Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்: இணையதளத்தில் வெளியீடு
Page 1 of 1

சென்னை : பெற்றோர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்த தனியார்
பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று மாலை
திடீரென வெளியிடப்பட்டன.
கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்களை வெளியிடக் கோரி, சென்னை
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தினமும் நடத்திவரும் போராட்டங்களை
முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 10 ஆயிரம் பள்ளிகளுக்கும் வகுப்பு
வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு கட்டண விவரங்கள், அரசு இணையதளத்தில் [You must be registered and logged in to see this link.]
வெளியிடப்பட்டுள்ளன. கோவிந்தராஜன் குழு, மாநிலம் முழுவதும் உள்ள தனியார்
பள்ளிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களை பெற்று, அதனடிப்படையில்
வகுப்பு வாரியாக கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே மாதம் முதல் வாரத்தில்
வெளியிட்டது. குழு நிர்ணயித்த கட்டணங்களை பெற்றோர் வரவேற்ற நிலையில்,
நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்று பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி
அடைந்தனர். இதன் காரணமாக 6,500 பள்ளிகள், கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக்
கோரி, கோவிந்தராஜன் குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்த பள்ளிகளுக்கு,
அடுத்த ஆண்டு புதிய கட்டணம் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட கட்டணம் அமலில் இருக்கும் என்றும், கோவிந்தராஜன் குழு
அறிவித்தது.
இந்த விவகாரம் ஐகோர்ட் வரை சென்றது.
இதில், "நான்கு மாதங்களுக்குள், மேல் முறையீடு செய்த பள்ளிகளுக்கு புதிய
கட்டணம் அறிவிக்க குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மற்ற பள்ளிகள்
குழு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது'
என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த
கட்டண விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் வெளியிடக் கோரி, சென்னை உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். கோவிந்தராஜன்
குழுவும், கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருந்து வந்தது.
இதனால், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது,
அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. குறைந்தபட்சம், கட்டண விவரங்களை
இணையதளத்தில் வெளியிட்டாலாவது, பெற்றோர்களின் ஆவேசம் குறையும் என, பல
தரப்பிலும் இருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்
காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, வகுப்புகள்
வாரியாக, கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்கள், தமிழக அரசு
இணையதளத்தில் நேற்று மாலை திடீரென வெளியிடப்பட்டன.
மொத்தம் 955 பக்கங்களில், 10 ஆயிரத்து 955
பள்ளிகளுக்கான விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. புதுக்கோட்டை, கரூர்,
திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள 500 பள்ளிகள்,
மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என குழுவிடம் தெரிவித்ததன்
அடிப்படையில், அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் கட்டண விவரங்கள்
இடம்பெறவில்லை. மற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும், மாவட்ட வாரியாக, பள்ளிகள்
வாரியாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுக்
கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாவட்ட வாரி பட்டியல்?
பட்டியலில் எந்தவொரு பள்ளியையும் தேடும்போது, மாவட்டவாரியான வரிசையில்
பள்ளிகளை பட்டியலிட்டு, அதைத் தேடிக் காணும் வசதியை ஏற்படுத்தினால், ஒரே
பெயரில் பல பள்ளிகளைக் கண்டு, குழப்பம் அடையும் நிலை தவிர்க்கப்படும்.
புத்தகமாக வெளியிட கோரிக்கை:
பட்டியல் குறித்து பெற்றோர் கருத்து தெரிவித்தபோது, "இணையதளத்தில், 32
மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விவரம், வரிசையாக தரப்பட்டுள்ளன. 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் என்பதால், பட்டியல் நீண்டுகொண்டே
போகிறது. குறிப்பிட்ட பள்ளிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பார்க்க
வேண்டுமெனில், நீண்ட நேரமாகிறது. பட்டியல் ஒரு பக்கம் இருந்தாலும்,
பள்ளியின் பெயர், மாவட்டம் போன்றவற்றை பதிவு செய்தால், அதற்குரிய கட்டண
விவரங்கள் உடனடியாக தெரிய வரும் வகையில், ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும். இந்த பட்டியலை அப்படியே புத்தகமாக வெளியிட்டு, 20
ரூபாய், 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்' என கூறினர்.

Similar topics
» தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய கதி? குழுத்தலைவர் ராஜினாமா
» தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு.
» பள்ளிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்த கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிடாவிட்டால் வழக்கு
» தனியார் பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரம் : இணையதளத்தில் பார்க்கலாம்
» சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum