Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !
Page 1 of 1
திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தேற்க்கடிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.
1. த.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையில் பிடிபடாமல் இருக்க ஆளும் அரசு காட்டிவரும் அலட்சியம்.
2.
மதுரை தினகரன் மூன்று ஊழியர்கள் கொலையில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம்
காண அரசு முயற்சிக்காதது. கொல்லப்பட்டவர்கள் குடும்பம் இழப்பை மறக்கும்
முன்பே 'இதயம் இனித்தது கண்கள் பணித்தன" மிகக் கொடுரமான தன்னல டயலாக். 5
முறை முதல்வராக இருந்த ஒருவர் சுயநல, குடும்பநல அரசியலை தோல்
உறித்துக்காட்டிய டயலாக். சீ......இந்தப்பழம் எப்போதுமே புளித்தப் பழம்
தான், பழத்தின் தோலைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக நடுநிலை அரசியல்
ஆதரவாளர்கள் முகம் சுளித்த டயலாக்
3. தமிழர்களின் தனி நாடாக ஈழம்
மலர்வதைத் தடுத்ததுடன், ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும்,
லட்சக்கணக்கானவர்களின் உடமைகளைப் பறித்த இராஜபக்சேவுக்கு பக்கத்
துணையாகவும் இருந்து, இராணுவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும்
ஏற்படுத்தித்தந்த காங்கிரசின் கைக்கூலியாக மந்திரிப்பதவிகளைப் பெற்றுக்
கொண்டு இனத் துரோகம் செய்ததற்காக
4. பரபரப்புக்காகவும், அரசியல்
வெற்றுப் புகழ்ச்சிக்காகவும் வெறும் மூன்றே மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து
ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு பெற்றுவிட்டார்கள், போர் நிறுத்தம்
செய்யப்பட்டுவிட்டது என்று பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டதற்காக
5. உலக
தமிழ் மாநாடு வழிகாட்டுதல்களை மீறி, தனக்கு வரலாறு படைத்துக் கொள்ள
வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை செலவு செய்து 'முதல் செம்மொழி மாநாடு'
என்ற பெயரில் மொத்த தன் குடும்பத்தையும் அழைத்து மாபெரும் குடும்பவிழாவை
அரசு விழாவாகக் காட்டியது.
6. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழலை
ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான், செய்வதற்குக் காரணமாக
இருந்திருக்கிறான் என்று ஒட்டு மொத்த பிற இந்தியர்களுக்கிடையே
தமிழர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக.
7. திரையுலகத்தை அக்டோபஸ் கைகளால் இறுக்கிப் பிடித்து இருப்பதற்காக
8.
இலவச தொலைகாட்சிகளை கொடுப்பதன் மூலம் கேபிள் கட்டணம் அவசியம் ஏழைகள்
செலுத்தியாகவேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதால்
குடும்பத்திற்கு அரசு செலவில் பெரிய வருமானம் ஈட்டிய செயலுக்காக, அதாவது
ஒரு கோடி (இலவச) தொலைகாட்சி (கொடுக்கப்பட்டு இருந்தால்) கேபிள் இணைப்பு X
12 மாதம் x 75 ரூபாய் கட்டணம் = ஆண்டுக்கு 900 கோடி - இது தலைவரின்
குடும்பத்தின் ஒரு ஆண்டின் கேபிள் வருமானம்)
9. சீமான் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களை காங்கிரசை குஷிப்படுத்த கைது செய்து சிறையில் அடைத்து ரசித்தது
10.
மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது
மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.
இவையெல்லாம்
வெளிப்படையாகத் தெரிந்த காரணங்கள், மீடியாவை வைத்துக் கொண்டு ஈழப் போரின்
போது பொதுமக்களுக்கு செய்திகளே போய் சேராமல் தடுத்தார்கள்.
இவையெல்லாம்
தெரிந்தும் தமிழகத்தின் சிறுபான்மை மதப்பிரிவினர் கிறித்துவர் மற்றும்
இஸ்லாமியர்கள் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றால்
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு (இனிமேல்) கிடைக்குமாம். கிறித்துவர்கள்
சார்பில் சொல்லுகிறார்கள் ஜெ கட்டாய மதமாற்றம் தடைச் சட்டம் கொண்டு
வந்தார். திமுக சிறுபான்மை காவலனாக இருப்பது இப்படித்தான். ஐந்து முறை
முதல்வராக இருந்தவர் இனிமேல் தான் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு
கொடுப்பாராம். அந்தம்மாவே போட்டு அந்தம்மாவே தூக்கிய கட்டாய மதமாற்றச்
சட்டம் இன்னும் கிறித்துவர்களை பயமுறுத்துகிறதாம், அப்படி என்றால்
இராமேஷ்வரம் கிறித்துவ மீனவர்கள் இலங்கை இராணுவத்தால்
கட்டுப்படுத்துவதும், காயப்படுத்துவதும், சுட்டுப்போடுவதும் காங்கிரஸ்
கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை ஆதரிப்பதால் சரி ஆகிவிடுமா ?
திமுக
கூட்டணிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவாம். ஏன் என்றால் அந்தம்மா ஒரே
கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. என் போன்றோர் கை
தட்டி வரவேற்றோம். காரணம் தாம் மக்கள் ஊழியர்கள் என்ற நினைப்பே இல்லாமல்
உதவிக்கு விண்ணப்பிக்க வரும் பொது மக்களை நாயிலும் கேவலமாக நடத்தியவர்கள்
அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அணுப்பிய போது பொதுமக்கள்
பெரிதாக எதுவும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து. அரசு வேலை
நிரந்தரமானது அல்ல, தவறு செய்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவோம் என்கிற
நினைப்பை ஜெ அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தினார், பொதுமக்களால்
வரவேற்கத்தக்கது தானே.
சிறுபான்மை காவல் என்ற போர்வையில் ஒரு
கட்சியை ஆதரிக்கும் நிலையை சிறுபான்மையினர் எடுப்பது, நாளை பெரும்பான்மை
மதத்தினர் நாமும் ஏன் மத அடிப்படையிலேயே கட்சி ஆதரவு நிலையை எடுக்கக்
கூடாது என்ற முடிவுக்குத் தள்ளிவிடும். அந்த வாய்ப்புகளுக்காகத்தான் இந்து
மதவாத சக்திகளும் கூடக் காத்திருக்கின்றன.
திமுக அரசியல் மூலமாக
சம்பாதித்து போதும், அந்தம்மா ஜெ தான் தற்போது பரம ஏழை . தமிழக
அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து
உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத்
சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம்
ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும்
நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த
அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு
நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.
இந்தத்
தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு
ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.
சமூக மற்றும் தமிழுணர்வாளர்களின் நல் உணர்வுகள் இந்தத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஈழ தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸை வீழ்த்துங்கள்!!
» தி.மு.க. கூட்டணியை ஆதரித்து சோனியா இன்று பிரசாரம்
» கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியது தானே? இளங்கோவன்
» தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி பிரசாரம்
» கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி: கருணாநிதி குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum