TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி

Go down

சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி Empty சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி

Post by அருள் Wed May 25, 2011 9:35 am

Last Updated :



சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி Rajini





சென்னை, மே 24: சிறுநீரக பாதிப்புக்கு தொடர் சிகிச்சை பெற நடிகர் ரஜினிகாந்த்
(60) இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் லண்டன் செல்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு நெருக்கமான திரைப்படத் துறையினர் இதை
ஊர்ஜிதப்படுத்தினர். திரைப்படத் துறையினரின் உதவியுடன் அவர் லண்டன் செல்கிறார்.
கடந்த மாதம் மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே நடிகர்
ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு பிரச்னை இருந்து வருகிறது. இப்போது அவர் ஸ்ரீ
ராமச்சந்திரா மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராணா படப்பிடிப்பு தொடக்க விழா அன்று..."இரோஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட்'
நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "ராணா'
படப்பிடிப்பு சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவில் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது;
இந்த படப்பிடிப்பின் தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிகாந்த்துக்கு திடீரென
மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 25 நாள்களாக ரஜினிகாந்த் உடல்நலக்
குறைவுடன் உள்ளார்.
உடல்நலக் குறைவு-அடிப்படைக் காரணம் என்ன? மருத்துவ ரீதியாக ரத்த
அழுத்தத்துக்கும் சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த
ஏப்ரல் 29-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்துக்கு உயர்
ரத்த அழுத்தப் பிரச்னை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. உயர் ரத்த
அழுத்தப் பிரச்னைக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகச்
செயல்பாட்டில் ஓசையின்றி பிரச்னைகள் ஆரம்பித்திருந்தன.
சிறுநீரகத்தில் பாதிப்பு என்ன? மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு ரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மூச்சுத்
திணறல்-அதீத உடல் சோர்வுக்கான காரணங்களை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில்
மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவு
சேரும் உப்புச் சத்து ("யுரியா'), பொட்டாஷியச் சத்து, கிரியாட்டினின்
பாஸ்பேட்டிலிருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை
சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும். அதாவது, ரத்தத்தில் "யூரியா'
எனப்படும் உப்புச் சத்து அளவு 40 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்;
பொட்டாஷியச் சத்து 4.5 மில்லிகிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்; கிரியாட்டினின்
அளவு 1 மில்லி கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தொடக்கத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே
மேலே குறிப்பிட்ட உப்புச் சத்து, பொட்டாஷியச் சத்து, கிரியாட்டினின் அளவுகள்
அதிகமாக இருந்தன. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது
உறுதியானது.
அதீத சோர்வு, மூச்சுத் திணறல் ஏன்? சிறுநீரகச் செயல்பாடு ஓரளவு
பாதிக்கப்பட்டுள்ளதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைத் தீர்மானிக்கும் "எரித்ரோபாய்ட்டின்'
ஹார்மோன் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரத்தத்தில் இயல்பாக 14 கிராம்
இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு (ரத்த சோகையைத் தடுப்பது.) அவருக்குக் குறைந்தது.
அதீத உடல் சோர்வு ஏற்பட்டதற்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்ததும் காரணம். சிறுநீரகச்
செயல்பாடு பாதிப்பு காரணமாகவே மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மே 13 முதல்...: கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டு,
மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று நடிகர் ரஜினி வீடு
திரும்பினார். எனினும் மூச்சுத் திணறல் தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு சென்னை
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டார்.
இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர்
குழுவினர் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். சிறுநீரகச் செயல்பாடு
பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது
மூச்சுத்திணறல் பிரச்னையைச் சீராக்க மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த
ஞாயிற்றுக்கிழமை (மே 22) தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மீண்டும் தனி அறைக்கு
மாற்றப்பட்டார். சிறுநீரக பாதிப்பு காரணமாக இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோடயாலிஸிஸ்
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
உணவில் கட்டுப்பாடு: சிறுநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதச் சத்து குறைவான
உணவையே சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர் பானங்களை
அவர் இனி சாப்பிடக் கூடாது; பாதாம்-பிஸ்தா-முந்திரி உள்ளிட்டவை மற்றும் கீரைகளையும்
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நலமாக உள்ளார்: தனி அறையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது
நலமாக உள்ளார். தொலைக்காட்சி பார்க்கிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச்
செலவிடுகிறார். எனினும் சிறுநீரக பாதிப்புக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும்
சிகிச்சை பெற அவரை லண்டன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum