Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிஸ்டர் கழுகு: ஜெ-வுக்கு எதிராக கனிமொழி!
Page 1 of 1

கனிமொழி
‘‘எல்லாக் கட்சிகளும் உடைந்துகொண்டு இருக்கின்றன!” என்றபடியே கழுகார் உள்ளே வந்தார்.
‘‘தேர்தல் நேரம் என்றால், யார் யாரோ சேருவார்கள் என்றுதான் பார்த்திருக்கிறோம். இந்த அளவுக்குக் கட்சிகள் இதுவரை உடைந்தது இல்லை” என்றபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.
‘‘தேர்தல் காலங்களில், தமிழக அரசியல் கட்சிகள் தி.மு.க அமைக்கும் அணியில் இருக்க வேண்டும்; அல்லது அ.தி.மு.க அமைக்கும் அணியுடன் இருக்க வேண்டும் என்பதுதான், கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. இதை, 2016 சட்டமன்றத் தேர்தல், அடியோடு மாற்றியது. மக்கள் நலக் கூட்டணியின் தோற்றமும், தனித்துப்போட்டி என்ற பா.ம.க-வின் உறுதியான
நிலைப்பாடும் தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கின. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் குளறுபடி; கூட்டணி அமைப்பதில் இழுபறி; அமைக்கப்பட்ட கூட்டணியால் உள்கட்சி அதிருப்தி என்று ஏகப்பட்ட களேபரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதலில் ம.தி.மு.க-வும், அடுத்து தே.மு.தி.க-வும் த.மா.கா-வும் இந்த அதிர்வலைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன”
‘‘ஆமாம்.”
‘‘மக்கள் நலக் கூட்டணி, தி.மு.க., பி.ஜே.பி என மூன்று பக்கங்களிலும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த விஜயகாந்த், யாரும் எதிர்பார்க்காத வகையில், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து ‘விஜயகாந்த் அணி’யை உருவாக்கினார். இந்த அணியின் உருவாக்கம், தி.மு.க தொண்டர்களை மட்டுமல்ல, அதன் தலைமையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதைவிட அதிகமாக, தே.மு.தி.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் மிரண்டு போனார்கள். அவர்கள், கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுபோல், இந்த முறை தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் பெருவாரியான தொகுதிகளைப் பெற்று எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்று கனவில் இருந்தனர். அதற்காக நேர்காணலின்போதே சீட் கேட்டு விஜயகாந்துக்கு மிகப்பெரிய தொகையை முன்பணமாக கட்டியிருந்தனர். ஆனால், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்ததில், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். வெளியில் சொல்லாமல் புழுங்கிக் கொண்டிருந்தவர்களை, குறிவைத்துத் தூக்கியது தி.மு.க.”
‘‘ம்”
‘‘தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகிய மூவருக்கும் முறையே ஈரோடு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி தொகுதிகள் உறுதியாகிவிட்டன. தி.மு.க-வில் சேர்ந்தால் தனியாகத்தான் போகவேண்டும், தனிக்கட்சி என்றால் நிறைய பேர் வருவார்கள் என்று தனிக்கட்சி ஐடியா துளிர்த்தது. ‘மக்கள் தே.மு.தி.க’ என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார்கள். விஜயகாந்த்தைத் திட்டுவதற்கு சந்திரகுமார் – பார்த்திபன் அணி பல முக்கிய தொகுதிகளுக்குச் செல்லுமாம்.”
‘‘த.மா.கா-வில்?”
[You must be registered and logged in to see this image.]
‘‘காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியதுடன், காங்கிரஸில் இருந்து பலரை அள்ளிக் கொண்டுபோனார். தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும் முதலில் ஜி.கே.வாசனை அணுகியது மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்தான். ஆனால், அவர் பிடிகொடுக்காமல் இருந்தார். புதிதாகத் தொடங்கிய கட்சிக்கு, அரசியல் ஆதாயமாக முதல் தேர்தல் இல்லாமல் போனால், தொண்டர்கள் விரக்தியில் விலகிவிடுவார்கள் என்று கணக்குப்போட்டு, அவரும் விஜயகாந்தைப்போல, எல்லாப் பக்கங்களிலும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இரண்டு மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டதால், ஜி.கே.வாசனால், தி.மு.க-வுடன் அதிகம் பேசமுடியவில்லை. அ.தி.மு.க மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். ஜி.கே.வாசன் 23 சீட்களைக் கேட்க, அ.தி.மு.க தரப்பில் 7 சீட்கள் முதலில் உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால், அதில் அவர்கள் வைத்த கோரிக்கை, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்; பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் போன்ற தி.மு.க விசுவாசிகளுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்பதுதான். இந்தப் பேச்சுவார்த்தை இழுபறியில், கடைசியில் 15 சீட்களுக்கு இறங்கிவந்தார் ஜி.கே.வாசன். அ.தி.மு.க 10 சீட்களைத் தாண்டி வரவில்லை. அதுபோல், இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதிலும் பிடிவாதம் காட்டியது. ஜி.கே.வாசனுக்கு அதில் உடன்பாடில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து, கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளான பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகர், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துடன் ஆலோசிக்கப்படவே இல்லையாம். தன்னுடைய ‘வேகன் ஆர்’ காரில், தனி ஆளாகப் போய் ஜி.கே.வாசன் பேச்சு நடத்திக்கொண்டிருந்தார். அ.தி.மு.க தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதால், வேறு வழியில்லாமல் வைகோவிடம் பேசி மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்தார் ஜி.கே.வாசன்.”
‘‘சொல்லும்’’
‘‘ஜி.கே.வாசன் இப்படி தனித்துவிடப்பட்டார் என்று தெரிந்ததும் பி.ஜே.பி-யும், பா.ம.க-வும் அவரை கொத்திக்கொள்ள நினைத்தன. பி.ஜே.பி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் பேசினார்கள். ஜி.கே.வாசனுக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. ‘காங்கிரஸ் பாரம்பர்யத்தில் இருந்துவந்து பி.ஜே.பி-யுடன் சேர்ந்தால் ஏத்துப்பாங்களான்னு தெரியலை’ என்று மட்டும் பதில் அளித்தார் வாசன். பா.ம.க சார்பில் ராமதாஸே பேசி இருக்கிறார். ‘நீங்கள் பா.ம.க. கூட்டணிக்கு வந்தால் அதை வைத்து நாமே பி.ஜே.பி-யுடன் பேசலாம்’ என்று ராமதாஸ் சொல்லி இருக்கிறார். ஆனால், அவரது ஒரே நிபந்தனை, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது. இதற்கு ஜி.கே.வாசன் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில்தான், மக்கள் நலக் கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டினார்.
‘‘பீட்டர், எஸ்.ஆர்.பி. போன்றவர்கள் கழன்று கொண்டார்களே?”
‘‘தி.மு.க-வுக்கு அழைத்துச் செல்லத் துடித்தவர் பீட்டர். அ.தி.மு.க-வுக்கு அழைத்துச் செல்ல நினைத்தவர் எஸ்.ஆர்.பி. அதனால்தான் அவர்கள் விலகினார்கள். உண்மையில், ஞானதேசிகனுக்குதான் கோபம் வந்திருக்க வேண்டும். அவர்தான் அ.தி.மு.க-வுடன் கடைசி வரை பேச்சு நடத்தியவர். அவர்கள் சீட் அதிகப்படுத்தவில்லை என்று தெரிந்ததுமே, ‘இதை விட்டுவிடுவது நல்லது’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார். தலைமை முடிவே இறுதியானது என்று அமைதியாகிவிட்டார்!”
‘‘தி.மு.க-வில் பீட்டர் அல்போன்ஸுக்கு சீட் கிடைக்குமா?”
‘‘பீட்டர் அல்போன்ஸால் காங்கிரஸில் போய் இணையவும் முடியாது. ஏனென்றால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் பீட்டர் அல்போன்ஸுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால், டெல்லியில் ராகுல் மற்றும் சோனியாவுக்கு தூது அனுப்பி காங்கிரஸில் இணைய நாள் குறித்துக் கொண்டிருக்கிறார். அவர் இணைந்ததும் காங்கிரஸுக்கு தி.மு.க ஒதுக்கி உள்ள இடங்களில் சிறிய மாற்றம் செய்து, பீட்டர் அல்போன்ஸுக்கு சங்கரன்கோவில் அல்லது தென்காசி தொகுதி ஒதுக்கப்படும். எஸ்.ஆர்.பி அ.தி.மு.க-வில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறார்.”
‘‘அ.தி.மு.க கூட்டணியில் பலருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்களே?”
‘‘நீண்டகாலமாக அ.தி.மு.க-வை ஆதரித்து வந்த வேல்முருகன், ஜான்பாண்டியன், டாக்டர் சேதுராமன், ஃபார்வர்டு பிளாக் கதிரவன் என பலருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அதே நேரம், யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர்களுக்கும், தி.மு.க பக்கம் போய்விட்டு திரும்பி வந்தவர்களுக்கும் சீட் கொடுத்து, எல்லோரையும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைய வைத்திருக்கிறார் ஜெயலலிதா.
மனிதநேய மக்கள் கட்சி ஆரம்பத்தில் அ.தி.மு.க உடன் கூட்டணி சேரப் பேச்சுவார்த்தை நடத்தியது. அ.தி.மு.க கூட்டணிதான் தங்களுக்கு வசதியானது என்று நினைத்தனர். ஆனால், அவர்களைச் சேர்க்க சசிகலா தரப்பினர் மறுத்துவிட்டனர். ‘கடந்த தேர்தலில் இரண்டுபேரை வெற்றி பெற வைத்தோம். ஆனால், ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் கனிமொழிக்கும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும் ஆதரவு கொடுத்தார்கள்’ என்ற அதிருப்தியை வெளிப்படுத்தவே, ம.ம.க-வை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்ற தகவல் வந்தது. உடனே அதுவரை தி.மு.க-வை விமர்சித்து வந்த இவர்கள், தி.மு.க பக்கம் தாவி ஐந்து சீட்டுகளைப் பெற்றார்கள்.
தி.மு.க அணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் முஸ்லீம் லீக்குக்கு ஐந்து சீட்டுகளும், ம.ம.க-வுக்கு ஐந்து சீட்டுகளும் ஒதுக்கப்பட்டதை எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள். ‘முஸ்லீம் கட்சிகளுக்கு பத்து இடங்களை தி.மு.க ஒதுக்கியது இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், இது தி.மு.க-வுக்கு சாககமாக அமையும்’ என்றும் முதல்வருக்கு உளவுத் துறை நோட் போட்டது. என்னதான் ஷேக்தாவூத்தின் தமிழ் மாநில முஸ்லீம் லீக், பாக்கரின் ஐ.என்.டி.ஜே போன்றவர்கள் அ.தி.மு.க அணிக்கு சப்போர்ட் பண்ணினாலும், அவை போதாது என்பதையும் உளவுத் துறை கூறியது. வலுவான முஸ்லீம் அமைப்புகளை அ.தி.மு.க அணிக்குக் கொண்டுவரும் பொறுப்பு ராமநாதபுரம் எம்.பி-யான அன்வர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.”
‘‘ஓஹோ!”
‘‘அன்வர் ராஜா தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, ம.ம.க-விடமிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்திருக்கும் தமீமுன் அன்சாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐவர் குழு, ‘உங்களுக்கு தஞ்சை, நாகை மாவட்டத்தில் மட்டும்தான் கொஞ்சம் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் இல்லை. கட்சி ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. உங்கள் கட்சியின் வளர்ச்சி எவ்வளவு என்பது எங்களுக்குத் தெரியும். ஐ.எஸ். ரிப்போர்ட் உள்ளது. அப்படியிருந்தும் உங்களுக்கு இரண்டு சீட் ஒதுக்க உள்ளோம். அதற்கு செல்வாக்கான ஒரு முஸ்லீம் அமைப்பு உங்களுக்கு கியாரன்டி தர வேண்டும். அவர்கள் ஓகே என்றால் உங்களுக்கு சீட். இல்லையென்றால் அ.தி.மு.க-வை ஆதரித்து பிரசாரம் செய்யுங்கள். அதற்கு உண்டான உதவிகளை செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து அன்சாரி தரப்பினர், தேர்தலில் ஈடுபடாத மற்றொரு அமைப்பின் தலைவரிடம் நீண்ட காலத்துக்குப் பின் பேசியிருக்கிறார்கள். அன்வர் ராஜாவும் அந்த அமைப்பினரிடம் பேசியிருக்கிறார். ‘நாங்கள் தேர்தல் நிலைப்பாடு எடுக்கவில்லை. அதனால், வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது. அதேநேரம் தி.மு.க தோற்க வேண்டும். அதனுடன் இணைந்த ம.ம.க-வும், முஸ்லீம் லீக்கும் தோற்க வேண்டும். அதற்கான வேலைகளைச் செய்வோம். அன்சாரிக்கு சீட் கொடுங்கள்; எங்கள் அமைப்பினர் வாக்களிப்பார்கள்’ என்று அவர்கள் உத்தரவாதம் கொடுத்த பின்தான் அன்சாரி தரப்பினர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.”
‘‘அப்படியா?”
‘‘இதேபோல் தி.மு.க-வில் தங்களுக்கு அதிக சீட் கிடைக்கும் என்று தீவிரமாக ஆதரித்து வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை, ‘உங்கள் மீது விமர்சனம் உள்ளது. சர்ச்சைக்குரிய அமைப்பு’ என்று தி.மு.க-வினர் இவர்களைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் ஒரு சீட் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடன்படாமல் மக்கள் நலக் கூட்டணிக்குப் போக முடிவு செய்தபோது, அன்வர் ராஜா அவர்களை அணுகினார். அ.தி.மு.க-வில் ஐந்து சீட்களை எதிர்பார்த்த அவர்களுக்கும் ஒரு சீட் வழங்க முடிவு செய்யப்பட்டது. ‘தி.மு.க-வில் ஐந்து சீட் வாங்குவது வேஸ்ட், அ.தி.மு.க-வில் ஒரு சீட் வாங்கினாலும் அது நீங்கள் ஜெயிச்ச மாதிரி’ என்று அன்வர் ராஜா சொன்னார். அதில் ஓரளவு கன்வின்ஸ் ஆனாலும், அடுத்துப் போட்ட கண்டிஷனை அவர்கள் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கடைசி வரை அவர்களை கன்வின்ஸ் செய்தும், முடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அதிகமான இஸ்லாமிய வாக்குகளை அ.தி.மு.க பக்கம் கொண்டு வராவிட்டால், அன்வர் ராஜாவுக்கு சிக்கல் என்பதால், தினமும் ஒவ்வொரு முஸ்லீம் அமைப்பாகத் தொடர்பு கொண்டு வருகிறார்” என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ ‘சிறுதாவூர் பங்களாவில் பத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் நிற்கின்றன. அதில் கோடிக்கணக்கான ரூபாய் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பதற்காகக் கொண்டுவந்து இருக்கிறார்கள். பங்களாவில் உள்ள ரகசிய அறைகளில் அந்தப் பணத்தை வைத்திருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் பங்களாவை சோதனையிட வேண்டும்’ என்று மார்ச் 29-ம் தேதி அறிக்கை கொடுத்தார் வைகோ. தேர்தல் கமிஷனுக்கு வைகோ புகாராகவும் அளித்தார். இது நாளேடுகளில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. மாவட்ட ஆட்சியருக்கு சிக்கல் உருவானது. ஆனால், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. பங்களாவில் என்ன இருக்கிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், எஸ்.பி-யிடமும் விளக்கம் பெறப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். சிலநாட்களில் பங்களாவில் பணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டதாக அறிவித்தார். ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அங்கே ஆய்வு எதுவும் செய்யவில்லை. ஆய்வுக்கு யாரை அனுப்பினார்கள்? என்பது குறித்து விளக்கமும் கொடுக்கவில்லை என வைகோ தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். மீடியாக்களில் இது தொடர்ந்து விவாதப் பொருளாக மாறியது. இதையெல்லாம் பி.ஆர்.ஓ கட்டுப்படுத்தவே இல்லை என மாவட்ட ஆட்சியருக்கு பி.ஆர்.ஓ. மீது எரிச்சலை உண்டாக்கியது. அதனால் பாரதிதாசன், பாபு ஆகிய பி.ஆர்.ஓ-க்கள் மாற்றப்பட்டுள்ளனராம்’’
‘‘காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு என்ன ஆனது?’’
‘‘27 பேர் கொண்ட குழுவை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது. அதில் இளங்கோவன், சிதம்பரம், செல்லக்குமார், குமரி அனந்தன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்கள் 11-ம் தேதி சத்யமூர்த்தி பவனில் சந்தித்தார்கள். 41 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இளங்கோவன் பேசும்போது, ‘வெற்றி உறுதி என்கிற அளவுக்குத் தொகுதிக்கு ஓர் ஆளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பெயரைத்தான் சொல்ல வேண்டும். ஒருவர் சொன்ன பெயரை மற்றவர் சொல்லக் கூடாது என்ற கண்டீஷனோடு கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். லிஸ்ட் தயாரிக்க ஒரு வாரம் ஆகுமாம்.’’
‘‘ஒற்றுமையாக இருந்தால் சரி.’’
‘‘கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் 11-ம் தேதி மாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்து பயபக்தியோடு சாமி கும்பிட்டார். வேட்பாளர் லிஸ்ட் வெளியாக இருக்கும் நேரத்தில் பெருமாளிடம் முக்கியமான வேண்டுகோளோடு வந்துபோனார் என்கிறார்கள்.’’
‘‘பார்த்தசாரதி பெருமாள், ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வமாயிற்றே?’’
சிரித்த கழுகார், “எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்ட தி.மு.க. தலைமை, ஜெயலலிதா போட்டியிடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகருக்கு மட்டும் யாரை வேட்பாளராகப் போடுவது என்று குழப்பத்தில் இருக்கிறதாம். வலுவான வேட்பாளரைப் போட வேண்டும் என்று நினைக்கிறதாம். செல்வாக்கான பெண்ணாக இருக்க வேண்டும் என்று யோசிக்கிறாராம் ஸ்டாலின். அவருக்கு ஒரு யோசனை… ஜெயலலிதாவை எதிர்த்து கனிமொழியை நிறுத்தினால் என்ன என்று. முதல்கட்ட ஆலோசனையில்தான் இந்த விஷயம் இருக்கிறது. ஒருவேளை கனியலாம்” என்றபடி பறந்தார்!

Similar topics
» மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுக்கு 19 தொகுதிகள் அபாயம்!
» மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!
» மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
» மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!
» மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்குள் அ.தி.மு.க. ஆதிக்கமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum