TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அனைத்து கட்சிக்கும் கலைஞர் தான் ரிங்டோன்: "துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம்

Go down

அனைத்து கட்சிக்கும் கலைஞர் தான் ரிங்டோன்: "துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம் Empty அனைத்து கட்சிக்கும் கலைஞர் தான் ரிங்டோன்: "துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம்

Post by ஜனனி Sun Jun 27, 2010 6:17 am

கோவை
: கோவை செம்மொழி மாநாட்டில் நேற்று கவியரங்கம் நடந்தது. தலைப்புக்கு
சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல் பேசவும்
மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும் ஆங்காங்கே
எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர் கருணாநிதி தான்
தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்,
"தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை
தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர்
கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.
தலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, ""தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல,
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது
நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,'' என்றார். சமீபத்தில் அ.தி.மு.க.,
கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள்
முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை
வாலி. ""ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, "சாமிகள்' அறிவாலயம்
நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு
கைகூப்பு,'' என்றார்.
கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், ""இதுவரை
தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த்
தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல்
வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை
தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும்
அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு.
இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே
கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி
தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,'' என்றார்.
முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு
வைக்கவில்லை. ""இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர்.
சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத்ததில் முதல்வர்.
அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும்
வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே
வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,'' என்றார்.
கவிஞர் தணிகாசலம் பேசுகையில், ""இன்று காவிரியை கடக்க ஓடம்
வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம்
நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில்
நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம்,
நியாயம்,'' என்றார்.
கவிஞர் இளம்பிறை பேசுகையில், ""கடல் அலையாக பொங்கும் உணர்வை
கம்பி வலைகளா தடுக்கும்? படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள்
விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு
இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,'' என்றார்.
கவிஞர் பழனிபாரதி பேசுகையில், ""நீ சுவாசிப்பது காற்றை அல்ல;
தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன்.
நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற
அத்தனை தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு
வரை பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம்
முதல்வராகி விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம்
சூரியனின் உயரம்,'' என்றார்.
இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில்,
""கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில்,
"ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா' போட்டு பேசுவர். கலைஞரும் "அண்ணா, அண்ணா' என்று
பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே
தமிழ். கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர்.
விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில்
செல்போன் போல் கட்சிகள். எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங்
டோன் கலைஞர் தான். செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,''
என்றார்.
இவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட
தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி
முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய
அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம்
எடுத்துக் கொண்டனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இதே தினத்தில் தான் 40 ஆண்டுகளுக்கு முன் கலைஞர்
» 50 வயதில் பெண்ணாக மாறிய ஆணுக்கும், 46 வயதில் ஆணாக மாறிய பெண்ணுக்கும் திருமணம்.
» அனைத்து பிளாஷ், youtube வீடியோக்களையும் அனைத்து உலவிகளிலும் டவுன்லோட் செய்ய...
» கொசுக்களை விரட்டும் மொபைல்போன் ரிங்டோன்
» ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum