TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Feb 29, 2024 5:14 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 28, 2024 11:36 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Feb 27, 2024 4:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெயலலிதா 10… அறிந்ததும் அறியாததும்!

Go down

ஜெயலலிதா 10… அறிந்ததும் அறியாததும்! Empty ஜெயலலிதா 10… அறிந்ததும் அறியாததும்!

Post by Tamil Mon May 16, 2016 8:33 am

ஜெயலலிதா 10… அறிந்ததும் அறியாததும்!
அறிந்ததும் அறியாததும்
றுக்கமான முதலமைச்சர், கட்சி நிர்வாகிகளுக்கு தூரத்து இடிமுழக்கம், நிருபர்கள் நெருங்க முடியாத அரசியல்வாதி என்பது ஜெயலலிதாவைப் பற்றிய பொது பிம்பம்.

அவரின் இன்னொரு உலகம், அவருக்கானது. நாம் அறிந்த, அறியாத ‘அம்முவின்’ சில பக்கங்கள் இங்கே…

 [You must be registered and logged in to see this image.]

1. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, பெங்களூருவில் ஸ்டெனோவாக பணிபுரிந்தவர். எப்போதும் அம்மாவின்  புடவையைப் பிடித்துக்கொண்டு தூங்கும் குட்டிப்பெண் அம்முவான ஜெயலலிதாவை ஏமாற்ற, அந்தப் புடவையை அவர் வேறொரு பெண்ணுக்குக் கட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார்.

[You must be registered and logged in to see this image.]

2. ஜெயலலிதாவின் பள்ளி நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்,  நாரி கான்ட்ராக்டர். ‘நான் அவரைப் பார்ப்பதற்காகவே டெஸ்ட் மேட்ச்களுக்குப் போயிருக்கிறேன்’ என ஜெயாவே சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர், ஷமி கபூர்.

[You must be registered and logged in to see this image.]

3. ஜெயலலிதா நல்ல பாடகி. ‘அடிமைப் பெண்’ படத்தில், ‘அம்மா என்றால் அன்பு’ என்று எம்.ஜி.ஆருக்குத் தாலாட்டுப் பாடிய குரல், இவருடையதே. இந்தியில் ‘சோரி சோரி’ படத்தின் ‘ஆஜா சனம் மதுர்’ பாடல் ஜெயாவுக்கு பிடித்த அல்டிமேட் சாங். ஓய்வு நேரங்களில் இருக்கும் போது முணுமுணுப்பார்.

[You must be registered and logged in to see this image.]

4. படிப்பில் செம கெட்டி. சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தவருக்கு கல்லூரி செல்ல அவ்வளவு ஆசை. ஆனால், அவர் அம்மா அவரைப் படத்தில் நடிக்கக் கட்டாயப்படுத்தினார். அழுது, அடம் பிடித்த ஜெ., பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டு அரிதாரம் பூசிக்கொண்டார். சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரே ஒரு நாள், ஆசைக்காக வகுப்பில் அமர்ந்துவிட்டு, கல்லூரிக் கனவுக்கு பைபை சொல்லிவிட்டார்.

[You must be registered and logged in to see this image.]

5.  நடிக்கத் தொடங்கியதும் ஜெயலலிதாவின் சினி கிராப் தடதடக்க ஆரம்பித்தது. சில வருடங்களிலேயே அப்போது முன்னணியில் இருந்த சரோஜா தேவியை பின்னுக்கு தள்ளிவிட்டு, தென்னிந்தியப் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். 1960களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர்தான்.

[You must be registered and logged in to see this image.]

6. ‘நான் யாரையும் பார்த்து நடிப்பதில்லை. பிறப்பிலேயே நான் ஒரு நடிகை’ எனச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. வசனத்தை ஒரே வாசிப்பில் மனப்பாடம் செய்துவிடும் நடிகைகளில் இவர்தான் முதலாமவர். ‘நடிப்புக்கு இலக்கணம்’ என கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.

[You must be registered and logged in to see this image.]

7. ஹீரோயின் ஜெயலலிதாவுக்கு சொந்த கார் வாங்க நிறைய ஆசை. கையில் காசு சேர்ந்ததும், அம்மாவின்  அம்பாஸடர் காருக்கு விடைகொடுத்துவிட்டு, செகண்ட் ஹேண்ட் ப்ளைமவுத் காரை வாங்கினார். அந்தக் காரின் பதிவு எண்  MSX 3333. அந்தக் காலகட்டத்தில் அவர் வாங்கிய காண்டஸா கார், இன்றும் அவரிடம் உள்ளது.

8. எம்.ஜி.ஆர்  இறுதி ஊர்வலத்தில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா சந்தித்த அவமானங்களின் வீடியோப் பதிவு காட்சிகள், சென்னை தூர்தர்ஷன் அலுவலக  அறையில் இன்றும் தூங்கிக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கு முடிந்த உடன் கலங்கிப்போன ஜெ., போயஸ் தோட்ட ‘வேதா நிலையம்’ வீட்டுக்குள் வேகமாக நுழைந்து, தன் அறையைப் பூட்டிக்கொண்டார். நான்கு மணி நேரம் கழித்து வெளியே வந்த ஜெயலலிதா, அதன் பின் எடுத்தது அரசியல் விஸ்வரூபம்.

[You must be registered and logged in to see this image.]

9. தமிழக சட்டசபை ‘மாண்புமிகுக்களால்’ பெரிதும் அவமானப்பட்டவர் ஜெயலலிதா.  அப்போதைய திமுக ஆட்சியின்போது  சட்டசபைக்குள்  தனி மனுஷியாகப் பிரவேசித்து, முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர்களை கேள்விக்கணைகளால் திணறடித்தார்.

[You must be registered and logged in to see this image.]

10. பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தடா சொல்பவர் ஜெயலலிதா.

[You must be registered and logged in to see this image.]

2004-ல் பிபிசி-யின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் நடந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்விகளில் கோபமானவர், ‘உங்கள் பேட்டி முடிந்துவிட்டதா? வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? இந்தப் பேட்டி எனக்கு மோசமான அனுபவத்தையே தந்துள்ளது’ என முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டு, காலர் மைக்கை தூக்கிவீசிவிட்டுச் சென்றுவிட்டார்.

-சி.மீனாட்சி சுந்தரம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum