TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசு போக்குவரத்து கழகங்கள் முடக்கம்: முதல்வருக்கு ஜெ., கண்டனம்

Go down

அரசு போக்குவரத்து கழகங்கள் முடக்கம்: முதல்வருக்கு ஜெ., கண்டனம் Empty அரசு போக்குவரத்து கழகங்கள் முடக்கம்: முதல்வருக்கு ஜெ., கண்டனம்

Post by மாலதி Wed Jan 05, 2011 5:52 pm

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்கள் டீசலுக்கு பணம் இல்லாமல்
திணறுகின்றன. நிதி நெருக்கடியை ஏற்படுத்தி போக்குவரத்து கழகங்களை முடங்கச்
செய்துவிட்டதாக முதல்வர் கருணாநிதிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர்‌
ஜெயலலிதா கண்டணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில்
செயல்பட்டு வரும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகளுக்கான டீசல்
மற்றும் ஆயில், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பங்க்களில் இருந்து
நிரப்பப்படுகிறது. இவற்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்
விநியோகிக்கிறது. டீசலுக்கான பணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கி
காசோலை மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
நிறுவனத்திற்கு செலுத்தும். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த
நடைமுறை. இந்தச் சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக அரசுப் போக்குவரத்துக்
கழகங்களில் இருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு முறையாக
பணம் சென்று சேராததன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்
நடைமுறையை சற்று மாற்றி அமைத்தது. அதாவது, பணம் கொடுத்தால் மட்டுமே டீசல்
வழங்கப்படும் என்று தெளிவாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தெரிவித்து
விட்டது.
இதன் காரணமாக, ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுப் போக்குவரத்துக்
கழகங்கள், டீசலுக்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இதன் விளைவு
தான் தற்போதைய டீசல் தட்டுப்பாடு. உதாரணமாக, கும்பகோணம் அரசுப்
போக்குவரத்துக் கழகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 23 கோடி
ரூபாய் டீசல் பாக்கி கொடுக்க வேண்டும் என்றும், இந்தப் போக்குவரத்துக்
கழகத்திற்குச் சொந்தமான தஞ்சாவூர் பணிமனை ஒரு தனியார் வங்கியில் 12 கோடி
ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதே
நிலைமை தான் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் நிலவுகிறது. லாபத்தில்
இயங்குவதாகக் கூறப்படும் மாநகர போக்குவரத்துக் கழகமே 18 கோடி ரூபாய்
அளவுக்கு டீசல் பாக்கி வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக
நூற்றுக் கணக்கான பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு
இருக்கின்றன. இது தவிர, டயர்கள், உதிரி பாகங்கள் இல்லாத தன் காரணமாகவும்
நூற்றுக் கணக்கான பேருந்துகள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாதச்
சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான
ஓய்வூதியப் பயன்கள் ஓர் ஆண்டாக நிலுவையில் இருக்கின்றன என்றும்
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசுப் போக்குவரத்துக்
கழகங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு குறித்து தி.மு.க. அரசின்
போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, எந்த
வண்டியும் நிற்கவில்லை; நீ காட்டு, நான் பார்க்கிறேன் என்று நக்கலாக பதில்
அளிக்கிறார். பொங்கல் பண்டிகை நெருங்கி வருகின்ற இந்தச் சூழ்நிலையில் இது
போன்ற நிலை நீடித்தால், மக்கள் பெருத்த அவதிக்கு ஆளாவதுடன், விமானக்
கட்டணம் அளவுக்கு கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க
வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். பேருந்துகளுக்கான டீசல் கூட
வாங்க முடியாத அளவுக்கு, தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களை நிறுத்தி
வைக்கக் கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, அரசுப்
போக்குவரத்துக் கழகங்களை முடங்கச் செய்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு எனது
கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அரசுப் போக்குவரத்துக்
கழகங்களின் பேருந்துகளுக்குத் தேவையான டீசல் பணத்தையும், ஓய்வு பெற்ற
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியப் பயன்களுக்குத் தேவையான பணத்தையும்
உடனடியாக அரசு நிதியில் இருந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு
ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 மாதங்களில் 112 அரசு இணையதளங்கள் முடக்கம்
» சட்டசபை தேர்தல்: அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ் கட்டணம் குறைப்பு?
» மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பு முடக்கம்: மாற்றம் கொண்டு வர அரசு ஆலோசனை
» முல்லைப் பெரியாறு:கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்
» அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum