Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிஸ்டர் கழுகு: விஜயகாந்துக்காக காத்திருக்கும் ஜெயலலிதா!
Page 1 of 1
மிஸ்டர் கழுகு: விஜயகாந்துக்காக காத்திருக்கும் ஜெயலலிதா!
மிஸ்டர் கழுகு: விஜயகாந்துக்காக காத்திருக்கும் ஜெயலலிதா!
‘‘தமிழக அரசியல் கூட்டணி முடிவுகள் அனைத்தும், விஜயகாந்த் உதிர்க்கும் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது” என்ற பீடிகையுடன் வந்தார் கழுகார்.‘‘விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடத்த 24 மணி நேர பயணமாக வந்த மத்திய அமைச்சரும் தமிழக பி.ஜே.பி தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், மீனம்பாக்கம் விமானநிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். 27-ம் தேதி மாலையில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர்,
அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் சதக்கத்துல்லா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் ஆகியோர் அவரைச் சந்தித்தனர். இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்கு வந்து சந்தித்தார்கள். ஆனால், சரத்குமாரை வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார் ஜவடேகர்.’’
‘‘சரத், தேவநாதன் நீங்கலாக, மற்றவர்கள் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தவர்கள்தானே?”
‘‘ஆமாம். இருந்தாலும், முறைப்படியான சந்திப்பு நடக்க வேண்டாமா? அதனால்தான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜவடேகரை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள், ‘சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது. விரைவில் தொகுதி உடன்பாடு, பங்கீடு குறித்துப் பேசுவோம்’ என்று சொன்னார்கள்.’’
‘‘கூட்டணித் தலைவர்களை ஜவடேகர் சந்தித்து கொண்டிருந்தபோது, விஜயகாந்த் அவரது கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தாரே?”
‘‘ஆமாம். அப்போது பல விஷயங்களை மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் சொல்லி இருக்கிறார். ‘தி.மு.க-வில் 104 சீட்கள், துணை முதல்வர், அமைச்சரவையில் பங்கு என்று நமது கோரிக்கைகளை முன்வைத்தோம். கடந்த முறை அ.தி.மு.க-வோடு கூட்டணிவைத்து அவர்கள் ஜெயித்த பிறகு நம்மை மறந்துவிட்டார்கள். எனவே, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் 50 சதவிகித இடங்களைக் கேட்டோம். இந்தக் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தி.மு.க ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் தி.மு.க கூட்டணி வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், அவர்களுக்கு நாம் வேண்டும் என்றால், இந்தக் கோரிக்கைகள் குறித்து ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பது ஏன்? உங்களைக் கூட்டணிக்கு வருமாறு அழைக்கும் உங்கள் ஏரியா தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவடையாததற்கு தி.மு.க-தான் காரணம் என்று சொல்லுங்கள்’’ எனச் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்.’’
[You must be registered and logged in to see this image.]
‘‘நேர்காணலின்போது..?”
‘‘ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி சொல்லி இருக்கிறார். ‘தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம்’ என்று சிலர் சொன்னபோது, ‘தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தால் நீ எம்.எல்.ஏ ஆகிவிடுவாய். நான் முதலமைச்சராவேனா? துணை முதலமைச்சர் பதவியைக்கூட தரமாட்டேங்குறாங்க. அவங்களோட நாம் ஏன் கூட்டணி வைக்கணும்?’ என்று கேட்டதாகச் சொல்கிறார்கள். இதில் வெறுத்துப்போன பலர், ‘அதன்பிறகு எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டோம். கேப்டன் எந்த முடிவெடுத்தாலும் எங்களுக்குச் சம்மதம் என்று சொல்லிவிட்டோம்’ என்றார்கள். மக்கள் நலக் கூட்டணிக்குப் போகலாம் என்று சிலர் சொல்ல, ‘அவர்களிடம் ஓட்டு எங்கே இருக்கு?’ என்று விஜயகாந்த் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது!”
‘‘இதன்பிறகுதான் விஜயகாந்த் வீட்டுக்கு ஜவடேகர் போனாரா?”
‘‘விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்குத்தான் ஜவடேகர் சென்றார். அவருடன் மாநிலத் தலைவர் தமிழிசை, மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் சென்றிருந்தனர். சந்திப்பின்போது பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.”
‘‘என்ன பேசினார்கள்?’’
‘‘கூட்டணி பற்றி பேசாத விஜயகாந்த், தன்னை பி.ஜே.பி எப்படி உதாசீனப்படுத்தியது என்பதை அடுக்கினாராம். ‘பி.ஜே.பி கூட்டணியில் இருக்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் எங்களோடு தொடந்து பேசுகிறார்கள். இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், டெல்லி மேலிடம் அப்படி இல்லையே? இதுவரை எத்தனையோ மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்துள்ளார்கள். யாரும் என்னை வந்து பார்த்தது இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணிக்கு உண்மையாக தே.மு.தி.க-வினர் உழைத்தனர். ஆட்சி அமைத்த பிறகு எங்களுக்கு உரிய மரியாதை தரப்பட்டதா? இப்போது தேர்தல் என்றவுடன் ஓடி வந்துள்ளீர்கள். என்னுடைய கோரிக்கைகளை ஏற்கெனவே பலதடவை சொல்லிவிட்டேன். அதுபற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். இனிமேல், அமித்ஷா, மோடி போன்றவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பிடிகொடுக்காமல்தான் பேசி இருக்கிறார்.”
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
‘‘அவருடைய கோரிக்கைகள்தான் என்ன?”
‘‘முதல்வர் வேட்பாளராக தனது பெயரை அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்க்கிறார்.”
‘‘இதை அறிவிப்பதில் என்ன சிக்கல்?”
‘‘பி.ஜே.பி., தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைக்க வேண்டும் என்றுதான் பி.ஜே.பி நினைக்கிறது. முதல்வர் வேட்பாளர் தான்தான் என்று அன்புமணி சொல்லி வருகிறார். எனவே, விஜயகாந்த் பெயரை முதல்வர் வேட்பாளர் என்று முன்மொழிந்தால் பா.ம.க வராது. கூட்டணியில் பா.ம.க-வும் இருந்தால்தான் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு ஈடுகொடுக்க முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே, விஜயகாந்த்தின் கோரிக்கையை நிறைவேற்ற பி.ஜே.பி-க்குத் தயக்கம் இருக்கிறது.’’
‘‘சொல்லும்!”
‘‘பி.ஜே.பி எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.க-வுடன் கைகோத்துவிடும் என்று சந்தேகப்படுகிறாராம் விஜயகாந்த். அப்படிப் போக மாட்டோம் என்று ஜவடேகர் சொல்லி இருக்கிறார். ஆனால், அதனை விஜயகாந்த் நம்பவில்லை. அதனால்தான் வெளியில் வந்த ஜவடேகர், ‘மத்திய அரசு கொடுக்கும் பணத்தைவைத்து ஜெயலலிதா விளம்பரம் தேடிக்கொள்கிறார்’ என்று பேட்டி கொடுத்தார்.”
‘‘ஜெயலலிதா எப்போது அறிவிப்பார்?’’
‘‘பழைய ஜெயலலிதாவாக இருந்தால், இதற்குள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு இருப்பார். இப்போது முதல்வரின் கவனம் எல்லாம் விஜயகாந்த் மீதுதான் உள்ளது. அவரது முடிவைப் பொறுத்துத்தான் கூட்டணியை முடிவுசெய்ய இருக்கிறாராம். அதாவது, விஜயகாந்த் முடிவுக்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்த் பி.ஜே.பி-யுடன் கூட்டணி என்று சொன்னால் தனியாக நிற்கலாம் என்றும், விஜயகாந்த் தி.மு.க-வுடன் சேர்ந்தால் பி.ஜே.பி-யைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும் ஜெயலலிதா நினைக்கிறார். தொகுதிக்குச் சிலரை மட்டும் ஜெயலலிதா சந்திக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நேர்காணல் நடந்து முடிந்தவுடன் மார்ச் 11-ம் தேதிக்கு மேல் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள்.”
‘‘சசிகலாவின் ஆன்மிகச் சுற்றுலா நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறதே?”
‘‘அதுவெறும் ஆன்மிகப் பயணம் மட்டும்தானா? அதில் அரசியலும் கலந்துள்ளதா என்பது போகப் போகத் தெரியும். கடந்த 11-ம் தேதி மதுரை, பழனி உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று தரிசனம்செய்த சசிகலா அடுத்த ரவுண்ட் கிளம்பினார். திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம், பிள்ளையார்பட்டி, நாமக்கல் என ஒரு வலம் வந்துசென்றுள்ளார். ஸ்ரீரங்கம் வந்த சசிகலாவுடன் அவரது அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவதி இருந்தார். அவர் டாக்டர் சிவகுமாரின் மனைவி. கோயில் இணை ஆணையர், நந்து பட்டர் மற்றும் முரளி பட்டர் ஆகியோர் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். பெரிய கருடன் சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஆரியபடால் வாசலைக் கடந்து, கொடி மரம் பகுதிக்குச் சென்றார். கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பாக, நீண்ட நேரம் நின்று பிரார்த்தனை செய்தார். மூலவர், தாயார் சன்னதிகளில் மகிழம்பூ, சந்தனமாலை, பழங்கள் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய பூஜைப் பொருட்கள் கொடுத்து தரிசனம் செய்தனர். அடுத்து, பேட்டரி காரில் புறப்பட்டு தாயார் சன்னதியிலும் அதன்பிறகு சக்ரத்தாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி கும்பிட்ட சசிகலா, அங்கிருந்து வடக்கு வாசல் வழியாக பேட்டரி காரில் சென்று திருச்சி ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் 46-வது ஜீயர் ஸ்வாமிகளிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.”
[You must be registered and logged in to see this image.]
‘‘ம்!”
‘‘பழனிக்கும் மதுரைக்கும் போனபோது கையில் ஒரு துண்டுச் சீட்டு வைத்திருந்ததைப் பார்த்து ஊடகங்கள், வேட்பாளர் பட்டியலை சுவாமியிடம் வைத்து பூஜைசெய்ய வந்தார்கள் என்று செய்தி பரப்பினர். அதனால், இந்த முறை கையில் எந்தக் கடிதத்தையும் வைத்திருக்கவில்லை. கையில் இரு பச்சை கலர் பை வைத்திருந்த பிரபாவதி, கோயிலுக்குள் செல்லும்போது மட்டும் ஆரஞ்சு கலர் பையோடு போனார். அங்கு இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார்கள். அங்கிருந்து கிளம்பி திருச்சி சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுத்தார். அங்கே கனிமொழி தங்கி இருந்தார்.”
‘‘கனிமொழியா?’’
‘‘நீர் பதறும் அளவுக்கு சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. மார்ச் 6-ம் தேதி தி.மு.க., மகளிர் அணி சார்பில் திருச்சியில் நடக்கும் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட வந்திருந்தார் கனிமொழி. சசிகலாவும் கனிமொழியும் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் என செய்திகள் உலாவந்தன. இருவரும் வெவ்வேறு ஏற்பாடுகளில் இருந்தார்கள். சசிகலாவை மூன்று ஜோதிடர்கள் சந்தித்ததாகவும் அவர்கள் ஹோட்டலுக்குள் சென்று சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினர் என்றும், அதன்பிறகு சசிகலா ஹோட்டலில் இருந்து புறப்பட்டுச் சென்றார் எனவும் கூறப்படுகிறது. மாலை, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் மூலவர் பெருமாளுக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் ராசியான மகம் நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்த கையோடு, திருக்கோஷ்டியூர் அருகே வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். அடுத்து பிள்ளையார்பட்டி விநாயகரை கும்பிட்டார். அடுத்தநாள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று அங்கும் முதல்வர் ஜெயலலிதாவின் மகம் நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்தார். அங்கிருந்து, திருச்செங்கோடு வழியாக ஈரோடு சென்றார்.”
‘‘இதன் பின்னணி என்ன?”
‘‘ஜெயலலிதா உடல்நிலையைக் கருத்தில்கொண்டு சசிகலா, இந்தத் தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக மன்னார்குடி தரப்பு சொல்கிறது. ‘எப்போதும் ஜோதிடத்தை முழுமையான நம்பும் ஜெயலலிதா, இந்த முறை ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று நினைத்து, ஆன்மிக தரிசனம் செய்வதாகக் கூறப்படுகிறது.’’
‘‘முதல்வராகத் தன்னைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு மூன்றாவது முறையாக ஜெ. விசிட் செய்துள்ளாரே?”
‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நின்றபோது பிரசாரத்துக்கு முதல் முறையாகச் சென்றார். சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இரண்டாவது முறையாக வேனிலே சென்று பார்வையிட்டார். இப்போது மூன்றாவது பயணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக மூன்றாவது பயணத்தை மேற்கொண்டார்.
கோட்டையில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமே பல திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர், தனது தொகுதிக்கு மட்டும் நேரடியாகச் சென்று திட்டங்களை தொடங்கிவைத்து தொகுதி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார். தண்டையார் பேட்டை பிரஸ் குடியிருப்பு வளாகம் அருகே பிரமாண்ட மேடை போடப்பட்டு இருந்தது. 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க-வினர் அதிகாலை முதலே பெண்களை வேனில் அழைத்துவந்து தண்டையார்பேட்டை வழிநெடுகிலும் நிறுத்திவைத்தனர். ஜெ. வந்த நேரம் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. அந்த வெயிலில் நின்றுகொண்டிருந்தவர்களை புன்னகை செய்தவாறே பார்த்துக்கொண்டு சென்ற ஜெ., விழாவில் பேசும்போது ‘சுட்டெரிக்கும் வெயிலிலும், ஆண்களும், பெண்களும் குழந்தைகளோடு காத்திருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்’ என்று உருகினார்.”
‘‘ம்!”
‘‘கடைசியாக அவர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியின் மேடைக்கு காரிலே வந்தார் அல்லவா? மேடை ஏற்பாடு செய்தவர்கள் முதல்வர் படியில் ஏறி மேடைக்கு வரும் வகையில் மேடைக்குப் பின்புறம் படிகளையும் அமைத்துவிட்டார்கள். நிகழ்ச்சிக்கு முதல்நாள் நள்ளிரவு அந்தத் திட்டம் மாற்றப்பட்டதாம்.”
[You must be registered and logged in to see this image.]
‘‘அது என்ன மாற்றம்?”
‘‘நிகழ்ச்சிக்கு முதல்நாள் இரவு இரண்டு மணி அளவில் மேடை அலங்காரப் பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களை, பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் அங்கிருந்து வெளியேறச் சொல்லி உள்ளார்கள். மேடைக்குப் பின்புறம் வந்து நின்ற மினி வேனில் இருந்து ‘மொபைல் மினி லிப்ட்’ ஒன்றை இறக்கி அதை மேடைக்குப் பின்புறம் ஊழியர்கள் பொருத்தினர். லிப்ட் வைத்தது தெரியக் கூடாது என்பதற்காக அதனைச் சுற்றி பச்சைநிற தட்டி போர்டை கொண்டு மறைத்தனர். முதல்வரின் கார் லிப்ட் அருகே வந்து நின்றதும், காரில் இருந்து இறங்கி லிப்டில் ஏறி மேடைக்குச் சென்றார். நான்கு அடி உயரத்துக்குக்கூட லிப்ட் என்கிற நிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர் அதிகாரிகள். மேடையில் அவர் நின்றுகொண்டு பேசுகிறாரா, உட்கார்ந்து பேசுகிறாரா என்று அறிய முடியாத வகையில் மைக் வைக்கப்பட்டு இருந்தது. முழுமையாக ஜெ-வை மறைத்துதான் அந்த டேபிள் இருந்தது.”
‘‘அப்படியா?”
‘‘ஜெ., பேசி முடித்து லிப்ட் வழியே இறங்கி காரில் ஏறியதும், அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் லிப்ட்டை மின்னல் வேகத்தில் அங்கிருந்து உடனே அகற்றும் பணியில் ஈடுபட்டனர்” என்றபடி கழுகார் பறந்தார்.
Similar topics
» மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!
» மிஸ்டர் கழுகு: அதிகாரிகள் பந்தாட்டம் ஏன்?
» மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
» மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!
» மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.!
» மிஸ்டர் கழுகு: அதிகாரிகள் பந்தாட்டம் ஏன்?
» மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
» மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!
» மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum