Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு கேபிள் "டிவி' இன்று துவக்கம்: மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
Page 1 of 1

சென்னை: மக்களிடம் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள,
அரசு "கேபிள் டிவி' சேவை இன்று துவக்கப்படுகிறது. தற்போதுள்ள
இணைப்புகளிலேயே, அரசு கேபிள் இணைப்பில் உள்ள "டிவி' சேனல்களை பார்க்க
முடியும். முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் இன்று துவக்கி
வைக்கிறார்.
முந்தைய ஆட்சியில், அரசு "கேபிள் டிவி' நிறுவனம், ஆளுங்கட்சியினரின்
திடீர் தலையீடு காரணமாக, வெறும் 432 இணைப்புகளாக குறைக்கப்பட்டது. பின்,
அந்த நிறுவனமே முடக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு
வந்ததால், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கேபிள் கார்ப்பரேஷனுக்கு தனியாக தலைவரும்,
நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே,
தஞ்சை, நெல்லை, கோவை மற்றும் வேலூரில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல்
தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன.
மீதமுள்ள மாவட்டங்களிலும், "கேபிள் டிவி' சேவையை துவங்கும் வகையில்,
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு "கேபிள்
டிவி'யில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 40 ஆயிரம் கேபிள்
ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களில், 34 ஆயிரத்து 344 ஆபரேட்டர்கள், அரசு
"கேபிள் டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இவர்களிடம், ஒரு கோடியே 45
லட்சம் இணைப்புகள் உள்ளன.
அரசு கேபிள் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட
உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கேபிள்ஆபரேட்டர்கள்
மூலம், சந்தாதாரர்களிடம் மாதச் சந்தாவாக ஒரு இணைப்புக்கு 70 ரூபாய், கேபிள்
ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இதில், ஒரு இணைப்புக்கு 20 ரூபாயை,
கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து அரசு "கேபிள் டிவி' நிறுவனம் வசூலிக்கும்.
எனவே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அரசு "கேபிள் டிவி' இணைப்புகள்
இன்று முதல் 24 மணிநேர தடையற்ற ஒளிபரப்பு சேவையை வழங்க உள்ளன.
இதற்கான துவக்க நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. அரசு
கேபிள் ஒளிபரப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12.10 மணிக்கு, வீடியோ
கான்பரன்சிங் முறையில் துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில், வேலூர்
மையத்திலும் விழா நடக்கிறது. அதில், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
சேவையை துவக்கி வைத்து, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். இதைத்
தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது
சந்தாதாரர்களுக்கு, ஒளிபரப்பை வழங்குகின்றனர்.
அதேபோல, மற்ற மாவட்டங்களிலும் கேபிள் சேவையை அந்தந்த ஆபரேட்டர்கள்
வழங்குகின்றனர். கட்டண சேனல்களாக உள்ள, "சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி,
டிஸ்கவரி தமிழ்' போன்ற சேனல்கள் முதலில் இடம்பெறாது. இலவச சேனல்கள் மட்டுமே
இன்று ஒளி பரப்பப்படும். கட்டணச் சேனல்களின் கட்டணத்தை முடிவு செய்த
பின், அவற்றின் ஒளிபரப்பு வழங்கப்படும். மேலும், உள்ளூர்சேனல்கள் இதனால்
சற்று சுதந்திரமாக முறையான வரன்முறைகளுடன் ஒளிபரப்பாகும் சூழ்நிலை
ஏற்படும்.அரசு "கேபிள் டிவி' செயலாக்கம் பல்வேறு மாவட்டங்களிலும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வரவேற்பு அதிக அளவில்
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடைமீறி ஒளிபரப்பாகும் உள்ளூர் சேனல்கள்: கடந்த ஆக.15 முதல்
தமிழகம் முழுவதும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்புக்கு தமிழக அரசு விதித்த
தடையை மீறி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெய்குரு, ஜே.ஜி.,-ஜி,- "ஜி'
பிளஸ், "ஜி' மியூசிக் உள்ளூர் கேபிள் "டிவி' சேனல்கள் ஒளிபரப்பாகிறது.
தேனி மாவட்டம் கூடலூரில் "ஜி.சி.சி.', தேவதானப்பட்டியில் "ராகம்',
சின்னமனூரில் "சிவகாமி' ,ஆகிய உள்ளூர் சேனல்களும், ராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரையில், "கீழை',"கீழை பிளஸ்', "டி.என்.டி.ஜே', "கே.எல்.சி.டி.'ஆகிய
நான்கு உள்ளூர் சேனல்கள் தொடர்ந்துஒளிபரப்பாகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்கை, மூன், வத்திராயிருப்பில்
"டவர்', "எஸ்.எஸ். குமார்' மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில்
"எஸ்.டெலிவிஷன்', "கியூ', "எஸ்.ஆர்.எம்.', "வேல்', "டவர்', "நந்தா' ஆகிய
உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நெல்லை மாவட்டம் தென்காசியில்
"ஏ.எம்.என்',"மயூரி' உள்ளிட்ட உள்ளூர் சேனல்களும், செங்கோட்டை புறநகர்
பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, குலசேகரம், தோவாளையிலும்
உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பாகிறது.

Similar topics
» கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்
» அரசு கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் exculsive
» டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அரசு கேபிள் "டிவி': ஏற்பாடுகள் தீவிரம்
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி: கே.ராதாகிருஷ்ணன் தகவல்
» அரசு கேபிள் "டிவி'க்கு எதிராக தனியார் சேனல்கள் ஆதிக்கம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum