Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருவண்ணாமலை கிரிவலம்.. ஒரு முறை சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன்!
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1

கலியுகத்தில் நமது கர்மவினைகளை நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும், மந்திரஜபத்திற்கும் மட்டுமே உண்டு என்பதை ஆன்மீக குரு திரு. சகஸ்ரவடுகர் அவர்கள் கண்டறிந்துள்ளார். அன்னதானம் பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது: நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச் சென்று ஒரே ஒரு நாள் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும். நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.மேலும்,மறுபிறவியில்லாத முக்தி துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.
இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில் வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது. துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது ஆன்மீக குருவின் தலையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு புண்ணியம் நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும் நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான பலன்கள் கிடைக்கும்; மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார்.
சுவாதி நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே வரும் ஓர் அற்புத நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள் என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம் செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள் என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப் போல கரைந்து காணாமல் போய்விடும் என்றும் விவரிக்கிறது. 30.11.2013 சனிக்கிழமை அன்று துவாதசி திதியும்,சனிப்பிரதோஷமும்,சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது. இந்த நன்னாளில்,காலை 7 மணிக்கு ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் சொர்ணாகர்ஷண கிரிவலப் பயணம் புறப்படுகிறது. பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பது அவசியம்;அவ்வாறு புறப்படும் போது,ஐந்து கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும்,அன்னதானத்தின் நவீன வடிவமாகிய இட்லிகள் நிரம்பிய பார்சல்களை உடன் கொண்டு செல்லவேண்டும் கிரிவலப் பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்துக் கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே 3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார்.
இதைத்தவிர,வேறு எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம் செய்வோம்;நாம் கொண்டு செல்லும் ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு வளரத்துவங்கியதும், நமது அனைத்து கிரக தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்; நாம் கொண்டு வரும் டயமண்டு கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு கல்கண்டை ஒரே ஒரு எறும்பு எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம் நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு! மதியம் 2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;இரவு பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின் ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும், வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு இருந்துவரும் கர்மவினைகளும், சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக (வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்) நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்; இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின் பலன்கள் அடுத்த சில நாட்களில் நம்மை வந்து சேரும்;சிலருக்கு சில வாரங்களுக்குள் வந்து சேரும்.
ஓம் அருணாச்சலாய நமஹ!
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
திருவண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்
திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிக்கக் கூட வேண்டாம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.
அவ்வளவு சக்தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிரி எனப்படும் மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் ஐயமேதும் இல்லை.
அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அத்தனை சிறப்பு உள்ளது என்று முற்றம் உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்கின்றனர்.
ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
"அருணாசலத்தை வலம் வருகிறேன்" என்று சொன்னாலே பாவம் தீரும். "வலம் வர வேண்டும்" என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும்.
கிரிவலம் பற்றி அருணாசல புராணம் :
அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.
வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது அருணாச்சல புராணம்.

திருவண்ணாமலை கிரிவலம் - அறியாத தகவல்கள் - நேரடி அனுபவம்
திருவண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன். பலர் இதற்கென்று முன்னரே திட்டமிட்டு செல்வார்கள். எனக்கு நிகழ்ந்தது மிக எதேச்சையான ட்ரிப். வழக்கறிஞர் நண்பன் பிரேம் ஒரு ஞாயிறு மாலை வேறு சில விஷயங்களுக்காக போன் செய்து பேசியபோது, திருவண்ணாமலை கிளம்பிக்கிட்டே இருக்கேன் நீயும் வர்றியா? என்று கேட்க, " சரி வர்ரேன்" என்றேன். போன் பேசி அடுத்த முப்பதாவது நிமிடம் அவனது காரில் நாங்கள் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.
இனி கிரிவல அனுபவங்கள் :
பவுர்ணமி முழுதுமே நடக்கலாம் எனினும் இரவில் நடப்பது ரொம்ப விசேஷம். நாங்கள் மாலை ஆறரைக்கு சென்னையில் கிளம்பினோம். சாப்பிட்ட உடன் நடப்பது சிரமம் என திண்டிவனத்தில் இரவு சாப்பாடு முடித்து விட்டு அடுத்த ஒண்ணரை மணி நேரம் பயணம் செய்து திருவண்ணாமலை அடைந்தோம்.
கார் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியாத படி ஜனத்திரள் வந்து விடுகிறது. ஆனால் நாம் நடக்க துவங்கும் கிரி வல பாதை இன்னும் 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. இந்த தூரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் 10 ரூபா வாங்கி கொண்டு நம்மை அழைத்து போகிறது
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று 13 கிலோ மீட்டரை நடந்தே சுற்றி வருகிறார்கள். வழியில் உள்ள கடவுளை வணங்குகிறார்கள். இந்த வரி தான் இதற்கு முன் அறிந்தது. நேரில் பார்க்கும் போது ஏராள வித்தியாச அனுபவங்கள் !
இங்கு கடவுள், மலை மேலேயே / மலை உருவிலேயே இருப்பதாக நம்புகிறார்கள். இந்த கடவுளை வணங்கும் விதம் அதனை சுற்றி வருவது தான். இது தான் கிரிவலம்.
கிரிவலம் செல்லும்போது அமைதியாகவும், அரட்டை அடிக்காமலும், வேகமாய் நடக்காமல் மெதுவாக மந்திரங்கள் சொல்லியபடி செல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலானோர் இங்கு நடக்கும் போது செருப்பு அணிவதில்லை (வெகு சிலர் அணிகிறார்கள். யாரும் தடுப்பதில்லை)
பஞ்ச பூதங்களில் வாயு, நீர் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒரு இடத்தை சிறப்பாக கருதுவார்கள். அப்படி நெருப்புக்கு உரிய தளம் திருவண்ணாமலை.
பவுர்ணமி அன்று சித்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்றும் அன்று அங்குள்ள மூலிகை மனத்தை நுகர இரவு நேரத்தில் நடப்பது தான் நல்லது என்றும் கூறுகிறார்கள்
திருவண்ணாமலையில் உள்ள பெரிய சிவன் கோவிலில் இருந்து நம் நடை பயணம் துவங்குகிறது. ஆனால் கிரிவலம் வரும் மக்களில் 10 % கூட கோவில் உள்ளே செல்வதில்லையாம். வெளியில் இருந்து வணங்கி விட்டு நடக்க துவங்கி விடுகிறார்கள். நாங்கள் நடக்க துவங்கிய இரவு 11. 30 க்கு வெளியிலேயே அவ்வளவு தள்ளு முள்ளு.
சுற்றி வரும் பாதை முழுதும் 12 லட்சம் செலவில் சோடியம் விளக்குகள் போட்டு தந்தது நடிகர் ரஜினி காந்த் ! சொல்லப்போனால் அவர் அருணாசலம் என்று இந்த ஸ்தல பெயரில் படம் நடித்த பின் இந்த இடம் மிக பிரபலமானதாகவும், அதன் பின் கூட்டம் இன்னும் அதிகமானதாகவும் சொல்கிறார்கள்
நடப்பவர்களில் பாதிக்கு பாதி பெண்களாக உள்ளனர் இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எதோ சபரிமலை மாதிரி ஆண்கள் தான் அதிகம் செல்வார்கள் என மனதில் கற்பனை செய்திருந்தேன்.
நாம் நடக்கும் 13 கிலோ மீட்டர் முழுதும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், , எம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய 9 லிங்கங்கள் உள்ளன. சிலர் மட்டுமே அந்த லிங்கம் ஒவ்வொன்றும் பார்த்து வருகின்றனர் நாங்கள் நேரே நடை ராஜா தான். (பல முறை சென்ற நண்பனும் கூட ஒரு முறையும் எல்லா லிங்கமும் பார்த்ததில்லை என்றான்; மலையை சுற்றி நடப்பது தான் முக்கியமாம் )
13 கிலோ மீட்டர் முழுதும் இரு புறமும் கடைகள் தான். வியாபாரம் அமோகம் ! குறிப்பாய் ஏராளமான சாப்பாட்டு கடைகள். அதிலும் சிறு இட்லி கடைகள் தான் நிறைய ! விடிய விடிய இட்லி சுட்டு தர, மக்கள் பொறுமையாய் காத்திருந்து சாப்பிடுகிறார்கள். பழங்கள், காபி , திருநெல்வேலி அல்வா என சாப்பாட்டு விஷயங்கள் அநேகம்
சாப்பாட்டு கடை தவிர்த்து அதிகம் இருப்பது பெண்கள் சமாசாரங்கள். ஹேர்பின், கிளிப் துவங்கி அடுப்படிக்கு தேவையான சாரணி வரை எக்கச்சக்க கடைகள். பெண்கள் ஆன்மீகத்தின் இடையே சுவாரஸ்யமாய் இவற்றை பர்ச்சேஸ் செய்கிறார்கள்
நடப்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எடுத்து கொள்கிறார்கள். மொபைலில் ஏதேனும் சுலோகம் வைத்து கொண்டு, அதை கேட்டபடி தனியாய் நடப்பவர்கள்; கைக்குழந்தையுடன் நள்ளிரவில் நடந்து செல்லும் குடும்பங்கள், ஒரு குழுவாய், இசை உபகரணங்களுடன் பஜனை செய்தபடி செல்லும் மக்கள், நடக்கிற தூரம் தெரிய கூடாது என ஓடி பிடித்து விளையாடிய படி செல்லும் இளைஞர் கூட்டம், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி செல்லும் நம்மை மாதிரி ஆட்கள்.....
இவர்களை விட நம்மை பெரிது ஆச்சரியப்படுத்துவோர் குளித்து விட்டு ஈர துணியுடன் வெறும் வேஷ்டியுடன் சிவமந்திரம் சொன்ன படி தனியே நடந்து போகும் சிலர் தான். (நமக்கு சட்டை, காதுக்கு ஸ்கார்ப் போட்டு கொண்டு நடக்கும் போதே குளிருது; ஈரத்துடன் சட்டை போடாமல் நடந்து போகும் சிலரை பார்த்தால் ஆச்சரியமாய் இருந்தது )
கிரிவலத்துக்கு மிக அதிக கூட்டம் கார்த்திகை தீபத்தின் போது தான் ! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின் தான் தமிழகம் எங்கும் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். அப்படி புகழ் பெற்ற கார்த்திகை தீபம் காண கூட்டம் மொய்த்து விடுமாம். 13 கிலோ மீட்டருக்கும் ஜன திரள் இருக்க, கூட்டம் மெதுவாக ஊறுமாம்.
அடுத்து சித்திரா பவுர்ணமி அன்று பல இடங்களில் வசிக்கும் சித்தர்களும் இங்கு மீட் செய்வார்கள் என்று சொல்கிறார்கள் ( பொதுவாகவே இங்கு சித்தர்கள் நிறைய வசிக்கிறார்கள் என்று கேள்வி..சித்தர்கள் போல ஆக்டிங் தரும் பலரையும் நாங்கள் கண்டோம் )
ஆங்காங்கு 5 ரூபா கட்டின கழிப்பிடம் இருக்கிறது. ஆனால் ஒன் பாத் ரூம் என்றால் ஆண்கள் ஆங்காங்கு நடக்கும் வழியிலேயே ஒதுங்கி முடிக்கிறார்கள். 5 ரூபா வாங்குவதாலோ என்னவோ, அவ்வளவு கூட்டத்துக்கும் கழிப்பிடம் ஓரளவு சுத்தமாய் இருந்தது (ஒரு வேளை நாங்கள் சென்ற இடம் மட்டும் நல்லா இருந்ததா தெரியலை)
கண் தெரியாதோர் சிறு வேன் வைத்து கொண்டு அதில் சாமி பாட்டு பாடுகிறார்கள். வெளியே ஒரு சிலர் நின்று உண்டியலில் தானம் கேட்கிறார்கள்.
குறைந்தது 50 கிளி ஜோசியக்காரர்களையாவது கண்டேன். ஒவ்வொருவரிடமும் யாராவது அந்த நள்ளிரவில் ( இரவு 2 மணி !!) ஜோசியம் பார்த்து கொண்டிருந்தனர். பவுர்ணமி அன்று ஜோசியம் பார்ப்பது விசேஷமாம் !
நடப்பதில் பெரும்பகுதி பஸ் ரூட் தான். கிரிவலம் அன்று மட்டும் அந்த பாதையில் பஸ் போகாமல் டைவர்ட் செய்து விடுகிறார்களாம் ! நடுவில் திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டையும் கடக்கிறோம். நடுவில் 1 கிலோ மீட்டருக்கு பஸ்சும் நாம் நடக்கும் பாதையில் செல்கிறது. பஸ் ரூட் என்பதால் ரோடு செம நீட்டாக உள்ளது. திருப்பதி மலைக்கு நடந்தே செல்வது போன்ற ஒரு அனுபவம் தான். ஆனால் அது மலை; இது சம தளம். அது தான் முக்கிய வித்யாசம்.
அங்கு மக்கள் நடக்கிற விதத்தை சொல்கிறேன்: நம் வரிசையிலேயே 5 முதல் 10 பேராவது வருவார்கள். நமக்கு சற்று முன்னர் தள்ளி ஓரடி இடைவெளியில் இன்னும் 10 பேர் சென்று கொண்டிருப்பார்கள். போலவே பின்னால் ஓரடி தள்ளி 10 பேர் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி சாரை சாரையாய் எறும்பு போல மக்கள் கூட்டம் செல்கிறது !
ரோடுக்கு இருபுறமும் நடைபாதை இருந்தாலும், அதில் நடந்தால் நடைபாதை சற்று ஷேக் ஆகிறது. டைல்ஸ் சரியே போடலை போலும். அதற்கு நடு ரோடில் நடப்பதே நல்லது என்று நடக்க துவங்குகிறோம் ; நடைபாதை மேல் நடப்பது மிக சிலரே !
ஆன்மிகம், பிரார்த்தனை என மக்கள் வருவதாலோ என்னவோ, பிச்சைகாரர்கள், சாமியார்கள் என பலரும் நடைபாதை முழுதும் அமர்ந்துள்ளனர். பவுர்ணமி ஒரு நாள் கலக்ஷன் வச்சு ஓரிரு வாரம் ஓட்டிடலாம் என நினைக்கிறேன்
ரமண மகிரிஷி ஆசிரமம் , மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், புரொபஷனல் கூரியர் நிறுவனத்தினர் என வழியில் பல்வேறு அமைப்புகளும் அன்னதானம் செய்கின்றன. நள்ளிரவு 2 மணிக்கு மக்கள் பெரும் கூட்டமாக கியூவில் பொறுமையாய் காத்திருந்து சாப்பாடு வாங்கி உண்ணுகின்றனர். இவர்கள் இரவு சாப்பாடு சாப்பிடவே இல்லையா? அல்லது அப்போது ஒரு ரவுண்ட் முடித்து விட்டு ரொம்ப நேரம் விழித்திருப்பதால் இன்னொரு ரவுண்ட் சாப்பிடுகிறார்களா என்றெல்லாம் கேள்வி மனதில் ஓடியது
சன் டிவி மற்றும் ரஞ்சிதா புகழ் நித்யானந்தாவுக்கும் பெரும் இடம் அங்கிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஒரு டிவி வைக்கப்பட்டு அதில் நித்யானந்தா சொற்பொழிவு ஆத்தி கொண்டிருந்தார்
பல சிறு ஊர்களை தாண்டி வருகிறோம். அதில் அடி அண்ணாமலை என்கிற ஊர் வந்தால் கிட்டத்தட்ட மலைக்கு கீழே வந்து விட்டோம் என்றாகிறது. அதன் பின் ஓரிரு கிலோ மீட்டர் நடையில் நம் பயணம் முடிவடைகிறது.
நடக்கும் போதே அவ்வப்போது மலையை பார்த்து கொண்டே தான் நடக்கிறோம். சிவன் அந்த மலை வடிவில் இருக்கிறார் என்பதால் அந்த மலையை சுற்றி வருவது தான் ஐதீகம். . இறங்கி முடித்த பின் ஓரிடத்தில் மலையை நோக்கி வணங்கி விட்டு சூடம் ஏற்றி காட்டிய பின் நம் கிரிவலம் முடிவுக்கு வருகிறது
சென்னை டு திண்டிவனம் வரை சாலை அருமை. திண்டிவனம் துவங்கி திருவண்ணாமலை வரை தற்போது சாலை மிக மிக மோசமாய் உள்ளது.
காரில் சென்றால், சென்னை டு திருவண்ணாமலை பயணம் 4 மணி நேரம், நடக்க 4 மணி நேரம்; திரும்ப 4 மணி நேரம் என 12 மணி நேரத்தில் கிரிவலம் முடித்து வீடு திரும்பி விடலாம்.
அதிகாலை மூன்று மணி அளவில் நாங்கள் கிரிவலம் முடிக்க, சிலர் அப்போது தான் நடக்க துவங்கியிருந்தனர் !
இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இன்றைக்கும் கூட திருவண்ணாமலையில் கிரிவல நாள் தான் !
ஓம் நமச்சிவாயா !

திருவண்ணாமலை .... |

Similar topics
» திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி?கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி?
» குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
» குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்
» கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!
» சித்தி எனும் அரக்கியிடம் சிக்கிய குழந்தை : சுற்றிய கிரைண்டர் கல் மீது முகத்தை தேய்த்த கொடூரம்
» குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
» குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்
» கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!
» சித்தி எனும் அரக்கியிடம் சிக்கிய குழந்தை : சுற்றிய கிரைண்டர் கல் மீது முகத்தை தேய்த்த கொடூரம்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum