TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள், கொலுசுகள் பறிமுதல்

Go down

கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள், கொலுசுகள் பறிமுதல் Empty கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள், கொலுசுகள் பறிமுதல்

Post by mmani Fri Mar 11, 2011 7:32 am

கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள், கொலுசுகள் பறிமுதல் M?ci=in-dinamalar&cg=0&cc=1&ts=noscript















கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள், கொலுசுகள் பறிமுதல் Large_203318
தமிழகத்தில் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனைகளில், கட்டு கட்டாக பணமும், புடவைகளும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி: நேற்று பகல் 12 மணியளவில், கிருஷ்ணகிரி
டோல்கேட்டில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த,
"டாடா சபாரி' காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், காரில்
இருந்த சூட்கேசில், இரண்டு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் இருந்தது.
விசாரணையில், பணத்துக்கும், காருக்கும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது
தெரிய வந்தது. பறக்கும் படையினர், பணத்தையும், காரையும் பறிமுதல் செய்து,
பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். காரில் வந்த இருவரும்
ஆவணங்களை ஒப்படைத்து விட்டு, காரை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள்
கூறினர்.
திருச்செங்கோடு: நேற்று காலை திருச்செங்கோடு மலைச்சுத்தி
சாலையில், துணை ராணுவத்தினர் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது
திருச்சியில் இருந்து வந்த டாடா சுமோ காரில், கணக்கில் காட்டப்படாத,
நான்கு கிலோ தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த
போலீசார், ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைத்தனர். காரில் வந்த பிரசன்னா, பிரகாஷ்
ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.
வந்தவாசி: நேற்று முன்தினம், இரவு 10.30 அளவில், வந்தவாசி
நகரில் ஐந்து கண் பாலம் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக, நெல்லைக்கு சென்ற,
"மேக்சி கேப்' வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில், 164 பெட்டிகளில்,
871 பட்டுச் சேலைகள் இருந்தது தெரிந்தது; இவற்றின் மொத்த மதிப்பு, 1
கோடியே 30 லட்சம் ரூபாய். வேனில் வந்த பிரசாத், சீனிவாசன் ஆகிய
இருவரிடமும், பறக்கும் படை தாசில்தார் விசாரணை நடத்தினார். பிரசாத்
கூறுகையில், "காஞ்சிபுரத்தில், 99 கடைகளில் இருந்து மொத்தமாக கொள்முதல்
செய்த பட்டுச் சேலைகளை விற்பனைக்காக, நெல்லை ஜவுளி கடைக்கு எடுத்துச்
செல்கிறோம்' என கூறினார்.இருப்பினும் வேனுடன் பட்டுச் சேலைகளை அதிகாரிகள்
பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். பட்டுச் சேலைகள் கொள்முதல் செய்த பில்
உண்மையானதா, போலியா; தேர்தல் பணிக்கு எடுத்துச் செல்லப்பட்டதா என்பது
குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ஈரோடு: நேற்று முன்தினம், மாலை 5.45 மணிக்கு, ஈரோடு - கோவை
நெடுஞ்சாலையில், திண்டல்மலை செக்-போஸ்ட் அருகே, போலீசார் வாகன சோதனை
நடத்தினர். ஈரோடு நோக்கி வந்த, "டாடா இண்டிகா' காரை சோதனையிட்ட போது,
டிக்கியில், காக்கி கவர் சுற்றப்பட்ட இரண்டு பண்டல்கள் இருந்தன. ஒரு
பண்டலில் 1,000 ரூபாய் கட்டுகள் எட்டும், 500 ரூபாய் கட்டுகள் 34ம்
இருந்தன; இவற்றின் மொத்த மதிப்பு, 25 லட்சம் ரூபாய். மற்றொரு பண்டலில்
1,000 ரூபாய் கட்டுகள் ஏழும், 500 ரூபாய் கட்டுகள் 36ம் இருந்தன; இவற்றின்
மதிப்பு, 25 லட்சம் ரூபாய். மொத்தம் 50 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை
ஈரோடு ஆர்.டி.ஓ., சுகுமார் பறிமுதல் செய்தார். பணம் கொண்டு வந்த ஜீவா,
ஜீவானந்தம் ஆகியோரிடம், வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.ஜவுளித்
தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் இது போல் பணம்
எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டிருப்பதால், போலீசார் தீவிரமாக
விசாரித்து வருகின்றனர்.
கம்பம்: நேற்று மாலை கம்பம் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம்
அருகே, அதிகாரி பழனிச்சாமி தலைமையிலான குழுவினர், மதுரை நோக்கி சென்ற
அம்பாசிடர் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் மதுரையை சேர்ந்த
பாலகிருஷ்ணன் பையில் 70 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுகள் வைத்திருந்தார்.
இதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு
பாலகிருஷ்ணனை அழைத்து சென்றனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் 70 கிலோ
வெள்ளி கொலுசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் நான்கு ரோட்டில்
ஈரோட்டில் இருந்து ஆண்டிபட்டி வந்த இரண்டு, டாடா 909 சரக்கு
வேனில்,அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., கரை வேட்டிகள் இருந்தன. இது
பற்றி போலீசார் விழிப்புணர்வு குழு தலைவர்கள் செல்வம், ஜவஹர்லால்
ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வேனை கைப்பற்றி, ஜெயமங்கலம்
போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.34 லட்சத்துடன் கார் சிக்கியது: திண்டுக்கல் கலெக்டர்
அலுவலகம் அருகே டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான
போலீசார் நேற்று இரவு 8மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த
வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை (எண்: டி.என்:57, ஜெ 6574) சோதனை
செய்தனர். காரில் ஆர்.எம்.காலனியை சேர்ந்த தென்னவன்(31), நில புரோக்கர்
சண்முகம்(50) இருந்தனர். அவர்களிடமிருந்த சூட்கேசை திறந்து பார்த்த போது,
அதில் ரூ.34 லட்சம் இருந்தது. பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தென்னவன் கூறியதாவது: தனது மாமனார் ராமச்சந்திரன், டிரான்ஸ்போர்ட்
கம்பெனி வைத்துள்ளார். அவர் ஒரு இடம் வாங்கியுள்ளார். இதற்காக திண்டுக்கல்
- திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள யூனிவர்சல் கம்பெனிக்கு பணத்தை கொண்டு
சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கூடுதல் எஸ்.பி., சிவக்குமார்
கூறியதாவது: சோதனையின் போது காரில் இருந்து கைபற்றப்பட்ட ரூ.34 லட்சம்
குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பணத்தை திண்டுக்கல் யூகோ வங்கியில்
எடுத்துள்ளனர். நிலம்வாங்குவதற்காக பணம் கொண்டு சென்றது உறுதி
செய்யப்பட்டுள்ளது. கலெக்டரிடம் அனுமதி பெற்று, இந்த பணம் நாளை அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். தேர்தல் நேரத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல்
கொண்டு செல்லதடை இருந்தும் காரில் பல லட்சம் பணத்தை கொண்டு சென்றதால்,
காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கே பின்பே கார்
ஒப்படைக்கப்படும் என்றார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» துபாய் ஷாப்பிங் திருவிழாவில் இந்திய குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்: 1,40,000 திர்ஹம் தங்க,வைர நகைகள் பரிசு
» சாக்கடையில் கட்டுக்கட்டாக பணம்! அள்ளிச்சென்ற மக்கள்
» மதுரையில் ஹவாலா பணம் பறிமுதல் : இளைஞர் கைது
» திருவனந்தபுரம் கோயில் பாதாள அறைகளில் தங்க,வைர நகைகள், நவரத்தினங்கள்
» சாய்பாபா அறையில் மேலும் தங்க, வெள்ளி நகைகள் கண்டெடுப்பு: இதுவரை ரூ.59 கோடி நகை, ரொக்கம் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum