TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நவீன் சாவ்லா மீதான புகார்கள் அம்பலம் : வெளியிட்டது சட்ட அமைச்சகம்

Go down

நவீன் சாவ்லா மீதான புகார்கள் அம்பலம் : வெளியிட்டது சட்ட அமைச்சகம் Empty நவீன் சாவ்லா மீதான புகார்கள் அம்பலம் : வெளியிட்டது சட்ட அமைச்சகம்

Post by Tamil Mon Feb 08, 2010 7:27 am

புதுடில்லி :தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர்
நவீன் சாவ்லாவை நீக்கும்படி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு முன்னாள்
தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி எழுதிய கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகம்
வெளியிட்டுள்ளது. இக்கடிதத்தை வெளியிட ஜனாதிபதி மாளிகை மறுத்த நிலையில்,
சட்ட அமைச்சகம் வெளியிட்டு அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.


தற்போது, தலைமை
தேர்தல் கமிஷனராக இருக்கும் நவீன் சாவ்லா, முன், தேர்தல் கமிஷனராக
இருந்தார். அப்போது, இவரை பதவி நீக்கம் செய்யும்படி, ஜனாதிபதி பிரதிபா
பாட்டீலுக்கு தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த கோபாலசாமி கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்தில் உள்ள விவரங்களை வெளியிட வேண்டும் என, தகவல் உரிமை
சட்டத்தின் கீழ், ராஜஸ்தான் பில்வாராவைச் சேர்ந்த ரனாவத் என்பவர் மனு
தாக்கல் செய்தார்.ஆனால், கடிதத்தில் உள்ள விவரங்களை வெளியிட, நவீன் சாவ்லா
எதிர்ப்பு தெரிவிப்பதால், அதை தர முடியாது என, ஜனாதிபதி மாளிகை
கூறிவிட்டது.


93 பக்கம்:
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, ஜனாதிபதிக்கு
கோபாலசாமி எழுதிய கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


93 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் கோபாலசாமி கூறியுள்ளதாவது:தேர்தல்
கமிஷனராக இருக்கும் நவீன் சாவ்லா, பாரபட்சமாக செயல்படுவதாக, பாரதிய ஜனதா
மூத்த தலைவர் அத்வானி மற்றும் 179 எம்.பி.,க்களும் என்னிடம் புகார் மனு
அளித்துள்ளனர். நான் சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள்
அடிப்படையில், தேர்தல் கமிஷனர் பதவியில் நீடிக்க சாவ்லா தகுதியானவரா,
இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். தேர்தல் கமிஷனராக சாவ்லா நீடிப்பது
நியாயமற்றது என்பதே எனது முடிவு.அரசியல் சட்டப் பிரிவு 324 (5)ல் உள்ள
விதிகளின் அடிப்படையில், சாவ்லாவை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து
நீக்கும்படி பரிந்துரை செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது. சாவ்லா, ஒரு
கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதற்கு ஆதரவாக, 12 சம்பவங்களை
குறிப்பிட்டுள்ளேன். இதனால், ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் அவர் தொடர்ந்து
தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகமும் எழுகிறது.


அரசியல்
கட்சிகளிடம் சாவ்லா நடுநிலைமையோடு நடந்து கொள்ளாதது மட்டுமின்றி, மற்றொரு
தேர்தல் கமிஷனரான குரேஷியையும் தன் பக்கம் இழுக்க முற்பட்டுள்ளார். குரேஷி
மீது குற்றச்சாட்டு கூறி, அவரை தன் வழிக்கு கொண்டுவர முயன்றுள்ளார். இந்த
செயல் சரியானதல்ல.கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில், "தலைமை தேர்தல்
கமிஷனரோடு சேர்ந்து கொண்டு, சோனியாவுக்கு எதிராக நீ செயல்படுகிறாய்.
அதனால், சோனியா உன் மீது கோபத்தில் உள்ளார்' என்று குரேஷியிடம் சாவ்லா
கூறியுள்ளார். இதை குரேஷி என்னிடம் தெரிவித்தார். இதுபோன்ற நிர்பந்த
தந்திரங்கள் தேர்தல் கமிஷனரகத்திற்கு உகந்தது அல்ல. நேர்மையாகவும்,
சுதந்திரமாகவும் செயல்படும் தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் மத்தியில், அது
மனரீதியான உளைச்சலை ஏற்படுத்தி விடும். ஏனெனில், தேர்தல் கமிஷன் ஒரு
நடுநிலைமையான அமைப்பு.


கடந்த
2007ம் ஆண்டில், உ.பி.,யில் தேர்தல் அறிவிப்பை வெளியிட தயாரான போது, அதை
தள்ளிவைக்க வேண்டும் என, சாவ்லா விரும்பினார்." ஜனாதிபதி ஆட்சி
அமலாகட்டும், அதன்பின் தேர்தலை நடத்தலாம்' என்றார். காங்கிரஸ் கட்சி
கேட்டுக் கொண்டபடிதான், அவர் இந்தக் கோரிக்கையை எங்களிடம் முன்வைத்தார்.
உடன், நாங்கள் இந்தப் பிரச்னையை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின்
கவனத்திற்கு கொண்டு சென்றோம். கடந்த 2005 மே மாதத்திற்கு முன், ஒரு ஆண்டு
மூன்று மாத காலம் நான் தேர்தல் கமிஷனராக பணியாற்றினேன். அப்போது எந்த ஒரு
தேர்தல் கமிஷனரும், யாரும் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்
சாட்டியதில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், 2004 பொதுத் தேர்தல்,
மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சட்டசபை
தேர்தலும் நடந்தன.


சாவ்லா, நீண்ட
காலமாக அரசியல் அமைப்பு ஒன்றுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அவரும்,
அவரது குடும்ப உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் அறக்கட்டளைக்கும் அரசியல்
கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல்
கமிஷனர் பதவி வகிக்கும் போதே இதை செய்துள்ளார். அதனால் இதுவே அவர் தேர்தல்
கமிஷனர் பதவியில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய போதுமானது.
இதைக் கொண்டே அடுத்து அவர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கு வரலாமா
என்பதையும் தீர்மானிக்கலாம்.இவ்வாறு கோபாலசாமி கடிதத்தில்
கூறியுள்ளார்.இக்கடிதத்தை வெளியிடக் கூடாது என்று நவீன் சாவ்லா ஏற்கனவே
கூறியுள்ள போது, இது வேறுவிதமாக வெளிவந்து பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தலில் கிரிமினல்கள் போட்டி: நவீன் சாவ்லா வேதனை
» தமிழக ஆளுநராகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா?
» புலம்பெயர் அமைப்புகள் மீதான இலங்கை அரசின் தடைக்கு கனடாவில் சட்ட வலிமையில்லை! - வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட் அறிவிப்பு.
» மத்திய அமைச்சகங்களில் 1,400 ஊழல் புகார்கள் நிலுவை
» ஜெ., - நவீன் அதிரடி அறிவிப்பால் கிளம்பியது அதிர்வலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum