TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சாலையோர உணவகங்கள், உஷார்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

Go down

சாலையோர உணவகங்கள், உஷார்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்... Empty சாலையோர உணவகங்கள், உஷார்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

Post by மாலதி Tue Jul 24, 2012 7:11 am

சாலையோர உணவகங்கள், உஷார்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...
[You must be registered and logged in to see this image.]

சமீபத்தில் உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை யில்
இந்தியாவில் மஞ்சள் காமாலை, டைபாய்டு, காலரா, வாந்திபேதி, சீதபேதி போன்ற
தொற்றுநோய்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கும், இவை தீவிரமாக மக்களிடம்
பரவுவதற்கும் சுற்றுப்புறச் சுகாதாரம் இல்லாதது முக்கியக் காரணம் என்கிறது.

குடிநீர் சுத்தமில்லாதது, சமைத்த உணவைச் சுத்தமாகப் பாதுகாக்கத் தவறுவது,
உணவுக் கலப்படம் போன்றவற்றால் இந்தத் தொற்றுநோய் களின் ஆதிக்கம் மக்களை
ஆட்டிப்படைக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள பல பிரச்னைகள் சாலையோர
உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதால் தான் ஏற்படுகின்றன. இதற்கு மத்திய
சுகாதாரத்துறை முறைப்படி நட வடிக்கை எடுக்காதபட்சத்தில், தொற்றுநோய்த்
தடுப்புக்கு இப்போது செய்யும் செலவைவிட இன்னும் பல நூறு கோடிகளை ஒதுக்க
வேண்டிய அவசியம் ஏற்படும்.
அத்தோடு நாட்டின் சுகாதாரக் குறியீடுகள் இன்னும் மோசமாகும் எனும் அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளது.

சாலையோர உணவகங்களால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏழைகள் தான். இவர்கள்
மலிவு விலை என்பதால் அங்கு விரும்பிச் சாப்பிட்டு விட்டு, பின்னர் மொத்தமாக
மருத்துவமனையில் செலவு செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சுகாதாரமற்ற முறையில் காபி, பால், தேநீர், வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி,
தோசை, பிரியாணி, புரோட்டா, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும்
விற்பனை செய்கிறார்கள். அங்கு சுத்தமான தண்ணீர் கிடையாது.
பெரும்பாலான
கடைகளில் தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்கள் அழுக் கடைந்துபோன பிளாஸ்டிக்
குடங்களாகத்தான் இருக்கும். சமைக்க அல்லது சாப்பிடப் பயன்படுத்தப்படும்
பாத்திரங்களும், தட்டுகளும் அவ்வளவு சுத்தமாக இருப்பதில்லை. உணவு வழியாக
நமக்கு நோய்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால், உணவு, பாத்திரம், குடிநீர்
இவை மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியம்.

தள்ளு
வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவு களை மூடி பாதுகாப்பதில்லை.
நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை
வைத்திருப்பார்கள். அதிலும் குறிப் பாக, மீன், இறைச்சி போன்றவற்றைப் பல
துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை
நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள்.
அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில்
கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும்
இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமி களைத் தந்துவிடும்.

நாம் உண்ணும் உணவில் சுகாதாரம் இல்லையென்றால், பாக்டீரியா மூலம் டைபாய்டு,
காலரா, வாந்திபேதி ஏற்படும். வைரஸ் கிருமிகளால் மஞ்சள்காமாலை உண்டாகும்.
அமீபா கிருமிகளால் சீதபேதி ஏற்படும். குடல்புழுத் தொல்லை தரும். உணவில்
தரமில்லை என்றால், செரி மானக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம்,
வாயுக்கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

சமைக்கும் முறையில்
சுத்தமில்லை என்றால், உணவே நஞ்சாகிவிடும். அல்சர் எனும் இரைப்பைப் புண்ணில்
தொடங்கி, குடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயம் வரை பல உடல்நலப்
பிரச்னைகள் சங்கிலிப் பின்னல் போல் தொடர்ந்து வரும்.

அடுத்து நம்
கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. சாலையோர உணவகங்களில்
பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை, கலப்படம் மிகுந்தவை.
உதாரணமாக, இவர்கள் சமை யலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக,
பாமாலின் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யையும்
(இது பெண்களின் அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் ஒரு வகை
எண்ணெய்) கலந்து உணவைச் சமைக்கவும், இறைச்சியை வறுக்கவும், பொரிக்கவும்
பயன்படுத்துகிறார்கள்.

நெய்க்குப் பதிலாக டால்டாவையும்,
நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில்
எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு அதிகம்.

இதன் காரணமாக சாலையோர
உணவகங்களில் அடிக்கடி சாப்பிடு வோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு,
பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது
என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.

இன்னொரு முக்கிய விஷயம். சாலையோர உணவகங்களில் சமையல் எண்ணெயைச்
சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத்
திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப் பார்கள். இதில் மிகப் பெரிய ஆபத்து
உள்ளது என்பது எத்தனை பேருக் குத் தெரியும்? எண்ணெயைத் திரும்பத் திரும்பக்
கொதிக்க வைக்கும் போது டிரான்ஸ் கொழுப்பு அமிலம் உற்பத்தியாகிறது. இதுதான்
இருக்கின்ற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை
நேரடியாகவும், விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து
நிறைந்தது.

மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும்,
அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் தேசிய உணவு மற்றும் மருந்துத்தரக்
கட்டுப் பாட்டுத்துறை அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில் லாத
எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த ரசாயனங்கள் கலந்த
உணவைச் சாப்பிடும்போது ஆரம்பத்தில் அஜீரணம், வயிற்றுப் போக்கு, ரத்தசோகை
ஏற்படும். அதே உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது சிறுநீரகம் கெட்டுவிடும்.
இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.


அடுத்து ஓர் அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? சில கடைகளில் இறைச்சிகளைச்
சீக்கிரமாக வேக வைப்பதற்குக் காய்ச்சலுக்குத் தரப் படும் பாராசிட்டமால்
மாத்திரையைக் கலந்துவிடுகிறார்களாம். என்ன கொடுமை இது?


சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில்கூட சாலையோர
உணவகங்கள் உள்ளன. ஆனால், அங்கு அவர்கள் உணவைச் சமைப்பதற்கும்,
பரிமாறுவதற்கும் எவ்வளவு சுத்தம் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நேரில்
பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

அங்கு உணவுக்கடை இருப்பது ஒரு
சாலையோரம்தான் என்றாலும் அந்த இடம் ஒரு நட்சத்திர ஹோட்டல் அளவுக்குச்
சுத்தமாக இருக்கும். மினரல் வாட்டர் தான் அங்கு குடிநீர். சமைத்த உணவுகளை
எப்போதும் சூடாக வைத்திருப்பார்கள். உணவின் மீது ஈக்கள் மொய்ப்பதைத் தடுக்க
அவற்றைக் கண்ணாடிப் பெட்டிகளில் மூடி வைத்திருப்பார்கள். கடைப்
பணியாளர்கள் கையுறை அணிந்துதான் உணவுகளைப் பரிமாறுவார்கள்.

சிறு
நாடுகளில்கூட இவ்வளவு சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப் படும்போது,
நம்மால் முடியாதா என்ன, முடியும். கண்டிப்பாக முடியும். அதற்குத் தேவை
சரியான திட்டமிடல், தெளிவான சட்ட திட்டம், மக்கள் ஆரோக்கியத்தின் மேல்
அரசுக்கு அக்கறை, சமுதாயக் கடமை உணர்வு, மக்களிடம் உடல்நலன் குறித்த
விழிப்புணர்வு. சாலையோரங்களில் புற்றீ சல்போல பார்க்குமிடங்களில் எல்லாம்
உணவுக்கடைகளை ஆரம்பித்து, போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதைத்
தவிர்க்கும் பொருட்டு, முத லில் ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை உணவுக் கடைகள்,
எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். முக்கியமாக,
சாக்கடை, வாறுகால், கழிவுநீர் ஓடைகள் இல்லாத இடங்களில்தான் உண வுக்கடைகள்
இருக்க வேண்டும். உணவகத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது மிக மிக
முக்கியம்.

சாலையோர உணவகங்களை நெறிப்படுத்துவதற்கும்
முறைப்படுத்து வதற்கும் நல்ல வழிகாட்டுமுறைகளைக் கொண்டுவந்து, அவற்றைத்
துணிச்சலுடன் நடைமுறைப்படுத்தி, நாட்டு மக்களுக்குச் சுகாதாரக் குறைவால்
ஏற்படும் நோய்களிலிருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டியது மத்திய - மாநில
அரசுகளின் கடமையாகும்.

செய்வார்களா??


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum