TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாமியார் பிரேமலதா ,மாப்பிள்ளை விஜயகாந்த் – பின்னணி பேரங்கள்

Go down

மாமியார் பிரேமலதா ,மாப்பிள்ளை விஜயகாந்த் – பின்னணி பேரங்கள் Empty மாமியார் பிரேமலதா ,மாப்பிள்ளை விஜயகாந்த் – பின்னணி பேரங்கள்

Post by Tamil Thu Mar 17, 2016 3:27 pm

மாமியார் பிரேமலதா ,மாப்பிள்ளை விஜயகாந்த் – பின்னணி பேரங்கள்
விஜயகாந்த்
“அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும்!” – “தி.மு.க-தான் இறங்கி வரலை!”ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன் ஓவியம்: ஜி.ராமமூர்த்தி
“இந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்” – நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. “காஞ்சிபுரம் வாருங்கள்… யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்” என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்’ என்று அறிவித்த மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு, அவர் வருவதாகவே இல்லை… வந்தார்; சொல்வதாகவே இல்லை… சொன்னார்.
அவர் சொன்னாரா… சொல்லவைக்கப் பட்டாரா என்பது, பிரேமலதாவுக்குத்தான் தெரியும். விஜயகாந்த் என்ற `மாப்பிள்ளை’ யைக் காட்டி, பிரேமலதா என்ற `மாமியார்’ கேட்கும் வரதட்சணைப் பேரங்கள் செல்லுபடி ஆகாமல் போனதால்தான், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாவமன்னிப்பு கேட்பதைப்போல விஜயகாந்த் பேசவேண்டியதாக இருந்தது.
“நாங்கள் இதுவரை யாரோடும் பேரங்கள் நடத்தியதே இல்லை” என விஜயகாந்தும் பிரேமலதாவும் பிரகடனம் செய்துள்ளார்கள். இதை, அவர்கள் சொல்லக் கூடாது; ஜெயலலிதாவும், சோவும், முரளிதர் ராவும், பிரகாஷ் ஜவடேக்கரும் சொல்ல வேண்டும். ஒரு சட்டமன்றத் தேர்தலையும், ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும் தே.மு.தி.க-வுடன் சேர்ந்து சந்தித்தவர்கள் இவர்கள். `தேவாவே சொன்னான்’ என்பதை, சினிமாவில் ரசிக்கலாம்; தேர்தலில் சிரிக்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
 
ஒரே நேரத்தில், மூன்று கூட்டணிகளோடு விஜயகாந்த் பேரப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்த மூன்று கூட்டணிகளுமே தன்னை மதிக்கவில்லை என்ற கோபம் விஜயகாந்துக்கு இருந்தது. தி.மு.க-வுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, “தே.மு.தி.க-வை கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியை ஏன் சேர்த்தீர்கள்?” என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். பா.ஜ.க-வுடன் பேசும்போது, “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு என்னை பா.ஜ.க மதிக்கவே இல்லை. சென்னைக்கு வரும் மோடி, ஜெயலலிதாவைச் சந்திக்கிறார். சென்னைக்கு வரும் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவைச் சந்திக்கிறார். உங்கள் கூட்டணியில் இருக்கும் என்னை ஏன் அவர்கள் சந்திக்க வரவில்லை? எனக்கு உள்ள மரியாதை இவ்வளவுதானா?” எனக் கேட்டுள்ளார். “தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணி அமைப்பது என முடிவு எடுத்தால், முதலில் என்னிடம் வந்து பேசியிருக்க வேண்டாமா? நீங்களாக ஒரு கூட்டணி அமைத்துவிட்டு கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுவிட்டு என்னிடம் வந்து பேசுகிறீர்களே?” என்பது, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மீது அவர் வைத்த விமர்சனம். இப்படி எல்லாமே தன்னைச் சுற்றி வர வேண்டும் என நினைத்திருந்தார் விஜயகாந்த். ஆனால், இந்த மூன்று கூட்டணிக் கட்சிகளும் விஜயகாந்தை சேர்த்துக்கொள்ளத் துடித்தனவே தவிர, அவரை மட்டுமே நம்பி இல்லை என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தி விட்டன. விஜயகாந்துக்கு விழுந்த முதல் அடி இது.

இரண்டாவது அடி… அவரது `முதலமைச்சர் வேட்பாளர்’ கனவு!
தி.மு.க கூட்டணியில் `முதலமைச்சர்’ பதவியை கருணாநிதிக்கு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்த விஜயகாந்த், `துணை முதலமைச்சர்’ பதவி கேட்டார். இதை தி.மு.க ஏற்கவில்லை. கருணாநிதிக்கு `முதலமைச்சர்’ நாற்காலியைப் பெருந் தன்மையோடு விட்டுக்கொடுத்துவிட்டு `துணை முதலமைச்சர்’ பதவிக்காகக் காத்திருக்கும் ஸ்டாலின், அதையும் விஜயகாந்த்துக்குத் தாரைவார்க்க பைத்தியமா பிடித்திருக்கிறது. முதற்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே முடக்கப்பட்டது இந்தக் கனவு.
[You must be registered and logged in to see this image.]
பா.ஜ.க கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்திய முரளிதர் ராவ், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகிய இரண்டு பேரிடமும், “என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவியுங்கள். மற்ற விஷயங்களைப் பேசலாம்” என்றுதான் விஜயகாந்த் சொன்னார். இது பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், மோகன்ராஜுலு ஆகியோரும் அறிந்த ரகசியம்தான். இந்தக் கோரிக்கை, பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவிடம் போனது. “விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், 100 ஸீட்டுக்களாவது பிடிப்பீர்களா?” என அவர் கேட்டார். அதற்கு தே.மு.தி.க-வில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகளை வாங்கி, ஓர் இடத்தில்கூட ஜெயிக்காத ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக எப்படி அறிவிக்க முடியும்? மூன்று எம்.பி-க்களாவது ஜெயித்திருந்தால் விஜயகாந்த் கேட்காமலேயே அறிவிக்கத் தயாராக இருந்திருப்போம்” என்றது பா.ஜ.க தரப்பு.
அடுத்து மக்கள் நலக் கூட்டணி. மதுரையில் இருந்து வரும் விமானத்தில் தற்செயலாக வைகோவும் விஜயகாந்தும் சந்தித்துக் கொண்டார்கள். தான் அமைத்துள்ள கூட்டணி பற்றி வைகோ சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர, விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் விஜயகாந்தை போய்ப் பார்த்தார்கள். நான்கு பேரும் மாறி மாறிப் பேசிய பிறகும், விஜயகாந்த் வாயில் இருந்து வந்த வார்த்தை, “நான் இப்ப எந்த முடிவும் எடுக்கலை” என்பதுதான்.
[You must be registered and logged in to see this image.]
மூன்று வாரங்களுக்கு முன்னர், வைகோவிடம் தனது தூதுவராக ஒருவரை அனுப்பி வைத்துள்ளார் விஜயகாந்த். “கேப்டனை நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால், உடனடியாக வந்து உங்கள் கூட்டணியில் சேரத் தயாராக இருப்பதாக சொல்லச் சொன்னார்” என்று அந்த மனிதர் சொல்லியிருக்கிறார். “நானாக தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. மற்ற தலைவர்களிடம் பேசுகிறேன்” என வைகோ சொல்லி அனுப்பியிருக் கிறார். “கூடுதலான இடங்களை ஒதுக்குவோம். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது சரியாக இருக்காது” என மற்ற தலைவர்கள் சொல்லியிருக் கிறார்கள். 120 தொகுதிகளை விஜயகாந்துக்குத் தருவது என முடிவு எடுக்கப்பட்டது.
திருச்சியில் கூடிய ம.தி.மு.க பொதுக்குழுவில் பேசிய வைகோ, “நான் சில முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கிறது. கட்சியின் நன்மைக்காக இதைச் செய்கிறேன். தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்” எனச் சொன்னதற்கு இதுதான் காரணம். `விஜயகாந்தும் ஜி.கே.வாசனும் இந்தக் கூட்டணிக்கு வர வேண்டும்’ என, இந்த நான்கு தலைவர்களும் நினைத்தார்கள்.
`120 தொகுதிகள் தரத் தயார்’ என்ற தகவலை விஜயகாந்துக்குச் சொல்லிவிடவே இவர்களுக்கு ஒரு வாரம் பிடித்தது. விஜயகாந்த் இணைப்புக்கு வரவே இல்லை. இப்படித்தான் மூன்று கூட்டணிகளுக்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் விஜயகாந்த் போனார்.
“கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கட்சியோடுதான் கூட்டணி” என்று இப்போது சொல்லும் பிரேமலதா, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கவேண்டியது இல்லை. அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, “அன்புமணியை ஏற்றுக் கொள்பவர்கள் வரலாம்” என்று தனது பாதையைத் தொடங்கியது பா.ம.க. வென்றாலும் தோற்றாலும் பரவாயில்லை என அப்பாவும் மகனும் நினைக்கிறார்கள் அங்கு; முடிந்தவரை லாபம் பார்க்கலாம் என, கணவனும் மனைவியும் துடிக்கிறார்கள் இங்கு.
இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும்தான். வேட்பாளர் நேர்காணலுக்காக வந்தவர்களிடம் இந்த மூன்று கூட்டணிகளுக்கு ஆதரவாகவும் விஜயகாந்த் பேசினார்; எதிராகவும் பேசியிருக்கிறார். `தனித்துப் போட்டியிடலாம் கேப்டன்’ என்றால், “தனியா நின்னா ஜெயிக்க முடியுமாப்பா?” என்று கிண்டல் அடிப்பது, “மக்கள் நலக் கூட்டணியில் சேரலாம் கேப்டன்” என்றால், “அவங்களுக்கு எங்கே ஓட்டு இருக்கு?” என்பது, “ஜெயலலிதாவை வீழ்த்தணும்னா தி.மு.க-வோடு சேர்ந்தாதான் சரியா இருக்கும்” என்பது, “அ.தி.மு.க-வால் அசிங்கப்பட்டது போதும். பா.ஜ.க-வுக்கு நம்மைப் பற்றித் தெரியும். நமக்கும் பா.ஜ.க-வைப் பற்றித் தெரியும். சரியா வரும்” என்பது… இப்படி ஆளாளுக்கு எதிர்ப் பாட்டு பாடியிருக்கிறார்.
[You must be registered and logged in to see this image.]
“நான் எந்த நிபந்தனையுமே போடலை. உள்ளாட்சித் தேர்தல்ல 30 சதவிகித இடம் நம்ம ஆட்களுக்கு வரணும். அது ஒண்ணுதான் தி.மு.க-விடம் நான் வைக்கும் கோரிக்கை. போன தடவை ஜெயலலிதாகிட்ட ஏமாந்துட்டேன். அதே மாதிரி கலைஞரிடம் ஏமாற மாட்டேன். 30 பேர் எம்.எல்.ஏ ஆனாங்க. அதுல 10 பேர் துரோகம் பண்ணிட்டுப் போயிட்டாங்க. எனக்காக ஆள் சேர்க்கிறது ஊர்ல இருக்கிற நிர்வாகிகள்தான். அந்த நிர்வாகிகள் பதவிக்கு வரணும். அதுதான் என்னோட ஒரே ஆசை” என்று தென்மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் சொன்ன விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்களிடம், “நான் ரெடியா இருக்கேன். தி.மு.க-தான் இறங்கி வரலை. இதை உங்களுக்கு தெரிஞ்ச தி.மு.க நிர்வாகிகளிடம் சொல்லி அவங்க தலைமைக்கு சொல்லச் சொல்லுங்க” என்றும் சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் கேட்டுக் கேட்டு கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள் நிர்வாகிகள்.
தி.மு.க., அ.தி.மு.க-வை வீழ்த்தப் புறப்பட்ட விஜயகாந்த், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனதும், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் இறுதிக் கட்டம் வரை பேச்சுவார்த்தை நடத்தியதும் அவரது அரசியல் நம்பகத்தன்மையை அடியோடு குறைத்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை வைத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்களுக்காக வாதாடவும் இல்லை; மக்கள் மன்றத்தில் போராடவும் இல்லை. அப்புறம் எதற்காக கட்சி?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்… முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்!
» பிரேமலதா விஜயகாந்த் என்ற சாக்கடைகளின் அரசியல் !
» விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா!
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 6 நாட்களில் 520 கி.மீ. பிரசாரம் விஜயகாந்த் பிரேமலதா திட்டம்
» விஜயகாந்த் தயக்கத்தின் பின்னணி!யாருடன் கூட்டணி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum