TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., கைவிடாதது ஏன்? டில்லி சென்ற பின் ஞானோதயம்

Go down

காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., கைவிடாதது ஏன்? டில்லி சென்ற பின் ஞானோதயம் Empty காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., கைவிடாதது ஏன்? டில்லி சென்ற பின் ஞானோதயம்

Post by ஜனனி Sun Mar 13, 2011 5:48 pm

"இனி மத்திய அரசுக்கு பிரச்னைகள் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு
தருவோம், சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது' என,
சென்னையில் நடந்த தி.மு.க., உயர்மட்ட செயல் திட்ட குழுவில் எடுத்த முடிவு,
அடுத்த சில நாட்களிலேயே டமால் ஆனதற்கு காரணம் அழகிரியின் முயற்சி தான் என
தெரியவந்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள்
கட்சிகள் முதலில் இடம் பெற்றன. இதில் எந்த கட்சிக்குமே திருச்சிக்கு கீழே
தென் மாவட்டங்களில் ஓட்டு வங்கியே கிடையாது. கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில்
தி.மு.க., கூட்டணிக்கு உள்ள ஒரே பலம் காங்கிரஸ் தான். இந்த மாவட்டங்கள்
எல்லாமே மத்திய அமைச்சர் அழகிரியின் பொறுப்பில் உள்ளன. காங்கிரஸ் இல்லாமல்
தி.மு.க., தேர்தலை சந்தித்தால் இந்த மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட
தி.மு.க.,வுக்கு கிடைக்காது. வட மாவட்டங்களில் மட்டும் தி.மு.க.,வுக்கு
தொகுதிகள் கிடைக்கும்.அங்கு நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும்
ஸ்டாலின் ஆதரவாளர்கள். எனவே, தேர்தலுக்குப் பின் அமையும் சட்டசபையில்
அழகிரிக்கு ஆட்களே இருக்கமாட்டார்கள். கட்சியிலும் ஸ்டாலின் கை
ஓங்கிவிடும். இந்த பின்னணியில் தான் ராஜினாமா என்ற மிரட்டலுடன் டில்லி
வந்து இறங்கினர் தி.மு.க., அமைச்சர்கள்.
அதன் பின் நடந்த காங்கிரஸ் - தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை
ஏறக்குறைய டி-20 கிரிக்கெட் மேட்சை விட அதிக பரபரப்பாக இருந்தது. முடிந்து
விடும் என்று நினைக்கும் போது, அதிரடியாக பிரச்னை ஏற்படும். அவ்வளவு தான்,
ஊத்திக் கொண்டது தொகுதி பங்கீடு என்று செய்தி வெளியாகும் தறுவாயில்,
திடீரென காட்சி மாறும்.
தி.மு.க., எம்.பி., மீது பிரணாப்பின் கோபம்! திங்கள் காலை
தி.மு.க., அமைச்சர்கள் டில்லி வந்தனர். காலை 11 மணிக்கு, பார்லிமென்டில்
பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த
சந்திப்பு நிகழவில்லை. காரணம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முயற்சி.
இவர், முதல்வர் கருணாநிதியுடன் பேச முயற்சித்து, கருணாநிதி அருகே அப்போது
அமர்ந்திருந்த ஒரு தி.மு.க., எம்.பி.,க்கு போன் செய்தார். எதற்கு
அவசரப்படுகிறீர்கள்? சற்று பொறுங்கள் என்று சொன்னார் பிரணாப். தி.மு.க.,
எம்.பி.,யோ எஸ் சார்... நோ சார்... என்றாராம்.தி.மு.க., தலைவரிடம்
"பிரணாப் நோ என்கிறார்' என்று சொன்னார். அடுத்த முனையில், இதைக் கேட்டுக்
கொண்டிருந்த பிரணாப், "எதற்கு தவறாக மொழி பெயர்க்கிறீர்கள். நான் பேசுவதை
ஒழுங்காக மொழிபெயர்ப்பு செய்து சொல்லுங்கள்' என்று கோபத்துடன் கத்தியதோடு,
போனை கருணாநிதியிடம் கொடுங்கள் என்றார். ஒரு நாள் தவணை கொடுங்கள் என்று
கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார் பிரணாப்.
அழகிரியின் முயற்சி : டில்லி என்றாலே, வேண்டாம் என்று
தவிர்த்துக் கொண்டிருந்தவர் அழகிரி. ஆனால், பிரணாப் முகர்ஜியுடன் இரண்டு
முறை பேச்சு வார்த்தை நடத்தினார். காங்கிரசின் பிரச்னையை அறிந்து
கொண்டதோடு, தி.மு.க.,வின் நிலையையும் தெரிவித்துவிட்டு, தீர்வு காண
முயற்சித்தார் அழகிரி. உடனே விவரங்களை கருணாநிதியிடமும் தெரிவித்தார்.
அதோடு சற்று கறாராகவே, காங்கிரசோடு கூட்டணி தொடர்ந்தால் தான் நல்லது என்று
முதல்வரிடமும் சொன்னார் அழகிரி.
சோனியா டோஸ் : திங்களன்று இரவு அழகிரி வீட்டு வாசலில்
காத்திருந்த மீடியா சென்ற பிறகு, அதிரடியாக சோனியாவை சந்திக்க சென்றார்
அழகிரியும், மற்றொரு அமைச்சரும். சோனியாவின் அறைக்குள் நுழைந்ததுமே
இவர்களுக்கு அதிர்ச்சி. காரணம், சோனியாவின் இறுக்கமான முகம். "ஏழு வருடமாக
உங்களுடன் நட்புடன் இருந்ததற்கு, இது தான் உங்கள் பதிலா? என்னிடம் ஒரு
வார்த்தை கூட சொல்லாமல், நீங்களாகவே பதவி விலக முடிவெடுத்து, மீடியாவில்
அறிவித்துவிட்டீர்கள். காங்கிரசை அவமானப்படுத்தி விட்டீர்கள். ஏன்
என்னிடம் பேசவில்லை?' என, சோனியா பொரிந்து தள்ள, பதில் சொல்ல முடியாமல்
இருவரும் அமர்ந்திருந்தனர். "தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று
விடுவீர்களா?' என, கிண்டலாக கேட்டார் சோனியா. உங்களுடைய செயலுக்கு நீங்கள்
வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். அனைத்தையும்
கேட்டுக் கொண்டு, தி.மு.க.,வின் நிலையை எடுத்துச் சொன்னார் அழகிரி.
காங்கிரசோடு கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று அழகிரி பதில்
சொல்லிவிட்டு, தி.மு.க., தலைவரிடம் பேசி நல்ல முடிவை எடுக்கிறோம் என்று
சொல்லி, இடத்தை காலி செய்தனர் தி.மு.க., அமைச்சர்கள்.
சி.பி.ஐ., விவகாரம் : தி.மு.க., 60 தொகுதிகள் தர தயாராக இருக்க,
காங்கிரஸ் 63 கேட்க, வெறும் 3 தொகுதிகளுக்காக, இந்த ராஜினாமா நாடகம் என்று
டில்லி வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. விஷயம் அதுவல்ல, சி.பி.ஐ.,
விசாரணை தான் முக்கிய காரணம் என்கின்றன காங்கிரஸ் - தி.மு.க.,
வட்டாரங்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை உடனடியாக
தொடங்கக் கூடாது. தேர்தலுக்கு பிறகு தான் தொடர வேண்டும்' என்று தி.மு.க.,
தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் பார்வையில் இந்த
விசாரணை நடப்பதால், எதுவும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் தரப்பில்
கூறப்பட்டது. போபர்ஸ் வழக்கை மட்டும் எப்படி சி.பி.ஐ., மூடிவிட்டது என்ற
கேள்வி தி.மு.க., தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. கடைசியில், குடும்ப
உறுப்பினரை சி.பி.ஐ., விசாரித்தாலும், குற்றப் பத்திரிகையில் அந்த
உறுப்பினர்கள் பெயர் வரக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. முடிந்த வரை
பார்க்கலாம் என்று மட்டும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என டில்லி காங்கிரஸ்
வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்., வேண்டாம் - தி.மு.க., கோஷ்டி : செவ்வாய் காலை தி.மு.க.,
தலைவர் மற்றும் வேறு சில தலைவர்களுடன் போனிலேயே ஆலோசனை நடத்தினார் அழகிரி.
எதற்கு காங்கிரஸ் கூட்டணி? பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சி,
முஸ்லிம் லீக் ஆகியவை போதும். நம்முடைய நலத் திட்டங்கள் மூலமாகவே ஆட்சியை
பிடித்து விடலாம் என்று ஒரு கோஷ்டி சொன்னது. இதற்கு ஸ்டாலினும் ஆதரவு
தெரிவித்தார். விஷயத்தை புரிந்து கொண்ட அழகிரி, கருணாநிதிக்கு போன்
செய்து, நமது கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது அவசியம் என்று வற்புறுத்தி
அனுமதி வாங்கிவிட்டார். மீண்டும் சோனியாவை சந்தித்து, தி.மு.க.,வின்
முடிவை தெரிவித்து 63 தொகுதிகள் தர ஒத்துக் கொண்ட விஷயத்தை தெரிவித்தார்
அழகிரி.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !
» டில்லி சென்ற ரயில் கவிழ்ந்தது :200 பேர் காயம்-35 பேர்பலி ; மீட்பு பணிக்கு ராணுவம் விரைகிறது
» 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றுமா
» பரம்பரையாக"ஓட்டு' போட மறந்த சாயல்குடி மக்கள் : *திடீர் ஞானோதயம் தந்த "திருமங்கலம்' பார்முலா
» உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 28-ம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்து அசத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நண்பர்கள்.... உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum