Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிஸ்டர் கழுகு: 20 நிமிடங்கள் பேசிய வெங்கய்ய நாயுடு – பி.ஜே.பி. நெருக்கடி!
Page 1 of 1

சூடு பிடிக்கும் சொத்து வழக்கு விசாரணை
கழுகார் உள்ளே நுழையும்போதே சிறகுகளுக்குள் இருந்து சில தாள்கள் சிதறின. அதனை ஒவ்வொன்றாக சீட்டுக் கட்டுகளைப்போல அடுக்க ஆரம்பித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் பேச ஆரம்பித்தார். முதல் சீட்டில் விஜயகாந்த் என்று எழுதப்பட்டு இருந்தது.
“தே.மு.தி.க-வின் இன்றைய நிலைமையைச் சொல்லிவிடுகிறேன். காஞ்சிபுரம் மாநாட்டில் தி.மு.க-வை விஜயகாந்த் அட்டாக் செய்யவில்லை என்பதை கடந்த இதழில் சொல்லி இருந்தேன். பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பிரேமலதா சொல்வதாகவும், அவரது தம்பி சுதீஷ்,
தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சொல்வதாகவும் தகவல்!”
[You must be registered and logged in to see this image.]‘‘விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?”
‘‘அதை அவர் பிரேமலதா, சுதீஷ் ஆகிய இருவருக்கும் தெரியாமல் மனதுக்குள் பாதுகாத்து வருகிறார். வேட்பாளர் நேர்காணலுக்காக வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தி.மு.க கூட்டணியில் சேர வேண்டும் என்று கருத்துச் சொன்னார்களாம். தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்களின் கருத்தும் அதுதானாம். ‘தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும். இந்தத் தேர்தலில் கேப்டன் முதல்வர் ஆகாவிட்டாலும் எதிர்க் கட்சித் தலைவராக மீண்டும் ஆக வேண்டுமானால், தி.மு.க-வுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்று இந்த எம்.எல்.ஏ-க்கள் சொல்லி வருகிறார்கள். ‘ஒருவேளை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்காவிட்டால், நாங்கள் தி.மு.க-வுக்குப் போய்விடுவோம்’ என்று சில எம்.எல்.ஏ-க்களும் மாவட்டச் செயலாளர்களும் சொல்லி வருகிறார்கள்!”
‘‘விஜயகாந்த் என்ன சொல்கிறார்?”
‘‘தி.மு.க., பி.ஜே.பி., மக்கள் நலக்கூட்டணி ஆகிய மூன்று தரப்புக்கும் சம்மதம் தெரிவிப்பது மாதிரி சொல்லி அனுப்பி இருக்கிறார் விஜயகாந்த். தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், ‘55 தொகுதிகளை தி.மு.க தரத் தயார் ஆகிவிட்டது. கேப்டன் 70 தொகுதிகள் கேட்கிறார்’ என்று சொல்கிறார்கள். ‘இரண்டு வாரங்களில் நல்ல முடிவைச் சொல்கிறேன்’ என்று பி.ஜே.பி தரப்புக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறார் விஜயகாந்த். வைகோவிடம், ‘என்னை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இது மூன்று தரப்பையும் தலையைப் பிய்த்து அலைய வைத்துள்ளது!”
‘‘மூன்று கட்சிகளின் ரியாக்ஷன் என்ன?”
“கருணாநிதி, ‘விஜயகாந்த்தை அவசரப்படுத்த வேண்டாம். தேர்தல் தேதி அறிவித்ததும் பார்த்துக்கலாம். இப்ப அவரு நம்ம கூட்டணிக்கு வந்தா, இந்த ஒரு மாசம் அவர் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க வேண்டி வரும். தேர்தல் பரபரப்பு ஆரம்பிச்சுருச்சுன்னா சமாளிச்சுக்கலாம்’ என்றாராம். கடந்த 24-ம் தேதி திருச்சியில் ம.தி.மு.க பொதுக்குழு நடந்தது.
அப்போது பேசிய வைகோ, ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் தமிழ் மாநிலக் காங்கிரஸும் நம்முடைய கூட்டணிக்கு நிச்சயம் வரும்’ என்று சொன்னாராம். அப்போது, ‘இப்படி புதிய கட்சிகள் வரும்போது கட்சியின் நலனுக்காகச் சில முடிவுகளை நான் எடுக்க வேண்டி வரும். அதைத் தொண்டர்கள் அனைவரும் ஏற்கவேண்டும்’ என்றாராம் வைகோ!”
[You must be registered and logged in to see this image.]
‘‘அது என்ன முடிவு?”
‘‘அதாவது, மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவிக்கத் தயார் ஆகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதைத்தான் வைகோ இப்படிச் சொல்லி, தனது கட்சித் தொண்டர்களை தயார்படுத்தியதாகச் சொல்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 100 இடங்களும், முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயரையும் அறிவிக்க அந்தத் தலைவர்கள் தயார் ஆகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான் வைகோ அப்படிப் பேசினாராம். இந்தத் தகவலை விஜயகாந்த்துக்கு சொல்வதற்காக மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் முயற்சித்துள்ளார்கள். ஆனால் இரண்டு மூன்று நாட்களாக அவர் தொடர்புக்கு வரவில்லையாம்!”
‘‘பி.ஜே.பி.?”
‘‘மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டு நிலைமையைப் பற்றிச் சொல்ல முடியாமல் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முதலமைச்சர் வேட்பாளர் என்றெல்லாம் அறிவிக்காமல் பி.ஜே.பி., தே.மு.தி.க., பா.ம.க ஆகிய மூன்று கட்சிளுடன் பல்வேறு சமூக, சாதி அமைப்புகளைத் திரட்டி ஓர் அணியை அமைப்பதுதான் இவர்களது திட்டம். அதற்கு விஜயகாந்த், அன்புமணி இருவரும் ஒத்து வரவில்லை. இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இருவருமே தாங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் சொல்லிவிட்டார்கள். எனவே, எந்த உடன்பாட்டுக்கும் பி.ஜே.பி-யால் வரமுடியவில்லை!”
‘‘ஓஹோ!”
‘‘மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்தான் தமிழக பி.ஜே.பி-யின் தேர்தல் பார்வையாளர். இன்னும் சில வாரங்களில் மயங்கியே விழுந்து விடுவார்போல. அந்த அளவுக்குக் குழம்பிப் போய்விட்டார். அவர் 27-ம் தேதி சென்னை வருகிறார்.
விஜயகாந்த், அன்புமணி ஆகிய இருவரையும் இறுதியாகச் சந்தித்து, ‘என்னதான் சொல்கிறீர்கள்?’ என்று கேட்கப் போகிறார். அவர்கள் முடிவைச் சொல்லாவிட்டால், 28-ம் தேதி தமிழக பி.ஜே.பி தன்னுடைய தேர்தல் பயணத்தைத் தொடங்கிவிடத் திட்டமாம்!”
‘‘என்னவென்று..?”
‘‘தனித்துப் போட்டி என்று சொல்லலாம்!”
‘‘அப்படியா?”

‘‘அதிர்ச்சி அடைய வேண்டாம். நான் இன்னும் முடிக்கவில்லை. அப்படி அறிவிப்பதன் மூலமாக விஜயகாந்த்துக்கு செக் வைக்கலாம் என்று பி.ஜே.பி தரப்பு நினைக்கிறது. இந்த நிலையில்..!”
‘‘இந்த நிலையில்…?”
‘‘நான் முன்பே சொன்னதுமாதிரி, டெல்லியில் இருந்து அ.தி.மு.க கூட்டணிக்கான நெருக்கடிகளை பி.ஜே.பி தொடங்கிவிட்டது. 23-ம் தேதி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கிவிட்டது. மார்ச்சுக்குள் தீர்ப்பே வந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
இதையும் ஜெயலலிதா தரப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டு காலடி எடுத்து வைக்க வேண்டியதாக உள்ளது. இரண்டு தரப்புக்குமான மீடியேட்டர்கள், ‘ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்புடன் இந்தக் கூட்டணியைத் தொடங்குவோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அ.தி.மு.க ஆட்சியைப் பற்றிய விமர்சனங்களைத் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் தவிர்த்து வந்தார்கள்!”
‘‘ஓஹோ!”
‘‘ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளுக்கு பி.ஜே.பி-யின் மொத்தப் படையும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டார்கள். பிரதமர் மோடி ஜெயலலிதாவிடம் பேசினார். மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போனில் பேசினார்கள். அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து அனுப்பினார்கள். இதில் வெங்கய்ய நாயுடுவுடன் சுமார் 20 நிமிடங்கள் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. அதில் பல்வேறு விஷயங்கள் பரிமாறப்பட்டு உள்ளன. அதில் முக்கியமானது, ஜனாதிபதி தேர்தல் பற்றியது. ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவி அடுத்த ஆண்டு முடியப் போகிறது.
பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆக வேண்டும் என்பது பி.ஜே.பி-யின் விருப்பம். நாடாளுமன்றத்தில் மூன்றாவது பிரதான கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வின் தயவு இருந்தால்தான் இது சாத்தியமாகும். அதனால் அ.தி.மு.க-வின் தயவை நம்பி இருக்கிறது பி.ஜே.பி. அதற்கான மூவ், இந்த சட்டசபைத் தேர்தலில் தொடங்கும் என்கிறார்கள். அதுபற்றிதான் ஜெயலலிதாவிடம் வெங்கய்ய நாயுடு பேசினாராம். வெங்கய்ய நாயுடுவுக்கு ஜெயலலிதா கிரீன் சிக்னல் எதுவும் காட்டவில்லையாம். ஆனாலும் கொஞ்சம் பொறுங்கள் எனச் சொன்னாராம்.”

‘‘அடுத்து என்ன நடக்கிறது?”
‘‘ஜெயலலிதா பிறந்த நாளுக்காக தமிழிசை வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தீரா?
‘ஒரு பெண் அரசியல்வாதியாக, தான் பெற்ற அதிகாரம் அதிகப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக 50 சதவிகித உள்ளாட்சி அதிகாரத்தைப் பெண்களுக்கு வழங்கிய நிலையில் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார் தமிழிசை!”
‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை என்று அவர் சொன்னதாக ஒரு தகவல் பார்த்தோமே?”
‘‘தான் சொன்னதை அந்தப் பத்திரிகை மாற்றிப் போட்டுவிட்டதாக தமிழிசை சொல்லி வருகிறாராம். இன்றைய சூழ்நிலையில் தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க-வும் அ.தி.மு.க கூட்டணிக்கு பி.ஜே.பி-யும் நகர்ந்து வருவதாகச் சூழ்நிலைகள் சொல்கின்றன!”
‘‘அப்படி பி.ஜே.பி-யை தனது அணிக்கு சேர்த்துக்கொண்டால், அவரது கணக்குக்கு அது மட்டும் போதுமா?”
‘‘போதாது என்று முதல்வர் நினைக்கிறார். அவரது கணக்குப்படி, எப்படியாவது வைகோ, திருமாவளவன் ஆகிய இருவரையும் தனது அணிக்குள் கொண்டு வர ஜெயலலிதா நினைக்கிறார். வைகோவுக்கு இப்படி ஒரு தகவல் சொல்லப்பட்டதாகவும், அவர் அதனை முழுக்க நிராகரித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. திருமாவிடம் பேசுவதற்கு சிலரை நியமித்துள்ளார் ஜெயலலிதா” என்றபடி பறந்தார் கழுகார்.
அட்டை படம்: ஆ.முத்துக்குமார்
படங்கள்: கே.குணசீலன், ஜெ.வேங்கடராஜ்
இன்னும் வரவில்லை!
மழை வெள்ளத்தின்போது பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் பலருக்கும் சேதம் அடைந்தன. அவர்களுக்கு உடனே வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் பலரும் விண்ணப்பம் செய்தார்கள். மிகமிகக் குறைவானவர்களுக்கே சான்றிதழ் பிரதிகள் கிடைத்துள்ளதாம். உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்!
நீதிமன்றத்தில் விஜயகாந்த் கடு… கடு!
டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த டிசம்பர் மாதம் தே.மு.தி.க நடத்திய உண்ணாவிரதப் போரட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பாய்ந்தது. இதில் முன் ஜாமீன் பெறுவதற்காக தஞ்சை நீதிமன்றத்துக்கு விஜயகாந்த் வந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ‘உங்கள் பெயர் என்ன’ என விஜயகாந்த்திடம் கேட்க, ‘விஜயகாந்த்’ என பதிலளித்தார். ‘உங்க அப்பா பெயர் என்ன’ என கேட்டதற்கு ‘விஜயகாந்த்’ என்று சொன்னார். அருகில் இருந்த அவரது வழக்கறிஞர், ‘அப்பா பெயர் கேட்கிறார்கள்’ என்றார். உடனே ‘அழகர்சாமி’ எனச் சொன்னார் விஜயகாந்த். நீதிமன்ற வளாகத்தில் ஏக கடுகடுப்பில் இருந்தார் விஜயகாந்த், முகத்தில் ஏகப்பட்ட இறுக்கம். நீதிமன்ற வளாகத்தில் கூட்டத்தைப் பார்த்ததும் எரிச்சலான விஜயகாந்த், தொண்டர்களை நாக்கை துருத்திக்கொண்டு அடிக்கப் பாய்ந்தார். அப்போது படம்பிடிக்க முயற்சித்த போட்டோகிராபர்களை பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டனர் தே.மு.தி.க-வினர்.
‘‘அப்படி நடக்கவில்லை!”
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அவருடைய வழக்கறிஞர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சேலம் மாநகராட்சி செயலர் செல்வராஜுக்கும் அமைச்சர் பழனிச்சாமிக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் செல்வராஜின் சட்டைக் கிழிக்கப்பட்டதாகவும் அமைச்சர் வேறு ஒரு சட்டையைக் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் 3-2-16 தேதியிட்ட இதழில் செய்தி வெளியாகி இருக்கிறது. அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. இது அமைச்சரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் செய்தியாகும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொத்தல் சாலைகள்!
பழைய மகாபலிபுரம் சாலை திருப்போரூர் முதல் செங்கல்பட்டு வரை 27 கிலோ மீட்டர் தூரம் உடையது. தாம்பரத்தைத் தொடாமல் சென்னைக்குள் வருபவர்கள், சென்னையை விட்டுச் செல்பவர்கள் பயன்படுத்தும் சாலை அது. சமீபத்திய மழை, வெள்ளம் காரணமாக அது, பெரும் பொத்தல் ஆகிவிட்டது. ஆனால், அதை நெடுஞ்சாலைத் துறை கண்டுகொள்ளவே இல்லை. ‘‘நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை சீரமைப்புக்காகப் பலகோடி ரூபாயைக் கேட்டு வாங்கினார்கள். ஆனால், சாலையை எங்கே போட்டார்கள்?” என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்!

Similar topics
» மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
» மிஸ்டர் கழுகு: தயாராகிறது தீவுத்திடல்!
» மிஸ்டர் கழுகு: பண கஜானாவை காட்டிக்கொடுப்பது யார்?
» மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!
» மிஸ்டர் கழுகு: பெங்களூரு பிரளயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum