Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சூரியனை பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்
Page 1 of 1

சூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில்
உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல
கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி
ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின்
எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது
குறிப்பிடத்தக்கது . சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு
தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8
நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு
வாழ்வாதாரம் சூரிய ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில்
சேகரிக்கப்படும் சூரிய ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல்
ஆகும். . மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை
சார்ந்தே உள்ளன.
சூரியன் காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர். சூரிய காந்த புலம் ஒவ்வெரு வருடமும் தன்னிலையில் சிறு
மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. சூரிய
காந்த புலம், சூரியனில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை
கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக
சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar
winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும்
கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில்
நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக
ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின்
அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.
கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு)
மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய
அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம்
, மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும்
கொண்டுள்ளது.
வகைப்பாடு
சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது.
G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °c ஆக
இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின்
நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக
இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு
மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல
நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு
விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன்
பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு
நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு
நிறமாகவோ காட்டுகிறது [4]
G2V என்ற குறியிட்டில் V என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று
சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில்
ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது
விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன் G2 வகை விண்மீன்கள் உள்ளன.
அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்)
உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. சூரியன் தோராயமாக 24
,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை
225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.
இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின்
கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி இந்த அளவீடுகள்
இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை
வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது
விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற
வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.
1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )
2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )
3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )
இவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை
சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன்
வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும்
என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியல்
தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம்
காரணம் ஆகும்.
வாழ்க்கைச் சுழற்சி
விண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க
விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன்
வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில்
தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி
விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால்
அமைந்துள்ளது.
சூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன்
படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய
நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது.
இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற
தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை
மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு
செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய
மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது.
இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு
செய்யப்படுகிறது .
ஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள்
ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு
விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார்
4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம்
சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து
சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில்
உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம்
ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன.
இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால்
வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று
கூறலாம்.
சூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப்
போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு
சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள்
விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு
விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100
மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு
ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .
சூரியனின் வாழ்க்கை சுழற்சி
இந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப்
பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட
சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின்
சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும்.ஆனால்
சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய
வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக
விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. சில இயற்பியல்
விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக
வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும்.
மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை
முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10%
அதிகமாகிறது.
சிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள்
வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க
கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக
(white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு
நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது. [You must be registered and logged in to see this link.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மறைக்காமல் பேசுவோம்… மாதவிடாய் … நாம் அறிந்ததும் அறியாததும்
» ஜெயலலிதா 10… அறிந்ததும் அறியாததும்!
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
» அஜினா மோட்டோ! அறிந்ததும் அறியாததும் ?
» ஜெயலலிதா 10… அறிந்ததும் அறியாததும்!
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
» அஜினா மோட்டோ! அறிந்ததும் அறியாததும் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum