Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அணு கதிர்வீச்சு பாதிப்புக்கு சட்டமில்லை: அமைச்சர் ஒப்புதல்
2 posters
Page 1 of 1
அணு கதிர்வீச்சு பாதிப்புக்கு சட்டமில்லை: அமைச்சர் ஒப்புதல்
மே 10,2010,00:00 IST
அணு
கதிர்வீச்சு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நிவாரணம்
வழங்குவது குறித்து வகை செய்வதற்கு மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ இதுவரை
எந்த சட்டமும் இல்லை என்று, தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம்
அணுமின் நிலையம் இருக்கும் சூழ்நிலையில், இதுபோன்ற சட்டமே இல்லை என்று
பார்லிமென்டில் அரசு அறிவித்திருப்பதன் மூலம் பெரும் அதிர்ச்சி
ஏற்பட்டுள்ளது.மேற்கு டில்லி, மாயாபுரியில் பழைய இரும்பு சாமான்கள்
விற்கும் சந்தை உள்ளது. இங்கு பழைய இரும்புக் கழிவுகள், ஏராளமாக
வருவதுண்டு. சில வாரங்களுக்கு முன், இந்த சந்தையில் இருந்த கோபால்ட்-16
ரேடியோ கதிரியக்க பொருளால், ஏழெட்டு பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான
நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், பலியாகிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து லோக்சபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா பேசியதாவது:ரேடியோ
கதிரியக்க வீச்சிலிருந்து பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க சட்டம் இல்லை.
நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளாகியும் இந்த நிலை நீடிப்பது கேவலமானது.
மக்களின் பாதுகாப்புக்கு, அரசே பொறுப்பேற்க வேண்டும்.நிவாரணம் மற்றும்
இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். அணுமின்
நிலையங்கள் நிறைய கொண்டு வரவேண்டுமென பிரதமர் விரும்புகிறார். ஆனால்,
பாதுகாப்பு தருவதற்கு மட்டும் தயங்குகிறார்.பழைய இரும்பு கழிவு தொழிலில்
நாடு முழுவதும் 15 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். கழிவுகளை சுழற்சி
முறையில் சுத்தம் செய்யும் பணியை இவர்கள் மேற்கொள் கின்றனர். இவர்களுக்கு
எந்த விதமான பாதுகாப்பும் இல்லை.இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து
ஆண்டொன்றுக்கு 64 லட்சம் டன் இரும்பு கழிவுகள் வருகின்றன. இந்தியாவில்
மட்டும் 57 லட்சம் டன் வரை இரும்பு கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.நாடு
முழுவதும் ஆயிரத்து 485 அறிவியல் மையங்களில் 8,000 நியூக்ளியர் உபகரணங்கள்
உள்ளன. இவைகள் எந்த அளவில் பாதுகாப்பாக உள்ளன என்பது பற்றி யாருக்கும்
தெரியாது. இது குறித்த சட்ட திட்டங்களும் சரிவர இல்லை. டில்லி மார்க்கெட்
சம்பவத்தில் யார் மீது வழக்கு போடப் பட்டுள்ளது? சம்பந்தப்பட்ட பல்கலைக்
கழகத்தின் துணைவேந்தர் மற்றும் துறை தலைவர் மீது வழக்கு போட
வேண்டும்.இவ்வாறு குருதாஸ் தாஸ் குப்தா பேசினார்.
அமைச்சர் பிருதிவிராஜ் சவுகான் பதிலளித்து பேசியதாவது:கடந்த
1984ம் ஆண்டில் போபாலில் கார்பைடு நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டது. இதன்
பின், 1991ம் ஆண்டு கெமிக்கல் தொழிற்கூடங்களில் ஏற்படும் விபத்து
இழப்பீடுகள் குறித்த சட்டம் பார்லிமென்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம்
மட்டுமே தற்போதைக்கு இருந்து வருகிறது.ஆனால், அணு கதிர்வீச்சு மற்றும்
ரேடியோ கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் மற்றும்
இழப்பீடு வழங்குவதற்கு உண்டான சட்டங்கள் மத்திய அரசு மற்றும் மாநில
அரசுகள் தரப்பில் இதுவரை இல்லை.இந்தியாவில் 19 இடங்களில் அணுமின்
நிலையங்கள் உள்ளன. எந்த இடத்திலும் ரேடியோ கதிரியக்க லீக்கேஜ்கள் இல்லை.
எல்லா இடங்களுமே பாதுகாப்பாக இருந்து வருகின்றன.டில்லி சம்பவத்தில்
குறிப்பிடப்பட்ட காமா செல்லை பழைய இரும்பு கழிவுகளுக்கு விற்கக் கூடாது
என்று சட்டம் உள்ளது. 1969ம் ஆண்டு கனடாவில் இருந்து டில்லி பல்கலைக்
கழகத்திற்கு 69 காமா செல்கள் வாங்கப்பட்டன. இதில் மீதியிருப்பவற்றை நரோரா
அணுமின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிருதிவிராஜ் சவுகான் தெரிவித்தார்.
கடந்த 1984ம் ஆண்டு போபாலில் கார்பைடு
நிறுவனத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்.
இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் மத்திய, மாநில
அரசுகள் சட்டம் இயற்றவில்லை. இன்னமும் அதே நிலை நீடிக்கிறது.தமிழகத்தைப்
பொறுத்தவரை கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் அணுமின் நிலையங்கள் உள்ளன.
அணு கதிர்வீச்சு அபாயம் இந்த நிலையங்களில் இருக்கலாம் என்று அவ்வப்போது
பேச்சுக்கள் எழுவதுண்டு.இந்நிலையில், அணுமின் நிலையங்களில் ஏதாவது
அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.இந்த ஆபத்தால்
ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணமோ அல்லது இழப்பீடோ வழங்குவதற்கு இன்னமும்
சட்டங்கள் இல்லை என்று மத்திய அமைச்சரே பார்லிமென்டில் ஒப்புக்
கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.thanks:dinamalar

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
சிவா- நிர்வாக குழுவினர்
- Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்
Similar topics
» இந்தியர்கள் மீதான தாக்குதலில் இனப்பாகுபாடு உள்ளது: ஆஸ்திரேலிய அமைச்சர் ஒப்புதல்
» “யாரையும் வரவேற்க வேண்டும் என தி.மு.க.,வில் சட்டமில்லை”- அழகிரி சீறுகிறார்
» 4 அமைச்சர்கள் இலாகா மாற்றம்: அமைச்சர் இசக்கி சுப்பையா திடீர் நீக்கம்; செந்தூர் பாண்டியன் புதிய அமைச்சர்
» அதிக சொத்துள்ள அமைச்சர் அருண் ஜெட்லி: குறைந்த சொத்துள்ள அமைச்சர் வெங்கையா நாயுடு!
» சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை: விரைவில் லண்டன் செல்கிறார் ரஜினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum