TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி

Go down

தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Empty தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி

Post by ஜனனி Sat Nov 05, 2011 7:46 am

தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி Tamil_News_large_343528
சென்னை:தமிழக அமைச்சரவையில், ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு
பதிலாக ஆறு பேர் புதிதாக அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இது தவிர,
செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி
பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பிறகு, அவ்வப்போது சிறிய அளவில்
அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்,
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு
வந்தது.உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணியாற்றாத மற்றும் தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட இலாகாக்களை சரிவர கையாளாதவர்கள் மாற்றப்படுவர் என்ற பேச்சு
இருந்தது.

அதற்கேற்ப, அமைச்சரவையில் இருந்து ஆறு பேரை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா
நேற்று அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்று, உத்தரவிட்டார். இவர்களுக்கு
பதிலாக, ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர,
செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் நாள், தேதி
பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

போனது ஏன்? வந்தது ஏன்? தமிழக அமைச்சரவையிலிருந்து ஆறு பேர்
நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீக்கத்திற்கான காரணம் பல்வேறு யூகங்களை
கிளப்பிவிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று
பதவியேற்ற ஐந்து மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் பெரியளவில்
நடந்துள்ளது. மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா, மூன்றாவது முறையாக
அமைச்சரவையை மாற்றியுள்ளார்சிக்கலான

சட்டம்: மே மாதம் அமைச்சரவை பதவியேற்றபோது, சட்டத்துறை அமைச்சராக
இசக்கி சுப்பையா பொறுப்பேற்றார். ஆனால், இவர் ஒரு மாதமே பதவி வகித்தார்.
ஜூன் மாதம் இவர் பதவி இழந்தார். இவர் வகித்த சட்டத்துறை இலாகா, செந்தமிழன்
வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, செந்தமிழனும் பதவி இழந்துள்ளார். இவர்
அமைச்சராக பொறுப்பேற்றதும், தி.நகரில் போலீசார் கைது செய்த கட்சி
தொண்டர்களை விடுவிக்கும்படி, தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக
குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளாட்சி தேர்தலின் போது, கட்சி தொண்டர்கள்
சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார்
நடவடிக்கை எடுத்தனர். இதில், இவரது தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது.
தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ள விவகாரம்,
ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் பதவி நீக்கம்
செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி இடைத்தேர்தலில், சரியான முறையில் தேர்தல் பணியாற்றவில்லை
என்பதோடு, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்ஜோதி மீது புகார்கள் எழுந்ததன்
பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த
காரணங்களால் சிவபதி பதவி இழந்ததாக கூறப்படுகிறது.

தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த உதயகுமார், திருச்சி
இடைத்தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்க பெரியளவில்
பேனர்களை வைத்து, ஜெ.,யின் கண்டிப்புக்கு உள்ளானார். மேலும், இவரது
குடும்பத்தார் மீது ஊழல் புகார்கள் கட்சிக்கு தலைமைக்கு சென்றதும் காரணமாக
கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், கட்சியில் அனுபவம்
மிக்கவர்களை புறக்கணித்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோல்விக்கு
காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீலகிரியை சேர்ந்த புத்திசந்திரன் செயல்பாடு குறித்து மாவட்ட அளவில் கடும் அதிருப்தி நிலவியது.

சண்முகவேலுக்கு இரண்டு முறை இலாகா மாற்றியும், நிர்வாகத்திறன் குறைவாக
இருந்ததால் நீக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்களின் செயல்பாடு, நிர்வாக
ரீதியாக சரியாக இல்லை என்ற புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வந்தது ஏன்? சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற
பரஞ்ஜோதி, அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார். இவர், ஜெயலலிதா போட்டியிட்ட
ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறுப்பாளராக இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு
அறநிலையத்துறை கிடைத்துள்ளது என, ஸ்ரீரங்கம் மக்கள் மகிழ்ச்சியுடன்
தெரிவித்தனர்.

பரமக்குடியில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், அதை தொடர்ந்து
நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை சமாளிக்கும்
வகையில், பரமக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ், அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.

திடீர் அறிவிப்புக்குகாரணம் என்ன?தமிழக அமைச்சரவை மாற்றம்
திடீரென அறிவிக்கப்பட்டது அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி
தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு
வந்தது. இருப்பினும், கலெக்டர்கள் மாநாட்டிற்கு பின்புதான் அறிவிப்பு
வரலாம் என்ற கருத்து நிலவியது. ஆனால், நேற்று மாலை யாரும் எதிர்பாராத
வகையில், திடீரென அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பலரும், மழைசேத பகுதிகளை பார்வையிட சென்று இருந்தனர்.
சிலர், இப்படியொரு அறிவிப்பு வரும் என்றே எதிர்பார்க்கவில்லை.
கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவதற்கு, சென்னை ஐகோர்ட் தடை
விதித்தது. தொடர்ந்து நேற்று மதியம், சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தொடர்ந்த
மனு மீதான தீர்ப்பும் வந்தது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு
தடைவிதிக்கக் கோரி ஜெ., தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த இரு
தீர்ப்பும், தமிழக அரசுக்கு எதிராக அமைந்தது.

இந்நிலையில் இந்த செய்திகள் மீடியாக்களில் பிரதானமாக இடம் பெறுவதை
தவிர்க்கும் வகையில், அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வந்தது.
இதையடுத்து, "டிவி' சேனல்கள் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திக்கு
முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கின. இந்த அறிவிப்பை மதியமே வெளியிடப்பட
இருந்தது. இருப்பினும், எந்த அறிவிப்பாக இருந்தாலும், நல்ல நேரம்
பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். அந்த வகையில் நேற்று நவமி,
மாலை 4 மணிவரை இருந்ததால், அதன் பிறகே 6 அமைச்சர்கள் நீக்கம், மற்றும்
புதிய அமைச்சர்கள் சேர்ப்பு அடங்கிய பட்டியல், கவர்னர் ஒப்புதலுக்காக
அனுப்பிவைக்கப்பட்டது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மந்திரிகள், நீக்கம், மாற்றம் குறித்து சோனியா, மன்மோகன் சிங் ஆலோசனை
» விரைவில் தயாநிதியிடம் மத்திய மந்திரி பதவி பறிப்பு?
» அடுத்த முறை யாருக்கு மந்திரி பதவி? கருணாநிதி தகவல்
» ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் பனோட்டும் நீக்கம்
» ஆதாரங்களை திருத்தியதாக ஆம் ஆத்மி மந்திரி மீது குற்றசாட்டு: பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum