TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்

3 posters

Go down

"சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம் Empty "சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்

Post by மாலதி Thu Oct 04, 2012 8:07 pm

"சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம் Tamil_News_large_559695
சென்னை:வாழ்க்கை என்பது மிகச்சிறந்த கலை. நல்லவர்களாக வாழ்தல் இந்த
சமூகத்திற்கு நாம் செய்யும் தொண்டு. பிறர் மாதிரி வாழாமல், பிறருக்கு
மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என, முனைப்பு காட்டுவோர் உண்டு. இதற்கு
எதிர்மறையானவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.சிறைக்கு செல்லாமல்
இருந்தால், பன்னீர் செல்வத்திற்கு தூக்கம் வராதாம். வளசரவாக்கம் காவல்
நிலையத்தில், அப்பாவி போல் உட்கார்ந்து இருந்தவரிடம் உரையாடிய போது, புழல்
சிறையில் இருக்கும் செடிகள் எல்லாம் தன்னை பார்க்காமல் எப்படி இருக்கிறதோ
என, கவலைப்பட்டார்.

அவருடன் பேசியதிலிருந்து...

எதற்காக காவல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?

திருட்டு பயல போலீசு புடுச்சா, காவல் நிலையம் தான் கதி.

உங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே...
உங்க வீட்டில் சைக்கிள் இருக்கா, அது காணாமல் போனா நான் யாருன்னு உங்களுக்கு தெரிந்துவிடும்.

சைக்கிள் மட்டும் தான் திருடுவீர்களா?
மத்த
பயலுக மாதிரி, பெரிய, பெரிய சமாச்சாரமெல்லாம் நமக்குத் தெரியாது; அது
தேவையும் இல்லை. வீட்டுக்கு முன்னாடி பித்தளை பாத்திரம், இரும்புச் சட்டி,
சைக்கிள திருடி விற்கிறதுக்குள்ள நான் படுறபாடு உங்களுக்குத் தெரியாது.

திருடுவது தவறு என்று தெரியவில்லையா?
சின்ன வயதில் இருந்து திருடுவதால் தவறு என்று தோணவில்லை. ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. இப்ப பழகிப்போச்சு...

எத்தனை வயதில் இருந்து...
விருகம்பாக்கம்
ஏரி கரைதான் நான் பிறந்து வளர்ந்தது. படிப்பு ஏறல. பத்து வயசுல திருட
ஆரம்பிச்சேன். இப்ப நாற்பது ஆகுது. திருடிக்கொண்டே இருக்கிறேன்.

வேலைக்கு போகக்கூடாதா?
நல்லா இருக்கே உங்க கேள்வி. என்ன பற்றி கேள்விபட்ட யாராவது வேலை கொடுப்பாங்களா? தினமும் குடிக்க வேண்டும். அதற்காக திருடுகிறேன்.

குடிப்பழக்கம் திருடனாக்கி விட்டது என்கிறீர்களா?
என்
வாழ்வில் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உங்க காலில் விழுந்து
கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். யாரும் குடிக்காதீங்க. சின்ன வயசுல
நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்தேன். அதன் பின் 24 மணி நேரமும்
போதையில்தான் இருப்பேன். யாருகிட்டேயும் சண்டைக்கு போகமாட்டேன். வாயில்
இருந்து வரும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. குடிக்கு
அடிமையானதால், மனைவி பிரிந்து விட்டாள். அந்த சோகமும் வாட்டி வதைக்க,
மேலும் குடிக்க ஆரம்பித்தேன். வயிறு பட்டினி கிடந்தாலும், மண்டைக்குள்ள
போதை இருக்கணும். குடிக்க கையில் காசு இருக்காது. ஆனால், குடிக்க வேண்டும்;
என்ன செய்வது. அதனால், திருட ஆரம்பிதேன்.

முதல் திருட்டு அனுபவத்தை சொல்லுங்கள்...
விருகம்பாக்கத்தில்,
சைக்கிளில் ஒருவர் வேலைக்கு சென்று வருவார். அவர் எங்கெல்லாம் போகிறார்.
சைக்கிளை எந்த இடத்தில் நிறுத்துகிறார் என்பதை தொடர்ந்து நோட்டமிட்டேன்.
அவர் கண்ணயர்ந்த சமயம் பார்த்து திருடி விட்டேன். குடிகாரனாக இருந்தவன்
திருடனாகி விட்டேனே என, நினைத்து அன்று இரவு தூக்கமே வரவில்லை. சைக்கிள்
விற்ற காசு தீர்ந்து போனதும், மீண்டும், மீண்டும் சைக்கிள் திருட்டில்
ஈடுபட்டு வந்தேன். ஒரு நாள் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

சிறைக்கு சென்ற அனுபவம்?
சிறைக்கு
போவதும், வருவதுமே வாழ்க்கையாகிப் போனது. மத்திய சிறையில் காலடி எடுத்து
வைத்தபோது, அடிப்பார்களோ என, பயமாகத்தான் இருந்தது. பெரிய, பெரிய ரவுடிகள்
இருப்பார்கள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு உதைபடப் போகிறோம் என்று தான்
நினைத்தேன். மத்திய சிறை கொடுமையானது தான், சும்மா சொல்லக்கூடாதுங்க,
புழல்சொர்க்கம். மணியடிச்சா சாப்பாடு, வாரத்தில் ஒரு நாள் கோழிக்கறி,
உள்ளேயே கால்பந்து விளையாட்டு என, பொழுது போகும். சிறை அதிகாரிகள்
அன்பானவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாகி விட்டவர்களை
திருத்தும் மிக அற்புதமான இடம் அது.சிறை ரவுடிகள் பற்றி
சொல்லுங்கள்பன்னீர்செல்வம் ரொம்ப "ஜாலி'யான ஆளு. அதனால ஆடச்சொல்லி,
பாடச்சொல்லி கேட்பாங்க. சிறைக்குள் தனிமையில் அழுகிற ரவுடிகளை பார்த்து
இருக்கிறேன். அவுங்களுக்கு பயம் அதிகம். அதனால் தான் கத்தியை மூன்றாவது
கைபோல் பாவித்து வரு கிறார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான்
சாவுன்னு அவுங்களுக்கும் தெரிகிறது.

அங்கு என்னவெல்லாம் கிடைக்கிறது?
பெண்ணைத் தவிர எல்லாம் கிடைக்கும். கட்டு கட்டா துட்டு செலவு செய்தால், சகலவிதமான வசதிகளுடன் இருக்கலாம்.

இரண்டு பீடி கட்டுகள் தானே சிறைக்குள் அனுமதி?
மனுவுல
வருபவர்கள் இரண்டு பீடி கட்டு தான் கொண்டு வர வேண்டும். என்னைப் போன்று
இருப்பவர்களுக்கு துண்டு பீடி கூட கிடைக்காது. அதற்காக, பீடி உள்ளவர்களை
சுற்றி பெரும் கூட்டம் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அவுங்க சொல்கிற
வேலையெல்லாம் கேட்கணும். துணி துவைத்து தந்தால், ஒரு பீடி கொடுப்பாங்க.
அந்த பீடியில், ஸ்டிக்கர் வரை குடித்தால் அரை நாள் ­­தாங்கும். விரல்
பிடிக்கும் பகுதி வரை குடித்தால் ஒரு நாள் ஓடிப்போகும். அடுத்த பீடி
கிடைக்கும் வரை, துண்டு பீடியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

கஞ்சா எப்படி வருகிறது?
அலைபேசி
வழியில் வியாபாரம் முடிந்து விடுவதால், சிறைக்கு பின்புறத்தில் இருந்து,
இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பவர்கள், ரப்பர் பந்தை சிறைக்குள்
வீசுவார்கள். அதில் இருக்கும் கஞ்சா பொட்டலத்தில், இது இன்னாருக்கு
என்பதற்கான அடையாளம் இருக்கும். அதை வேறு யாரும் எடுக்க மாட்டார்கள். சிறை
கண்காணிப்பாளரிடம் மாட்டிக்கொண்டால், தனிமை சிறையில், போட்டு விடுவார்கள்.
சாப்பிடுவது, மலம் கழிப்பது எல்லாமே அங்கே தான். அந்த சிறைக்கு மட்டும்
போகவே கூடாது.

"சிம்' கார்டெல்லாம் வைத்திருப்பார்களா?
கழிப்பறை
பீங்கானை அடியில் அறுத்து, அதில் சிம்கார்டு பதுக்கி வைத்திருப்பார்கள்,
அலைபேசி இருக்கும் இடம் யாருக்குமே தெரியாது. சிறை வாசிகள் கண்களாலேயே
பேசிக்கொள்வார்கள். தலையில் கை வைத்தால், வீட்டுக்கு பேச வேண்டும் என,
அர்த்தம். அதன்படி அலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்.

சிறையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது
சொர்க்கம். மணியடிச்சா சோறு, வாரம் தோறும் சிக்கன். உடல் நிலை சரியில்லை
என்றால், பேருந்து பிடித்து மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதுஇல்லை.
அங்கேயே மருத்துவ மனை இருக்கிறது. மனமும், உடலும் நல்ல ஆரோக்கியத்துடன்
இருக்கும்.

வெளியில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
வெளியில்
இருப்பது பிடிக்கவே இல்லை. எந்த சைக்கிளை பார்த்தாலும், திருடலாமா என்று
தான் நினைக்க தோன்றுகிறது. அழுக்குபடிந்த ஆடையுடன் அலைய வேண்டியுள்ளது.
சிறையில் அப்படி அல்ல. தும்பை பூ போல் தூசி படியாமல் இருக்கலாம்.
திருந்துவதற்கு சிறை மிகவும் அற்புதமான இடம்.

திருந்த மனம் இல்லையா?
போலீசு
மனது வைத்தால், சிறைக்குள் போய் விடுவேன். நான் வளர்த்த செடிகள் எல்லாம்
எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

"சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம் Empty Re: "சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்

Post by KAPILS Thu Oct 04, 2012 9:25 pm

visil
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

"சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம் Empty Re: "சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum