Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எப்போது தெரியும்?
Page 1 of 1
எப்போது தெரியும்?
பள்ளிக்
கல்விக் கட்டண வசூல் ஒழுங்குமுறைச் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கி பத்து நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், பள்ளிகளுக்கு
எத்தகைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, தமிழக அரசு இதுவரை
வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும்
நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு என்பது தெரியாமல் அவதிப்படுவது
வழக்கம்போல பெற்றோர்கள் மட்டுமே!பள்ளிக் கட்டணங்கள் மிக
அதிகமாக உள்ளன என்று மக்கள் தாங்கமாட்டாமல் புலம்பியதால்தான் அரசு இந்தப்
பிரச்னையில் ஆர்வம் காட்டியது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி
கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண
வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு
எதிராகத் தனியார் பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், இந்தச் சட்டம்
செல்லும் என்று தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன்
ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசுக்கு இதைவிட சாதகமான தீர்ப்பு வேறு
ஏதும் கிடையாது. ஆனாலும், இதுவரை அரசு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.அரசு
எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பதற்காக, தனியார் பள்ளிகள் சும்மா
இருந்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர் சேர்க்கை சின்ன நோட்டுப்
புத்தகத்திலும், வெறும் துண்டுச் சீட்டிலுமாக நடந்து கொண்டிருக்கிறது. சில
பள்ளிகள் கட்டணங்களையும் வசூலித்துவிட்டன. சில பள்ளிகள் மாணவர் சேர்க்கை
மட்டும் நடத்துகின்றன. கட்டணங்களைப் பிறகு சொல்கிறோம் என்று கூறுகின்றன.
இத்தனை நடைமுறை ஊழல்களுக்கும் காரணம்- இன்னமும் அரசு தான் நிர்ணயித்துள்ள
கட்டண விகிதத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதுதான்.இந்தச்
சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 1-ம்
தேதி முதல் மே 15-ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் தங்கள் விண்ணப்பங்களை விற்பனை
செய்யவில்லையே தவிர, மாணவர் சேர்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றன.
பெற்றோர்களும், முந்திக்கொண்டு குழந்தைகளைச் சேர்க்காமல் அரசு
அறிவிப்புக்காகக் காத்திருந்தால், நம் குழந்தைக்கு இடம் கிடைக்காமல்
போய்விடும் என்ற பயத்தின் காரணமாக இந்தப் பள்ளிகள் சொல்லும் அனைத்துக்கும்
கட்டுப்பட்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில்
பணத்தைக் கொடுத்து அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.சென்ற
ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு ஒரு
சுற்றறிக்கை அனுப்பியது. 2008-09-ம் ஆண்டுகளில் வசூலித்த கட்டணம்,
சிறப்புக் கட்டணம் மற்றும் வரவு செலவுக் கணக்குகள் ஆகியவற்றை
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று
கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, தனியார் பள்ளிகள்
சங்கம் வழக்குத் தொடுத்ததுடன், வழக்கு முடியும்வரை நமது வரவு செலவுக்
கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவையும் எடுத்ததாகத்
தெரிகிறது. இந்த வழக்கில் அரசு கொண்டுவந்துள்ள சட்டம்
செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு ஓராண்டு காலம் ஆன நிலையில்,
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் என்ன செய்து கொண்டிருந்தது?
அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் தாங்கள்
செலுத்திய கட்டண விவரங்களின் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தாலே
போதுமே, கொட்டித் தீர்த்திருப்பார்களே! கல்வித் துறை
ஏற்கெனவே இத்தகவல்கள் அனைத்தையும் பெற்று, ஒவ்வொரு பள்ளியையும் அதன்
வசதிகளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்திருந்திருந்தால், இப்போது
வெளிப்படையாக கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக அறிவிக்க வேண்டியதுதானே.
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன, இவை எந்த
அடிப்படையில் ஏ, பி, சி, என தரம் பிரிக்கப்பட்டன, இவற்றுக்கான கல்விக்
கட்டணம் எவ்வளவு? சிறப்புக் கட்டணம் எவ்வளவு? என்பதை ஒட்டுமொத்தமாக
இணையதளத்தில் வெளியிட்டால், பெற்றோர்கள் அனைவருமே பார்த்து அறிந்துகொள்ள
முடியுமே! அரசு ஏன் இதில் இன்னமும் மெüனம் காக்க வேண்டும்.மெட்ரிகுலேஷன்
பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகம் ரூ. 445,
யு.கே.ஜி. ரூ. 500, முதல் வகுப்பு ரூ. 655 என ஐந்தாம் வகுப்பு வரை கட்டணம்
நிர்ணயித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கல்வித்துறை
வட்டாரங்கள் கூறினாலும் இதை ஏன் மக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படையாகத்
தெரிவிக்கவில்லை.1973-ல் இயற்றப்பட்ட தனியார் பள்ளி
ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 32-ன் படி, எந்த ஒரு தனியார் பள்ளியும்
தகுதிவாய்ந்த அதிகாரி குறிப்பிட்டுள்ள கட்டணம் தவிர, வேறு எந்தக்
கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை
நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், இத்தனை
ஆண்டுகளாக கல்வித் துறை அதிகாரிகள் ஏன் மெüனமாக இந்த கல்விக் கட்டணக்
கொள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்?கல்லூரிகள்
விவகாரத்திலும் இதே மெüனம்தான் நீடிக்கிறது. அதிகக் கட்டணம், நன்கொடை
போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து ஓராண்டு ஆகப்
போகிறது. ஆனால் அந்தக் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது
யாருக்குமே தெரியாது.சென்ற ஆண்டு பல பொறியியல் கல்லூரிகளில்
அரசு அறிவித்த குழு நேரில் சென்று பல்வேறு புகார்களை விசாரித்தது. சில
கல்லூரிகள் அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தின. ஆனால் எந்தப்
பொறியியல் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள்
தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு தகுதியானவையா இல்லையா? இன்னும்
அறிவிப்பு இல்லை.ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு
நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு? முறைகேடு செய்த பொறியியல் கல்லூரிகள்
மீது என்ன நடவடிக்கை? கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இப்போது
சொல்லாவிட்டால், வேறு எப்போது சொல்வார்கள்!
Similar topics
» எங்களுக்கும் கராதே தெரியும்
» ஈழ சுதந்திரம் எப்போது?
» youtube ல் தெரியும் மாற்றங்கள்
» நாம் எப்போது திருந்தப்போகிறோம் ?
» வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும்
» ஈழ சுதந்திரம் எப்போது?
» youtube ல் தெரியும் மாற்றங்கள்
» நாம் எப்போது திருந்தப்போகிறோம் ?
» வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum