தல், எம்மாம் - பெரிய, தம்மா - சிறிய, அறியாப்பையன் - இறந்தபின் சொல்லும் வார்த்தை, அசால்ட் - அதிர்ச்சி, பீட்டர் விடுதல் - பாவ்லா செய்தல், ஆப்பக்காரன் - ஆங்கிலோ இந்தியன்.
அதேசமயம் நல்ல தமிழ் சொற்களை கெட்ட வார்த்தைகளாக்கியும் விட்டனர்.நாற்றம்,மயிர்...என பல சொற்கள் நல்ல சங்ககால தமிழ் சொற்களாகும்.மயிர் என்ற சொல்லை கெட்ட சொல்லாக்கி முடி ஆக்கினர். முடி என்றால் தலையில் உள்ள முடியை மேலே ஒன்றாக முடிந்து கட்டுதல்-முடி போல்- எனப் பொருள்.அது இன்று எல்லாவற்றுக்கும் முடி ஆகிவிட்டது.

Re: தினம் ஒரு தகவல் (தொடர்)
சீன உணவகத்தில் வேலை பார்க்கும் அனுஸ்கா அதிஷ்ட குக்கிகளை ( fortune cookies) உணவுடன் கொடுத்து விடுவார்.அந்த முறை உண்மையில் சீனாவில் இருக்கிறதா?சீனாவில் இப்படிக் கிடையாது. ஜப்பானில் இருந்த இந்த fortune cookies முறை 1900 களில் அமெரிக்காவுக்கு வந்தது. பின்னர் இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமெரிக்காவில் உள்ள சீன-ஜப்பானிய உணவகங்களில் பரவியது.
...…....…
சினிமாவில் ஒருவரைக் காணவில்லை என்றது காவல் நிலையத்திற்கு செல்வார்கள்.அங்கே ஒரு அதிகாரி சொல்வார்,ஒரு நாள்/இரண்டு நாள் 24 / 48 மணி நேரம் பார்த்து விட்டு வாருங்கள் என்பார்.
அப்படிச் சொல்ல சட்டம் ஏதாவது உண்டா? என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.ஒருவர் காவல் நிலையத்துக்கு சென்று காணவில்லை என்று முறைப்பாடு கொடுத்தால்,உடனே அதை பதிவிட்டு (Missing Person Report) உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(CPC 1973,பிரிவு 154 )
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1404
Join date : 23/05/2021
வியர்வைச் சுரப்பிகள்
[You must be registered and logged in to see this image.]
நம் உடலில் மில்லியன் கணக்கான வியர்வை சுரப்பிகள் உள்ளன. எக்ரைன் மற்றும் அபோக்ரைன் எனப்படும் இந்த சுரப்பிகள் நரம்புகளால் செயல்படுத்தப்பட்டு நம்மை குளிர்விக்க உதவும். எக்ரைன் சுரப்பிகள் மணமற்ற, தெளிவான திரவத்தை உருவாக்கி வெளியிடுகின்றன, அவை ஆவியாகி வெப்ப இழப்புக்கு உதவுகின்றன.
அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அமைந்துள்ள அப்போக்ரைன் சுரப்பிகள், தோலின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாவுடன் கலக்கும்போது ஒரு துர்நாற்றத்தை வெளியிடும் தடிமனான திரவத்தை சுரக்கின்றன.அப்போக்ரின் சுரப்பிகள் பருவமடைவதற்கு முன்பு செயலற்றவை. அவை வெளிப்புற தோல் மேற்பரப்பில் மறைமுகமாக இராசயணப் பொருட்களை (pheromones ) சுரக்கின்றன. அப்போக்ரின் சுரப்பிகள் அடர்த்தியான தெளிவான திரவத்தை சுரக்கின்றன. இந்தச் சுரப்பிகள் எதிர் பாலினத்தை ஈர்க்கவும், பாலியல் தூண்டுதல், வலி, பயம் அல்லது பதட்டம் போன்றவை ஏற்படும் போது சுரப்பிகள் பெரிதாகி அதிகமாக சுரக்கின்றன.
ஆண்களில், பெரினியம் ஆசனவாய் முதல் விந்துப்பை கீழே நீண்டுள்ளது.

நாய்களுக்கு மெரோக்ரைன் சுரப்பிகள் எனப்படும் ஒரு வகை வியர்வை சுரப்பி உள்ளது, அவை நாயின் பாதங்களில் அமைந்துள்ளன. அரிதாகவே, ஒரு நாய் அதன் பாதங்கள் வழியாக வியர்வையை வெளியேற்றும். ஒட்டுமொத்தமாக, நாய்கள் மனிதர்களை விட மிகக் குறைந்த வியர்வை சுரப்பிகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் வியர்வையை வெளியேற்றி குளிர்விப்பதற்காக ( thermoregulation ) அவை பிற இயற்கை வழிமுறைகளைக் கையாளுகின்றன.மூச்சை வேகமாக விட்டு, இரைத்தல் (panting) வெப்பத்தை வெளியேற்றி குளிர்விக்கிறது.
இப்படிச் செய்யும் போது வெப்பம் நெஞ்சு வழியாக தொண்டை-வாய்-நாக்கு வழியாக ஆவியாக வெளியேறி அதைக் குளிர்விக்கிறது.

கந்தசஸ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள்
கந்தசஸ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?
இந்த உலகில் எத்தனையோ பிரபல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றியவர்கள் என வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த உலகுக்கு தந்த பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் கூட, அந்த உத்தமர்கள், அறிஞர்களை நாம் மறந்து விடுகிறோம்.
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடிய, பாலன் தேவராசன் பற்றி சிறிது காணலாம்.
தேவராயசுவாமிகள் என்று நாம் போற்றுகின்றவரின் இயற்பெயர் தேவராயன். நல்ல வசதியான கணக்குப்பிள்ளை குடும்பத்தில், 1837 இல் பிறந்த இவரது சொந்த ஊர் தொண்டை நாட்டு வல்லூராகும். இவரது தந்தையார் பெயர் வீராச்சாமிப் பிள்ளை. தாயார் பெயர் தெரியவில்லை. நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்து பிறந்தவர் தேவராயன்.
வல்லூரிலேயே தமிழும் கணக்கும் பயின்றார். பிறப்பு ஓரிடம். செல்வம் தேடுவது ஓரிடம் என்னும் பொதுமொழிக்குத் தேவராயனும் விலக்காகவில்லை.இருபது வயதிலேயே பெங்களூர் சென்று கணக்குப்பிள்ளை தொழிலில் நல்ல செல்லவமும் சேர்த்திருந்தார் தேவராயர்.
பெங்களூரின் தட்பவெட்பநிலை. அருகில் பெற்றோர் இல்லாத நிலை. கணக்குத் தொழிலில் கொழிக்கும் செல்வம். இருபது வயது. இவையனைத்தும் ஒருவர் கெட்டுப்போவதற்குப் பலவிதங்களில் காரணமாக இருக்கும். ஆனால் தேவராயனிடம் இவையனைத்தும் தமிழார்வத்தை மட்டுமே தூண்டின.வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தமிழ் வாசிப்பில் செலவழித்தார்.
இவ்வாறாக இயல்பாக இருந்த தமிழார்வம் ஒரு மாமேதையின் பெங்களூர் வரவால் மிகவும் தூண்டப்பட்டது. தூண்டிய விளக்கிற்கும் தூண்டப்பட்ட விளக்கிற்கும் பேரொளி கொடுத்த நல்ல வரவு அது.அந்த மாமேதை தமிழ் தாத்தா என தமிழுலகம் அழைக்கும் உவேசா இன் ஆசிரியரும் பிற்காலக் கம்பர் என அழைக்கப்பட்டவருமான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (சித்திரை 6, 1815 - தை 2, 1876) அவர்களாவர்.பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை (தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர்) உ.வே.சுவாமிநாத ஐயர்,பூவாளூர் தியாகராசச் செட்டியார்,சவுரிராயுலு பிள்ளை,வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகியோர் பெயர் சொல்லக்கூடிய பலரில் சிலராவர்.பிள்ளை அவர்களின் வழிகாட்டலே உவேசா வை ஓலைச்சுவடிகளை தேட வைத்தது என்றால் மிகையாகாது.
இருபதாவது வயதில் வியாபாரம் செய்து பணமீட்ட பெங்களுர் சென்ற தேவராசன்,தமிழ் இலக்கியத்தை எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் இருந்த பிள்ளை அவர்கள் பெங்களூருக்கு வந்த போது, அவரை தேடிச் சென்று தமிழ் இலக்கியம் கற்றார்.
அவரிடம் தமிழ் படித்ததோடு மட்டுமன்றி இலக்கியம்,பாடல் எழுதுவதிலும் தன்னை வளர்த்துக் கொண்ட தேவராசனாரிடம், செய்யுள் பாடல்கள் எழுதும் ஆர்வத்தை கண்ட பிள்ளை அவர்கள், அடுத்து பாடல் மற்றும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் அவர் எழுதியவற்றை பிள்ளை அவர்கள் சரிபார்த்து திருத்திக் கொடுத்தார்.
பிள்ளை அவர்கள் பெங்களூரில் இருந்த குறுகிய காலத்தில் குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள் சிலவற்றை எழுதியதுடன் பிள்ளை அவர்களைக் கொண்டு திருத்தமும் செய்து கொண்டார்.
ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.பெங்களூர் மருத்துவ மனைகள் அவரைக் கைவிடவே, வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது!
அப்போது அவருக்கு, திருநாவுக்கரசர் அதே போல் சூலை நோயால்(வயிற்றுவலி) தவித்ததையும், இறைவன் அருளால் குணமானது நினைவுக்கும் வரவே,தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு விரதம் இருந்து கவசம் பாட ஆரம்பித்தார்.
கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.
இறைவனை வேண்டி பால தேவராசனால் பாடப்பட்ட கவசங்கள் - சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் , சத்தி கவசம், விநாயகர் அகவல் , நாராயண கவசம் என்ற ஆறாகும்.
அவர் தமிழை பின்னர் கற்றுக் கொண்டதும்,சமஸ்கிருத மொழியின் தொடர்புகள் அக்காலத்தில் அதிகமாக இருந்ததும்,அவர் பாடல்களில் அதிக சமஸ்கிருத வாசனையைக் காணமுடிகிறது.இன்று இணையத்தில் பல்வேறு பாடகர்களின் குரலில் கந்த சஷ்டிக் கவசம் ஒலித்தாலும் கூட,சீர்காழி கோவிந்தராஜனைத் தவிர மற்ற அனைவரின் பாடலிலும் தமிழ் பிழைகளையும் உச்சரிப்புப் பிழைகளையும் காண முடிகிறது. அவர் எழுதிய ,மூலக் கையெழுத்துப் பிரதியில் இருந்து இப் பிழைகளை கண்டறிய முடிகிறது.தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழறிவு சிதைந்து வருவதால் அப்பிழைகளை யாரும் கண்டு கொள்வதில்லை.

Boycott
Boycott என்ற சொல் எப்படி ஏற்பட்டது? 1880 இல் ஐயர்லாந்து நாட்டில் விவசாயிகளிடம் இருந்து வரி வசூலித்துக் கொண்டிருந்த British agent, Captain Charles Boycott என்பவருக்கு எதிராக வன்முறையற்ற புறக்கணிப்பு நடைபெற்றது.அப்போது Irish Land League இன் உறுப்பினராக இருந்த Father O’Malley பிரிட்டிஷ் ஏஜண்டின் பெயரை வைத்து Boycott என்ற சொல்லை உருவாக்கினார்.
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1404
Join date : 23/05/2021
Re: தினம் ஒரு தகவல் (தொடர்)
இந்தியில் விபரம்..
இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம்.
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1404
Join date : 23/05/2021
Re: தினம் ஒரு தகவல் (தொடர்)
ஒரு கேள்வி..கேட்டவர்......
பள்ளியில் ஒவ்வொரு பாடத்திற்கும் வேறு வேறான ஆசிரியர்கள் வந்து கற்பிக்கிறார்கள்.அப்படி இருக்கும் போது ஒரு மாணவனால் எல்லாப் பாடங்களையும் எப்படி படிக்க முடியும்.அதாவது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறான பாடங்கள் கற்பிப்பதுதானே முறை. எல்லாப் பாடங்களையும் ஒரு மாணவனைப் படிக்கும்படி சொல்வது எப்படி நியாயம் ஆகும்.
உலகிலேயே அதிக விலையுயர்ந்த ஆயாக்களை உருவாக்கும் பள்ளி இங்கிலாந்தில் உள்ள Norland College ( nanny-training school) ஆகும்.1800 இல் Emily Ward என்பவர் இதை ஆரம்பித்தார். இந்தப் பள்ளியில் படிக்கும் ஆயாக்கள் ( nanny) வருடம் ஒன்றுக்கு 100,000 முதல் 170,000 பவுண்ட்கள் பணக்கார வீடுகளில் ஆயாக்களாக வேலை செய்து சம்பாதிக்கின்றனர்.

எல்லாரும் இன்ஸ்டாகிராம்,டுவிட்டர்,முகநூல் எனத் தொடங்கி கருத்துகளை பகிர்வார்கள்.ஒரு சிலர் சமூக வலைத்தளங்களை தவறாகவும் பயன்படுத்துவார்கள்.இங்கிலாந்து முடிக்குரிய இளவரசர் வில்லியம் தம்பதிகள் youtube இல் இணைந்துள்ளார்கள். 2020 அக்டோபரில் வில்லியம்+கேட்டும் தங்களுக்கான YouTube தளத்தை தொடங்கி உள்ளனர்.
கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி, KG, FRS (பிறப்பு 21 சூன் 1982) மற்றும் அவர் மனைவி கேத்தரின், கேம்பிரிட்ஜ் சீமாட்டி (Catherine, Duchess of Cambridge), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (Catherine Elizabeth "Kate", பிறப்பு; 9 சனவரி 1982) ,The Duke and Duchess of Cambridge என்ற கணக்கில் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதல் வரவேற்புக் காணொலி
வில்லியம் வேல்சு இளவரசர் சார்லசுவிற்கும் வேல்சு இளவரசி டயானாவிற்கும் பிறந்த முதல் மகனாவார்.கேட் ,மைக்கேல் மிடில்ட்டன்+ கரோல் கோல்ட்சிமித் ற்கும் பிறந்தவராவர்.அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
வில்லியம் அரச பரம்பரை வாரீசு என்பதால் குடும்பப் பெயர் கிடையாது.மனைவி கேட் மிட்டில்டன் அரச பரம்பரை வாரீசாக இல்லாததால் அவருடைய பெயர் திருமணத்திற்குப் பின் கதெரீன் ஆகும்.

Ram kand mool (kandamool/Ramkand) இப்படி அழைக்கப்படும் ஒருவகைக் கிழங்கு துண்டுகளாக வீதிகளில் விற்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
இதன் பெயர் ,Maerua oblongifolia -பூமிச் சர்க்கரைக் கிழங்கு - ஆகும்.இதன் வேர்கள் கிழங்குகளாக பெறப்பட்டு விற்கப்படுகிறது.அதிகமாக கேரளாவில் உள்ள காட்டுப் பகுதிகளில் இருந்து பெறப்பட்டு வட நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. இந்த மரம் பாம்புக்கடி, தேள் கடி..போன்றவற்றுக்கு பயன்படும் சித்த மருத்துவ முறையாகும்.
வடநாட்டில் Ram kand என அழைக்கப்படுவதற்குக் காரணம்,வனவாசத்தின் போது ராமர்,இலக்குவன்,சீதை ஆகியோர் காடுகளில் இந்தக் கிழங்கை உணவாக்கி ஆரோக்கியத்துடன் இருந்தனர் என நம்புகிறார்கள்.

இப்படி ஒரு ஆனைக்கற்றாழை மெக்சிக்கோ போன்ற நாடுகளில் அதிகமாக வளருகிறது.இதில் இருந்து பெறப்படும் கூள் இனிப்புப் பானமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனைக் கற்றாழை அல்லது யானைக் கற்றாழை (Agave americana) என்பது பொதுவாக நூற்றாண்டுத் தாவரம் என அழைக்கப்படும் அகேவ் இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது மெக்சிகோவை தனது பூர்விக இடமாகக் கொண்டிருந்தாலும் அழகுத் தாவரமாக பல்வேறு பிரதேசங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளநீர் கோடை காலங்களில் அருந்தினாலும் இளநீரால் ஆபத்தும் உண்டு.தலைக்குத்தலுக்கு இளநீர் பாவிக்கப்படுகிறது.(தலைகுத்தல் -வயதானவர்களை கொலை செய்வது)

ஒட்டமான் பேரரசு போன்ற இஸ்லாமிய பேரரசை உருவாக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் எர்டோகான் உள்ளார். இந்த ஓட்டமான் இஸ்லாமிய பேரரசுதான் துருக்கியை தலைமையிடமாக கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்து, கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. ஒட்டமான் போன்ற பழமைவாதம் நிறைந்த பேரரசாக துருக்கியை மாற்ற வேண்டும் என்பது எர்டோகானின் கனவாக இருந்து வருகிறது.துருக்கியில் இருந்து சௌதி அரேபியா உட்பட பாகிஸ்தான் வரை அந்த இஸ்லாமிய பேரரசு இருக்கும்.அதற்காக அவருக்கு இரகசிய படையும் உண்டு.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அவர் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் என்றும் பாகிஸ்தானுக்கு துருக்கி துணையாக இருக்கும் என பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.

உதுமானியப் பேரரசு (ஒத்தமான் பேரரசு, Ottoman Empire, 1299–1922, துருக்கி: என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும்.
இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே என்பவரின் தலைமையின் கீழ் வடமேற்கு அனத்தோலியாவில் உருவாக்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் முஹம்மதால் கி.பி.1453இல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒத்தமான் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது (16ஆம் – 17ஆம் நூற்றாண்டுகளில்) இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யமன் வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.

துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழ்ந்த அனத்தோலியா பகுதி ஒரு சீரற்ற சுதந்திரப் பிரதேசமாகப் பிரிந்ததுடன் பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள் (Ghazi Emirates) என அழைக்கப்பட்டன. இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால் (1258[4] –1326) நிர்வகிக்கப்பட்டது. உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒத்மான்ன் என்ற பெயர் பெறப்பட்டு பின்னர் அது ஒத்தமான் என அறியப்பட்டது.
முதலாம் உஸ்மான், துருக்கியக் குடியிருப்புக்களை பைசாந்தியப் பேரரசின் (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.
முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின் வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஃபல்கேன் வழியாக விரிவடைய ஆரம்பித்தது. உஸ்மானின் மகன் உர்ஹான் 1324இல் பூர்சா நகரைக் கைப்பற்றியதுடன் அதை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார். அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வடமேற்கு அனத்தோலியா பகுதியின் கட்டுப்பாட்டை பைசாந்தியப் பேரரசிடம் (Byzantine Empire) இழந்தது. முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 1389இல் கொசோவோ உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான செர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம் பதிப்பதற்கும் காரணமாக அமைந்தது.
1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில் மத்திய காலத்தின் சிலுவைப்படை எனக் கருதப்படும் பெரும் படையினரால் துருக்கிய உதுமானியர்களின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை.
ஃபல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கம் கான்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றும் நோக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.

மருத்துவ அறிவியலில் பல சாதனைகளை,கண்டுபிடிப்புகளை செயல்படுத்திக் காட்டி இருந்தாலும் கூட.....……………..
இன்னமும் காரணத்தைக் கண்டு பிடிக்காத மர்மங்கள் இருக்கவே செய்கின்றன.அதற்கான காரணங்களை கண்டு பிடிக்க ஆய்வாளர்கள்,மருத்துவர்கள் இன்னமும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
மனிதனின் உடலில் 60% அளவில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது.தண்ணீர் ஒவ்வாமை உள்ளவர்கள் இருக்கவே செய்கின்றனர். aquagenic urticaria (water allergy )என்பது ஒரு தண்ணீர் ஒவ்வாமை ஆகும்.தண்ணீர் குடிப்பதால் எதுவும் நடக்காமல் குளிக்கவோ,நீச்சல் போட்டாலோ,மழையில் நனைந்தாலோ ஏன் முகத்தைக் கழுவினாலோ ஒவ்வாமை ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாது அதிகமாக வியர்த்தாலும் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது.அரிதாக இந்த நோய் ஏற்பட்டாலும் இதுவரை காரணமோ மருத்துவ முறையோ இல்லை என்கிறார்கள்.
Stiff Person Syndrome (SPS) என்பது நரம்பு சம்பந்தமான அரிதாக வரும் நோயாகும்.
இது ஒரு நபரை அவர்களின் சொந்த உடலுக்குள் கைதியாக விடலாம். இந்த நிலை தன்னிச்சையான, தீவிர தசை பிடிப்பு மற்றும் கைகால்களில் விறைப்பை ஏற்படுத்துகிறது.
அதாவது, உங்கள் தசைகள் தங்களைத் தாங்களே இறுக்கிக் கொள்ளத் தொடங்குகின்றன, இதனால் SPS நோயாளிகள் தங்கள் கைகால்களைக் கட்டுப்படுத்த முடியாமல்,அவர்கள் பல மணிநேரங்கள் அல்லது நாட்கள் கூட முடங்கலாம்.
Morgellons disease, என்பது ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத நோய்., இதில் அசாதாரண நூல் போன்ற இழைகள் தோலின் கீழ் தோன்றும். நோயாளிக்கு ஏதோ ஊர்ந்து செல்வது, கடிப்பது அல்லது கொட்டுவது போல் உணரலாம்.
தோல் முழுவதும் ஏதோ ஊர்ந்து செல்வது போன்ற உணர்வு,தோலின் கீழ் எரியும் அல்லது கொட்டும் உணர்வுகள்,கடுமையான அரிப்பு,தோல் புண்கள் திடீரென தோன்றி மெதுவாக குணமாகும்,மிகவும் சிவப்பு (ஹைப்பர் பிக்மென்ட்) வடுக்கள் விட்டுச்செல்லும் புண்கள் இருக்கலாம்.
சில மருத்துவர்கள் Agrobacterium என்ற பாக்டீரியாக்களால் ஏற்படலாம் எனவும்,வேறு சிலர் உண்மையில் அப்படி ஒன்று இல்லை-ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது என எண்ணும் உளவியல் மருட்சி நிலை எனவும் கருதுகிறார்கள்.
foreign accent syndrome (FAS) ,என்பது திடீரென ஒருவர் அவர் கேள்விப்படாத ஒரு மொழி உச்சரிப்பில் பேசத் தொடங்குவார்.அவர்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் கூட,அவர்கள் திடீரென்று ஒரு வித்தியாசமான உச்சரிப்பில் பேசத் தொடங்குகிறார்கள் .அவர்கள் பேசுவது வேறொரு மொழி உச்சரிப்பாக தோன்றினாலும்,உண்மையில் அப்படியல்ல எனவும் அவர்கள் நாக்கு உளறுவதால் அப்படி தோன்றுவதாகவும் இது ஒரு உளவியல் கோளாறு எனவும் சொல்லப்படுகிறது.
Syndrome X , இளமையில் குறைந்த வயதில் வளர்ச்சி நின்று விடுவதாகும். என்றும் பதினாறு என்பது போல் ,இப்படி ஒருவர் Brooke Greenberg கண்டு பிடிக்கப்பட்டார். அவருக்கு 20 வயதாகி இருந்தாலும்,அவரின் வளர்ச்சி 5 க்கு மேல் செல்லவில்லை.எவ்வளவோ முயற்சி செய்தும்வளர்ச்சிக்கான ஹார்மோன்களை உடலில் செலுத்துயும் அவர் வளர்ச்சி ஐந்து வயதுடன் நின்று விட்டது.
இந்துக்கள் என்றால் அவரை கடவுள் அவதாரம் ஆக்கி இருப்பார்கள்.(தமிழர்கள் இந்துக்கள் அல்லர்)
sirenomelia, or "Mermaid Syndrome ,என்பது பிறக்கும் குழந்தையின் கால்கள் ஒன்றாக இணைந்து கடல்மீன் பொல் இருக்கும்.

highly superior autobiographical memory (HSAM ,என்பது அதிக நினைவாற்றல் கொண்டவர்.ஒரு சில நிமிடங்களில் ஒருமுறை படித்தவற்றை மீளக் கொண்டுவந்து விடுவார்கள்.
இப்படிப் பல மருத்துவ அதிசயங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

மர்ஃபியின் விதிகள்
ஒரு இடத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் நிற்கின்றன.நாம் ஒன்றில் ஏறியதும் இன்னொரு பேருந்து கிளம்பிவிடும்;புகைவண்டி சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்றால் நாம் தாமதாமாகச் சென்றால் போதும்.
இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.எனக்கு மட்டும் எல்லாம் மிகச் சரியாகத் தவறாய் நடக்கின்றன என எண்ணாதாரும் உளரோ?
மர்ஃபியின் விதிகளுக்கு ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது.மர்ஃபி என்பவர் ஒரு விமானப் பொறியாளர்.ஒரு முறை ஒரு சோதனையின் போது விமானத்தில் உள்ள ஆறு இணைப்புக்களையும் ஒருவர் முனையை (terminal) மாற்றி இணைத்திருப்பதைக் கண்டார்.அப்போது மர்ஃபி “அந்த நபர் (இணைப்பு கொடுத்தவர்) ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்ய முடியும் என்றால் தவறாமல் தவறாகவே செய்வார்!” என்றார்.
அன்று முதல் இவை மர்ஃபியின் விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.மர்ஃபியின் மரணம்கூட மிகப் பொருத்தமாகவோ அல்லது முரண்பாடாகவோ மர்ஃபியின் விதிப்படிதான் நடந்தது.ஒரு முறை சாலையில் நடந்துபோகும் போது எதிரே ராங் சைடில் வந்த வண்டி மோதி உயிரிழந்தார்.
மர்ஃபியின் விதிகள் பொது விதிகள், சிறப்பு விதிகள் என வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.பொது விதிகள் எல்லாச் சூழலுக்கும், துறைகளுக்கும் பொருந்துபவையாக உள்ளன.சில பொது விதிகளைக் காணலாம்:
1)தப்பாக வேண்டியவை தப்பாமல் தப்பாகும்-(If something can go wrong it will) இதுதான் மர்ஃபியின் பொன்விதி என்றழைக்கப் படுகிறது.(துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. குறள் நினைவுக்கு வருகிறதா?)
2)ஒரு வேலையை முடிக்க நமக்குப் பலரது உதவி கிடைக்கிறது என்றால் அந்த வேலை நாமே தனியாகச் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.
3)நாம் நிற்கும் வரிசை நகர வேண்டுமானால் நாம் வேறு வரிசைக்கு மாற வேண்டும்.
4)மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றால் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
5)நீங்கள் ஒரு காலைத் தீயிலும் இன்னொரு காலைப் பனிக்கட்டியிலும் வைத்திருந்தால் நீங்கள் சராசரியாக சுகமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
6)நாம் தொலைத்த சாவி உடனே கிடைக்க வேண்டுமானால் பூட்டை உடைக்க வேண்டும்.
7)இன்றே கடைசியாக இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் நாளைதான் கவனிப்போம்.
8)எத்தனையோ பேர் பூங்காவில் இருக்கும் போது என் தலையில் தான் ஆப்பிள் விழுந்து தொலைக்கும்- இது ஐசக் ந்யூட்டனின் மர்ஃபி விதி.
மருத்துவத்திலும் மர்ஃபியின் விதிகள் உள்ளன.
1)ஒரு நோய் எவ்வளவுக்கெவ்வளவு (நாய் குறைப்பதை ஒத்த ஓசை நயம்!) பரவலாகத் தென்படுகிறதோ அவ்வளவு குறைவாகவே அந்த நோய் வரும் காரணங்கள், மற்றும் உரிய சிகிச்சைகள் பற்றித் தெரிந்திருக்கும்.
2) ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தால் அவருக்கு அந்த அறுவை சிகிச்சை தேவையாய் இருக்காது.
3)எல்லாப் பரிசோதனைகளும் செய்து என்ன நோய் என்று கண்டு பிடிக்கும் போது அந்த நோய் தானே குணமாகி இருக்கும்
4)எந்த மருந்து ஒருவருடைய நோய்க்கு மிகப் பொருத்தமாயிருக்குமோ அந்த மருந்துக்கு மட்டும் அவருக்கு ஒவ்வாமை(அலர்ஜி) இருக்கும்.
5)உங்கள் உடலில் அரிப்பெடுக்கும் பாகம் எந்த அளவுக்குக் கைகளால் எட்ட முடியாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு அரிப்பின் தீவிரமும் அதிகமாக இருக்கும்.
6)எந்த நோயாளியும் மருத்துவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்காமல் இருந்ததில்லை.
7)சில சமயம் மருத்துவரின் தீவிர முயற்சியையும் மீறி நோயாளி குணமடைந்து விடுகிறார்.
8)மன நலத்தில் ஒரு மர்ஃபியிசம்: “ஒருவரது பேச்சு எத்தனை குழப்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் நார்மலாக இருக்கிறார் என்று அர்த்தம்.
சூஃபியிசம் மாதிரி தான் மர்ஃபியிசமும்.நமது தேவையற்ற அகங்காரத்திற்கு அடிக்கடி விழும் அடி.நமது அன்றாட அபத்தங்களை நம்மையன்றி வேறு யாரால் கிண்டல் செய்ய முடியும்?
ஆனாலும் அறிவியல் பார்வையில்....
ரிச்சார்ட் டௌகின்ஸ் (Richard Dawkins) கருத்துப்படி, மர்ஃபி / சாட் விதி (Murphy / Sod law) போன்ற சட்டங்கள் முட்டாள்தனமானது அல்லது ஏற்புடையது அல்ல. ஒரு குறிப்பிட்ட வகை நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் ஏற்படலாம் என்று டௌகின்ஸ் சுட்டிக்காட்டுகிறார், ஆனால் அவர்கள் தொந்தரவாக இருக்கும் போது மட்டுமே கவனித்துள்ளனர்.
அவர் ஒரு உதாரணம் விமானத்தின் சத்தம் என்பதில் தலையிடுகிறார். விமானம் எல்லா நேரத்திலும் வானில் உள்ளது, ஆனால் அவை பிரச்சனையை ஏற்படுத்தும் போது மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது உறுதிப்படுத்துதலை உறுதிப்படுத்தும் (confirmation bias) ஒரு வடிவமாகும், அது ஏற்கனவே உருவாக்கப்பட்ட கருத்துகளை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வாளரின் சாட்சியத்தை கோருகிறது, ஆனால் அவற்றுக்கு முரண்படுகிறது என்பதற்கான ஆதாரத்தை அவர் தேடுவதில்லை

» தினம் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் பி.எஸ்.எப்., வீரர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» தமிழ்நாட்டில் தினம் தினம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர்
» 'காதலர் தினம்' பற்றி தெரிந்தவர்களுக்கு 'தாய்மொழி தினம்' தெரியவில்லை
» தினம் தினம் ஒரு முகப்பு பக்கம்
» ஜூன் 18: திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று.. பொதுவாழ்வில் தூய்மையாகவும், அப்பழுக்கற்ற தலைவராகவும் வாழ்ந்து காட்டிய திரு.கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|