TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி

2 posters

Go down

ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி Empty ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி

Post by ஜனனி Sun May 30, 2010 7:34 am

கோல்கட்டா : "மேற்கு
வங்கத்தில் நடந்த ரயில் விபத்து, எனக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட
அரசியல் சதி. இதன் பின்னணியில் உள்ளவர்களை வெளிஉலகுக்கு அடையாளம் காட்டும்
வகையில், இந்த விபத்து குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'
என, ரயில்வே அமைச்சர் மம்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கம், மிட்னாபூர்
மாவட்டத்தில், ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ்
ரயில், நேற்று முன்தினம் அதிகாலை நக்சலைட்களின் நாசவேலை காரணமாக விபத்தில்
சிக்கியது. இதில், 78 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப்
பணிகள் நேற்றும் தொடர்ந்தன. விபத்தில் அதிகம் சேதமடைந்த எஸ்-5, எஸ்-6
பெட்டிகளில் இருந்து, மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து,
விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. விபத்தில் முற்றிலும் உருக்குலைந்த
எஸ்-5 பெட்டியில், மேலும் சில உடல்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த உடல்
களை மீட்பது சிரமமாக உள்ளது. இதனால், விபத்தில் பலியானோரின் எண்ணிக் கை
மேலும் அதிகரிக்கக் கூடும். சேதமடைந்த பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து
அப்புறப்படுத்தும் பணியும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணியும் இன்னும்
முடிவடையவில்லை. இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து இயங்குவது
தாமதமாகும். இந்த வழித்தடத்தில் செல் லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்
ளன. சில ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள் ளன. இவ்வாறு
அதிகாரிகள் கூறினார்.

மேற்கு வங்க மாநில உள்துறை
செயலர் சமர் கோஷ் கூறுகையில், ""தண்டவாளத்தில் இருந்த "பிஷ் பிளேட்'கள்
அகற்றப்பட்டதே, விபத்துக்கான காரணம் என, முதல்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது,'' என்றார். மருத்துவமனையில் பதட்டம்: ரயில் விபத்தில்
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அடையாளம் காணப்படாத உடல்கள், மிட்னாபூர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் அதிகமானோர் பலியாகி இருப்பதால், அனைத்து உடல்களையும் அங்கு
வைக்கும் அளவுக்கு போதிய வசதி இல்லை. இதனால், உறவினர்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர். மருத்துவமனையில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. விபத்தில்
காயமடைந்த மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிலரும், மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் ரயிலில் வந்த பெற்றோர் பலியாகி
விட்டதால், இந்த குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பமும்
ஏற்பட்டுள்ளது. விபத்தில் தாயாரை பறிகொடுத்த அதிர்ச்சியில், ருப்சா என்ற
ஆறு வயது சிறுமிக்கு பேச்சு வரவில்லை.

விபத்தில் சிக்கி, சிறிய
காயத்துடன் உயிர் தப்பிய இரண்டு வயது குழந்தை, மிட்னாபூர் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்தது. இது யாருடைய குழந்தை என தெரியாமல், அதிகாரிகள்
குழப்பம் அடைந்தனர். இந்த குழந்தையின் புகைப்படம் "டிவி'யில்
ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, இந்த குழந்தையின் மாமா, மருத்துவமனைக்கு
வந்து அடையாளம் காட்டினார். அந்த குழந்தையின் பெயர் சவுகத் அலி என,
தெரியவந்தது.

மம்தா புகார்:
விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த ரயில்
விபத்து, எனக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் சதி. உள்ளாட்சி
தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், விபத்து நடந்துள்ளது
பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக ஒரு சிலர்,
இந்த விபத்தின் பின்னணியில் இருந்துள்ளனர். இவர்களை வெளியுலகுக்கு
அடையாளம் காட்ட வேண்டுமெனில், இந்த விபத்து குறித்து சி.பி.ஐ.,
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்
கொண்டுள்ளது. "பிஷ் பிளேட்'கள் அகற்றப்பட்டதால் விபத்து நடந்ததாக
கூறப்படுவது தவறு. விபத்து நடந்தவுடன் நான், மீட்புப் பணிகளை பார்வையிடச்
சென்றேன். அந்த நேரத்தில் சிலர் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
இவர்கள் அரசியல் நடத்துவதற்கு ரயில்வே தான் கிடைத்ததா? இவ்வாறு மம்தா
கூறினார். இதற்கிடையே, விபத்து தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல்
தகவல் அறிக்கையில், அடையாளம் தெரியாத நபர்களின் சதி காரணமாக விபத்து
நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி Empty Re: ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி

Post by kalairaja Sun May 30, 2010 11:14 am

சதியா ?இல்லை விதியா ?
இப்படி பட்ட அரசியல்வாதிகளை,நாம் பெற்ற விதியா ?
இல்லை மொழிக்காக,மண்ணுக்காக போராடும்,குழுக்கள்
இப்படி பொதுமக்களை,பலிக்காடா செய்து வருவதை ,எப்படி
சொல்வது ?விதியா ,இவர்கள் செய்த சதியா ?

கேள்விகள் தான் இன்னும் ...............பதில் இல்லாமல்...............
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum