Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோபாலபுரம் வீட்டை தானமாக வழங்கினார் முதல்வர்
Page 1 of 1

சென்னை
: முதல்வர் கருணாநிதி தன் கோபாலபுரம் இல்லத்தை, ஏழைகளுக்கு இலவச மருத்துவ
சிகிச்சை அளிக்கும் வகையில், "கலைஞர் கருணாநிதி மருத்துவமனை' அமைப்பதற்காக
அஞ்சுகம் அறக்கட்டளைக்கு நேற்று தானமாக வழங்கினார்.
முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் நான்காவது தெருவில் உள்ள வீட்டில் தன்
மனைவி தயாளுவுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை 1955ம் ஆண்டு சரபேஸ்வர
அய்யரிடமிருந்து கருணாநிதி வாங்கினார். பின், 1968ம் ஆண்டு, தன் மகன்கள்
அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோருக்கு இந்த வீட்டை கருணாநிதி
வழங்கினார்."இந்த இல்லத்தை தான் மற்றும் தன் மனைவி தயாளு காலத்திற்கு
பின், ஏழை மக்கள் மருத்துவ சிகிச்சை பெற மருத் துவமனையாக மாற்ற இலவசமாக
அளிப்பேன்' என, முதல் வர் கருணாநிதி அறிவித்திருந் தார். தன் வாக்குறுதியை
நிறைவேற்றும் வகையில், கருணாநிதியின் மூன்று மகன்களும் வீட்டை
கருணாநிதிக்கே 2009ம் ஆண்டு திருப்பி அளித்தனர்.
கருணாநிதியின் 87வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து,
தானப் பத்திரம் மூலம் நேற்று தன் இல்லத்தை, "கலைஞர் கருணாநிதி
மருத்துவமனை' என்ற பெயரில், "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை'க்கு நன்கொடையாக
அளித்தார். இம்மருத்துவமனையை நிர்வகிக்க, கருணாநிதியின் தாய் பெயரில்,
"அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை' என்ற அறக்கட்டளையை முதல்வர் கருணாநிதி
நிறுவியுள்ளார். தொழிலதிபர் ரங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர்
வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராஜா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை முதல்வர்
கருணாநிதி இந்த அறக்கட்டளைக்கு அறங்காவலர்களாக நியமித்துள்ளார்.
இதற்கான பத்திரப்பதிவு நேற்று காலை 9:45 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில்
நடந்தது. அப்போது, கருணாநிதியின் மனைவி தயாளு, மத்திய அமைச்சர்கள் அழகிரி,
ராஜா, தமிழக அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம்,
முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராஜன், குழந்தைசாமி, குன்றக்குடி
பொன்னம்பல அடிகள், தொழிலதிபர் ரங்கநாதன், இயக்குனர் ராமநாராயணன், கவிஞர்
வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர். மத்திய சென்னை பத்திரப்பதிவுத் துறை
உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹரிஹரன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி,
சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சுதர்சனம், பழனிஆண்டவன், ஆடிட்டர்
சிவசுப்ரமணியம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பத்திரப்பதிவு
நடந்தது.தன் வீட்டை தானமாக வழங்குவதற்கான பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி
கையெழுத்திட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பின் முதல்வர் கருணாநிதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி :
நீங்கள் வாக்களித்தவாறே சொந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டீர்கள். இப்போது உங்கள் உணர்வு எவ்வாறு உள்ளது?
நான் ஆத்திகனாக இருந் தால், ஆத்ம திருப்தி அடைந்ததாக சொல்லியிருப்பேன். ஆனால், நான் நாத்திகன். மனநிறைவு கொள்கிறேன்.
நீங்கள் இம்முடிவு எடுத்தபோது, உங்கள் பிள்ளைகளின் உணர்வு எப்படி இருந்தது?
என் எண்ணத்தை மீறி என் பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள்.
இந்த வீட்டில் எத்தனையோ தலைவர்கள் வந்து உங்களை சந்தித்துள்ளனர்.
எத்தனையே நிகழ்வுகள், திருப்பங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில்
முக்கியமானதாக எதைக் கருதுகிறீர்கள்?
எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் வந்துள்ளனர். அதில் நான் குறிப்பிட்டு சிலரை மட்டும் சொல்வது நல்லதல்ல.
இந்த வீட்டைப் பற்றி நினைவில் கொள்ளத்தக்க நிகழ்ச்சி?
நினைவில் கொள்ளத்தக்க நிகழ்ச்சி, இன்றைக்கு நடக்கும் நிகழ்ச்சி தான்.
உங்களுக்குப் பின் இங்கே அமையவுள்ள மருத்துவமனை எவ்வாறு இயங்கும் என்பதைப் பற்றி அறங்காவலர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்களா?
இது பற்றியெல்லாம் நீங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை, எதிர்காலத்தில் அணுகி விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டை தானமாக வழங்கும் முக்கிய முடிவை எடுக்க முக்கியக் காரணமாக அமைந்தது எது?
முக்கிய காரணத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு இது.
வரும் ஆண்டில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளீர்கள். தி.மு.க., தலைமையில் மாற்றம் வருமா?
மாற்றமும் இல்லை; ஏமாற்றமும் இல்லை.இவ்வாறு முதல்வர் கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ரொக்கபரிசு முதல்வர் வழங்கினார்
» கோபாலபுரம் கோபம் தணிந்த பரபர பின்னணி- இறங்கி வந்த கருணாநிதி!
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» 83 வயதில் சிறுநீரகத்தை தானமாக வழங்கி முதியவர் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum