Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்குள் அ.தி.மு.க. ஆதிக்கமா?
Page 1 of 1

ஆதிக்கமா
‘‘கலகலப்பு, உற்சாகம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்துவிட்டது தி.மு.க செயற்குழு” என்றபடி வந்து லேண்ட் ஆனார் கழுகார்.
‘‘எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தது தி.மு.க. ஆனால், தோற்றுப் போய்விட்டது. தன்னை ஆறாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கி விடுவார் என்று கருணாநிதி நினைத்தார். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். இந்த அப்பா – மகன் தகராறு ரிசல்ட் வந்த அன்று காலையில் தொடங்கி, இன்னும் தொடர்கிறது.”
‘‘சொல்லும்.”
‘‘தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு, புதிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் 24-ம் தேதி நடைபெற்றது. 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கருணாநிதி 9.45 மணிக்கே அரங்கத்துக்கு வந்துவிட்டார். மேடையில் இருக்க வேண்டிய பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் அதுவரை வரவே இல்லை. அவர்கள் இல்லாதது பற்றி ஆர்.எஸ்.பாரதியிடம் கருணாநிதி கேட்டார். ஏதோ இழுத்தார் பாரதி. மணி 10 ஆனதும் ‘கூட்டத்தை ஆரம்பியுங்கள்’ என்று கூறினார் கருணாநிதி. யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. துரைமுருகனைப் பார்த்து, ‘நீ பேச்சைத் தொடங்கு’ என்று கருணாநிதி கூறினார். துரைமுருகன் நெளிந்தார். மனசு நெளிந்ததே தவிர… உடம்பு நெளியவில்லை. ஸ்டாலின் வருவதற்கு முன்பே எப்படிப் பேசுவது என்று துரைமுருகன், தயக்கம் காட்டினார். அப்போது கருணாநிதிக்குப் பக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி போனார். மெதுவாக, ‘தளபதி வந்துட்டு இருக்கார். காலையில் உடல்நிலை கொஞ்சம் சரியில்லையாம். அதனால் கொஞ்சம் லேட்டாகக் கிளம்பியுள்ளார்’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். ‘ம்…’ என்றாராம் கருணாநிதி. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. அப்போது கருணாநிதிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. அரை மணிநேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தார் கருணாநிதி.”
[You must be registered and logged in to see this image.]
‘‘இருக்காதா?”
‘‘10.15 மணிக்கு ஸ்டாலின், ஐ.பெரியசாமி ஆகியோர் வந்தார்கள். நேராக மேடைக்குப் போனார்கள். கருணாநிதிக்கும் கூட்டத்துக்கும் வணக்கம் வைத்தார் ஸ்டாலின். கூட்டம் ஆரம்பமாகியது. அவர் வந்தவுடன் துரைமுருகன் பேச்சைத் தொடங்கினார். ‘தலைவரும், தளபதியும் இந்தத் தேர்தலில் கடுமையாகப் பிரசாரம் மேற்கொண்டும், நாம் சிறிய எதிர்பாராதத் தோல்வியைச் சந்தித்து இருக்கிறோம். ஸ்டாலின் உழைப்பு வீண் போகாது. அவர் நிச்சயம் முதலமைச்சராக உட்காருவார். பவருக்கு வருவோம் என்று நினைத்தோம். ஆனால், இப்போது பவர்ஃபுல் ஆகி இருக்கோம். இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விக்கான காரணங்களை இங்கு அலசி ஆராயலாம்’ என்று கிச்சுகிச்சு மூட்டினார். ‘விருப்பப்பட்டவர்கள் மேடைக்கு வந்து பேசுங்கள்’ என்று கூறி துரைமுருகன் தனது சீட்டில் அமர்ந்தார்.
‘‘கோவையைச் சேர்ந்த மீனா லோகுவின் (கோவை வடக்கு) பேச்சில் அனல் பறந்தது. ‘வேட்பாளராகத் தலைவர் என்னை அறிவித்ததும், மாவட்டச் செயலாளரைப் போய்ப் பார்த்தேன். உட்கட்சித் தேர்தலில் உன்னால்தான் எனக்கு ஒன்னரைக் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. அதுக்கு நான் வட்டிகட்ட முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். ஒரு பொம்பளை பின்னாடி வந்து நான் ஓட்டு கேட்க வரணுமா? என்று கேட்டார். அப்படிச் சொல்லிவிட்டு ஒரு பொம்பளைய ஆட்சியில உட்கார வைத்துவிட்டார்கள் நம் கட்சி நிர்வாகிகள்’ என்று சொல்லிக் கண்கலங்கினார். அங்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் வீரகோபால். ‘தேர்தல் பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு எனக்கு இல்லை. தேர்தல் வேலைக்கு வட்டச் செயலாளர் ஒருவரைக் கூப்பிட்டேன். எனக்குச் சொந்த வேலை இருக்கிறது என்று அவர் வர மறுத்துவிட்டார். என்னைத் திட்டமிட்டே தோற்கடித்தார்கள்’ என்று போட்டு உடைத்தார். இவர் பேசியதற்கு ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.”
‘‘என்ன சொல்ல முடியும்?”
‘‘கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பேச்சு பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ‘நாம் 174 தொகுதிகளில் நின்று 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால், கூட்டணிக்கு ஒதுக்கிய 60 சீட்டுகளில் ஒன்பது இடங்களில்தான் வெற்றிபெற்று இருக்கிறோம். கை சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சியினர் படாதபாடு பட்டுள்ளார்கள். மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்ற கராத்தே தியாகராஜனிடம் சிலர் இங்கு உதயசூரியன் நிற்கலையா? என்று கேட்டுள்ளார்கள். எனவே, வரும் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும்போது அளவாகக் கொடுத்தால் போதும். அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கு சீட் கொடுத்தால் அவர்களை உதயசூரியன் சின்னத்திலே நிற்கச் சொல்ல வேண்டும். கூட்டணிகளுக்குக் கொடுத்த 60 தொகுதிகளில், பாதியை ஜெயித்து இருந்தால் நாம் ஆட்சியைக் கைப்பற்றி இருப்போம். இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டு்ம் என்று இந்தத் தேர்தலில் சிலர் கிளம்பினார்கள். அவர்கள்தான் வீழ்ந்திருக்கிறார்கள்’ என்று பேசிக்கொண்டிருந்தபோது கீழே அமர்ந்திருந்த தஞ்சை பழனிமாணிக்கம் குறுக்கிட்டு, ‘நீங்கள் அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர்தானே? இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்து சீட் வாங்கி ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களையும் சொல்லுங்கள். வந்தவர்கள் ஆதிக்கம் அதிகம் ஆகிவிட்டது’ என்றார்.
அதற்கு காசி முத்துமாணிக்கம், ‘யார் எங்கிருந்து தி.மு.க-வுக்கு வந்தாலும், கட்சியில் சேர்ந்த பிறகு, அவர்கள் தி.மு.க-தான். அவர்களில் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். பழனிமாணிக்கம் முடிவு செய்ய வேண்டியது இல்லை. மாடுபிறக்கும்போது, காதோடு பிறக்கிறது, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்துதான் அதற்கு கொம்பு முளைக்கும். ஜல்லிக்கட்டில் நிற்கும் மாடு, எதிரிகளை வீழ்த்தக் காதுகளின் மூலம் தகவலைப் பெற்று அதை மூளைக்குக் கொண்டு சென்று கொம்புகள் மூலம் எதிரிகளைக் குத்தி வீழ்த்தும். போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால், பிறக்கும்போது இருந்த காதும்வேண்டும், பின்னர் வந்த கொம்பும் வேண்டும். யார் யார், எதற்குத் தேவையோ அதற்கு ஏற்றாற்போல் தலைமை பயன்படுத்தும். எனவே, கட்சிக்குப் பழையவர்களும் வேண்டும், புதியவர்களும் வேண்டும்’ என்றார்.”
‘‘எ.வ.வேலு, முத்துசாமி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ஜெகத்ரட்சகன், ரகுபதி ஆகியோரைச் சொல்கிறாரா பழனிமாணிக்கம்?”
‘‘இருக்கலாம். ‘ஒரத்தநாடு தொகுதியை இவரது தம்பிக்கு கட்சி கொடுத்தது. அதில் தி.மு.க-வை ஜெயிக்கவைக்க துணிச்சல் இல்லாமல் வைத்திலிங்கத்தைப் பார்த்து பயந்து ஓடிய மாவீரன் பழனிமாணிக்கம். அவருக்கு இதைக் கேட்க என்ன உரிமை இருக்கிறது?’ என்று அரங்கத்துக்குள் இருந்த சிலர் பேசிக்கொண்டார்கள். ஒரத்தநாடு வைத்திலிங்கம், தி.மு.க-விடம் தோற்றுப் போய்விட்டதுதான் அரசியல் அதிசயம்!”
‘‘வாபஸ் வாங்கியதே மர்மம் என்று தஞ்சை மாவட்டத்தில் பேசப்படுகிறதே?”
‘‘இருக்கலாம். பங்காளிகளுக்குள் இதெல்லாம் இருக்காதா என்ன? மதுரை மூர்த்தி பேசும்போது, ‘கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை இனியாவது தலைவர் கண்டுகொள்ளவேண்டும். கட்சிக்குள் இருந்துகொண்டு துரோகம் செய்துவிட்டு, கட்சி நடவடிக்கை எடுத்தவுடன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சியில் சேர்த்துக்கொள்கிறீர்கள். திரும்பவும் அவர்கள் அதேபோல் துரோகத்தைதான் செய்கிறார்கள்’ என்று அழகிரியை மறைமுகமாகத் தாக்கினார்.
மேலூர் தியாகராஜன் என்பவர், ‘கட்சியில் தலைமையைச் சுற்றியிருப்பவர்களுக்குத்தான், கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்போதுகூட ராஜ்ய சபா எம்.பி-க்கள் அறிவிப்பில்கூட தலைமையைச் சுற்றி இருக்கும், சென்னையைச் சேர்ந்த இருவருக்குத்தான் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்துக்கும் வாய்ப்புக் கொடுங்கள்’ என்று அவர் கூறியதை பெரும்பாலானவர்கள் ஆமோதித்தனர்.”
‘‘ம்.”
‘‘குளித்தலை சிவராமன் பேசியபோது, ‘இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் நமக்கு எந்த லாபமும் இல்லை. கூட்டணி பலமும் இல்லை. தனி பலத்தில்தான் இந்தத் தேர்தலைச் சந்தித்தோம். நாம் தனித்து நின்று இருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும். உள்ளாட்சித் தேர்தலில், இந்த விஷயத்தைத் தலைமை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
திருச்சி சிவா பேசியபோது, ‘காசி முத்துமாணிக்கம் பேசியபோது இரண்டு திராவிடக் கட்சிகள் என்றார். இது தவறு. தமிழகத்தில் இருப்பது ஒரு திராவிடக் கட்சிதான். அ.தி.மு.க என்பது போலியான திராவிடக் கட்சி. ஆனால், போலிகளைத்தான் மக்கள் நம்புகிறார்கள். நூல் இழையில்தான் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டுள்ளோம். கொள்கை ரீதியாக இளைஞர்களை இழுக்க வேண்டும். மாவட்டம்தோறும் பாசறைக் கூட்டங்களை தளபதி நடத்த வேண்டும்’ என்றார்!”
‘‘ஓஹோ!”
‘‘இப்படிப் பலரும் வெற்றி தோல்வி குறித்து காரசாரமாகக் கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். 11 மணிக்கு, கூட்டத்தில் இருந்தவர்களுக்கு சரவண பவன் காபியும், மசாலா வடையும் பறிமாறப்பட்டது. கருணாநிதியும் வடை சாப்பிட்டார். அனைவரும் பேசிமுடித்தவுடன் ஆர்.எஸ்.பாரதி, அன்பழகனைப் பேச அழைத்தார். அவர் இருக்கையில் அமர்ந்தவாறே ஒரு கும்பிடு போட்டு, பேச விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஸ்டாலினும் பேச மறுத்து விட்டார். உடனே ஆர்.எஸ்.பாரதி, ‘தலைவர் உங்களுக்கு இப்போது ஆலோசனை வழங்குவார்’ என்றார். கருணாநிதியும் எரிச்சலில் இருக்கிறார் என்பது அவரது பேச்சில் தெரிந்தது.
‘‘தி.மு.க-வில் ராஜ்ய சபா எம்.பி-க்கு கடும் போட்டி நிலவியதாமே?”
‘‘தி.மு.க-வில் பழம் பெருச்சாளிகள் அனைவரும் இதை எதிர்பார்த்தார்கள். குறிப்பாக டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பவானி ராஜேந்திரன், பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆர்.எஸ்.பாரதிக்கும், டி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் கொடுத்துவிட்டார். ஆனால், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை சண்முகத்துக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். இதிலும் அப்பா – மகன் சண்டை” என்றபடி எழுந்த கழுகார்,
‘‘சட்டமன்ற தி.மு.க குழுத் தலைவராக ஸ்டாலினும் துணைத் தலைவராக துரைமுருகனும் கொறடாவாக சக்கரபாணியும் துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். கொறடா, துணைக் கொறடா பதவி பொன்முடி, எ.வ.வேலுவுக்கு தரப்படும் என்று பலரும் நினைத்தார்கள். அப்படி கொடுக்காதது பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது” என்றபடி பறந்தார்.
ஆதிக்கமா
‘‘கலகலப்பு, உற்சாகம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்துவிட்டது தி.மு.க செயற்குழு” என்றபடி வந்து லேண்ட் ஆனார் கழுகார்.
‘‘எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தது தி.மு.க. ஆனால், தோற்றுப் போய்விட்டது. தன்னை ஆறாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கி விடுவார் என்று கருணாநிதி நினைத்தார். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். இந்த அப்பா – மகன் தகராறு ரிசல்ட் வந்த அன்று காலையில் தொடங்கி, இன்னும் தொடர்கிறது.”
‘‘சொல்லும்.”
‘‘தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு, புதிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் 24-ம் தேதி நடைபெற்றது. 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கருணாநிதி 9.45 மணிக்கே அரங்கத்துக்கு வந்துவிட்டார். மேடையில் இருக்க வேண்டிய பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஆகியோர் அதுவரை வரவே இல்லை. அவர்கள் இல்லாதது பற்றி ஆர்.எஸ்.பாரதியிடம் கருணாநிதி கேட்டார். ஏதோ இழுத்தார் பாரதி. மணி 10 ஆனதும் ‘கூட்டத்தை ஆரம்பியுங்கள்’ என்று கூறினார் கருணாநிதி. யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. துரைமுருகனைப் பார்த்து, ‘நீ பேச்சைத் தொடங்கு’ என்று கருணாநிதி கூறினார். துரைமுருகன் நெளிந்தார். மனசு நெளிந்ததே தவிர… உடம்பு நெளியவில்லை. ஸ்டாலின் வருவதற்கு முன்பே எப்படிப் பேசுவது என்று துரைமுருகன், தயக்கம் காட்டினார். அப்போது கருணாநிதிக்குப் பக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி போனார். மெதுவாக, ‘தளபதி வந்துட்டு இருக்கார். காலையில் உடல்நிலை கொஞ்சம் சரியில்லையாம். அதனால் கொஞ்சம் லேட்டாகக் கிளம்பியுள்ளார்’ என்று கருணாநிதியிடம் தெரிவித்தார். ‘ம்…’ என்றாராம் கருணாநிதி. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை. அப்போது கருணாநிதிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. அரை மணிநேரம் அசையாமல் உட்கார்ந்து இருந்தார் கருணாநிதி.”
[You must be registered and logged in to see this image.]
‘‘இருக்காதா?”
‘‘10.15 மணிக்கு ஸ்டாலின், ஐ.பெரியசாமி ஆகியோர் வந்தார்கள். நேராக மேடைக்குப் போனார்கள். கருணாநிதிக்கும் கூட்டத்துக்கும் வணக்கம் வைத்தார் ஸ்டாலின். கூட்டம் ஆரம்பமாகியது. அவர் வந்தவுடன் துரைமுருகன் பேச்சைத் தொடங்கினார். ‘தலைவரும், தளபதியும் இந்தத் தேர்தலில் கடுமையாகப் பிரசாரம் மேற்கொண்டும், நாம் சிறிய எதிர்பாராதத் தோல்வியைச் சந்தித்து இருக்கிறோம். ஸ்டாலின் உழைப்பு வீண் போகாது. அவர் நிச்சயம் முதலமைச்சராக உட்காருவார். பவருக்கு வருவோம் என்று நினைத்தோம். ஆனால், இப்போது பவர்ஃபுல் ஆகி இருக்கோம். இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விக்கான காரணங்களை இங்கு அலசி ஆராயலாம்’ என்று கிச்சுகிச்சு மூட்டினார். ‘விருப்பப்பட்டவர்கள் மேடைக்கு வந்து பேசுங்கள்’ என்று கூறி துரைமுருகன் தனது சீட்டில் அமர்ந்தார்.
[You must be registered and logged in to see this image.]
“மற்றவர்கள் பேசிய சோக கீதங்களைச் சொல்லும்!”‘‘கோவையைச் சேர்ந்த மீனா லோகுவின் (கோவை வடக்கு) பேச்சில் அனல் பறந்தது. ‘வேட்பாளராகத் தலைவர் என்னை அறிவித்ததும், மாவட்டச் செயலாளரைப் போய்ப் பார்த்தேன். உட்கட்சித் தேர்தலில் உன்னால்தான் எனக்கு ஒன்னரைக் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. அதுக்கு நான் வட்டிகட்ட முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். ஒரு பொம்பளை பின்னாடி வந்து நான் ஓட்டு கேட்க வரணுமா? என்று கேட்டார். அப்படிச் சொல்லிவிட்டு ஒரு பொம்பளைய ஆட்சியில உட்கார வைத்துவிட்டார்கள் நம் கட்சி நிர்வாகிகள்’ என்று சொல்லிக் கண்கலங்கினார். அங்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் வீரகோபால். ‘தேர்தல் பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு எனக்கு இல்லை. தேர்தல் வேலைக்கு வட்டச் செயலாளர் ஒருவரைக் கூப்பிட்டேன். எனக்குச் சொந்த வேலை இருக்கிறது என்று அவர் வர மறுத்துவிட்டார். என்னைத் திட்டமிட்டே தோற்கடித்தார்கள்’ என்று போட்டு உடைத்தார். இவர் பேசியதற்கு ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.”
‘‘என்ன சொல்ல முடியும்?”
‘‘கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பேச்சு பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ‘நாம் 174 தொகுதிகளில் நின்று 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால், கூட்டணிக்கு ஒதுக்கிய 60 சீட்டுகளில் ஒன்பது இடங்களில்தான் வெற்றிபெற்று இருக்கிறோம். கை சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சியினர் படாதபாடு பட்டுள்ளார்கள். மயிலாப்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்ற கராத்தே தியாகராஜனிடம் சிலர் இங்கு உதயசூரியன் நிற்கலையா? என்று கேட்டுள்ளார்கள். எனவே, வரும் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும்போது அளவாகக் கொடுத்தால் போதும். அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கு சீட் கொடுத்தால் அவர்களை உதயசூரியன் சின்னத்திலே நிற்கச் சொல்ல வேண்டும். கூட்டணிகளுக்குக் கொடுத்த 60 தொகுதிகளில், பாதியை ஜெயித்து இருந்தால் நாம் ஆட்சியைக் கைப்பற்றி இருப்போம். இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டு்ம் என்று இந்தத் தேர்தலில் சிலர் கிளம்பினார்கள். அவர்கள்தான் வீழ்ந்திருக்கிறார்கள்’ என்று பேசிக்கொண்டிருந்தபோது கீழே அமர்ந்திருந்த தஞ்சை பழனிமாணிக்கம் குறுக்கிட்டு, ‘நீங்கள் அ.தி.மு.க-வில் இருந்து வந்தவர்தானே? இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்து சீட் வாங்கி ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களையும் சொல்லுங்கள். வந்தவர்கள் ஆதிக்கம் அதிகம் ஆகிவிட்டது’ என்றார்.
அதற்கு காசி முத்துமாணிக்கம், ‘யார் எங்கிருந்து தி.மு.க-வுக்கு வந்தாலும், கட்சியில் சேர்ந்த பிறகு, அவர்கள் தி.மு.க-தான். அவர்களில் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். பழனிமாணிக்கம் முடிவு செய்ய வேண்டியது இல்லை. மாடுபிறக்கும்போது, காதோடு பிறக்கிறது, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்துதான் அதற்கு கொம்பு முளைக்கும். ஜல்லிக்கட்டில் நிற்கும் மாடு, எதிரிகளை வீழ்த்தக் காதுகளின் மூலம் தகவலைப் பெற்று அதை மூளைக்குக் கொண்டு சென்று கொம்புகள் மூலம் எதிரிகளைக் குத்தி வீழ்த்தும். போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால், பிறக்கும்போது இருந்த காதும்வேண்டும், பின்னர் வந்த கொம்பும் வேண்டும். யார் யார், எதற்குத் தேவையோ அதற்கு ஏற்றாற்போல் தலைமை பயன்படுத்தும். எனவே, கட்சிக்குப் பழையவர்களும் வேண்டும், புதியவர்களும் வேண்டும்’ என்றார்.”
‘‘எ.வ.வேலு, முத்துசாமி, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ஜெகத்ரட்சகன், ரகுபதி ஆகியோரைச் சொல்கிறாரா பழனிமாணிக்கம்?”
‘‘இருக்கலாம். ‘ஒரத்தநாடு தொகுதியை இவரது தம்பிக்கு கட்சி கொடுத்தது. அதில் தி.மு.க-வை ஜெயிக்கவைக்க துணிச்சல் இல்லாமல் வைத்திலிங்கத்தைப் பார்த்து பயந்து ஓடிய மாவீரன் பழனிமாணிக்கம். அவருக்கு இதைக் கேட்க என்ன உரிமை இருக்கிறது?’ என்று அரங்கத்துக்குள் இருந்த சிலர் பேசிக்கொண்டார்கள். ஒரத்தநாடு வைத்திலிங்கம், தி.மு.க-விடம் தோற்றுப் போய்விட்டதுதான் அரசியல் அதிசயம்!”
‘‘வாபஸ் வாங்கியதே மர்மம் என்று தஞ்சை மாவட்டத்தில் பேசப்படுகிறதே?”
‘‘இருக்கலாம். பங்காளிகளுக்குள் இதெல்லாம் இருக்காதா என்ன? மதுரை மூர்த்தி பேசும்போது, ‘கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை இனியாவது தலைவர் கண்டுகொள்ளவேண்டும். கட்சிக்குள் இருந்துகொண்டு துரோகம் செய்துவிட்டு, கட்சி நடவடிக்கை எடுத்தவுடன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சியில் சேர்த்துக்கொள்கிறீர்கள். திரும்பவும் அவர்கள் அதேபோல் துரோகத்தைதான் செய்கிறார்கள்’ என்று அழகிரியை மறைமுகமாகத் தாக்கினார்.
மேலூர் தியாகராஜன் என்பவர், ‘கட்சியில் தலைமையைச் சுற்றியிருப்பவர்களுக்குத்தான், கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்போதுகூட ராஜ்ய சபா எம்.பி-க்கள் அறிவிப்பில்கூட தலைமையைச் சுற்றி இருக்கும், சென்னையைச் சேர்ந்த இருவருக்குத்தான் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்துக்கும் வாய்ப்புக் கொடுங்கள்’ என்று அவர் கூறியதை பெரும்பாலானவர்கள் ஆமோதித்தனர்.”
‘‘ம்.”
‘‘குளித்தலை சிவராமன் பேசியபோது, ‘இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் நமக்கு எந்த லாபமும் இல்லை. கூட்டணி பலமும் இல்லை. தனி பலத்தில்தான் இந்தத் தேர்தலைச் சந்தித்தோம். நாம் தனித்து நின்று இருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும். உள்ளாட்சித் தேர்தலில், இந்த விஷயத்தைத் தலைமை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
திருச்சி சிவா பேசியபோது, ‘காசி முத்துமாணிக்கம் பேசியபோது இரண்டு திராவிடக் கட்சிகள் என்றார். இது தவறு. தமிழகத்தில் இருப்பது ஒரு திராவிடக் கட்சிதான். அ.தி.மு.க என்பது போலியான திராவிடக் கட்சி. ஆனால், போலிகளைத்தான் மக்கள் நம்புகிறார்கள். நூல் இழையில்தான் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டுள்ளோம். கொள்கை ரீதியாக இளைஞர்களை இழுக்க வேண்டும். மாவட்டம்தோறும் பாசறைக் கூட்டங்களை தளபதி நடத்த வேண்டும்’ என்றார்!”
‘‘ஓஹோ!”
‘‘இப்படிப் பலரும் வெற்றி தோல்வி குறித்து காரசாரமாகக் கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். 11 மணிக்கு, கூட்டத்தில் இருந்தவர்களுக்கு சரவண பவன் காபியும், மசாலா வடையும் பறிமாறப்பட்டது. கருணாநிதியும் வடை சாப்பிட்டார். அனைவரும் பேசிமுடித்தவுடன் ஆர்.எஸ்.பாரதி, அன்பழகனைப் பேச அழைத்தார். அவர் இருக்கையில் அமர்ந்தவாறே ஒரு கும்பிடு போட்டு, பேச விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஸ்டாலினும் பேச மறுத்து விட்டார். உடனே ஆர்.எஸ்.பாரதி, ‘தலைவர் உங்களுக்கு இப்போது ஆலோசனை வழங்குவார்’ என்றார். கருணாநிதியும் எரிச்சலில் இருக்கிறார் என்பது அவரது பேச்சில் தெரிந்தது.
[You must be registered and logged in to see this image.]
‘‘உங்களுக்கு எல்லாம் இப்போது, அறிவுரை எதுவும் கூறப்போவது இல்லை. ஏனென்றால், உங்களுக்கு எல்லாம் இனிமேல் அறிவுரை எதுவும் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன். இனிமேலாவது நாம் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கு, நம்மை நாமே திருத்திக்கொண்டு, இடையிலே நுழைந்த துரோகச் செயல்களுக்கு இடம் தராமல் தூய்மையாக தி.மு.க-வை நடத்திச் சென்று அடுத்தடுத்த வெற்றிகளைப் பெறுவதற்கு நாம் முனைய வேண்டும்’ என்றார். சுவாரஸ்யம் இல்லாமல் முடிந்தது கூட்டம்!”‘‘தி.மு.க-வில் ராஜ்ய சபா எம்.பி-க்கு கடும் போட்டி நிலவியதாமே?”
‘‘தி.மு.க-வில் பழம் பெருச்சாளிகள் அனைவரும் இதை எதிர்பார்த்தார்கள். குறிப்பாக டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பவானி ராஜேந்திரன், பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆர்.எஸ்.பாரதிக்கும், டி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் கொடுத்துவிட்டார். ஆனால், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை சண்முகத்துக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். இதிலும் அப்பா – மகன் சண்டை” என்றபடி எழுந்த கழுகார்,
‘‘சட்டமன்ற தி.மு.க குழுத் தலைவராக ஸ்டாலினும் துணைத் தலைவராக துரைமுருகனும் கொறடாவாக சக்கரபாணியும் துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். கொறடா, துணைக் கொறடா பதவி பொன்முடி, எ.வ.வேலுவுக்கு தரப்படும் என்று பலரும் நினைத்தார்கள். அப்படி கொடுக்காதது பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது” என்றபடி பறந்தார்.
Similar topics
» மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!
» மிஸ்டர் கழுகு: ஈழத்தாய் இமேஜ்!
» மிஸ்டர் கழுகு: பண கஜானாவை காட்டிக்கொடுப்பது யார்?
» மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!
» மிஸ்டர் கழுகு: பெங்களூரு பிரளயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum