Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் - பாகம் II
Page 1 of 1

இலங்கைத்
தீவிற்குள் தமிழர் மீது விரிக்கப்பட்ட 'போர்க்களம்' தற்போது
தென்னிலங்கைச் சிங்கள மக்களிடமும் விரிவாக்கப்படும் காட்சிகள் அரங்கேறத்
தொடங்கி விட்டன.
அனைத்துலக சமூகத்திற்குப் 'பயங்கரவாதம்'
என்னும் புலிப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த சிறிலங்கா சிங்களப்
பெருந் தேசியவாதம் - தற்போது தனது உண்மையான 'ஜனநாயக' முகத்தைத் தனக்குத்
தானே காட்டத் தொடங்கி இருக்கின்றது.
அதே போல் - சிங்கள
மக்களைத் தேசியவாத முகம் காட்டி ஏமாற்றியவர்கள் - இப்போது, தமது குடும்ப
ஆதிக்கவாதத்தை நிறுவுவதற்கான ஜனநாயகக் கொலை முயற்சியில் தீவிரம் காட்டி
வருகிறார்கள்.
சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலுக்கு பின்னான அரசியல் நிகழ்வுகள் இதைத்தான் சுட்டி நிற்கின்றன.
இப்படி
இலங்கைத் தீவின் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு, ஆதிக்கவாத இன வெறிகொண்ட இராணுவ
பலத்துடனான ஆட்சி மேலெழுந்ததற்கும், தமிழர்கள் மீதான பேரவலத்தை
நிகழ்த்தியதற்குமான பொறுப்பாளிகள் யார்...?
இன்றைய இந்த
ஜனநாயகப் படுகொலைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்த சக்திகள்
யார்..? அவர்கள் தங்களது தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல
முடியுமா..? அல்லது, தமது சொந்த நலன்களைத் தன்னும் அவர்களால் இனி காக்க
முடியுமா...?
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த வினையை
விதைத்தவர்களே அதன் விளைச்சலையும் அறுக்க வேண்டியவர்களானதும், இனவாத
பூதத்தை வளர்த்தவர்களே அதற்கு இரையாகிப் போனதும் தான்.
இந்த
விதைப்பையும், வளர்ப்பையும் அறிய, வரலாற்றில் நாம் அதிக தூரம் பின்னோக்கி
பயணிக்க வேண்டியதில்லை. 2002 ஆம் ஆண்டின் பின்னான நிகழ்வுகளில் இருந்தே
அவற்றை அடையாளம் காணலாம்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களினைச்
சுருக்கி அல்லது அகற்றி மக்களின் மீள் குடியமர்வுக்கு வழி செய்வதன் ஊடாக,
சமாதான முயற்சிகளை முன்னோக்கி நகர்த்தும் வாய்ப்பினை இல்லாமல் செய்தது
யார்?
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா.
விடுதலைப்
புலிகளும் - ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசும் தற்காலிக உடன்பாட்டின்
ஊடாக, இடைக்கால நிர்வாக சபை முறையினைச் செயற்படுத்தும் வாய்ப்புக்களினை
உருவாக்கிய போது, அமைச்சரவைப் பதவிகளினைப் பறித்து நிலைமையினை
மோசமாக்கியது யார்?
சிறிலங்கா குடியரசின் அன்றைய அதிபராக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க.
தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தவருக்கு வாசல் திறந்து,
விடுதலைப் புலிகளின் குவிமையப்பட்டிருந்த அரசியல்-போரியல் பலத்தினை
சிதைத்தது யார்?
சிறிலங்கா பாராளுமன்றத்தில் அன்று அதிக ஆசனங்களை வென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும், அதன் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவும்.
ஆழிப்
பேரலை அனர்த்தத்தின் பின்னான பொதுக் கட்டமைப்பினை சிறிலங்கா
அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் இணைந்து செயற்படுத்த முன்வந்த போது
அதற்கெதிராக நீதிமன்றத்திற்குச் சென்று அதனைச் செயலிழக்கச் செய்தது யார்?
இன்றைய எதிர்க் கட்சிக் கூட்டணியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியும் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும்.
ராஜபக்சக்களின் தலைமைத்துவ ஆற்றலினையும், அரசியல் வல்லமையையும்,
போர்த் தந்திரோபாயத் திறனையும், இராஜதந்திர சூழ்ச்சிக்
கெட்டித்தனத்தையும் குறைத்து மதிப்பிட்டு - ஆட்சிக் கதிரையினை அவர்கள்
கைப்பற்ற முதலில் இடம் கொடுத்தது யார்?
வேலுப்பிள்ளை பிரபாகரன்.
'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பதாகையின் கீழ்
முன்னெடுக்கப்பட்ட ஓர் இன அழிப்புப் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கத்
தவறியோர் யார்?
சிறிலங்காவின் இடது சாரிகள், கல்விமான்கள், மதத் தலைவர்கள், குடி மக்கள் தலைவர்கள், ஊடகத்துறையினர்.
இப்போது
- இவர்களில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தவிர மிகுதி எல்லோருமே -
ஜனநாயகத்தின் காவலர்களாக, அறவழிப் போராட்டகாரர்களாக உலாவருகின்றார்கள்.
இன்னொரு பக்கத்தில் -
நோர்வே தலைமையிலான உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தினை குழப்பும்
வகையில் வோஷிங்டனில் இடைக்காலக் கூட்டத்தினை கூட்டி அதுவரை சிறிலங்கா
அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் உருவாக்கப்பட்டிருந்த சம தரப்பு
நிலையினை சிதறடித்து நிலைமையினை மீள முடியாத சிக்கலுக்குள் தள்ளியது யார்?
அமெரிக்கா.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இரண்டு பகுதியினருமே தங்களது
பொறுப்புக்களினை நிறைவேற்றாது தட்டிக்கழித்த போது - வெறுமனே கையறுநிலையில்
தபால்காரன் வேலையுடன் தனது பொறுப்பினை மட்டுப்படுத்திக்கொண்டது யார்?
நோர்வே.
டோக்கியோ
மகாநாட்டில் ஒதுக்கப்படவிருந்த நிதியினைக் கையாளுவதற்கான பொதுக்
கட்டமைப்பினைக் கண்டறியாமல் தனது செல்வாக்கினை கட்டியெழுப்பும் ஒரே
குறிக்ககோளுடன் செயற்பட்டதும், பிற்காலத்தில் சிறிலங்கா அரசின் மீது
அழுத்தங்களினைப் பிரயோகித்து வழிக்கு கொண்டு வர முற்பட்ட இணைத் தலைமை
நாடுகளின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்பட்டதும் யார்?
ஜப்பான்.
மிகப்
பெரிய மனிதப் பேரவலம் நிகழப் போகின்றது என்று தெரிந்திருந்தும்,
இராஜதந்திரச் சித்துவிளையாடல்களிலும், வெறும் வார்த்தையாடல்களிலும்
மட்டுமே ஈடுபட்டிருந்தது யார்?
ஐ. நா. சபையும் மேற்குலகமும்.
சிறிலங்கா அரசினதும் சிங்களப் பேரினவாதத்தினதும் ஆழமான உள்
நோக்கங்களினைத் தங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்திருந்தும்
தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தடை செய்வதன் மூலம் சிங்களப் பேரின
தேசியவாதத்திற்கு துணை போனது யார்?
ஐரோப்பிய ஒன்றியம்.
எல்லாவற்றுக்கும்
சிகரம் வைத்தாற் போல் - இந்தச் சித்து விளையாட்டுக்களுக்கும் கோர
அழிவுகளுக்கும் - அங்கீகாரம், ஆலோசனை, அனுசரணை, ஆதரவு, ஒத்தாசை,
இராஜதந்திரப் பாதுகாப்பு என எல்லாவற்றையும் வழங்கியது யார்?
இந்தியா.
இவ்வாறே - இலங்கைத் தீவின் இன்றைய பூதாகரமான தோற்றத்திற்கு ஒவ்வொருவரும் தங்கள் பங்கு வழங்கலைச் செய்தனர்.
வரலாறு
படைத்துவிட்டிருக்கும் அதிசயம் என்னவென்றால் - இவ்வளவையும் செய்த
இவர்களில் எவரினது கைகளிலும் இலங்கைத் தீவு இப்போது இல்லை என்பது தான்.
இலங்கைத் தீவை மீண்டும் தங்கள் கைகளில் எடுக்க வேண்டுமெனில் - இதுவரை
கையாண்ட தோற்றுப் போன வழிமுறைகளைத் தொடர்ந்தும் கையாளாமல் - இவர்கள்
இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்
» உலகம் ஆதாரத்தை கண்டுவிட்டது. இப்போது நாம் செயல்பட வேண்டும் –
» மக்கள் படுகொலைகளை தொடர்ந்து தமிழினை அழிக்க வேண்டும் தமிழர் பகுதிகளில் சிங்களத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஈழத்தில் இருக்கும் பதாகைகள்...
» கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum