TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

5 posters

Go down

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? Empty ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Post by மாலதி Sun May 30, 2010 6:45 pm

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? 1
அரிதரிது
மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடின்றி பிறத்தல் அதனினும்
அரிது என்பது அவ்வையார் கருத்து. மனிதப் பிறப்பில் குறைகள் எதுவுமின்றி
பிறப்பது நன்று. ஆனால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகள்
அக்குழந்தைகளையும் அவர்தம் பெற்றோர்களையும் கடும்
துன்பத்திற்குள்ளாக்குகிறது.

பொதுவாக கண் பார்வை குறைபாடு,
செவிட்டுத் தன்மை, உடல் உறுப்புகள் குறைபாடு ஆகியவை உடற்குறைகள்
எனப்படும். இவற்றோடு மிக முக்கியமான இன்னொன்று மனவளர்ச்சி குறைபாடு ஆகும்.
இத்தகைய குறைகள் கொண்ட குழந்தைகளை ஊனமுற்றோர் என்றும் உடற்-மன
குறையுடையோர் என்றும் அழைத்து வந்தோம். ஆனால் தற்போது இவர்கள் அனைவரும்
மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

உடற்குறைபாடுகள்
குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின்
இடையில் ஏற்படலாம். பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு
மனப்பான்மை போன்ற மனப்பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட
குழந்தைகளை விட குறைவாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்
நினைப்பது போல மிகவும் கஷ்டமானது அல்ல. மாற்றுத்திறனாளிகள் என்ற
பெயருக்கேற்ப அவர்களுக்கு எதேனும் வேறு சிறப்பு திறன்கள் இருக்கும். ஒரு
கதவு மூடினால் இன்னொரு கதவு திறகும் என்பது போல கண் பார்வை
குறையுடையோருக்கு காது மிக நன்றாக கேட்கும். காது கேட்காதவர்களுக்கு
கூர்நோக்கும் திறன் இருக்கலாம். எனவே உடற்குறையுடைய குழந்தையினிடத்தில்
உள்ள மாற்றுத்திறனை பெற்றோர் கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்த வேண்டும்.
ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல்
எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் பிறரோடு பழகும் நாட்டமுள்ள
குழந்தைகளாகவும், தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும்.
நிறைய ஊனமுற்ற குழந்தைகள் பிற்காலத்தில் கஷ்டப்படுவது தன்னம்பிக்கை
இன்மையால் தான். கண் தெரியாவிட்டால் தடவி படித்துக் கொள்ளலாம். ஓர் ஆள்
உதவிக்கு வைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து கொள்ளலாம். காது
கேட்காவிட்டால் ஒரு கருவி மாட்டி கேட்டுக் கொள்ளலாம். கால் இல்லாவிட்டால்
மரக்கால் வைத்து நடக்கலாம், ஓடலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் இவை
எதையுமே செய்ய இயலாது.

சில ஊனமுற்ற குழந்தைகள் வளர வளர தங்கள்
ஊனத்தை ஏற்க மறுத்து சாதாரணமானவர்களை விட அதிக திறமையுடன் நடந்து கொள்ள
முயற்சிப்பார்கள். அதனால் பிறரின் வசைவுக்கும் ஆளாவார்கள். மொண்டிக்கு
முந்நூறு குறும்பு என்று கூறுவது இதனால்தான். ஊனமுற்றவர்கள் தங்கள் உடலின்
குறையை மனதளவில் ஏற்க மருப்பதால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.
எல்லா ஊனமுற்ற குழந்தைகளுக்கும் தனக்களிக்கப்பட்ட உடலை குறையோடு ஏற்றுக்
கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்க பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே
முயற்சிக்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அதிகமாக
சொல்லிக் கொடுக்க வேண்டியவர்கள், செய்து காண்பித்து பயிற்சி கொடுக்க
வேண்டியவர்கள், எதுவுமே செய்ய முடியாத மிக குறைந்த மன வளர்ச்சி
கொண்டவர்கள் என மூன்று பிரிவாக பிரிக்கலாம். இதில் சொல்லிக் கொடுத்து
மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக முயற்சி எடுக்க
வேண்டும். அவர்களுக்காக அதிக நேரம் செலவிட வேண்டும். தொடர்ந்து
அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருப்பதன் மூலம் சாதாரண குழந்தைகள்
போலவே அவர்களை வளர்க்கலாம். பயிற்சி கொடுத்து மேம்படுத்த
வேண்டியவர்களுக்கு உளவியலரின் உதவியை நாடி சரியான பயிற்சி கொடுத்து
அவர்களை மேம்படுத்த வேண்டும். ஒன்றுமே செய்ய முடியாத குழந்தைகளை போற்றி
பாதுகாத்து வளர்க்க வேண்டும். அவர்களின் இறுதிக்காலம் வரை நலமுடன் இருக்க
ஆவன செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை.

ஊனமுற்ற, மன வளர்ச்சி
குறைந்த குழந்தைகளின் பெற்றோர் தாழ்வு மனப்பான்மையும், செய்வதறியா
மனநிலையும், அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். இதன்
காரணமாக சிறிது காலம் ஊனமுற்ற குழந்தைகளை பற்றி கவலைப் பட்டு விட்டு
பின்பு பற்றில்லாமல் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதன் காரணமாகவே பல
ஊனமுற்றவர்கள் பிற்காலத்தில் முன்னேற்றமின்றி தாழ்ந்த நிலையில் உள்ளனர்.
எனவே ஊனமுற்ற குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகுந்த தன்னம்பிக்கை
கொண்டவர்களாக மாறிவிட வேண்டும். குழந்தைகளுக்காக அதிக சிரத்தை எடுத்துக்
கொள்ள வேண்டும். ஊனமுற்றவர் பற்றி நிறைய விவரங்களை தேடிச் சென்று பெற
வேண்டும். குறையுடையோர் நிறைவடைய உதவ வேண்டும். மண் சரியில்லை என்றாலும்
அதை வீணாக்குவதும் பானையாக்குவதும் குயவனின் கையில் தானே உள்ளது!.thanks:http://gestaltselvaraj.blogspot
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? Empty Re: ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Post by kalairaja Sun May 30, 2010 9:41 pm

உங்களின் பார்வைகள் சீர்திருத்த பார்வைகள்...
இந்த பார்வைக்கும்,பார்த்ததை,படித்ததை தந்தமைக்கும் நன்றி...
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? Empty Re: ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Post by ஜனனி Sun May 30, 2010 10:38 pm

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? 917304 ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? 135634
kalairaja wrote:உங்களின் பார்வைகள் சீர்திருத்த பார்வைகள்...
இந்த பார்வைக்கும்,பார்த்ததை,படித்ததை தந்தமைக்கும் நன்றி...
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? Empty Re: ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Post by tamilparks Mon May 31, 2010 12:17 pm

Very Happy
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? Empty Re: ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Post by siva1 Mon May 31, 2010 7:43 pm

ஆச்சரியம்
avatar
siva1
உதய நிலா
உதய நிலா

Posts : 3
Join date : 31/05/2010

Back to top Go down

ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி? Empty Re: ஊனமுற்ற குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum