TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது

Go down

  முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது   Empty முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது

Post by அருள் Sat Dec 11, 2010 7:29 am

முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது
[ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 18:15 GMT ] [ தி.வண்ணமதி ]
மே 2009ல் விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது கோத்தாபய ராஜபக்சதான்.

எல்லாவற்றையும் விட மேலாக கோத்தாபயவினது இராசதந்திரச் செயற்பாடுகள்தான்
சிறிலங்காவினது போர்க்குற்ற விடயத்தில் இந்தியாவினை இன்னமும் வாய்திறக்க
முடியாமல் செய்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு Ground Report என்னும் இணையத்தளத்தில் 'Vssubramaniam' எழுதியுள்ள
அரசியல் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம்
செய்தவர் தி.வண்ணமதி.

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான ஆதாரங்களை இந்தியப் புலனாய்வு அமைப்பான
'றோ' கொண்டிருக்கின்ற போதும் அதனை இந்திய அரசாங்கம் திரும்பிப் பார்க்காத
அளவுக்கே நிலைமைகள் உள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் [South
Block] ஈடுபாடு தொடர்பான விபரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது [இங்கு
தென்தொகுதி என்பது வெளி விவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு
ஆகியவற்றையே குறிக்கிறது].

தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது சிறிலங்காவிற்கு
எதிரான அனைத்துலக போர் குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புக்களை
தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது
செயற்பாடுகளைச் சீர்குலைத்துவிட்டது.

போரின் இறுதிக் கட்டத்தில் நாராயணன், மேனன் போன்ற சோனியாவின் உயர்மட்ட
முகவர்களது அறிவுறுத்தல்களுக்கு அமைய சிறிலங்கா செயற்பட்டிருந்தபோதும்,
தற்போது றோ அமைப்பு வைத்திருக்கும் தமிழினப் படுகொலை இடம்பெற்றதைக்
காட்டும் வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை வைத்து டில்லி சிறிலங்காவினை
அச்சுறுத்துவதுதான் கோத்தாபய புதுடில்லி மீது சீற்றம் கொள்வதற்கான காரணம்.

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய
நிலப்பரப்பிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் செறிந்திருந்த போதும்
மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை
றோ சரியாக இனங்காட்டியிருந்தபோதும், முள்ளிவாய்க்கால் பகுதியில் போரற்ற
பகுதியாகப் அறிவிக்கப்பட்ட மக்கள் செறிந்திருந்த பகுதிக்குள் இறுதி வலிந்த
தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தினைத் முன்னெடுக்குமாறு நாராயணனும்
மேனனும் கோத்தாபயவிற்கு அறிவுறுத்தியிருந்தனர்.

பொன்சேகா தரும் தகவலின்படி, பொதுமக்கள் இழப்புக்களைக் குறைக்கும் வகையில்
ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடாத்துவதெனத்
திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாது செய்யவேண்டும் என்ற
உறுதிப்பாட்டுடன் செயற்பட்ட சோனியாவின் அதிகாரம்பெற்ற முகவர்களான
நாராயணனும் மேனனும், காலம் கடத்துமிடத்து அமெரிக்கா விடுதலைப் புலிகளின்
தலைமையினையும் பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு
வழிசெய்துவிடும் என அஞ்சினர்.

இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை. தமிழ்
ஆயுதக்குழுக்களை முற்றாக இல்லாதுசெய்வதற்கான கொழும்பினதும்
புதுடில்லியினதும் கூட்டிணைந்த முறை இதுதான்.

இதன்போது ஏற்பட்ட பெருந்தொகையான பொதுமக்கள் இழப்பினை ஏற்றுக் கொள்ளக்கூடிய 'தவிர்க்கமுடியாத' இழப்பு என வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தப் படுகொலைக்கான தனிப்பொறுப்பினை கோத்தாபயவிடம் மாத்திரம் சுமத்தமுடியாது.

சோனியாவின் இந்த அதிகாரம் பெற்ற முகவர்களின் மறைமுகமான கையாளாகவே கோத்தாபய அப்போது செயற்பட்டிருக்கிறார்.

போரின் இறுதிநாட்களில் இடம்பெற்ற படுகொலையினை உறுதிப்படுத்தும்
வானிலிருந்து எடுத்த காணொலி ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாகக் கூறி
அளவுக்கதிகமான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டமைக்குச் சிறிலங்காதான்
முழுப்பொறுப்பு என புதுடில்லி குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இந்தப்
படுகொலை தொடர்பான விபரங்கள் வேகமாக வெளிவந்தன.

புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினையடுத்து கொழும்பு வேகமாகவும்
துணிவுடனும் செயற்பட்டது. ஈற்றில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்குற்றங்கள்
தொடர்பாக புதுடில்லி 'முழுமையாக மௌனம் காக்கவேண்டும்' என்ற கொழும்பினது
கோரிக்கைக்கு வளைந்து கொடுக்கவேண்டிய நிலைக்குப் புதுடில்லி தள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் சிறிலங்காவிற்கு
வெற்றியினைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்காவும் இந்தியாவின் இரகசியப்
படைப்பிரிவும் இணைந்து முன்னெடுத்த வலிந்த தாக்குதல் தொடர்பான மிகவும்
முக்கியமான வான்வழிப் புலனாய்வுத் தகவல்களைப் பெறுமாறு டெல்லியின்
தென்தொகுதி அதிகாரிகள் 'றோ'வினைக் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் உண்மையான இழப்புக்களை
உறுப்படுத்தும் வான்வழிப் ஒளிப்பட ஆதாரங்களை எடுக்கும் அருமையான வாய்ப்பு
றோவுக்குக் கிடைத்தது.

தமிழ் ஆயுதக் குழுக்களின் மறைவுக்குப் பின்னானதொரு சூழமைவில் கொழும்பு
மீது காத்திரமான அழுத்தினைப் பிரயோகித்து அதனை அடிபணியவைப்பதற்கான ஒரு
ஆயுதமாகவே புதுடில்லியும் றோவும் இந்தப் ஒளிப்பட ஆதாரங்களைப்
பார்த்தார்கள். ஆனால் கொழும்பு இதுபோன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாது
நேரெதிர் மாறாகச் செயற்படும் நிலைப்பாட்டினை எடுத்தது.

புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தாபய, கொழும்பு
போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள
நேர்ந்தால் அதற்கு புதுடில்லியின் தென்தொகுதியும் உடந்தையாக இருந்தது
என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தான் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம்
பெற்ற ஆட்களுடனான தொடர்பாடல் பதிவினைக் கையிலெடுத்தார். இது டில்லியின்
வாயை அடைத்தது.

இதனால் குழப்பமடைந்த புதுடில்லி துரிதமாகவும் நிதானமாகவும் செயற்பட்டது.
மே 2009ல் ஐ.நாவினது மனித உரிமைச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராகக்
கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து சிறிலங்காவில்
இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக
குறித்த சில மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சியை முறியடித்ததன் மூலம்
கொழும்பினைச் சாந்தப்படுத்தியது. நீண்டபல ஆண்டுகளுக்கு இந்தியாவினைத் தனது
சொற்படி ஒழுகவைக்கக்கூடிய இந்தப் பிடியினை கொழும்பு தற்போது
கொண்டிருக்கிறது.

தனது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினையும் தமிழர்களை மேலும் மேலும்
அந்நியப்படுத்தும் வகையிலான அரசியல் செயற்பாடுகளையும் சிறிலங்கா
தொடர்ந்தும் மூர்க்கமுடன் முன்னெடுக்கின்ற போதும் இதுவிடயம் தொடர்பில்
புதுடில்லி மௌனம் காக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியா மௌனம் காப்பது தொடர்பில் தமிழ்நாடு கோபாவேசத்துடன் செயற்படுகின்ற போதும் புதுடில்லியால் எதுவுமே செய்யமுடியவில்லை.

சிறிலங்காத் தமிழர்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டு
அரசாங்கமும் தனது ஆதரவினையும் வழங்குவதற்கு வழிசெய்வதற்கான எத்தகைய
முனைப்புக்களிலும் ஈடுபடுவதற்கு புதுடில்லி ஒருபோதும் தயங்கவில்லை.

இதனடிப்படையிலேயே ஸ்பெக்டராம் ஊழல் Spectrum scandal ஆளும் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் பெயரைப் பழுதாக்குவற்கான புதுடில்லி திரைமறைவு
முயற்சிகளை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களுக்கெதிரான இனக்கொலையினை முழு வேகத்துடன் முன்னெடுத்தபோதும்,

வடக்குக் கிழக்கினைச் சிறிலங்கா தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தி மேலும் பல தமிழர்களை இடம்பெயரவைக்கின்றபோதும்,

கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலும் நாட்டினது வடக்குக் கிழக்கினது இன
ரீதியிலான குடிப்பரம்பலை மாற்றும் வகையிலான முனைப்புக்களை மகிந்த
அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற போதும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்து
வருகிறது.

இதற்கெல்லாம் சிறிலங்கா தன்னிடம் வைத்திருக்கும் இந்தியா தொடர்பான பலமான பிடிதான் காரணம்.

சிறிலங்காவினது வடக்குக் கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில்
மணியடிக்கக்கூடாதம் என சிறிலங்கா அரசாங்கம் தடுத்தபோது தமிழர்களும்
இந்துக்களும் ஏன் இதனை எதிர்க்கவில்லை. இந்து நாடாகிய இந்தியாவிற்கு
மதச்சார்பற்ற சோனியா பொறுப்பாக இருப்பதனாலா இந்த நிலை?

சிறிலங்கா மேற்கொள்ளும் இனக்கொலையினில் புதுடில்லியும்
பங்கெடுத்திருக்கிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள்
சுதந்திரமாக விசாரிக்கப்படவேண்டும் என அனைத்துலக சமூகம் வலியுறுத்திவரும்
இந்த நிலையில் இதுபோன்றதொரு பாரதூரமான குற்றச்செயலுக்கு டில்லி
துணைபோயிருப்பது அனைத்துலக அளவில் இந்தியாவின் ஒழுக்கத்தினை
மேம்படுத்துவதற்கு ஒருபோதும் உதவப்போதில்லை.

எல்லாவற்றையும் விட மேலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்
சுமத்தப்படும் ஒரு நாட்டுக்கு முண்டுகொடுத்து நிற்பதும் குறிப்பிட்ட
போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த மறுப்பதும் ஐ.நாவின்
பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தினைப் பெறும் இந்தியாவின்
முயற்சியினைப் பாழாக்கிவிடும்.

இது குற்றவியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஒப்பானது. தற்போதும் மனித
உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் செயற்பாட்டுக்கும் இந்தியாவின்
இதுபோன்ற நடவடிக்கைக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது. இவ்வாறாக
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் புதுடில்லி
வேண்டுமென்றே மௌனம் சாதிப்பதானது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள்
யாரோ அவர்கள் மீது இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சுமத்தவேண்டும் என
அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுவதற்கு வழிசெய்திருக்கிறது.

மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் சிறிலங்கா வெளிப்படையாகவே
அறிவித்திருப்பதானது தொடர்புடைய நாடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் நாடுகளில் சிறிலங்கா அரசாங்கம் தனது
புலனாய்வாளர்களை நிறுத்தியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களின்
செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் பணியில் இவர்கள்
ஈடுபட்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வாழும் இந்தத் தமிழர்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காகச்
சிறிலங்காவிற்கு பயணம் செய்யும்போது திரட்டப்பட்ட புலனாய்வுத்
தகவல்களுக்கு ஏற்ப அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளைச் சிறிலங்கா அரசாங்கம்
முன்னெடுத்து வருகிறது.

சிறிலங்காவிற்கு பயணம் செய்யும் தமிழர்கள் பலர் காணாமற்போயிருப்பதோடு
கட்டாய கைதுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின்
முழுமையான ஆதரவுடன்
செயற்படும் வெள்ளைவான் கும்பல்களே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்களை வெளிப்படுத்தும் முனைப்புக்களிலும்
பாதிக்கப்பட்டவர்களின் சார்பான சட்டச் செயற்பாடுகளிலும் புலம்பெயர்
தமிழ்ச் சமூகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள்
முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கெதிரான போர்க் குற்றப்
பரப்புரைகள் அனைத்துலகின் அனைத்துத் தரப்பினரதும் ஆதரவினைப் பெற்று
வருகிறது.

இனக்கொலையினை முன்னெடுத்த தரப்புகள் எவையோ அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கக்கூடிய அனைத்துலக அளவிலான கட்டமைப்புக்களை
வலுப்படுத்துவதன் ஊடாக குற்றவாளிகள் யாரோ அவர்களைக் கைதுசெய்வதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது.

2009ம் ஆண்டு மே மாதம் ஐ.நாவினது மனித உரிமைச் சபையில் இடம்பெற்ற
சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையினை புதுடில்லியின்
தலைமையிலான மனித உரிமைகளை மீறும் குழுவொன்று முறியடித்திருந்தது.

ஆனால் குறிப்பிட்ட ஒருவர் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலோ அல்லது
போர்க் குற்றங்களிலோ ஈடுபட்டிருக்குமித்து அவர் பிரித்தானியா போன்ற
குறித்த சில நாடுகளுக்கு பயணம் செய்யும்போது முறையான சட்ட நடவடிக்கைகளை
முன்னெடுப்பதன் ஊடாக அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தமுடியும்.

அதிபர் ராஜபக்ச ஒக்ஸ்போட் யூனியனில் ஆற்றவிருந்த உரை இடைநிறுத்தப்பட்டதோடு
அவருடன் இணைந்து பிரித்தானியாவிற்குச் சென்றிருந்த போர்க் குற்றங்களில்
ஈடுபட்ட மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் லண்டன் நீதிமன்றின் முன்
நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பிறிதொரு விமானத்திலேறி
பிரித்தானியாவிலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியோ தப்பிவிட்டோம் என்ற எண்ணம் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இதுபோன்ற தலைவர்களிடதே காணப்படுகிறது.

புலம்பெயர்வாழ் தமிழர்களது பாராட்டுதற்குரிய மேன்மையான செயற்பாடுகள்தான்
இதற்குக் காரணம். சிறுபான்மை இனமொன்று இனக்கொலைக்கு உள்ளாகும்
சந்தர்ப்பங்களில் அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்புக்களைப்
பயன்படுத்தி புலம்பெயர் தமிழ்ச் செற்பாட்டாளர்கள் சிறிலங்காவினது இந்தப்
போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான இனக்கொலையினைப் புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தினது
செயற்பாட்டாளர்கள் புலம்பெயர் நாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம்
நிம்மதியற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். இது நீதிக்கான தேடலில்
இறங்கியிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் திறனை வெறிப்படுத்துவதாக
அமைகிறது.

"விடுதலைப் புலிகளின் செற்பாட்டாளர்கள் வன்முறைசார் போராட்டங்களில்
மீண்டும் வரைவில் ஈடுபடுவார்களா" என dbsjeyaraj என்ற செய்தியாளர்
செய்தியினை எழுதிய மை காயுமுன்னர், புலம்பெயர்வாழ் தமிழர்கள் 50,000 பேர்
உடலை உறயவைக்கும் குளிரிலும் தமிழினக் கொலையாள் நீதியின் முன்
நிறுத்தப்படவேண்டுமெனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

"மேற்கு நாடுகளில் புலிக்கொடியினை அசைத்தவாறு தமிழர்களைப் விடுதலைப்
புலிகள் போராட்டத்தில் ஈடுபடவைத்த காலம் மலையேறிவிட்டது" என்ற அந்தப்
பத்தியாளரின் கூற்று இங்கு பொய்யாகிறது.

குறிப்பிட்ட இந்தப் பத்தியாளரின் கட்டுரையினது தொனிப்பொருளும்
கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு பிறசில்சுக்கான
சிறிலங்காவினது தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க நவம்பர் 24ம் திகதியன்று
வழங்கிய செவ்வியினதும் உள்ளடக்கமும் ஒன்றாகே இருந்தது.

குறிப்பிட்ட இந்த இரண்டு ஆக்கங்களுக்கும் பலதரப்பட்டவர்களிமிருந்தும் ஏளனம் நிறைந்த கருத்துக்கள் வெளிவந்திருந்தன.

சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்ட 'புலம்பெயர்வாழ் தமிழர்களின் தொடரான
அடக்குமுறைக்கு அப்பாலான உண்மையும் நீதியும்' என்ற [‘Truth and Justice
within and beyond,the continued repression of the Tamil diaspora’]
டொக்டர் விக்டோரியா சென்ராவுடைய [Dr Victoria Sentas] ஆக்கம் ஊடகவியல்
தரங்களுக்கிடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. தமது ஆக்கங்களில்
உயர்ந்த தரத்தைக் கடைப்பிடிக்கும் ஊடகவியலாளர்களின் ஆக்கங்களிலிருந்து
வாசகர்கள் நன்மையடைகிறார்கள்.

இந்தியாவின் தரப்பில்17 நவம்பர் 2010ல் சென்னையில் நடைபெற்ற இந்திய அறிஞர்
குழாமின் நடவடிக்கையில் சில நம்பிக்கை தரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஈழத்திற்குச் சார்பானதாக இல்லாவிட்டாலும் இந்திய-இலங்கை உறவு மற்றும் ஈழத்
தமிழர் பிரச்சினை தொடர்பில் விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. இந்தியாவின்
வெளியுறவுக் கொள்கையானது தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் உள்ள ஒரு சில
குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக சிலர் வாதிடுகின்றனர்.

அவர்களின் பாரபட்சமான அணுகுமுறையே இந்திய அரசாங்கத்திற்கும் ஈழத்
தமிழர்களுக்குமிடையே பிளவு ஏற்படுவதற்குக் காரணம். அவர்கள் உண்மையான
கருத்துக்கள் பொதுமக்களைச் சென்றடையாமல் மறைத்துவிட்டு அதுவே ஈழத்தமிழ்
மக்கள் படுகொலை செய்யப்படுவத்கு வித்திட்டதுடன் சீனா தென்னிந்தியாவின்
கதவுகளைத் தட்டுவதற்கும் வழிவகுத்தது.

தற்போது அவர்கள் இதற்கு என்ன செய்வதென்றும் தமது தவறுகளுக்கு எவ்வாறு
மேலும் தமிழ் மக்களின் நலன்களைப் பலியிடுவதெனவும் சிந்திக்கின்றனர்....
இந்தியா என்பது ஐ.நா. தலையீடு போன்றதல்ல (தடம் போடும்
விடயத்தில்)...ராஜபக்சவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை இந்தியா
எதிர்க்கும். இந்தியாவும் கஸ்மீர் தொடர்பில் அதேபோன்ற குற்றச்சாட்டுக்களை
எதிர்கொள்கிறது.

சிறிலங்கா மேற்கொண்ட இனக்கொலைக்கு இந்தியா துணைநின்றது என்ற வாதத்திற்கு
இது சாரியான வாதமாக இருக்குமா. காஸ்மீர் பிணக்கிலும் இந்தியா இதுபோன்ற
குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்து நிற்கும் இந்த சிறிலங்கா
முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட படுகொலையினைப் போல தான் மேற்கொண்ட
படுகொலைகளையும் ஏற்றுக்கொள்ளுமா. இங்கு இந்த அறிஞர் குழாமின் தர்க்கம்
இடக்குமுடக்கானது என்றே நான் நம்புகிறேன்.

அறிஞர் குழாமின் பொரும்பாலான கோட்பாடுகள் குறித்ததொரு இனக்குழுமத்தைச்
சார்ந்ததாகவே அமைகிறது. ஆனால் கடந்த ஒன்ரோபர் 24ம் நாளன்று மெயின்ஸ்றீம்
வீக்லி என்ற வார இதழில் 'சிறிலங்காவில் இடம்பெற்ற இதரத்தக்களரிக்குப்
பின்னால்' என்ற தலைப்பில் Brahma Chellaney எழுதிய [‘Behind Sri Lanka
Bloodbath’ in Mainstream Weekly Oct 24]எழுதிய பத்தி மேற்குறித்த இந்தக்
கூற்றுக்கு விதிவிலக்கானது.

இந்தியா சிறிலங்காவிற்கு வழங்கிய இராணுவ உதவிகளின் ஊடாக சிறிலங்காவில்
இடம்பெற்ற இரத்தக்களரிக்கு இந்தியாவும் பங்களிப்புச் செய்திருக்கிறது
என்றும் 1987ம் ஆண்டு முதல் இந்தியாவினது வெளிநாட்டுக் கொள்கையானது
நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக அமையவில்லை என்றும் மாறாக
ஆட்சியிலிருப்பவர்கள் தனிப்பட்ட சலனபுத்தியின் அடிப்படையிலேயே
அமைகிறதென்றும் அவர் கூறுகிறார்.

2004ம் ஆண்டு புதுடில்லில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா
தொடர்பான இந்தியக் கொள்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்தியாவின் ஆட்சியாதிகாரத்தில் சோனியா-ராகுலுக்கு இருக்கும் பிடி
வேகமாகத் தளர்ந்துவருவதை அண்மையில் இடம்பெற்ற பீகார் தேர்தல் முடிவுகள்
வெளிப்படுத்துகின்றன.

அத்துடன் தமிழர்களுக்கு விடிவுகாலத்தினைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய 2004ம்
ஆண்டுக்கு முற்பட்ட வெளியுறவுக் கொள்கையினை இந்தியா மீண்டும்
கடைப்பிடிக்குமிடத்து சோனியா-ராகுலின் சலனபுத்தியும் மறைந்துவிடும்.

http://www.puthinapp...?20101208102660
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க் குற்றங்கள்- கைநூல்
» மறைக்கப்படும் போர்க் குற்றங்கள்
» ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (1) – புரட்சிப்பெரியார் முழக்கம்
»  போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
» ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் (2) – புரட்சிப்பெரியார் முழக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum