Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நலம் தரும் நாட்டுக்காய்கள்
Page 1 of 1
நலம் தரும் நாட்டுக்காய்கள்
நலம் தரும் நாட்டுக்காய்கள்
நாட்டுக்காய்கள்
வெளிநாட்டு மோகம் நமக்கு ரொம்பவே அதிகம். அது வாசனைத் திரவியமோ, மின்சாதனப் பொருட்களோ, ஃபாரின் தயாரிப்பு என்றால் பெஸ்ட் என்ற எண்ணம் நம் மனதில் இருக்கிறது. மொழி, வாகனம், ஆடை, வீட்டு உபயோகப் பொருட்களை விட்டுவைக்காத வெளிநாட்டு மோகம் உணவுப் பொருட்களை மட்டும் விட்டுவிடுமா?
இன்று வெளிநாட்டுக் காய்கறிகள், பழங்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. எது வெளிநாட்டுக் காய்கறி என்றே தெரியாத அளவுக்கு, அவை நம் உணவுகளில் ஒன்றாகிவிட்டன.
நம் ஊரில் உள்ள காய்கறி, பழங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. மிகக் குறைந்த விலையில், ஃப்ரெஷ்ஷான, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தவிர்த்துவிட்டு, புரோகோலி, டிராகன் ஃப்ரூட், கிவி என்று வெளிநாட்டுக் காய்கறி, பழங்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இயற்கை அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை, சூழலுக்கு ஏற்ப காய்கறி, பழங்களை அளிக்கிறது. தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டலத்தில், வெயிலைச் சமாளிக்க, உடலில் நீர்ச்சத்து சமநிலையைக் காக்க, தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, முலாம் பழம், புடலங்காய், பீர்க்கங்காய் என விளைகின்றன. இவை தாகத்தைத் தீர்க்கும். வெயிலைச் சமாளிக்க, உடலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். அத்துடன், இவற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் முதல் தொற்றுநோய்கள் வரை வராமல் காக்கும்.
எங்கேயோ, எப்போதோ விளைந்த ஆப்பிள் மாதக் கணக்கில் கோல்ட் ஸ்டோரேஜ் ரூமில் பாதுகாக்கப்பட்டு, மெழுகு பூசப்பட்டு, கலர் துணிகளில் அழகாக பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பொதுவாக, காய்கறியோ, பழமோ பறித்த ஓரிரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். நாளாக ஆக, அதில் உள்ள சத்துக்கள் போய்விடும். இந்தக் காய்கறி, பழங்களோ வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பதப்படுத்தப்பட்டு வருகின்றன.
நம் ஊரில் கிடைப்பதைவிட இறக்குமதி செய்யும் காய்கனிகளில் சத்துக்கள் அதிகம் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல. தாய்லாந்தின் டிராகன் பழத்தைவிட, நம் ஊர் சீதாப்பழத்தில் புற்றுநோய் எதிர்க்கும் சக்தி அதிகம். கேரட்டில் உள்ள சத்துக்கள் அவரைக்காயிலேயே உள்ளன. நம் ஊர் முழு நெல்லிக்காயைச் சாப்பிட்டாலே, ஐந்து ஆப்பிள் பழங்களுக்குச் சமம். ஆப்பிள் பழத்தின் சத்துகளைப் பெற, நெல்லிக்காயும் கொய்யாவுமே போதும். இறக்குமதி காய்கனிகளைச் சுவைப்பது தவறு இல்லை. ஆனால், அதுவே நம் அன்றாடப் பழக்கத்தில் வந்துவிடக் கூடாது.
விலை, தோற்றம், அழகு, நிறம் போன்றவற்றை மனதில் வைத்து உணவை உண்ணாமல், ஆரோக்கியத்துக்காக உணவு உண்ணத் தயாராவதே புத்திசாலித்தனம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய், ஞாபக மறதியைத் தீர்க்க, வெண்டைக்காய், ரத்தசோகை உள்ளவர்களுக்கு அவரைக்காய், அசைவம் சாப்பிடாதோருக்கு முருங்கைக்காய் என நம் நாட்டுக்காய்கறி, பழங்களுமே இயற்கை டாக்டர்தான். காலங்காலமாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட உணவுகள்தான் நம் உடலுக்குப் பொருந்தும். இவற்றைச் சாப்பிடும்போதுதான், இந்தச் சூழலில் வாழும் நமக்கான சத்துக்கள் கிடைக்கப் பெற்று, ஆரோக்கியமாக வாழ முடியும்.
இறக்குமதி காய்கறி, பழங்களைப் பற்றி அரச்சலூர் செல்வம் சொல்ல, அயல்நாட்டுக் காய், கனிகளைச் சாப்பிடலாமா என்று விளக்கமளிக்கிறார், சித்த மருத்துவர் வேலாயுதம். மேலும், நம் ஊர் காய்,கனிகளின் பலன்கள் பற்றி விளக்குகிறார், சித்த மருத்துவர் உலகநாதன்.
அயல்நாட்டுக் காய்கறி, பழங்கள் சாப்பிடலாமா?
[You must be registered and logged in to see this image.]
வெளி நாட்டுக் காய்கறிகளை சாப்பிடவே கூடாது என்று இல்லை. இதுவே, தொடர்ச்சியான உணவுப் பழக்கமாக மாறிவிடக் கூடாது.
பொதுவாக, மார்க்கெட்டில் புதிதாகப் பழமோ, காயோ வந்தால், உடனே வாங்கிவிடக் கூடாது. அவை எங்கிருந்து வருகின்றன… சாப்பிடலாமா? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரிந்துகொண்ட பிறகு சாப்பிடலாம்.
வெளிநாட்டுக் காய்கறி, பழங்களை எப்போதாவது சுவைக்கலாமே தவிர, நம் உணவுத் தட்டில் நாள்தோறும் சாப்பிடுவதற்கான இடத்தைத் தந்துவிடக் கூடாது.
வெளிநாட்டுக் காய்கறி, பழங்கள் விலை அதிகமானவை. உள்ளூர் காய்கறி, பழங்கள் விலை குறைவானவை; அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை.
நம் பாரம்பரிய உணவில் கோதுமை இல்லை. அரிசியை எப்போதாவதுதான் சேர்த்துக்கொண்டனர். முக்கிய உணவுப் பொருளாக, சிறுதானியங்கள்தான் இருந்தன.
சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய அருந்தானியங்களையும், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் என ஊர் காய் மற்றும் கனிகளையும் சாப்பிட்டுவருவதே ஆரோக்கியமான வழிமுறை.
நம் வட்டாரத்தில் விளையும் உணவுகளைச் சாப்பிடும்போது, உடலுக்கு வரும் நோய்கள் தவிர்க்கப்படும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பருவகால காய்கறிகள், பழங்கள் என்னென்ன?
ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம், வாழைப்பழம். பூவன் பழம், மொந்தன், ரஸ்தாலி, தேன் வாழை, செவ்வாழை, நேந்திரம் போன்ற அனைத்தையும் சுவைக்கலாம்.
ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காய்கள், கத்திரி, வெண்டை, தக்காளி. அதாவது இவை 8-9 மாதங்கள் வரை கிடைக்கும்.
எல்லா காலத்திலும் கொடிக் காய்கறிகளைத் சாப்பிடலாம். எந்த உபாதைகளையும் ஏற்படுத்தாது.
சித்திரை, வைகாசி போன்ற இளவேனில் காலத்தில் முள்ளங்கி, பட்டாணி, கீரைகள், பப்பாளி கிடைக்கும்.
கோடை காலத்தில், மாம்பழம், தர்பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், முலாம் பழம், வெள்ளரி, கிர்ணி, நுங்கு, பாகற்காய் கிடைக்கும்.
முன்பனி காலத்தில் பீட்ருட், முட்டைக்கோஸ், கத்திரி, காலிஃபிளவர், தக்காளி, கொய்யா, மாதுளை கிடைக்கும்.
பனிக் காலத்தில், ஆப்பிள், ஆரஞ்சு, கேரட், கீரைகள் கிடைக்கும்.
கொட்டைகள், விதைகள் இல்லாத பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது.
விதைகள் இல்லாத பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, பப்பாளி, தர்பூசணி ஆகியவற்றைத் தவிர்ப்பதே நல்லது. இவை, மரபணு மாற்றப்பட்டு பயிரிடப்படுவதால் உடலுக்கு உகந்தவை அல்ல.
திட்டுத் திட்டாக கறுப்பு நிறத்தில் பழத்தின் தோலில் புள்ளிகள் இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. சீஸன் இல்லாத நேரத்தில் விற்கப்படும் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
நாட்டுக்காய்கறிகள்
கத்திரி, முருங்கை, வெண்டை, பரங்கிக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், அவரை, துவரை, முள்ளங்கி, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் எனக் கடைசியில் ‘காய்’ என முடியும் எல்லாமே நம் ஊர் பாரம்பரியக் காய்கறிகளே. மார்க்கெட் மதிப்புக் குறைவாக இருப்பதால், கொத்தவரங்காய், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவை அதிகம் பயிரிடப் படுவதில்லை.
நாட்டுப்பழங்கள் எவை?
கொய்யா, மாதுளை, சீதாப் பழம், தர்பூசணி, சப்போட்டா, எலுமிச்சை, எலந்தை, நாவல், மாம்பழம், பலாப்பழம், வாழை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நம் ஊரில் விளையும் பழங்கள்.
மொந்தன் வாழைப்பழம் பார்க்க அழகாக இல்லை, தோற்றம் சரி இல்லை என்பதற்காகவே சரியாக விற்பனையாகாததால், இவை அதிகமாகப் பயிரிடப்படுவது இல்லை. இதில் உள்ள சத்துக்களோ ஏராளம். இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்துக்கு ஏற்றது.
நம்முடைய அன்றாடச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை தக்காளி, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு. கடற்கரைக்கு பூங்காவுக்குச் சென்றால் விரும்பிச் சாப்பிடும் நொறுக்குத்தீனி மக்காச்சோளம். இவை எல்லாம் நம் பாராம்பரிய உணவுகள் இல்லை என்றால் நம்புவீர்களா?
ஆம், இவை அனைத்தும் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இங்கே அறிமுகம் செய்யப்பட்டன.
தக்காளியை 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள்தான் அறிமுகம் செய்தனர். இன்று உலகில் அதிக அளவில் தக்காளியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது.
மிளகாயும் அப்படித்தான் வந்தது. இதற்கு முன்பு நாம் புளிப்பு, காரம் சுவைக்கு எதைப் பயன்படுத்தினோம் என்ற சந்தேகம் எழலாம். புளிப்புக்குப் புளி, எலுமிச்சை. காரத்துக்கு மிளகு பயன்படுத்தினோம். ஆரோக்கியமான மிளகை ஏற்றுமதி செய்துவிட்டு, பச்சைமிளகாய்க்கு மாறிவிட்டோம்.
இந்த வெளிநாட்டுக் காய்கறி பழங்களில் ஊட்டச்சத்துக் குறை ஒன்றும் இல்லை. இறக்குமதி செய்து பயன்படுத்தும்போது, சீக்கிரம் கெட்டுப்போகக்கூடாது, அழுகக் கூடாது என்பதற்காக சில ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். கேரட், காலிஃபிளவர் போன்றவற்றைப் பூச்சி மருந்தில் முக்கியே அனுப்புகின்றனர். ஆப்பிளில் மெழுகு பூசப்படுகிறது. இவற்றின் விலையும் மிக அதிகம்
மஞ்சள் தர்பூசணி
[You must be registered and logged in to see this link.]

தவிர்க்க வேண்டியவைகொட்டைகள், விதைகள் இல்லாத பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது.
விதைகள் இல்லாத பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, பப்பாளி, தர்பூசணி ஆகியவற்றைத் தவிர்ப்பதே நல்லது. இவை, மரபணு மாற்றப்பட்டு பயிரிடப்படுவதால் உடலுக்கு உகந்தவை அல்ல.
திட்டுத் திட்டாக கறுப்பு நிறத்தில் பழத்தின் தோலில் புள்ளிகள் இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. சீஸன் இல்லாத நேரத்தில் விற்கப்படும் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
நாட்டுக்காய்கறிகள்
கத்திரி, முருங்கை, வெண்டை, பரங்கிக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், அவரை, துவரை, முள்ளங்கி, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் எனக் கடைசியில் ‘காய்’ என முடியும் எல்லாமே நம் ஊர் பாரம்பரியக் காய்கறிகளே. மார்க்கெட் மதிப்புக் குறைவாக இருப்பதால், கொத்தவரங்காய், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவை அதிகம் பயிரிடப் படுவதில்லை.
நாட்டுப்பழங்கள் எவை?
கொய்யா, மாதுளை, சீதாப் பழம், தர்பூசணி, சப்போட்டா, எலுமிச்சை, எலந்தை, நாவல், மாம்பழம், பலாப்பழம், வாழை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நம் ஊரில் விளையும் பழங்கள்.
மொந்தன் வாழைப்பழம் பார்க்க அழகாக இல்லை, தோற்றம் சரி இல்லை என்பதற்காகவே சரியாக விற்பனையாகாததால், இவை அதிகமாகப் பயிரிடப்படுவது இல்லை. இதில் உள்ள சத்துக்களோ ஏராளம். இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்துக்கு ஏற்றது.
[You must be registered and logged in to see this image.]
வெளிநாட்டுக் காய்கறிகள், பழங்கள்நம்முடைய அன்றாடச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை தக்காளி, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு. கடற்கரைக்கு பூங்காவுக்குச் சென்றால் விரும்பிச் சாப்பிடும் நொறுக்குத்தீனி மக்காச்சோளம். இவை எல்லாம் நம் பாராம்பரிய உணவுகள் இல்லை என்றால் நம்புவீர்களா?
ஆம், இவை அனைத்தும் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இங்கே அறிமுகம் செய்யப்பட்டன.
தக்காளியை 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள்தான் அறிமுகம் செய்தனர். இன்று உலகில் அதிக அளவில் தக்காளியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது.
மிளகாயும் அப்படித்தான் வந்தது. இதற்கு முன்பு நாம் புளிப்பு, காரம் சுவைக்கு எதைப் பயன்படுத்தினோம் என்ற சந்தேகம் எழலாம். புளிப்புக்குப் புளி, எலுமிச்சை. காரத்துக்கு மிளகு பயன்படுத்தினோம். ஆரோக்கியமான மிளகை ஏற்றுமதி செய்துவிட்டு, பச்சைமிளகாய்க்கு மாறிவிட்டோம்.
இந்த வெளிநாட்டுக் காய்கறி பழங்களில் ஊட்டச்சத்துக் குறை ஒன்றும் இல்லை. இறக்குமதி செய்து பயன்படுத்தும்போது, சீக்கிரம் கெட்டுப்போகக்கூடாது, அழுகக் கூடாது என்பதற்காக சில ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். கேரட், காலிஃபிளவர் போன்றவற்றைப் பூச்சி மருந்தில் முக்கியே அனுப்புகின்றனர். ஆப்பிளில் மெழுகு பூசப்படுகிறது. இவற்றின் விலையும் மிக அதிகம்
மஞ்சள் தர்பூசணி
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» நலம், நலம் அறிய ஆவல்!
» உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
» நகங்களும் நலம் சொல்லும்!
» உடல் நலம் பேணுவோம்
» நலம், நலம் அறிய ஆவல்! டாக்டர் ரவிசுப்பிரமணியம், படம்: ஜெ.வேங்கடராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum