Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
Page 1 of 1

புதுடில்லி : வெங்காயம் ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை
விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் இறக்குமதி மீதான வரிகளும் ரத்து
செய்யப்பட்டுள்ளன. மேலும், வெங்காயம் இறக்குமதிக்கான நடவடிக்கைகளை
விரைவுபடுத்தும்படி மத்திய வர்த்தக அமைச்சகத்தையும், பதுக்கல்காரர்களுக்கு
எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளையும் மத்திய அரசு
கேட்டு கொண்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு அதிகரித்தது பிரதமரையும், அரசையும் கவலையுறச்
செய்ததால், இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வெங்காயம் விலை
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது, மத்திய அரசை கவலை யடைய
செய்துள்ளது.சென்னையிலும் கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது. இதனால்,
வெங்காய விலையை கட்டுப்படுத்த, விரைவாக நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய
விவசாய அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டார். அதே
நேரத்தில், வெங்காயம் விலை உயர்வையடுத்து, அதன் ஏற்றுமதிக்கு முதலில்
ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டது.தற்போது இந்த தடை, மறு உத்தரவு வரும்
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெங்காயம் இறக்குமதிக்கு
விதிக்கப்படும் வரிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம்
இறக்குமதிக்கு இதுவரை 5 சதவீதம் சுங்கவரியும், 4 சதவீதம் கூடுதல் வரியும்
விதிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரியானது உள்நாட்டு உற்பத்தியாளர்களை
பாதுகாக்க விதிக்கப்படுவது.வெங்காயம் இறக்குமதி மீதான இந்த இரண்டு
வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இறக்குமதி அதிகரித்து உள்நாட்டில்
விலை குறையும் என, மத்திய நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.
இதற்கிடையில், வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை
எடுக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.மேலும்,
வெங்காய விலை குறைய இறக்குமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படியும்,
மத்திய வர்த்தக அமைச்சகத்தை கேபினட் செயலர் சந்திரசேகர் கேட்டு
கொண்டுள்ளார். மத்திய அரசின் கீழ் உள்ள ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன்
போன்ற அமைப்புகள் இறக்குமதியில் தீவிர முனைப்பை காட்டும்.மேலும், உற்பத்தி
செய்யப் படும் இடத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வெங்காயத்தை
விரைவாக கொண்டு செல்ல, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்
என்றும், ரயில்வே வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாகவும்,
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாலும், மொத்த விலை குறைய துவங்கி
விட்டது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய வர்த்தக மையமான நாசிக்கில், நேற்று
வெங்காயத்தின் மொத்த விலை 42 சதவீதம் வரை குறைந்தது. டில்லியில் உள்ள
சந்தைகளிலும் வெங்காயத்தின் மொத்த விலை 29 சதவீதம் வரை குறைந்தது.
நாசிக் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் ஒரு குவிண்டால் வெங்காயம்
5,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று 3,702 ரூபாயாக குறைந்தது.
"புதிதாக விளைந்த வெங்காயமும் விரைவில் சந்தைக்கு வர உள்ளதால், அடுத்த ஏழு
முதல் 10 நாட்களிலும் வெங்காயத்தின் சில்லறை விலை கணிசமாக குறையும்' என,
மத்திய விவசாயத்துறை செயலர் பி.கே.பாசு கூறியுள்ளார்.வெங்காயத்தின் இந்த
திடீர் விலை உயர்வுக்கு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் சில
தென்மாநிலங்களில் அதிகளவு மழை பெய்து, பயிர்கள் பாதிக்கப்பட்டதே காரணம்.
அத்துடன் பதுக்கலும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பாக்., வெங்காயம்: வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்தும்
நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்
எல்லை வழியாக, 450 டன் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே 13
லாரிகளில் லாகூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயம் பஞ்சாப்
வந்தடைந்துள்ளது.வெங்காய ஏற்றுமதி மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்,
"தாமதமான நடவடிக்கை. கறுப்பு சந்தை பேர்வழிகளை சரியான நேரத்தில் ஒடுக்க
மத்திய அரசு தவறி விட்டது' என்றார்.
டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் : வெங்காய விலை மக்கள்
கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில், ஜாம்ஜெட்பூரில் உள்ள டயர்
விற்பனையாளர் ஒருவர், "தங்கள் கடையில் டயர் வாங்கினால், ஐந்து கிலோ
வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது
லாரிக்கான டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயமும், காருக்கான டயர்
வாங்கினால், ஒரு கிலோ வெங்காயமும் தரப்படும் என கூறியுள்ளார். சத்னாம்சிங்
காம்பீர் என்ற பெயர் கொண்ட இவர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில்
செயல்படும், அகில இந்திய சீக்கிய மாணவர்கள் சம்மேளன தலைவராகவும் உள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பாகிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி- மத்திய அரசு நடவடிக்கை!
» கறுப்புப்பணத்தை கணக்கெடுக்க மத்திய அரசு நடவடிக்கை
» நிலக்கரி சப்ளை செய்யாத,"கோல் இந்தியா ' நிறுவனத்திற்கு இடி:அரசு அதிரடி நடவடிக்கை
» விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை:மத்திய அரசு உத்தரவு
» வரிவிலக்குகளை குறைக்க மத்திய அரசு அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum