TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நிதீஷின் கபட நாடகம்...

Go down

நிதீஷின் கபட நாடகம்... Empty நிதீஷின் கபட நாடகம்...

Post by ஜனனி Mon Jun 21, 2010 7:07 am

Last Updated :



நிதீஷின் கபட நாடகம்... Editorialimg





கோபம்
வந்தால் எப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியும் என்பதற்கு ஓர் உதாரணம்-
பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். அவர் தனது மாநிலத்தில் கோஸி
நதிவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி கொடுத்த ரூ. 5 கோடியைத் திருப்பிக் கொடுத்திருப்பதுதான்.ஏதோ
கல்யாணத்தில் வைத்த மொய்ப் பணத்தை, தாம்பூலத்துடன் திருப்பித்தரும்
திரைப்படப் பாணியில் நடந்திருக்கும் இதனை சிறுபிள்ளைத்தனம் என்று
சொல்லாமல் இருக்க முடியவில்லை.முதலமைச்சர் நிதித்தொகுப்பில் இந்தப்
பணம் பயன்படுத்தப்படாமலேயே இருந்ததால் இப்போது திருப்பிக் கொடுக்கிறோம்
என்று கடிதத்தில் தெரிவித்திருப்பதன் மூலம், இன்னுமொரு சேற்றை வாரிப்
பூசிக்கொள்கிறோம் என்பதை நிதீஷ் குமார் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு துயரச் சம்பவத்துக்காக ஒருவர் தரும் பணத்தை இத்தனை காலமாகப்
பயன்படுத்தாமல் வைத்திருந்தேன் என்று சொல்வதே அவமானம். ஆனாலும், கோபத்தில்
என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்
பிகார் முதல்வர். பிகார் அரசில் பாரதிய ஜனதா கட்சியும்
இடம்பெற்றுள்ள நிலையில் இத்தகைய செயல்பாடுகள் கூட்டணிக்குள் தேவையற்ற
சலனங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவர் கவலை கொள்ளவில்லை. இதெல்லாம்
நரேந்திர மோடி பிகார் மாநிலத்துக்குள் செய்த தேவையற்ற விளம்பரத்தால் வந்த
சிக்கல்கள். குஜராத் மாதிரியைப் பின்பற்றி வளர்ச்சிப் பாதையில் பிகார்
மாநிலம் செல்வதாகவும், பிகார் மக்களுக்கு குஜராத் மக்கள் செய்த
உதவிகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்க வேண்டாம். இன்னொரு
மாநிலத்தில், அங்கே பாஜக கூட்டணி இருந்தபோதிலும்கூட, கொஞ்சம் அடக்கமாக
இருந்திருக்கலாம். நரேந்திர மோடியின் விளம்பரத்தால் ஆத்திரமடைந்த நிதீஷ்
குமார், சென்ற வாரம் விருந்துகளைக்கூட ரத்து செய்துவிட்டார். இப்போது
பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.கோஸி
வெள்ளப்பெருக்கின்போது குஜராத் அரசு வெறும் ரூ.5 கோடி நிதியுதவியோடு
நின்றுவிடவில்லை. வெள்ளம் பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் குஜராத் அரசு
தனது அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணிக் குழுக்களை அனுப்பி வைத்தது. 36
டாக்டர்கள், 56 செவிலியர்கள், 80 தீயணைப்புப் படை வீரர்கள், 15 நவீன
நடமாடும் மருத்துவமனைகள் ஆகியவற்றை அனுப்பி வைத்தது. இவர்கள் சில மாதங்கள்
வெள்ளம் பாதித்த பகுதியில் தங்கி இருந்து சேவை செய்தார்கள். இந்த உதவிகளை
எப்படித் திருப்பித் தருவார் நிதீஷ் குமார்? 80 ரயில்பெட்டிகளில்
பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருள்கள் சுமார் ரூ. 20 கோடி அளவுக்கு
குஜராத் மாநிலத்திலிருந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்து
சேர்ந்துள்ளது. இதையெல்லாம் திருப்பித் தந்துவிட முடியுமா?செய்த
உதவிகளைச் சொல்லிக் காட்டும் அநாகரிகத்தை நரேந்திர மோடி செய்துவிட்டார்
என்பதற்காக, தானும் அநாகரிகமாக, எதைப்பற்றியும் யோசிக்காமல் நிதீஷ் குமார்
செய்வதால் சரியாகிவிடுமா?நல்லவேளை. மோடி, தான் கொடுத்த பணத்தை
வட்டியோடு திருப்பிக் கேட்கவில்லை. மேலும் தான் செய்த மற்ற உதவிகள்
குறித்தும் அவர் பட்டியலிடவில்லை.ஒரு மாநிலம் அல்லது ஒரு நாட்டின்
துயரத்தில் பங்குகொள்வதற்கும் அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கும் தொடர்பே
இல்லை. பாகிஸ்தானில் பூகம்பம் என்றால் இந்தியா உதவிகளை வழங்கவே செய்யும்.
அவை பொருளாகவும் இருக்கலாம்; உடல்உழைப்பாகவும் இருக்கலாம். இதில் பகைமை
பாராட்டுவதை யாருமே விரும்ப மாட்டார்கள். சில துயர் துடைப்பு நிவாரணப்
பணிகளுக்கு எதிர்க்கட்சிகளும்கூட நிதி திரட்டி முதல்வரிடம் கொண்டு போய்
அளிக்கும் பண்பு இந்தியாவில் இன்னும் அழியாமல் மீதமிருக்கிறது.
அதற்கும்கூட உலைவைக்கும் விதமாக இத்தகைய செயல்களில் இறங்குவது சரியல்ல.இந்தச்
சண்டையே ஒரு நாடகம் என்கிற கருத்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் லோக்
ஜனசக்தி ஆகிய கட்சிகளால் கேலி செய்யப்படுகின்றன. ஏனென்றால், பிகார்
மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த
நிலையில் முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று
விரும்புகிறார் நிதீஷ் குமார். ஆனால், பாஜக மீது முஸ்லிம்களுக்கு கடும்
கோபம் உள்ளது. போதாக்குறைக்கு, பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை மீண்டும்
கிளறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசு.முஸ்லிம்களுக்கு மோடி மீது மிகப்பெரிய வெறுப்பு உள்ளதாகவும்,
இது தனது மாநிலத்தில் தனது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்றும்
நம்புகிறார் நிதீஷ் குமார். ஆகவே, எதையாவது ஒரு சாக்குச் சொல்லி, மோடியை
அசிங்கப்படுத்தினால், அவரிடமும் பகை கொண்டதாகக் காட்டிக்கொண்டால்,
முஸ்லிம் வாக்குகள் தனக்கு முழுமையாக மீண்டும் கிடைத்துவிடும் என்கிற
அரசியல் தந்திரம்தான் இந்த மோதலில் இருக்கிறது என்று சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.கோபத்தில் நிவாரணத் தொகையைத் திருப்பித் தருவது
சிறுபிள்ளைத்தனம் என்றால், இதுபோன்ற மத உணர்வுகளுக்காக நடத்தப்படும் கபட
நாடகம் அநாகரிக அரசியல் அசிங்கம். தேவையில்லாமல் மதஉணர்வுகளைத்
தூண்டுவதோடு, இரு மாநில மக்கள் மனதில் விஷத்தை விதைக்கும் செயல். நவீன்
பட்நாயக் ஆகிவிட வேண்டும் என்று நிதீஷ் குமார் நினைத்தால் தவறில்லை.
அதற்காக பிகார் முதல்வர் கையாளும் வழிமுறைகள் சரியில்லை. பிகார் ஒரிசா
அல்ல. நமக்குத் தெரிகிறது, முதல்வர் நிதீஷுக்கு ஏனோ தெரியவில்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum