Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழ சுதந்திரம் எப்போது?
Page 1 of 1
ஈழ சுதந்திரம் எப்போது?
ஈழ சுதந்திரம் எப்போது?
ஒவ்வொரு
சுதந்திர தினத்தன்றும் வீடுகளில் கொடியேற்றி அக்கம் பக்கத்தவருக்கெல்லாம்
இனிப்பு வழங்கி மகிழ்ந்த எத்தனையோ தமிழர்கள், கடந்த மூன்றாண்டுகளாக
சுதந்திர தினத்தையே கொண்டாடவில்லை. கடந்த ஆண்டு ஒரு படிமேலே போய் சில
கிராமங்களில் இந்த நாளில் எல்லா வீடுகளிலும் கறுப்புக் கொடி பறந்தததையும்
அறிவோம்.
இன்று இந்திய சுதந்திர தினம்… இந்த நாளை இந்த
ஆண்டும் உளப்பூர்வமாகக் கொண்டாட முடியாமல் தவிக்கிறார்கள் உணர்வுள்ள
தமிழர்கள் என்றால், அது நூறு சதவீத உண்மை.
தமிழர் மனதில் நீங்காத கேள்வியாக நிறைந்திருக்கும் ஈழ சுந்ததிரம் இனி
மலருமா? சர்வதேசம் அதற்கு அனுமதிக்குமா… குறிப்பாக இந்தியா இதனை எந்த அளவு
ஒடுக்கப் பார்க்கும்? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடி தமிழ் தலைவர்கள்
சிலரிடம் பேசினோம்.
வைகோ, பொதுச் செயலர் – மதிமுக:
இந்தியா என்ற தடை இல்லாமலிருந்திருந்தால் சுதந்திர ஈழத்தில் இன்று
புலிக்கொடி பட்டொளி் வீசிப் பறந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளை அனைத்து
வழிகளிலும் நசுக்கிவிட்டது இந்தியா என்ற உண்மையை எங்கும் சொல்வேன்.
தலைவர் பிரபாகரன் தனியொரு ராணுவமாய் நின்று எதிர்த்தது இலங்கை படைகளை அல்ல… 20 நாடுகளின் ஆயுத பலத்தை.
ஒரு பேரழிவு, இனப் படுகொலை, சொல்லொணாத துயரங்களுக்குப் பிறகு, மீண்டும் ஈழ
சுதந்திரம் பற்றிய சர்வதேச அளவிலான விவாதம் நடக்கும் சூழ்நிலை
உருவாகியுள்ளது. போர்க்குற்றவாளி ராஜபக்சேயும் அவரது கூட்டுக்
கொலையாளிகளும் சர்வதேச நீதிமன்றப் படிகளை நோக்கி இழுக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் ஒரு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இதற்கும்
இந்தியாவே முட்டுக் கட்டையாய் நிற்கிறது.
இப்போதுதான் தமிழர் ஒற்றுமையும், அரசியல் சார்பற்ற ஆதரவும் ஈழத்
தமிழர்களுக்கு அவசியம். இனியும் இலங்கையுடன் இணைந்து சம உரிமை அனுபவிப்பது
தமிழர்களைப் பொருத்தவரை இயலாத காரியம்.
இப்போதைய தேவை ஈழத்தில் ஒரு கருத்துக் கணிப்பு தேர்தல். ஈழத்
தமிழர்களுக்கு எது விருப்பம்? சுதந்திர ஈழமா, இலங்கையின் இரண்டாம்தர
குடிகளாகத் தொடர்வதா?
இதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால் இதற்கான கருத்தெடுப்பு இப்போது
அவசியம். இந்த கருத்தெடுப்பின் அடிப்படையில் புதிய நாடாக தமிழ் ஈழத்தை
சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். இதற்கு முட்டுக்கட்டையாக இந்தியா இருக்கக்
கூடாது.
இதை வலியுறுத்தியே எமது போராட்டம் இருக்கும்!
பழ நெடுமாறன், தலைவர், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்
சுதந்திர ஈழம் வெறும் கனவல்ல. நிறைவேற முடியாத கடின இலக்கல்ல.
தமிழர்களுக்கான தாயகத்தை உருவாக்கும் மாவீரர்களின் லட்சியம் தோற்காது. அதை
நோக்கிய அடுத்த கட்ட போர், இன்று இலங்கைக்கு வெளியே, சர்வதேச அளவில்
நடக்கிறது. இந்தப் போரில் தமிழர்கள் வெல்வார்கள்
இந்தியாவின் தடைகளை, சதிகளையெல்லாம் முறியடித்து சுதந்திர தமிழீழம் மலரும்.
தமிழருவி மணியன், காந்தி காமராஜ் இயக்கம்
இலங்கையின் இறையாண்மையை, ஒற்றுமையைப் பாதுகாப்பதில் அவர்களை விட இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குதான் ரொம்ப அக்கறை.
இனியும் இரு தனித்துவமிக்க இனங்களாக இலங்கையில் தமிழரும் சிங்களரும்
வசிப்பது சாத்தியமல்ல. அதில் யாருக்கும் சந்தோஷமும் இல்லை. தமிழ் மக்கள்
தங்கள் அரசியல் உரிமைகளை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சூழலை
ஏற்படுத்தித் தருவது சர்வதே தேசத்தின் கடமை. அதற்கான நகர்வுகளை தமிழர்
அமைப்புகள் இன்னும் வேகப்படுத்த வேண்டும்.
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
ஈழ சுதந்திரம் என்பது இன்றில்லாவிட்டாலும் நாளை நடந்தே தீர வேண்டிய
கட்டாயம். தமிழரின் ஆயுதங்கள் மவுனித்திருக்கலாம். ஆனால் அரசியல் போராட்டம்
இப்போதுதான் உக்கிரமடைந்துள்ளது. அதை ஒடுக்கும் சக்தியாக இந்தியா இருக்கக்
கூடாது என்பதுதான் எமது வேண்டுகோள்.
தமிழனின் தாயகம் மலரும், அன்று கொண்டாடுவோம் சுதந்திர திருநாளை இதைவிட பல மடங்கு உற்சாகமாய்.
பழ கருப்பையா, சட்டமன்ற உறுப்பினர், அதிமுக
தனி தமிழ் ஈழம் அமைவது காலத்தின் கட்டாயம். போராட்டம்தான் நின்று
விட்டதே, இனி எதற்கு தமிழருக்கு தனி நாடு அல்லது அரசியல் சுய உரிமை என
இலங்கை அரசு நினைக்கிறது. இது தவறான அணுகுமுறை என்பதை சர்வதேச அழுத்தம்
மூலம் இலங்கைக்கு புரிய வைக்க வேண்டும்.
கட்சிகளுக்கு அப்பால், ஈழம் என்று வரும்போது அனைவரின் குரலும் ஓருமித்து ஒலிக்க வேண்டும்.
இப்போது தமிழரின் சம உரிமைக்காக குரல் கொடுக்கும் நமது முதல்வர்
புரட்சித் தலைவி அவர்கள், சுதந்திர ஈழம் மலரவும் உறுதுணையாக இருப்பார்.
சுதந்திர ஈழத்தில் புரட்சித் தலைவியின் பங்கும் போற்றத்தக்க வகையில்
அமையும்.
முக ஸ்டாலின், பொருளாளர், திமுக
ஈழத்
தமிழரின் அரசியல் விடியலுக்கு திமுக ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.
சொல்லப் போனால், தனி ஈழம் அமையுமென்றால், அதற்காக ஆட்சியையே இழக்கக் கூட
தயாராக இருந்ததுதான் திமுக. தலைவர் கலைஞர் பல முறை அறிவித்த கழகத்தின்
நிலைப்பாடு இது. ஈழத் தமிழருக்காக ஏற்கெனவே ஆட்சியை இழந்ததும் இதே
திமுகதான்.
ஆனால், நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம், தமிழர்
பிரச்சினையில் இங்குள்ளவர்களின் போராட்டம் மட்டுமே ஒரு தீர்வை
கொண்டுவந்துவிடாது என்பதை. இதில் இந்திய அரசு, சர்வதேச அரசுகளின் அணுகுமுறை
என்ன என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
தமிழருக்கு எதிரான போர்க்குற்றவாளி நாடாக இலங்கையை சர்வதேச அளவில்
பிரகடனப்படுத்துவது அவசியம். அதன் அடிப்படையில் தமிழரின் பெருவிருப்பின்
அடிப்படையில் அரசியல் உரிமையை வழங்க வேண்டும். அது தனி ஈழமாக அமைந்தால்
உள்ளபடியே நாம் பெருமகிழ்ச்சியடைவோம்.
இந்த நிலையை நோக்கி தமிழரின் அரசியல் போராட்டம் அமைய வேண்டும். திமுக இந்த போராட்டங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும்.
-என்வழி
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சுதந்திரம் பறிபோகிறது...?
» இதுவல்ல சுதந்திரம்!
» இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?
» இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை! அச்சுறுத்தல் தொடர்கிறது: பிரித்தானியா
» இலங்கையில் இன, மத சுதந்திரம் குறித்தும் ஆராயும் அமெரிக்க காங்கிரஸ் குழு!
» இதுவல்ல சுதந்திரம்!
» இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?
» இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை! அச்சுறுத்தல் தொடர்கிறது: பிரித்தானியா
» இலங்கையில் இன, மத சுதந்திரம் குறித்தும் ஆராயும் அமெரிக்க காங்கிரஸ் குழு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum