Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புலிகளியக்கத்தை தடைசெய்தமைக்காக இந்தியவால் முன்வைக்கப்படும் காரணங்கள் போலியானவை, புனையப்பட்டவை - விசாரணை நீதிமன்றத்தில் வைக்கோ
Page 1 of 1

இந்திய மத்திய அரசாங்கத்தால் கடந்த மே மாதம் 14 ஆம் தேதிபுலிகளியக்கத்தின் தடையை நீட்டிப்பதற்கான முடிவை ஆட்சேபித்து தாக்கல்செய்யப்பட்ட மனுமீதான விசாரணைகள் புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமைநடைபெற்றன. இந்த விசாரணைக் குழுவில் தனது வாதங்களும் இடம்பெறவேண்டும் எனக்கேட்டுக்கொண்ட ம.தி.மு.க தலைவர் திரு வை.கோபாலசாமி அவர்கள் மத்திய அரசின்தடை நீட்டிப்பை இந்த விசாரனக்குழு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டார். தடை நீட்டிப்பிற்கான முதலாவது காரணமாக இந்திய மத்தியஅரசு , புலிகள் தமிழ் நாட்டையும் சேர்த்து பரந்த தமிழீழத்தை உருவாக்கப்போராடுகிறார்கள் என்பதை முன்வைத்திருந்தது. இதற்குப் பதிலளித்த திரு.வைக்கோ அவர்கள், புலிகள் ஒருபோதுமே தமது தாயகமான தமிழ் ஈழத்துடன்தமிழ்நாடு இணைய வேண்டுமென்று கருதியதோ அல்லது போராடியதோ இல்லை என்பதால்இந்தப் பொய்க்காரனம் எந்தவித அடிப்படையுமற்றதாகிவிடுகிறது என்றுவாதிட்டார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்தவிசாரணைக்குழுவிற்குத் தலமை தாங்கிய நீதிபதி, விக்ரம்ஜிட் சென் அவர்கள், "அவர்கள் (புலிகள்) தமிழ்நாட்டையோ அல்லது இந்தியாவின் ஒரு பகுதியையோதமிழீழத்துடன் இணைப்பதற்காகப் போராடவில்லையா?" என்று கேட்டதுதான்.
சென்னையிலுள்ள அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரையிலும் இந்தத் தடைநீடிப்பானது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி வருவதாகக்கருதுகிறார்கள். இதன் உடனடித் தாக்கமென்பது ஒரு நியாயமான அரசியல்கோரிக்கைக்கு ஜனநாயக ரீதியிலான அரசியலை முன்னெடுப்பதைத் தடுப்பதோடுநீண்டகால அடிப்படையில் சமூக அரசியல் ரீதியான கிளர்ச்சிகள் ஏற்படவும்வழிவகுத்துவிடப்போகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.இந்தத் தடைநீடிப்பானது ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் ஜனநாயகவழியிலும் ஆதரித்துவரும் எந்த அமைப்பையோ அல்லது அரசியல் கட்சியையோபயமுறுத்துவதோடு, இவ்வாறான அமைப்புகளின் ஈழ ஆதரவென்பது புலிகளியக்கத்தினைஆதரிப்பதென்கிற பிழையான கற்பிதத்தை ஏற்படுத்துவதோடு, தொடர்ச்சியானஇனவழிப்பிற்கும், தமிழரின் நிலம் சிங்கள மயமாக்கபடுவதற்கும் இந்த நீடிப்புமெதுவாகத் துணைபோய்க்கொண்டிருக்கிறது என்றும் அந்த ஆய்வாளர்கள்குறிப்பிடுகின்றனர்.
தடை நீடிப்பிற்கான முதலாவதாக முனவைக்கப்பட்ட காரணம் இப்படிச் சொல்கிறது,"புலிகளியக்கத்தின் குறிக்கோளான எல்லாத் தமிழருக்குமான சுதந்திரத்தமிழீழம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும்நேரடியான அச்சுறுத்தலை விடுக்கிறது. இந்த கோரிக்கை இந்திய யூனியனின் ஒருபகுதியை துண்டாடித் தம்முடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்தைக்கொண்டிருப்பதால் இது சட்டத்திற்கு முறணான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது".
தமிழீழம் என்பது தமது தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில்தமக்கான ஒரு சுதந்திர அரசை நிறுவும் ஈழத்தமிழரின் ஒரு நியாயமானகோரிக்கையாகும் என்று வைக்கோ விளக்கியபோது குறுக்கிட்ட நீதிபதி, "வைக்கோஅவர்களே, தமது தனிநாடான ஈழத்துடன் தமிழ்நாட்டையோ அல்லது இந்தியாவின் ஒருபகுதியையோ இணைப்பதற்கு அவர்கள் போராடினார்களில்லையா?" என்று கேட்டார்.
அதற்கு வைக்கோ, "கணம் நீதிபதி அவர்களே, இந்தச் சந்தர்ப்பத்தில் இதுதொடர்பான நியாயத்தை எடுத்தியம்புவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதையிட்டுமிகவும் சந்தோசப்படுகிறேன். புலிகள் ஒருபோதுமே தமிழ்நாட்டையோ அல்லதுஇந்தியாவின் ஒரு அங்குல நிலத்தையோ தம்முடன் இணைத்துக்கொள்வதற்குமுயன்றதில்லை" என்று பதிலளித்தார்
"இந்திய மத்திய அரசு புலிகள் இதைச் செய்ய எண்னியிருந்தார்கள் என்பதைபுலிகளின் ஏதாவது ஊடகங்களிலோ, அச்சீடுகளிலோ அல்லது அவர்களது பிரச்சாரவெளியீடுகளிலோ வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இந்தக்குற்றச்சாட்டானதுஈழத்தமிழர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு கற்பனைக் கட்டுக்கதைஎன்பதே உண்மை. இது புலிகளை மலினப்படுத்தி அழிப்பதற்காக இந்திய மத்தியஅரசினால் வேண்டுமென்றே வஞ்சகத்தனாமன முறையில் புனைந்து உருவாக்கப்பட்ட ஒருமுற்றான கட்டுக்கதை" என்றும் அவர் கூறினார்.
"உதாரணத்திற்கு வங்கதேசத்தின் விடுதலை என்பது மேற்கு வங்கத்தினை அதனுடன்இணைப்பதென்று ஆகிவிடாது" என்று வைக்கோ கூறியபோது குறுக்கிட்ட நீதிபதிபுன்முறுவலுடன், " அப்படி ஒரு கதையும் அப்போதிதிருந்ததே?" என்று சொல்ல ,வைக்கோ, " ஆனால் அப்படி நடைபெறவில்லை என்பதுதானே உண்மை" என்றுபதிலளித்தார்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூகங்கள் சுதந்திரப் போராட்டங்களை ஆதரிக்கும்இந்தக் காலத்தில், கொசோவோ, கிழக்குத் தீமோர், பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளில்நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற மக்கள் ஆதரவுடனான போராட்டங்களை நாம்பார்க்கிறோம். அவ்வாறே ஈழத்தில் புலிகளும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும்,இறையாண்மைக்கும் எந்தவித பங்கமும் விளவிக்காமல் தமது தாயகமான இலங்கையின்வடக்குக் கிழக்கில் மட்டுமே சுதந்திரத் தமிழீழம் கோரிப் போரிடுவது எப்படிஇந்தியாவில் சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாக அமையும் என்றும் கேள்விஎழுப்பினார்.
புலிகளியக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு இந்திய மத்திய அரசு புனைந்தஇவ்வாறான மேலும் போலிக்காரணங்களும் அவற்றிற்கு வைக்கோ அவர்கள் முன்வைத்தஎதிர்வாதமும் கீழே தரப்படுகின்றன.
இந்திய மத்திய அரசால் புனையப்பட்ட இரண்டாவது போலிக் காரணம்,
"தமிழ்நாட்டில் புலிகளியக்கத்திற்கு ஆதரவான அமைப்புக்கள்இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளியக்கத்திற்கு ஆதரவு தேடமுற்படுவதாகவும், இவ்வாறான அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்படும்ஊர்வலங்கள், பேரணிகள் என்பன தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்விடுப்பதாகவும் அமைகின்றன".
வைக்கோ இதற்குப் பதிலளிக்கையில், "ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தம்மைஎப்போதுமே ஆதரிக்க வேண்டுமென்று ஒரு அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது,அதுமட்டுமல்லாமல் இங்கே இந்தத் தடை நீடிப்பானது தமது அரசியல் எதிரிகளைப்பழிவாங்கவும், அடக்கி ஒடுக்கவும் ஆளும் கட்சிக்கு உதவிசெய்கிறது" என்றும்கூறினார்.
மூன்றாவது போலிக்காரணம்.
"புலிகளியக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின்எச்ச சொச்சங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்றுகூடி தமதுதுரோகிகளையும்(இந்திய மத்திய அரசு) தமது எதிரிகளையும்(சிங்கள அரசு)பழிவாங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றன"
" இந்தியா செய்தது துரோகம் என்பது எங்கள் எல்லோர் உள்மனதிலும்உருத்திக்கொண்டிருக்கிறது" என்று வைக்கோ சொல்லவும் குறுக்கிட்ட நீதிபதி, "யார் அப்படிச் சொல்வது?" என்று கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்தவைக்கோ அவர்கள், "கணம் நீதிபதி அவர்களே, நான் தான் இதைச் சொல்கிறேன்.இந்திய மத்திய அரசானது ஈழத்தமிழருக்குத் துரோகம் இழைத்து விட்டது.இந்தத்துரோகத்தனம் பற்றி நான் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்அவர்களுக்கு பல கடிதங்களை எழுதியிருக்கிறேன். அதற்கு அவர் 2008 அக்டோபர்இரண்டாம் திகதி எனக்கனுப்பிய பதிலில் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடைப்பாதுகாப்பத்தற்கு இந்தியா இலங்கைக்கு ஆயுத ரீதியாக உதவிவருவதாக "ஒத்துக்கொண்டிருக்கிறார்" என்று பதிலளித்தார்.
நான்காவது போலிக் காரனம்
"புலிகளியக்கத்தில் எஞ்சியிருக்கும் போராளிகள் அகதிகள் என்கிற போர்வையில்இந்தியவினுள் குறிப்பாக தமிழ்நாட்டினுள் ஊடுருவி அதைத் தமது பின் தளமாகப்பாவிக்கலாம்"
அதற்கு வைக்கோ, " இந்தக் காரணம் இந்த விசாரனை நீதிமன்றத்தினால் முற்றாகநிராகரிக்கப்பட வேண்டும்" என்று கூறிய வைக்கோ அவர்கள், ஒரு இனவழிப்புயுத்தத்திலிருந்து தமதுயிரைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாட்டிற்குத்தப்பியோடி வரும் அப்பாவித் தமிழர்களை புலிகளியக்கப்போராளிகளாகக்காட்டுவதன் மூலம் அவர்களை மேலும் மேலும் விசாரணைகள் என்கிற பெயரில்துன்புறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் ஆளாக்கி இறுதியில் தடுப்புமுகாம்களுக்கோ அல்லது இலங்கைக்கே மீண்டும் நாடு கடத்தப்படுவதற்கோஆளாக்கிவிடுகிறது என்றும் அவர் கூறினார்.
“இந்தத் தடை நீடிப்பின் மூலம் இன்று ஈழத்தமிழர்கள் சர்வதேச அநாதைகள்ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடை நீடிப்பைப் பயன்படுத்தி தமிழரை இந்தஅரசானது மீளாக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.
ஐந்தாவது போலிக்காரணம்
"புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச இணையத்தளங்களில் இந்தியாவுக்கெதிரானகருத்துக்களை எழுதிவருகிறார்கள். புலிகளியக்கம் அழிக்கப்பட்டமைக்கு இந்தியஉயர் அரசியல் தலைவர்களும், உயர் அரச அதிகாரிகளுமே காரணம் என்று அவர்கள்குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் இவ்வாறான உயர் அரசியல் தலைவர்களினதும்,அதிகாரிகளினதும் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்பட்டுவிடப்போகிறது"
இதற்குப் பதிலளித்த வைக்கோ, "இது இணையத் தொடர்புக் காலம்.புலம்பெயர்தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகளவில் இயங்கும் சர்வதேச மனிதவுரிமைஅமைப்புக்கள் போன்றவை கூட தமிழர் மீதான இனவழிப்புப் போரைக்கண்டித்திருப்பதோடு இதே குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருக்கின்றனவே?"என்று அவர் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் டப்ளின் மக்கள் நீதிமன்றில்விசாரணைகளை நடத்திய மூன்று நீதிபதிகளில் ஒருவர் கூட முன்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் தலமை நீதிபதியாக இருந்தவர்தான் என்று சுட்டிக்காட்டினார்.அத்துடன் கொழும்பு அமைச்சர்களில் ஒருவர் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கையின்போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒரு குழுவை நியமித்தைதைக் கண்டித்து அவரை ஒரு"சர்வதேச விலைமாதர்களின் தரகர்" என்று வசை பாடியதையும் சுட்டிக்காட்டினார்.
" தடை நீடிப்பிற்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்படும்புலிகளியக்கத்தின் அழிவிற்கு முழுக் காரணமானவர்கள் இந்திய அரசியல்தலைவர்களும், உயர் அதிகாரிகளும்தான் என்கிற பிரச்சாரம் என்பது பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்படி சட்டத்திற்கு முரணானது என்று எங்குகுறிப்பிடப்படவில்லையே?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விசாரணைகளில் தனது வாதங்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்என்றவைக்கோ அவர்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசின் கவுன்ஸில் ஏற்றுக்கொள்ளமறுத்ததோடு, அவர்களை புலிகளியக்கத்தின் உத்தியோகபூர்வ வழக்கறிஞராகவோஅல்லது அவ்வமைப்பின் உத்தியோகத்தவராகவோ இருக்கவில்லை என்றும் தெரிவித்தது.
அதற்குப் பதிலளித்த வைக்கோ, தாம் இந்தத் தடைச் சட்டத்தினால்தனிப்பட்டளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்மேல் இசட்டத்தினூடாக இருவழக்குகள் இன்னும் நிலுவையிலிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
" இந்திய மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புலிகளியக்கம் இன்றுஇயங்கவில்லை, அதனால் புலிகளியக்கத்தின்மேல் இவ்வாறான தடையுத்தரவினைப்பிரயோகிக்கும் தேவை எந்தப் பயனுமற்றது என்று வாதிட்டார்.
இந்தத் தடையுத்தரவிற்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பம் புலிகளியக்கத்திற்குஇன்றைக்கு இல்லாதிருப்பதாலும், இந்திய மத்திய அரசின் கருத்துப்படிஅவ்வியக்கம் இன்றும் இயங்குவதற்கான சந்தர்ப்பம் முற்றாகவே அற்ற நிலையிலும்தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட நபர் என்கிற முறையில் தான் இது தொடர்பாகவழக்காட அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இயற்கை நியதிப்படி நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் வேன்டினார்.
"கணம் நீதிபதி அவர்களே, பல்வேறு நீதி வழங்கும் சந்தர்ப்பங்களில்பாவிக்கப்பட்டு வெற்றியளித்த இயற்கை நீதியைப் பயன்படுத்தி, இவ்வழக்கில்நியாயமான சந்தர்ப்பமளிக்கப்பட்ட ஒருவர் தண்டிக்கப்படாது வெற்றியடையதங்களால் ஆனதைச் செய்ய வேன்டிக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
மூலம் தமிழ்நெட்
தமிழாக்கம் ரகுனாதன்

Similar topics
» காவிரி: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிடம் ஐந்தரை மணி நேரம் விசாரணை; வெள்ளிக்கிழமையும் ஆஜராகிறார்!
» தடை நீடிப்பு தொடர்ந்தால் தமிழர்கள் அகதி என்று கூட இங்கு இருக்க முடியாது - வைக்கோ
» காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு இன்று விசாரணை
» முல்லைப் பெரியாறு: தமிழக, கேரள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum