TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கிரிக்கெட் அணி ஏலம் : மந்திரி பவார், மகள் சுலே தொடர்பு

Go down

கிரிக்கெட் அணி ஏலம் : மந்திரி பவார், மகள் சுலே தொடர்பு Empty கிரிக்கெட் அணி ஏலம் : மந்திரி பவார், மகள் சுலே தொடர்பு

Post by logu Sat Jun 05, 2010 5:59 am

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் புனே அணி ஏல விவகாரத்தில் தங்கள்
குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய விவசாயத்துறை
அமைச்சர் சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மத்திய
அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., கோரிக்கை
வைத்திருக்கிறது. மீண்டும் கிரிக் கெட் ஏல விவகாரப் புயல்
எழுந்திருப்பதால், அவரது அமைச்சர் பதவி குறித்து சர்ச்சை
எழுந்திருக்கிறது.
ஐ.பி.எல்., கொச்சி அணி ஏலம் தொடர்பாக, மத்திய அமைச்சர் சசி
தரூருக்கும், ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடிக்கும் மோதல் வெடித்தது.
இதையடுத்து, சசி தரூர் தனது அமைச்சர் பதவியை இழந்தார். ஐ.பி.எல்.,
விவகாரத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அதன் தலைவர்
பதவியிலிருந்து லலித் மோடியை, பி.சி.சி.ஐ., சஸ்பெண்ட் செய்தது. அந்த
விவகாரம் குறித்து விசாரணையும் நடக்கிறது.இதனிடையே, சசி தரூர் விவகாரம்
வந்த போது கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆன பவார் பற்றி யாரும் பேசாத
நிலையில் திடீரென புதிதாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆங்கில
நாளிதழில், புனே அணியை ஏலம் எடுத்ததில் பவார் தொடர்பு குறித்து செய்தி
வெளியானது, பிரச்னையை எழுப்பியிருக்கிறது.
புனேவை சேர்ந்த சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தில், பவார்
குடும்பத்திற்கு 16 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.புனே அணி
ஏலத்தின் போது, சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும், சகாரா
நிறுவனத்திற்கும் கடும் போட்டி நிலவியது. ஆனால், இந்த ஏலத்தில் சகாரா
நிறுவனம் 1,700 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வெற்றிபெற்றது. ஆனால்,
புனே ஏலத்தில் சிட்டி கார்ப்பரேஷன் சார்பில், தேஷ்பாண்டே ரூ.1,176 கோடி
வரை ஏலம் எடுக்க முயன்றார். பவார், அவர் மகள் சுப்ரியா சுலே ஆகியோருக்கு
தெரியாமல் இதில் தேஷ்பாண்டே பங்கேற்று இருக்க முடியுமா என்பது கேள்வி.
ஏனெனில் இந்த நிறுவனத்தில் பவார் குடும்பத்திற்கு அதிக பங்குகள்
உள்ளன.இந்நிலையில், இந்த ஏல விவகாரத்தில், தங்கள் குடும்பத்திற்கு
எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர்
பவார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்த ஏலத்தில், என் தலையீடோ, எனது
குடும்பத்தினரின் தலையீடோ இல்லை. இதில் நான் தலையிட்டிருந்தால், சிட்டி
கார்ப்பரேஷன் நிறுவனம் இழப்பை சந்தித்திருக்காது என்பதை நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டும். ஏல விவகாரத்தில், தேஷ்பாண்டே சுதந்திரமாக
செயல்பட்டு, தன்னிச்சையான முடிவுகளையே எடுத்துள்ளார்.இதுதொடர்பாக விசாரணை
நடைபெற்று வருகிறது. குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,
உரிய தண்டனை பெறுவார்கள். மேலும் இது குறித்து வெளிவந்த செய்தி
ஆதாரமற்றது.இவ்வாறு பவார் கூறினார்.
சிட்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அனிருத்
தேஷ்பாண்டே கூறியதாவது:ஏல விவகாரத்தில், அமைச்சருக்கோ, அவரது
குடும்பத்தினருக்கோ தொடர்பு இருப்பதாக கூறப்படும் செய்திகளில்
உண்மையில்லை. ஏலம் நடப்பதற்கு முன் பாக, எங்கள் நிறுவனத்தின் போர்டு
மீட்டிங்கில், ஏலம் தொடர்பாக சுதந்திரமாக, யாருடைய தலையீடும், ஆலோசனையும்
இன்றி நான் முடிவெடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, நான்
சுதந்திரமாக செயல்பட்டேன். இவ்வாறு தேஷ்பாண்டே கூறினார்.
சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே கூறியதாவது:சிட்டி
கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எங்களுக்கு மிகக் குறைந்த அளவே பங்கு உள்ளது.
ஏலம் தொடர்பாக நடைபெற்ற போர்டு மீட்டிங்கிலும் நாங்கள்
கலந்துகொள்ளவில்லை.நிர்வாகம் அளித்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே,
தேஷ்பாண்டே ஏலம் தொடர்பாக சுயமாக செயல்பட்டார். இதில், எங்களது
குடும்பத்தினரின் தலையீடு எங்கிருந்து வந்தது? ஏலம் நடைபெற்றது தொடர்பான
அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளன. அதைப் பார்த்து, எங்கள் மீது குற்றம்
சாட்டுபவர்கள் உண்மையை தெரிந்து கொள்ளலாம். மேலும், 2008ம் ஆண்டு எனது
தந்தை பி.சி.சி.ஐ.,யின் தலைவராக இருக்கும்போதுதான் ஐ.பி.எல்., போட்டிகள்
துவங்கின. நாங்கள் நினைத்திருந்தால், அப்போதே ஒரு அணியை ஏலத்தில்
எடுத்திருக்க முடியும். எங்கள் முயற்சி இருந்தால் சிட்டி கார்ப்பரேஷன்தானே
அணியை ஏலம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், சகாரா நிறுவனம் தானே அணியை ஏலம்
எடுத்துள்ளது?இவ்வாறு சுப்ரியா சுலே கூறினார்.
ராஜினாமா எப்போது? இந்த விவகாரம் குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர்
ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:ஐ.பி.எல்., ஏல விவகாரம் பற்றி தவறான தகவல்
தந்து திசைதிருப்பிய அமைச்சர் பவார், ராஜினாமா செய்ய வேண் டும். புனே அணி
ஏலத்தில் தந்தையும், மகளும் சம்பந்தப்பட்டிருப்பது வெளியில் வராமல்
தடுக்கப்பட்டிருக்கிறது.இது 1,176 கோடி ரூபாய் சம்பந் தப்பட்ட விஷயம்.
நல்ல ஆட்சி தருவதாக பிரதமர் கூறுகிறார். அப்படி ஆட்சி தருவதாக இருந்தால்,
அமைச் சரவையில் இருந்து பவார் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவ காரம்
குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு நடவடிக்கையும் தேவை.இவ்வாறு
ரவிசங்கர் பிரசாத் கூறினார். ஆனால், இதற்கு பதிலாக காங்., தகவல்
தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், " எதிர்க்கட்சிகளிடம் இருந்து
வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இந்த விஷயத்தில் பவாரே தெளிவாக
பதிலளித்து விட்டார். காங்கிரசின் மதிப்பு மிகுந்த கூட்டணியைச்
சேர்ந்தவர் பவார். சசி தரூர் விஷயத்திற் கும், இதற்கும் சிறிதும்
சம்பந்தம் கிடையாது. இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார். மேலும், இந்த
கிரிக்கெட் ஏலத்தில் பவாருக்கு சிறிதும் தொடர்பில்லை என்று ஐ.பி.எல்.,
விவகாரத்தில் சிக்கி விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் லலித் மோடி
தெரிவித்திருக்கிறார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் ஏல விவகாரம்: பவார் கட்சிக்குத் தொடர்பு?
» சேரன் மகள் காதலை தர்மபுரி சம்பவத்தோடு தொடர்பு படுத்தாதீர்: அமீர் வேண்டுகோள்!
» கிரிக்கெட் சூதாட்டத்திற்கும்- தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும் தொடர்பு
» கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை தொடர்பு * இந்தியா-பாக்., அரையிறுதியில் அதிர்ச்சி
» கன்னித்தன்மையை ஏலம் விட்ட நியூசி பெண் – 36,000 டாலருக்கு ஏலம் போனார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum