TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத்

Go down

சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத் Empty சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத்

Post by Tamil Mon Aug 10, 2015 7:24 am

சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத்

திருச்சி: சசிபெருமாளுக்கு இரண்டு மனைவிகள் இருக்கும்போது  அவர் எப்படி காந்தியவாதியாக இருக்க முடியும். காந்தி தனது வாழ்நாள் முழுக்க பிரம்மச்சாரியைப்போல் வாழ்ந்தவர் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத் Nanjil%20sambath%20long
அதிமுக அரசின் நாடுபோற்றும் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆர்.கே.நகர் வெற்றி குறித்த விளக்ககூட்டம் திருச்சி விமான நிலையம் பகுதி அதிமுக சார்பாக திருச்சி கீழப்புதூரில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்தகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசுகையில், தமிழக அரசின் சாதனையை பொறுத்துகொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது மதுப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. தமிழகத்தில் இல்லாமல் இருந்த மதுக்கொள்கையை அமல்படுத்தி நான்கு தலைமுறை மக்களை குடிகாரர்களாக ஆக்கியவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் இப்போது மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிறார். இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவர் இப்படியென்றால் வைகோ, மொரார்ஜி தேசாயிலிருந்து, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், மன்மோகன் சிங் என ஒன்பது பிரதமர்களை கேள்விக்கணைகளால் விரட்டிய வைகோ குட்டிசுவராகி, சொந்த ஊரில் மதுக்கடை அகற்ற போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கலிங்கப்பட்டியில் 1987ல் இருந்து அந்த மதுக்கடை இருக்கிறது. அந்த கடையின் முதல் உரிமையாளர் வைகோவின் முதன்மை பாதுகாவலராக இருக்கும் காளிராஜ்தான். அந்த கடையை இப்போது அடித்து உடைத்து நாடகமாடுகிறார் வைகோ. சொந்த ஊரில் தனது தாயை போராட வைத்து விளம்பரம் தேடும் அளவுக்கு வைகோவின் நிலை பரிதாபத்திற்குரியதாக போனதுதான் வேதனை. சரி முதல்நாள் போராட்டத்தில் இறங்கிய வைகோவின் தாய், கலவரம் நடந்த அடுத்த நாள் ஏன் போராட்டத்திற்கு வரவில்லை. நான் கலவரம் செய்யப்போகிறேன் வராதே என அம்மாவை வீட்டுக்குள் இருக்க சொல்லிவிட்டாரா வைகோ. தனது அரசியல் நாடகத்திற்காக எதையும் செய்வார் வைகோ. அப்படிப்பட்ட வைகோ  தமிழகத்தில் யாராவது சாக மாட்டார்களா என காத்துகிடக்கிறார். செய்தி கிடைத்ததும் அடுத்து உடனே அங்குபோய் மலர் வளையம் வைக்க சென்றுவிடுகிறார்.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன் தி.மு.க.வைச் சேர்ந்த கேபி ராமலிங்கத்தின் தாயார் மரணத்திற்கு செல்கிறார். அந்த சாவுக்கு தி.மு.க.வில் இருந்து ஸ்டாலினோ, அழகிரியோ, தி.மு.க.காரன் ஒருத்தன்கூட வரல. ஆனால் வைகோ போகிறார். என்னை பொறுத்தவரை மதியாதவர் வீட்டு திருமணமாக இருந்தாலும் துக்கநிகழ்வாக இருந்தாலும் போகமாட்டேன். அதுதான் மரியாதை. ஆனால் வைகோ கிளம்பி விடுகிறார்.
 
சரி விசயத்திற்கு வருவோம். காந்தியவாதி சசி பெருமாள் மரணத்திற்கு தமிழக அரசு பதில் சொல்லணுமாம். அவருக்கு மணிமண்டபம் கட்ட 5 லட்சம் தருகிறாராம் வைகோ. நான் கேட்கிறேன், சசி பெருமாள் காந்தியவாதியா இருக்க முடியாது. சசிபெருமாளுக்கு 2 மனைவி. அவர் எப்படி காந்தியவாதியாக இருக்க முடியும். காந்தி தனது வாழ்நாள் முழுக்க பிரம்மச்சாரியைப்போல் வாழ்ந்தவர். வெற்று விளம்பரத்திற்காக எதையும் செய்யதவர். ஆயுதம் ஏந்தாமல் அகிம்சை வழியில் போராட்டங்களை கையில் எடுத்தவர். அவர் வழியை பின்பற்றியதாக சொல்லப்படும் சசிபெருமாள், செல்போன் டவரில்  ஏறி போராட்டம் நடத்தினார். 60 வயதில் 75 அடி செல்போன் டவரில் ஏறினால் நிச்சயம் சாவுதான் மிஞ்சும். காந்தியவாதிக்கு சகிப்புதன்மை வேண்டும். சசிபெருமாளிடம் அப்படியான சகிப்புதன்மை இல்லை. அப்படிப்பட்டவர் எப்படி காந்தியவாதியாக முடியும். வைகோ சசிபெருமாளுக்கு மணிமண்டபம் கட்ட 5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.  வைகோவிற்காக  உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், நொச்சிப்பட்டி தண்டபாணி என பலர் தீக்குளித்து மாண்டுபோனார்கள். அவர்களுக்கு எள்ளளவாவது உதவிகள் செய்திருப்பாரா. அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வைகோ நினைக்கவில்லையே ஏன்?
 
சசிபெருமாள் காந்தியவாதியில்லை: சர்ச்சையை கிளப்பும் நாஞ்சில் சம்பத் Nanjil%20sambath%20long%20meeting 
இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்லுது. ஒருத்தன் குடிக்கிற சிகரெட் 10 பேருக்கு தீமை விளைவிக்குதுன்னு அதில் சொல்லப்படுது. ஆனால் வைகோ, சிகரெட் குடிப்பதால் சமுதாயத்திற்கு கேடு இல்லை என்கிறார். அவரது மகன் துரை வையாபுரி, மெரிட்டில் சிகரெட் ஏஜென்ஸியை வாங்கியதாக வைகோ சொல்கிறார். அந்த நிறுவனத்துக்கும், உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஏன் வைகோ  13 லட்சமும், அவரது மனைவி 43 லட்சமும் அந்த கம்பெனிக்கு கடன் கொடுத்ததாக வைகோ தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். எப்படியெல்லாம் நாடகம் ஆடனுமோ அப்படி ஆடி மக்களின் நன்மதிப்பை பெற்றுவிடலாம் என நினைக்கிறார் வைகோ. அது சாத்தியமே இல்லை.
 
விஜயாகாந்த், மனித சங்கிலி நடத்துவோம் என அறிவித்துவிட்டு அங்குபோய் மனிதர்கள் எல்லாம் வந்துட்டாங்க சங்கிலி எங்கே என கேட்கிறார். இப்படி தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களும் வழியில்லாமல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கையிலெடுத்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.

நீங்கள் செல்லாக்காசு என்பதை புரிந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, எங்கள் பட்டத்துராணி வீட்டுக்கே வந்து சந்தித்துவிட்டு போகிறார். அப்படி என்றால் அம்மாவின் நிர்வாக திறமையை பார்த்து இந்த நாடே வியந்து நிற்கிறது. நடுவில் சின்ன சஞ்சலத்திற்கு ஆளானோம். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி வெளியே வந்த அம்மா, ஆர்கே நகரில் போட்டியிட்டார். வரலாறு காணாத வெற்றியை அம்மா பெற்றார்.  உடனே கருணாநிதி, கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். கள்ள ஓட்டுபோடுவதை தமிழ்நாட்டுக்கு கற்றுதந்தவரே கருணாநிதிதான் காரணம். நான் கூட அந்த இயக்கத்தில் இருக்குபோது 12 ஓட்டு கள்ள ஓட்டு போட்டிருக்கேன். இப்போது அதற்கு சாத்தியமில்லை. காரணம் எல்லாம் கம்யூட்டர் மயமாகிடிச்சி.

அப்துல்கலாம் இறந்ததும், அம்மாவால் உடல்நிலை முடியாதநிலையில் அமைச்சர்களை அழைத்து உடனடியாக ராமேஸ்வரம் அனுப்பினார். ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகையும் வேலையும் அறிவித்து பணி ஆணை வழங்கியுள்ளார்.  இப்படிப்பட்ட தாயின் ஆட்சிதான் இனி தொடரும் அதற்குதான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்" என முடித்தார்.
 
-சி.ஆனந்தகுமார்

படங்கள்:
என்.ஜி.மணிகண்டன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சசிபெருமாள் மரணம்: தமிழகத்தில் ஆக.4ல் முழு அடைப்புக்கு அழைப்பு!
» கருணாநிதி ஆதரிக்க வேண்டியவர் சங்மா நாஞ்சில் சம்பத் பேச்சு
» மதிமுக புறக்கணிப்பு - பெற்ற பிள்ளைக்கு விஷம் கொடுத்தற் போல : நாஞ்சில் சம்பத்
»  ஜெயலலிதா முடிவால் மதிமுகவுக்கு புதிய வாசல் திறப்பு: நாஞ்சில் சம்பத்
» ஜெயலலிதா அரசு இழைக்கின்ற தவறுகளை கேள்வி கேட்க தமிழகத்தில் எதிர்கட்சிகள் இல்லை: நாஞ்சில் சம்பத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum