TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மீன் வகை உணவுகள்

Go down

மீன் வகை உணவுகள் Empty மீன் வகை உணவுகள்

Post by Tamil Sat Jan 23, 2010 10:26 pm

மீன் வகை உணவுகள் Fish
மீன்கள் இந்தியாவில் சில
இடங்களில் சைவ உணவாகவே கருதப்படுகின்றது. மீன்களில் புரதச்சத்து
மட்டுமன்றி கால்சியமும் மிகுதியாய் உள்ளது. மீன்களின் வகைகளைப் பொறுத்து
அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களும் வித்தியாசப்படுகின்றன. கெண்டை
மீன்களில் ஆட்டிறைச்சியில் உள்ளது போல் இருமடங்கு கொழுப்பு சத்து உள்ளது.
கெலங்கா போன்ற மீன்களில் கொழுப்பு மிகவும் குறைவு. மீன் இறைச்சி உடல்
சூட்டை உண்டாக்குவது இல்லை. கடல் உணவுகளில் பெரிதாக கலப்படம் செய்ய
வாய்ப்பில்லை என்பதால் அனைத்து தரப்பினரும் கவலை இன்றி சாப்பிட மீன்
இறைச்சி ஒரு சிறந்த உணவு. ஒவ்வொரு மீனுக்கும் சத்துக்கள் விபரம்
வித்தியாசப்படுவதால், பொதுவாக மீன்களுக்கு என்று கொடுப்பது கடினம். அதிகம்
உணவாகும் வௌவால் மீனின் சத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீன் வகை உணவுகள் Fish_dishes





100 கிராம் (வெள்ளை) வௌவால் மீனில் அடங்கியுள்ள
சத்துக்கள்



சக்தி (Energy)

87 கலோரிகள்

ஈரப்பதம்/நீர் (Moisture)

78.4 கிராம்

புரதம் (Protein)

17 கிராம்

கொழுப்பு (Fat)

1.3 கிராம்

தாதுக்கள் (Minerals)

1.5 கிராம்

கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)

1.8 கிராம்

கால்சியம் (Calcium)

200 மி.கி

பாஸ்பரஸ் (Phosporous)

290 மி.கி

இரும்பு (Iron)

0.9 மி.கி

நியாசின் (Niacin)

2.6 மி.கி

ரைப்போஃப்ளேவின் (Riboflavin)

0.15 மி.கி





Source: National Institute of
Nutrition - Hyderabad


Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty சேலம் மீன் குழம்பு

Post by Tamil Sat Jan 23, 2010 10:28 pm

திருமதி. செந்தமிழ் செல்வி அவர்களின் குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் சில மாற்றங்களுடன் இந்த சேலம் மீன் குழம்பினை
செய்து காட்டியுள்ளார்.


தேவையானப் பொருட்கள்





  • வவ்வா மீன் - அரைக் கிலோ
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு - 8 பல்
  • தக்காளி - ஒன்று
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • புளி ‍- ஒரு எலுமிச்சை அள‌வு
  • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி
  • வதக்கி அரைக்க:
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு ‍- அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் -‍ 10 + 1 பெரிய‌ வெங்காய‌ம்
  • பூண்டு - 10 பல்
  • தக்காளி -‍ 3
  • தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் -‍ ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • தாளிக்க:
  • கறிவேப்பிலை - சிறிது
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - கால் தேக்கரண்டி
  • வெந்தயம் - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • கொத்தம‌ல்லி த‌ழை - சிறிது (க‌டைசியாக குழம்பின் மேல் தூவ‌)



மீனை
சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும். வெங்காயம்,
பூண்டை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பெரிய
துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து,
கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில்
அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி,
தேங்காய் பவுடர், அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி
ஆறியதும் நைசாக அரைக்கவும்.


அரைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில்
மீதி எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து
இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.


குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை சேர்க்கவும்.


மீன் வெந்ததும் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து குழம்பில் போட்டு இறக்கவும்.


நல்லெண்ணையை
குழம்புக் கரண்டியில் ஊற்றி அடுப்பில் சூடு பண்ணவும். நன்கு சூடேறியதும்
கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்


கொத்தம‌ல்லி த‌ழை தூவி இறக்கவும். மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார்.









Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty Re: மீன் வகை உணவுகள்

Post by Tamil Sat Jan 23, 2010 11:19 pm

இது
பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு தினமும் கொடுக்கும் பத்திய குழம்பு.
பத்திய குழம்பு என்றாலும் சுவையாக இருக்கும். மீன் சாப்பிடாதவர்கள்
முருங்கைக்காய் அல்லது வெறுமனே பூண்டு சேர்த்தும் இக்குழம்பு செய்யலாம்.
மாதம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுக் கோளாறுகள் அஜீரண
பிரச்சினைகள் ஓடி விடும்.


தேவையானப் பொருட்கள்





  • மீன்(சுறா மீன் துனா மீன் தவிர்த்து) - 500 கிராம்
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • சின்ன வெங்காயம் -. 6 அல்லது 7
  • பூண்டு - 20 பல்
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சுக்கு - 2" துண்டு
  • ஓமம் - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்கயம் - அரை தேக்கரண்டி
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப)
  • மல்லிதூள் - ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - 2 அல்லது 3 இனுக்கு
  • நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி



மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.


வாணலியில்
நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம்,
6 பல் பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.


தேங்காய்
துருவல் பிரவுன் நிறமானதும் சுக்கு(லேசாக தட்டிக் கொள்ளவும்) ஓமம்
சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி பொடி வகைகள் பெருங்காயம் சேர்த்து
கிளறி இறக்கி விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.


ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொண்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.


அரைத்த
கலவையில் மீதமுள்ள பூண்டு, கறிவேப்பிலை, புளிக்கரைசல், உப்பு சேர்த்து
கலந்து உப்பு புளி காரத்தின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.


மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.


குழம்பு
நன்றாக கொதி வந்ததும் 7 நிமிடங்கள் அதிக தீயில் கொதிக்க விட்டு பின்
தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.


சுவையான வறுத்தரைத்த மீன் கறி தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.










தினமும் சூடாக்கி வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty நெத்திலி மீன் அவியல்

Post by Tamil Sat Jan 23, 2010 11:20 pm

நெத்திலி
மீன் மட்டுமல்லாமல் வாளை மற்றும் திருக்கை மீன் தவிர்த்த எல்லா
மீன்களிலும் இதே போல் செய்யலாம். நெத்திலி மற்றும் மத்திமீன்(சாளை)
தவிர்த்த மற்ற மீன்களுக்கு மல்லித்தூள் சேர்க்க தேவையில்லை.


தேவையானப் பொருட்கள்





  • நெத்திலி மீன் - 250 கிராம்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • சின்ன வெங்காயம் - 10 முதல் 12
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்)
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மல்லி தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு



நெத்திலி மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.


இடிகல்லில்
அல்லது அம்மியில் முதலில் சின்ன வெங்காயத்தை வைத்து ஒன்றிரண்டாக உடைத்து
கொண்டு அதன் பிறகு தேங்காய், பச்சைமிளகாய், பொடி வகைகள், ஒரு கொத்து
கறிவேப்பிலை சேர்த்து லேசாக இடித்து எடுக்கவும். (மிக்ஸியில் செய்வதாக
இருந்தால் எல்லாவற்றையும் சேர்த்து விப்பரில் ஒன்று அல்லது இரண்டு சுற்று
சுற்றி எடுக்கவும்)


மீன்
செய்யும் பாத்திரத்தில்(மண் சட்டியாக இருந்தால் சுவை அதிகரிக்கும்) மீனைப்
போட்டு அதனுடன் அரைத்த மசாலா, மீதமுள்ள கறிவேப்பிலை, உப்பு சேர்க்கவும்.


இவற்றுடன் புளியைக்கரைத்து ஊற்றி மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.


எல்லாவற்றையும்
சேர்த்த பின்னர் கொதிக்க விடவும். இடையிடையே சட்டியோடு எடுத்து சுழற்றி
வைக்கவும்.(கரண்டி போட்டு கிளறினால் மீன் உடைந்து விடும்)


தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை பரவலாக ஊற்றி லேசாக கிளறி இறக்கலாம்.


சுவையான
நெத்திலி மீன் அவியல் தயார். சாதத்தில் பிசைந்தோ அல்லது சைட் டிஷ்ஷாகவோ
வைத்து சாப்பிடலாம். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து
காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.














நெத்திலி
தவிர்த்த மற்ற மீன்களில் செய்யும் போது கொஞ்சம் அதிகம் தண்ணீர் சேர்த்து
சற்று கெட்டியான கிரேவி பதத்திலேயே இறக்கி விட வேண்டும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty கருவாடு வறுவல்

Post by Tamil Sat Jan 23, 2010 11:21 pm

தேவையான பொருட்கள்




  • நடுத்தர அளவு கருவாடு-1
  • சின்னவெங்காயம்-15
  • பூண்டு-2பல்
  • மிளகாய்வற்றல்-4
  • கறிவேப்பிலை-2கொத்து
  • மஞ்சள்தூள்-1/2தேக்கரண்டி
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய்-2மேசைக்கரண்டி




செய்முறை




  • கருவாட்டை சுத்தம் செய்து அரைத்தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • ஆறியதும் முள் நீக்கி சதைப்பகுதியை மட்டும் உதிர்த்து வைக்கவும்.
  • சின்னவெங்காயம்,பூண்டு,மிளகாய்வற்றல்
    ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைக்கவும். இடிகல்
    இருந்தால் அதில் இடித்தால் சுவை அதிகம்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காய கலவை கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாடு சேர்த்து கிளறவும்.
  • அடுப்பை குறைந்த தீயில் வைத்து முறுகலாகும் வரை கிளறி இறக்கவும்.





குறிப்பு:


தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும் மணமும் கூடும்.
கருவாட்டில் உப்பு இருப்பதால் வெங்காய கலவைக்கு வேண்டிய அளவில் பாதி உப்பு மட்டுமே சேர்க்கவும்.






வழங்கியவர்


கவிசிவா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty கத்தரிக்காய் கருவாட்டு கொழம்பு

Post by Tamil Sat Jan 23, 2010 11:22 pm

தேவையான பொருட்கள்




  • கத்தரிக்காய் - 1/4 kg
  • காராமணி (அ) ராஜ்மா - 1 கப்
  • கருவாடு - 1/4 kg
  • வெங்காயம் - 200 g
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
  • கடுகு - 1 tsp
  • வெந்தயம் - 1 tsp
  • மிளகு தூள் - 2 tsp
  • சீரக தூள் - 2 tsp
  • எண்ணெய் - 1 tbsp
  • புளி - 1 எலுமிச்சை அளவு
  • மிளகாய் தூள் - 2 tsp
  • தனியா தூள் - 3 tsp
  • மஞ்சள் தூள் - 1/2 tsp
  • கருவேப்பிலை - 1 இணுக்கு
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். கத்தரிகாயை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்
  • எண்ணெய் சூடனுதும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளித்து வெங்கயாம் சேர்த்து வதக்கவும்.
  • பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
  • கத்தரிக்காய் மற்றும் காராமணியை சேர்த்து வதக்கி கருவாட்டையும் சேர்க்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.
  • உப்பு, கீறின பச்சை மிளகாய் மற்றும் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
  • இறக்குவதற்கு முன் மிளகு மற்றும் சீரக தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4

40 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty ஈசி மீன் பிரியானி

Post by Tamil Sat Jan 23, 2010 11:23 pm

தேவையான பொருட்கள்




  • வஜ்ர மீன் - 1 கிலோ(முள் இல்லாத எந்த மீனும் போடலாம்)
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  • பிரின்ஞி இலை - 1
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1/2 கப்
  • இஞ்சி,பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
  • தக்காளி - 3
  • கொத்தமல்லி தலை - 1/2 கட்டு
  • புதினா - சிறிது
  • பச்சை மிளகாய் - 5
  • கறிமசாலா - 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • தேங்காய் விழுது - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கருவேப்பிலை - சிறிது




செய்முறை




  • மீனில் லேசாக உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,லெமன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின் குக்கரில் எண்ணெய்,வெண்ணெய்,நெய் சேர்த்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் பொடி,பிரின்ஞி இலை,சோம்பு சேர்க்கவும்.
  • பின் வெங்காயம்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி,கொத்தமல்லி தலை,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் அதனுடன் கறிமசாலா,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேண்டுமெனில் நெய் சிறிது விட்டு வதக்கவும்.
  • பின் தேங்காய் விழுது,உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் ஊற வைத்த மீனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அரிசியை சேர்த்து லேசக வதக்கவும்.
  • பின் 1 அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • பின் 15 நிமிடம் களித்து குக்கரை திறந்து நெய்,கருவேப்பிலை சேர்த்து லேசாக கிளரி பின் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.





குறிப்பு:


தண்ணீர் சேர்க்கும் போது அரிசியின் அளவை விட ஒரு துளி கூட அதிகமோ,குறைவோ இருக்க கூடாது.
நன்கு வதக்க வேண்டும்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



20 நிமிடம்

40 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty மீன் குருமா ‍- 1

Post by Tamil Sat Jan 23, 2010 11:24 pm

தேவையான பொருட்கள்




  • வ‌ஞ்சிரம் மீன் - கால் கிலோ
  • அரைக்க
  • *********
  • ப‌ச்ச‌மிள‌காய் - முன்று
  • கொத்தும‌ல்லி - கால் க‌ட்டு
  • சோம்பு - இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
  • வெங்காய‌ம் - ஒன்று
  • தேங்காய் - ஒரு ப‌த்தை
  • முந்திரி - ஐந்து
  • பொட்டு க‌ட‌லை - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • தாளிக்க‌
  • ********
  • எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி
  • ப‌ட்டை = அரை அங்குல‌ம் அள‌வு
  • சின்ன‌ வெங்காய‌ம் = முன்று
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒன்ன‌றை தேக்க‌ர‌ண்டி
  • க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
  • கொத்து ம‌ல்லி சிறிது (க‌டைசிய்ல் மேலே தூவ‌)
  • த‌க்காளி = கால் துண்டு




செய்முறை




  • மீனை க‌ழுவி சுத்த‌ம் செய்து வைக்க‌வும்.
  • அரைக‌க் கொடுத்துள்ள‌வைக‌ளில் முந்திரி, பொட்டு க‌ட‌லை,சோம்பை முத‌லில் பொடித்து கொண்டு
  • , கொத்தும‌ல்லி, ப‌ச்ச‌மிள‌காய்,தேங்காய் வெங்காய‌ம் சேர்த்து ந‌ன்கு அரைக‌க்வும்.
  • தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து அரைத்த‌ ம‌சாலாவை ஊற்ற் தேவைக்கு த‌ண்ணீர் சேர்த்து ப‌ச்ச‌வாடை போகும் வரை கொதிக்க‌ விடட‌வும்.
  • க‌டைசியில் மீனை சேர்த்து அடுப்பின் தீயின் அள‌வை குறைத்து வைத்து ஏழு நிமிட‌ம் கொதிக்க‌ விட்டு கொத்தும‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.
  • சுவையான‌ மீன் குருமா ரெடி.





குறிப்பு:

அதிக‌
ம‌சாலா இல்லாம‌ல் புளி சேர்க்காம‌ல் ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு அருமையான‌
குருமா.இதை ரொட்டி, ச‌ப்பாத்தி, இடியாப்ப‌ம், தோசை, பிளெயின் சாத‌ம்
போன்ற‌வ‌ற்றிக்கு சைட் டிஷாக‌ சாப்பிட‌லாம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty மீன்,குடைமிளகாய் வறுவல்

Post by Tamil Sat Jan 23, 2010 11:25 pm

தேவையான பொருட்கள்




  • முள் இல்லாத மீன் -1கப்
  • (சிறிதாக நறுக்கியது)
  • குடைமிளகாய் -1
  • வெங்காயம் -1
  • தக்காளி -1
  • இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
  • மீன் மசாலா -1ஸ்பூன்
  • மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -2ஸ்பூன்
  • கொத்தமல்லிதழை -சிறிது




செய்முறை




  • குடைமிளகாய்,வெங்காயம்,தக்காளி சிறிதாக நறுக்கிவைக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுதுபோட்டு வதக்கி தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியவுடன் குடைமிளகாய் சேர்த்து வதக்கி மீன் போட்டு வதக்கவும்.
  • மஞ்சள்தூள்,மீன்மசாலா,உப்பு போட்டுவதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  • மீன் வெந்து தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.





வழங்கியவர்


செல்வி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty ஃபிஷ் சாண்ட்விச்

Post by Tamil Sat Jan 23, 2010 11:25 pm

தேவையான பொருட்கள்




  • ப்ரெட் - 4 துண்டுகள்
  • ஃப்ரைட் ஃபிஷ் அல்லது வேகவைத்த மீன் - 2 துண்டு
  • மயோனைஸ் - 1 டீஸ்பூன்
  • டொமட்டோ சாஸ் - 1டீஸ்பூன்
  • ஷ்ரெட்டட் சீஸ் - 2 - 4 டீஸ்பூன்




செய்முறை




  • ப்ரெட்டில் ஒன்றில் மயோனைஸ்,ஓன்றில் டொமட்டோசாஸ் தடவிக்கொள்ளவும்.இது போல் மற்றதையும் தயார் செய்யவும்.
  • வேகவைத்தமீன்
    அல்லது ஃப்ரைட் மீனை உதிர்த்து ப்ரெட் மீது வைத்து சீஸ் தூவவும்.மேலே
    இன்னொரு ப்ரெட் ச்லைஸ் வைத்து மூடி சாண்ட்விச் மேக்கரில் வைத்து
    எடுக்கவும். அல்லது அப்படியே ஒவனில் 20 செகண்ட் சூடு செய்து பரிமாறவும்.
  • சுவையான ஃபிஷ் சாண்ட்விச் ரெடி.





குறிப்பு:

மீன்
முள் எடுத்துவிட்டு ப்ரெட்டில் வைக்கவும்.மீன் சாப்பிடாதவர்கள் கூட இப்படி
செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.மீன் மீதமாகும் போது இவ்வாறு செய்து
சாப்பிடலாம்.இப்படி டின் டூனாவிலும் செய்யலாம்.


வழங்கியவர்


ஆசியா உமர்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



1 நபருக்கு

5 நிமிடம்

1 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty ஃபிஷ் கறி

Post by Tamil Sat Jan 23, 2010 11:26 pm

தேவையான பொருட்கள்




  • ஃபிஷ் முள் இல்லாதது - அரை கிலோ
  • எண்ணெய் - 50 மில்லி
  • சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
  • மஞ்சல் பொடி - அரை ஸ்பூன்
  • மல்லி பொடி - 1டேபிள்ஸ்பூன்
  • சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
  • வெந்தயப்பொடி - அரை ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 3
  • வற்றல் -2
  • தேங்காய் ,முந்திரி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
  • கார்ன் ஃப்லோர் - 2 டேபிள்ஸ்பூன்
  • லைம் ஜுஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • கொடம்புளி - சிறிய துண்டு
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • கடுகு- 1டீஸ்பூன்
  • கருவேப்பிலை - 3 இணுக்கு
  • இஞ்சி,பூண்டு - தலா அரை டேபிள்ஸ்பூன்
  • பீஸ் - வேக வைத்தது (அலங்கரிக்க)
  • உப்பு தேவைக்கு




செய்முறை




  • முதலில்
    மீனை சுத்தம் செய்து ஒரு போல் துண்டு போட்டு,கழுவி நீர் வடிகட்டி
    உப்பு,மஞ்சல் பொடி,சில்லி பவுடர்,கார்ன் ஃப்லோர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி
    அரை மணி நேரம் ஊறவைத்து பொரித்து எடுக்கவும்.தக்காளி,வெங்காயம்,மிளகாய்
    கட் செய்து வைக்கவும்.
  • பொரித்த பாத்திரத்திலேயே கடுகு வெடிக்க
    விட்டு,கருவேப்பில்லை,வற்றல்,இஞ்சி பூண்டு வதக்கவும்,பின்பு
    வெங்காயம்,தக்காளி ,மிளகாய் சேர்த்து வதக்கி,உப்பு
    சேர்த்து,மல்லி,சீரகத்தூளை சேர்க்கவும்,சிறிது தண்ணீர் சேர்த்து புலி
    சேர்த்து கொதிக்க விடவும்,வெந்தயதூள் சேர்க்கவும்.தேங்காய் முந்திரி
    பேஸ்ட் சேர்த்து கொதிவந்ததும் பொரித்த மீனை சேர்க்கவும்.விருப்பப்பட்டால்
    லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
  • சுவையான ஃபிஷ் கறி ரெடி.இத்கு சப்பாத்தி ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.





குறிப்பு:

நாங்கள்
அடிக்கடி போகும் ரெஸ்டாரண்டில் இது மிகவும் சுவையாக இருக்கும்.தேங்காய்
எண்ணெயில் செய்திருப்பார்கள்,பீஸ் குக் செய்தும் மேலே தூவி
இருப்பார்கள்.செய்து பார்த்து கொடுத்து இருக்கிறேன்.


வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

30 நிமிடம்

20 - 30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி.

Post by Tamil Sat Jan 23, 2010 11:27 pm

தேவையான பொருட்கள்




  • கிங் ஃபிஷ் (சீலா மீன்) - அரை கிலோ
  • பாசுமதி அரிசி - அரை கிலோ
  • எண்ணெய் - 150 மில்லி
  • நெய் - 50 மில்லி
  • தக்காளி - 150 கிராம்
  • வெங்காயம் - 100 கிராம்(மெலிதாக கட் செய்யவும்)
  • வெங்காயம் - 100 கிராம் ( மெலிதாக கட் செய்து பொரித்து வைக்கவும்)
  • மிளகாய் - 3
  • தயிர் - 100 மில்லி
  • எலுமிச்சை - 1
  • இஞ்சி பூண்டு - ஒன்னரை டேபிள் ஸ்பூன்
  • ஏலம்,பட்டை,கிராம்பு - தலா 2
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்
  • புதினா - 2 டேபிள்ஸ்பூன்
  • லெமன் யெல்லோ கலர் - பின்ச்
  • ரெட் கலர் - அரை பின்ச்
  • பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • மீனை சுத்தம் செய்து நன்கு அலசி உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி கழுவி நீர் வடிகட்டி வைக்கவும்.
  • மீனில் ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் , பாதி லைம் ஜூஸ் ,உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி ,புதினா , மல்லி இலை மெலிதாக கட் செய்து வைக்கவும்.
  • தனியாக வெங்காயத்தை கார்ன் மாவு அல்லது அரிசி மாவு கலந்து மிக்ஸ் செய்து சிவரை பொரித்து எடுத்து வைக்கவும்.
  • பாசுமதி அரிசியை அலசி அரை மணி நேரம் ஊற வைத்து முக்கால் பதம் வெந்து வடித்து வைக்கவும்.
  • அடிகனமான
    பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு
    காய்ந்ததும்,வெங்காயம் பொரித்தெடுக்கவும்,பின்பு மீனைப்போட்டு முறுகாமல்
    பொரித்தெடுக்கவும்.
  • மீனை தனியே எடுத்து வைக்கவும்.
  • அதே
    பாத்திரத்தில் ஏலம்,பட்டை ,கிராம்பு,போடவும், வெங்காயம்
    போடவும்,வதக்கவும்,இஞ்சி பூண்டு,போட்டு வதக்கி,புதினா,மல்லி
    இலை,தக்காளி,மிளகாய் ,பிரியாணி மசாலா,தயிர்,பாதி லைம் ஜூஸ்,போட்டு மூடி
    சிம்மில் வைக்கவும்.எண்ணெய் தெளிந்து வரும்.
  • ரெடியான பாதி மசாலாவை எடுத்து பொறித்த மீனில் சேர்த்து வைக்கவும்.
  • பிரியாணி
    மசாலா உள்ள பாத்திரத்தில் உதிரியாக வடித்த சாதத்தை பாதி எடுத்து பரத்தி
    போட்டு , பாதி பொரித்த வெங்காயம் தூவி,மீன் கலவையை வைத்து,நெய் சிறிது
    சேர்த்து மேலே மீண்டும் வடித்த சாதத்தை பரத்தவும்,பொறித்த வெங்காயம்
    சேக்கவும்,நெய் விடவும்.கலர் பொடியை நீரில் கலந்து தெளிக்கவும்.அலுமினியம்
    ஃபாயில் போட்டு மூடி தோசை தவா மீது பிரியாணி பாத்திரம் வைத்து சிம்மில்
    15-20 நிமிடம் வைக்கவும்.
  • கால் மணி நேரம் கழித்து திறந்து ஒரு பக்கமாக மேலிருந்து கீழே வரை மிக்ஸ் செய்து நடுவில் உள்ள மீன் உடையாமல் பரிமாறவும்.
  • சூடான சுவையான கிங் ஃபிஷ் லேயர் பிரியாணி ரெடி.





வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



3- 4 நபர்களூகு

30 நிமிடம்

30 - 40 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty கருவாட்டுக் குழம்பு

Post by Tamil Sat Jan 23, 2010 11:28 pm

தேவையான பொருட்கள்




  • புளி- ஒரு சிறு ஆரஞ்சு அளவு
  • சிறிய கருவாட்டுத்துண்டுகள்- ஒரு கப்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்-ஒரு கைப்பிடி
  • நல்லெண்ணெய்- கால் கப்
  • சீரகம்- அரை ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்-1
  • சிறிய தக்காளி-3
  • இஞ்சி- சிறு துண்டு
  • சிறிய பூண்டிதழ்கள்- கால் கப்
  • மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
  • கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்
  • முருங்கைத்துண்டுகள்- 1 கப்
  • தேங்காய்த்துருவல்- ஒரு கைப்பிடி
  • தேவையான உப்பு
  • கறிவேப்பிலை சிறிது





செய்முறை




  • புளியை போதுமான நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய
    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை தேங்காயுடன் அரைத்துச்
    சேர்க்கவும். தூள்களை உப்புடன் சேர்த்து குழம்பை நன்கு கலந்து கொள்ளவும்.
  • வாணலியை சூடு செய்து நல்லெண்ணையை ஊற்றவும்.
  • சீரகம்
    தாளித்து சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். கூட்டி
    வைத்த குழம்பு, முருங்கைக்காய்த்துண்டுகள், கருவாடு சேர்த்து நன்கு
    கொதிக்க விடவும்.
  • கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப்பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மீன் வகை உணவுகள் Empty Re: மீன் வகை உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum