Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாட்டுக்காக எதை இழந்தார் கருணாநிதி? விஜயகாந்த்
Page 1 of 1
நாட்டுக்காக எதை இழந்தார் கருணாநிதி? விஜயகாந்த்
கட்சியின் முப்பெரும் விழாவில் பேசுகிறார் விஜயகாந்த்
சென்னை, செப். 18: முதல்வர் கருணாநிதி நாட்டுக்காக எதை இழந்தார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்வடசென்னை
மாவட்ட தேமுதிக சார்பில் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும்
தேமுதிக.வின் 6-ம் ஆண்டு துவக்கவிழா என முப்பெரும் விழா சென்னை திரு.வி.க.
நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யுவராஜ் தலைமை வகித்தார்.இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது:மக்களிடையே
ஜாதி, மதம் கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால் பெரியார் வழியில்
நடப்பதாகக் கூறும் கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்பு கல் மோதிரமும்
அணிந்து மக்களை ஏமாற்றி வருகிறார். தமிழகத்தை ஜாதி, மத பேதமற்ற
சமத்துவபுரமாக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார். ஆனால் 100
சமத்துவபுரங்களை ஏற்படுத்தி அங்கு 25 வீடுகளைக் கட்டிவிட்டு இதுதான்
சமத்துவபுரம் என்று ஏமாற்றுகிறார் கருணாநிதி.சென்னையில் அனைத்து
தரப்பு மக்களும் கலந்து யார், எந்த ஜாதி என்று தெரியாமல் வாழ்ந்து
வருகிறார்களே இதுதான் பெரியார் கண்ட சமத்துவபுரம். இந்த உண்மைகளை நான்
சொன்னால், விஜயகாந்த் பொய் சொல்கிறார் என்று கருணாநிதி கூறுவார்.அதிமுக
எங்கு கூட்டம் நடத்துகிறதோ அங்கெல்லாம் சென்று கருணாநிதி போட்டிக் கூட்டம்
நடத்துகிறார். சமீபத்தில் திருச்சியில் அன்பில் தர்மலிங்கம் சிலைத்
திறப்பு என்ற பெயரில் கூட்டம் நடத்தினார். அன்பில் தர்மலிங்கத்துக்கு
இத்தனை காலம் சிலை வைக்காதது ஏன்? கழகமே இரு கண்கள் என்று கூறிய துறையூர்
அழகுமுத்துவுக்கு சிலை வைக்காதது ஏன்?அண்ணா எளிமையாக வாழ்ந்தார்,
கடனாளியாக இறந்தார். அண்ணா மருத்துவமனையில் இருந்தபோதுகூட குளிர்சாதன
வசதியுடைய அறை வேண்டாம் என்று கூறினார். ஆனால் கருணாநிதி குடும்பமோ இன்று
உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்
ரேஷன் கடைகளில் கிலோ அரிசி ரூ.2.50-க்கு வழங்கினார். அதே நேரத்தில் அன்றைய
தினம் வெளிச்சந்தையிலும் ஒரு கிலோ அரிசி ரூ.4 அல்லது அதிகபட்சம்
ரூ.5-க்குக் கிடைத்தது. ஆனால் இன்று கிலோ ரூ.1-க்கு அரிசி வழங்குகிறேன்
என்கிறார் கருணாநிதி. ஆனால் வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.40-க்கு விற்பனையாகிறது.இலவச
கலர் டி.வி. வழங்கியது சாதனை என்கிறார்கள். ஆனால் இலவச கலர் டி.வி.யை
வழங்கிவிட்டு அவர்களது குடும்ப கேபிள் டிவி.க்கள் மூலம் கோடி, கோடியாக
சம்பாதித்து வருகிறார்கள். இலவச கலர் டிவி வழங்குபவர்கள் இலவச கேபிள்
இணைப்பும் வழங்குவதுதானே?இலவசங்களை வாரி வழங்கும் நீங்கள்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏதேனும் திட்டத்தை ஏற்படுத்தி
கொடுத்தீர்களா? வேலைக்கு ஏதேனும் ஏற்பாடு செய்தால் அவர்களே அனைத்தையும்
வாங்கிக் கொள்வார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும்.நேருவின்
குடும்பத்தினர் நாட்டுக்காக சொத்துகளை தியாகம் செய்தனர். இந்திரா காந்தி,
ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக உயிரையே இழந்தனர். ஆனால் நாட்டுக்காக
கருணாநிதி எதை இழந்தார்எனக்கு வரும் கூட்டம் தானாக திரண்ட கூட்டம்.
அழைத்து வரப்பட்ட கூட்டம் இல்லை என்று நான் கூறினால், மக்கள் பார்த்துக்
கொள்வார்கள் என்கிறார் அழகிரி. மதுரைக்கு பிழைக்க வந்தவர் அழகிரி. நான்
மதுரையில் பிறந்து வளர்ந்தவன் என்பது நினைவிருக்கட்டும்.சேது
சமுத்திரத் திட்டம் அனைவரும் எதிர்பார்த்த நல்ல திட்டம். ஆனால் இந்த
விவகாரத்தில் ராமர் பாலம் என்று ஒரு பிரச்னை வந்தது. ராமர் எந்த பொறியியல்
கல்லூரியில் படித்தார் என்று கேட்டு அந்தத் திட்டத்தையே கெடுத்துவிட்டார்
கருணாநிதி.தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் மக்கள்
அல்லாடுகிறார்கள் என்று நான் முதலில் கூறினேன். ஆனால் அப்போது மறுத்த
கருணாநிதி இப்போது அதைத் தடுக்க நிதி ஒதுக்குகிறார்.பெட்ரோலிய
பொருள்களின் மீது தமிழகத்தில் 32.5 சதவீதம் விற்பனை வரி
விதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இது 20 சதவீதமாக உள்ளது.
பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏறியபோது மற்ற மாநிலங்களில் விற்பனை வரியைக்
குறைத்து பெட்ரோல் விலையை குறைத்தனர். ஆனால் தமிழகத்தில் விற்பனை வரியை குறைக்காதது ஏன்? மகளிர்
சுயஉதவிக்குழு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய அரசு கொண்டு
வந்த திட்டங்கள். ஆனால் இந்த திட்டத்தை கருணாநிதி தான் கொண்டுவந்ததாக
விளம்பரம் செய்கிறார். இதைத்தான் இளங்கோவன் பேசுகிறார். நான்
மக்களிடம் கலந்து பேசி கூட்டணி குறித்து முடிவு செய்வேன். இப்போது நான்
மக்களிடம் வைக்கும் கேள்வி, நாடா அல்லது ஒரு குடும்பமா என்பதுதான் என்றார்
விஜயகாந்த். இந்தக் கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி
ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விஜயகாந்த் பெயரில் இலவச மருத்துவ திட்டம்தனது பெயரில் இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.விஜயகாந்த்
நல்வாழ்வுத் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள
இண்தூர், நல்லம்பள்ளி, கம்மம்பட்டி ஆகிய 3 பஞ்சாயத்துகளில்
செயல்படுத்தப்படும். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இலவச
மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். செப்டம்பர் 21-ம் தேதி முன்னாள்
எம்.எல்.ஏ. ஆஸ்டின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.
Similar topics
» கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி
» கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று வேட்புமனு
» சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று வேட்புமனு
» சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum