TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மிதக்கும் தமிழகம்: மிதப்பில் அரசு நிர்வாகம்?

Go down

மிதக்கும் தமிழகம்: மிதப்பில் அரசு நிர்வாகம்?  Empty மிதக்கும் தமிழகம்: மிதப்பில் அரசு நிர்வாகம்?

Post by அருள் Wed Dec 08, 2010 7:11 am

திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாகத் தெரிகிறது. பள்ளிகளுக்கும்,
கல்லூரிகளுக்கும் அடுத்தடுத்து விடுமுறை. கடலோர மாவட்டங்களிலும், டெல்டா
மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு. எந்த நாளிதழை திருப்பினாலும்,
"வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது; வெள்ளத்தில் வயல்கள் மூழ்கின' என்ற
செய்தி தான்.பிரச்னை இதுவல்ல... ஆண்டுதோறும் இதே நிகழ்வுகள்
வழக்கமாகிவிட்டது தான் பிரச்னை. "என்னப்பா இது! மக்கள் முகத்துல முழிக்க
முடியலை. வெட்கமா இருக்கு' என, ஓர் அமைச்சர் சொன்னதாக செய்தி வந்துள்ளது.
அமைச்சர்கள் வெட்கப்படுகின்றனர் என்பது அடுத்த ஆச்சரியம்.
ஏனெனில், புதுவையில் ஆயிரம் ரூபாய் அறிவித்தாகிவிட்டது; இந்நேரம் தமிழக
அரசும் நிவாரண நிதி அறிவித்திருக்கும். நான்கு மாதத்தில் தேர்தல்
வரவிருப்பதால், நிவாரண நிதி, "வளமானதாகவே' இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
வெள்ளத்தில் முங்கி எழுந்த பொதுஜனமும், அயிரையைப் போட்டு இறாலைப்
பிடிக்கும் நம்மூர் அரசியல்வாதிகளின் டெக்னிக் தெரியாமல், கிடைத்தவரை
லாபம் என முண்டியடித்து, முன்வரிசையில் இடம் பிடித்து, நிவாரண நிதியை
வாங்கிச் செல்லும்.
என்ன தான் தீர்வு இதற்கு? எங்கே தான் பிரச்னை? சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில்
உள்ள கழிவுநீர் அமைப்புகள், 1950களில் கட்டப்பட்டவை. அப்போது இருந்த
ஜனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது தான் அப்படியே
நீடிக்கிறது. அவ்வப்போது சில மராமத்துப் பணிகள் நடத்துவதோடு சரி. அவையும்,
"பேட்ச் ஒர்க்'காகத் தான் நடக்கின்றனவே தவிர, முழுமையான மாற்றங்களாக
இருப்பதில்லை.எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றும்போது, எதிர்கால ஜனத்தொகையை
கவனத்தில் கொள்ளாதது, இவர்கள் செய்யும் முதல் தவறு. அங்கீகாரமற்ற
கட்டடங்கள் அதிகரிப்பது அடுத்த தவறு. அங்கிருந்து வெளியேறும் கழிவுகளும்
அதே குழாய்களில் தானே கலக்கின்றன.சென்னை கே.கே.நகர் போன்ற ஒரு சில
பகுதிகளில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் மையங்கள் உள்ளன. அவையும் கூட
இப்போதே சக்திக்கு மீறி சுத்திகரித்து வருகின்றன. இதனால் என்ன ஆகிறது?
"ஓவர் லோடு' காரணமாக, சுத்திகரிக்கப்படாமலே கழிவுநீர்
வெளியேற்றப்படுகிறது. உடனே, இதற்கு மாற்றாக புது திட்டம் வகுக்கப்படும்.
உலக வங்கி நிதி கோரப்படும். அடிக்கல் நாட்டப்படும். கால்வாய் வெட்டுவதற்கு
முன்பு, கல்வெட்டு வெட்டப்படும். எல்லாம் முடிந்து, திட்டம் நிறைவேறும்
சமயத்தில், அந்தத் திட்டமே காலாவதியாகி (அவுட் டேடட்) இருக்கும். இதற்கான
தீர்வு, கழிவுநீரகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது தான். கொஞ்சம்
எதிர்ப்பு கிளம்பத் தான் செய்யும். குப்பை அள்ளும் பணி தனியாரிடம்
விடப்பட்டபோது இப்படித் தான் எதிர்ப்பு கிளம்பியது.
இப்போது பழங்கதையாகிவிட்டது. தனியார் நிறுவனங்கள் தவறு செய்தால்,
அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்களைத் திரும்பப் பெறலாம்; உரிமங்களை ரத்து
செய்யலாம். உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்கும் குடிநீர் வரியை அப்படியே
அந்த நிறுவனத்திடம் கொடுத்துவிட வேண்டும். அரசு வெறுமனே கண்காணித்தால்
போதுமானது."பெர்லின் வாட்டர்' என்றொரு தனியார் நிறுவனம் ஜெர்மனியில்
உள்ளது. அந்நாட்டின் ஒட்டுமொத்த கழிவுநீர் மேலாண்மையையும் அந்நிறுவனம்
தான் மேற்கொள்கிறது. ராஜஸ்தானில் கூட அந்நிறுவனம் பல்வேறு திட்டங்களை
நிறைவேற்றி வருகிறது. பாரீசில், பாதாள சாக்கடைத் திட்டம் பிரமாண்டமான
அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது ஒரு தனி உலகமாகவே
கருதப்படுகிறது.அவர்கள் எங்கே இருக்கின்றனர்; நாம் எங்கே இருக்கிறோம்
என்பதை, முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்திக்க
வேண்டும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி, ஓய்வு பெற்ற இன்ஜினியர் கூறியதாவது: கழிவுநீர்
அகற்றும் பணியைப் பொறுத்தவரை, சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, உள்ளாட்சி
நிர்வாகங்கள் என நான்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
ஆனால், இவற்றுக்குள் எந்த ஒருங்கிணைப்பும் கிடையாது என்பது தான் மிகப்
பெரிய சோகம்.சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் இருந்தபோது, "மாநகரத்தில்
பொதுப்பணித் துறை வசம் உள்ள சில கால்வாய்களை சென்னை மாநகராட்சியே
எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், கழிவுநீர் மற்றும் வெள்ளநீர்
வடிகால் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்' என கூறப்பட்டது.அப்போதைய
பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனும் இதற்கு வாய்மொழியாக
சம்மதித்தார். ஆனால், அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அதற்கு
மறுத்துவிட்டனர். காரணம் என்னவாக இருக்கும் என்பது வெளிப்படை.இவ்வாறு அந்த
அதிகாரி கூறினார்.
இது வரை பார்த்தது, உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய மூன்று சிறிய
துறைகளைப் பற்றி தான். பொதுப் பணித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது,
எனத் தோண்டினால், ஏராளமான பூதங்கள் கிளம்பும் வாய்ப்புள்ளது. வருடம்
தவறாமல் நடக்கும் தூர் வாரும் பணியும், கரைகளை பலப்படுத்தும் பணியும்,
ஒப்பந்ததாரர்களுக்கு வரப்பிரசாதமான திட்டங்கள். ஆண்டுதோறும் இவற்றுக்கான,
"ஒதுக்கீடு'கள் அதிகரித்துக்கொண்டே போவது ஒரு சாதனையாகக் கூறப்படுகிறது.
ஆனால், வெள்ளச் சேதமும் ஆண்டுதோறும் தொடர்வது ஒரு வேதனையாகவே
பார்க்கப்படுகிறது.
திட்டங்களுக்கு பஞ்சமில்லை : கழிவுநீர் மற்றும் வெள்ளநீர்
வடிகாலைப் பொறுத்தவரை, தமிழக அரசில் திட்டங்களுக்கு குறைவில்லை. அவை
நடைமுறைப்படுத்தப்படும் விதமும், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
பராமரிக்கப்படும் விதமும் தான் குறைபாடு உடையவை.ஜவகர்லால் நேரு தேசிய
நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சிக்கு மட்டும்
1,448 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்டம் வகுக்கப்பட்டது. 290
கி.மீ., நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்கள் அமைப்பது; 183 கி.மீ.,
நீளமுள்ள சிறு மழைநீர் வடிகால்களை மாற்றியமைப்பது; 29 கி.மீ., நீளமுள்ள
இதர கால்வாய்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது ஆகியவை இத்திட்டத்தில்
அடக்கம்.இதற்கு மத்திய அரசு, 2008ம் ஆண்டே ஒப்பளிப்பு கொடுத்துவிட்டது.
திட்டங்கள் எந்த கதியில் இருக்கின்றன என்பது, சம்பந்தப்பட்ட துறைகளுக்கே
வெளிச்சம்.
இதுதவிர, "பொதுப் பணித் துறைக்கான பெருவழி வடிகால்வாய் திட்டத்தில்
65.10 கி.மீ., நீளமுள்ள மூன்று நீர்வழித் தடங்கள் 378 கோடி மதிப்பீட்டில்
மேம்படுத்தப்படும். 9.9 கி.மீ., நீளத்தில் நான்கு புதிய இணைப்புக்
கால்வாய்கள் 148 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 96.39 கி.மீ.,
நீளத்துக்கு ஐந்து ஏரி வழிந்தோடும் கால்வாய்கள் 107 கோடி மதிப்பீட்டில்
மேம்படுத்தப்படும்' என, இந்த ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.சென்னை நீங்கலாக, மாநிலத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர
நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,
750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 பாதாள சாக்கடைத் திட்டங்கள்
நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லா இடத்திலும், "படும்
படும்' என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, எப்போது நிறைவேற்றப்படும்
என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது
» தமிழகம் செல்ல வேண்டாம்: சிங்களர்களுக்கு இலங்கை அரசு அறிவுரை
» தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு: தமிழக அரசு அறிவிப்பு..
» தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு!
» தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி: கெடுபிடியை அரசு தளர்த்தியதால் பலன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum