TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Go down

மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு Empty மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Post by மாலதி Wed Nov 27, 2013 7:36 am

மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1464611_673639619342704_133196747_n
எமது உரிமைக்காகப் போராடி மரணித்த மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது.

இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அறிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இந்தத் தடை உத்தரவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

மாவீரர் அஞ்சலி மரபார்ந்த நிகழ்வு - மாவை சேனாதிராசா

இந்த நாடு ஜனநாயக நாடு என்றால் மக்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்று கூடுவதற்கும், இறந்தவர்களை நினைவு கூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகின்றது.

எனவே, தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி, அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.

அவர்கள் வீடுகளில் கூட மரணித்த தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள். இது அன்றுதொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.

இந்த நிலையில், மாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதியை பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இராணுவமும், பொலிஸாரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் இவ்வாறான தடை உத்தரவுகள் தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

மாவீரர்களுக்கு பயங்கரவாத முத்திரையா? - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவினைத் தழுவிய மாவீரர்களை தமிழர்கள் நினைவு கூருவதை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது பெரும் மனித உரிமை மீறலாகும்.

இலங்கையில் "மாவீரர்' என்ற பதம் அரசுக்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக உள்ளது.

தாயக மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்துப் போராடி உயிர்நீத்த அந்த உத்தம தியாகிகளுக்கு தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இறந்தவர்கள் விடயத்திலும் அடக்கு முறையை இலங்கை அரசு பிரயோகித்து வருகின்றது. எனினும், தமிழர்கள் மரணித்த தமது உறவுகளுக்கு வருடாவருடம் ஏதோ ஒரு வழியில் விளக்கேற்றி, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எத்தடை வரினும் அத்தடையைத் தகர்த்தெறிந்து மரணித்த தமது உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவார்கள்.

நாடாளுமன்றத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலித்ததை மறந்துவிட்டார்களா பா.அரியநேத்திரன்

மாவீரர்கள் இலங்கையில்தான் பிறந்தவர்கள். அவர்கள் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் எம்மைப் போல தமிழ்த் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்கள்.

தமிழருக்கான உரிமை சிங்கள அரசால் மறுக்கப்பட்டதனால் தான் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்தார்கள். மாவீரர்களின் இந்தத் தியாகத்தினால்தான் அவர்களை நாம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.

கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற வளாகத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை ஆட்சியில் உள்ளவர்கள் மறக்கமாட்டார்கள். அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறான அஞ்சலி நிகழ்வுக்கு அரசு தடைவிதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், மாவீரர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் இறந்தவர்கள். இறந்தவர்களை நினைவு கூருவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.

தமிழர்கள், இறந்தவர்களை நினைவு கூருவதற்குக்கூட தடைவிதித்தால் நாட்டில் இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பே இருக்காது என்பதை அரசும், அதன் படைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதையும் மீறி தடை விதித்தாலும் தமிழர்கள் தமது மனங்களில், தமது வீடுகளில் மாவீரர் செல்வங்களை நினைவுகூருவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது'' என்றார்.

போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடையில்லை- சுமந்திரன்

போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதனை தடுக்க இலங்கை சட்டத்தில் இடமில்லை.

தாம் மரியாதை செலுத்தும் நபர்களுக்காக நினைவுத் தூபிகளை அமைத்தல், சிலைகளை அமைத்தல் அடிப்படை உரிமையாகும்.

இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கில் நினைவு நிகழ்வுகளை நடாத்துதல் சட்ட ரீதியானது எனக் குறிப்பிடுதல் அடிப்படை உரிமை மீறலாகும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு உறுப்பினர்களுக்கு
» 14 உள்ளுராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் !
» இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியா வருகிறது
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு
» ராஜபக்சேவுடன் கூட்டு சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு- சிங்கள ஊடகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum