Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காங்கிரஹூக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி
Page 1 of 1
காங்கிரஹூக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி
கொல்கத்தா, மார்ச் 17: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு
ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ்
தலைவருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது
காங்கிரஸூக்கு ஒரு உறுப்பினர் பதவியை திரிணமூல் அளித்தது. அதேபோல இந்த முறையும்
மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரைப் பெறலாம் என்று
காங்கிரஸ் எண்ணியிருந்தது.
காங்கிரஸூக்கு அதிர்ச்சி: இந்நிலையில் மேற்குவங்கத்தில் காலியாகும் 5
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் 4 இடங்களில் தனது கட்சியில் இருந்து வேட்பாளர்களை
நிறுத்தி காங்கிரஸýக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் மம்தா. மீதமுள்ள ஓர் இடத்தில் 61
எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கூட்டணி பெறும்.
3 பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு: இப்போது மத்திய கப்பல் துறை இணையமைச்சராக
உள்ள முகுல் ராய்க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கு
பத்திரிகையாளர்கள் குணால் கோஷ், நதீம் உல் ஹக், விவேக் குப்தா ஆகியோர்
போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவருமே தங்கள் வேட்பு மனுவை பேரவைச் செயலரிடம் தாக்கல்
செய்துவிட்டனர். அப்போது மம்தாவும் உடன் இருந்தார். மேற்கு வங்கம் உள்பட பல்வேறு
மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 30-ல் தேர்தல்
நடைபெறவுள்ளது.
திரிணமூல் கட்சியின் கொள்கை: வேட்பு மனு தாக்கலின் போது மம்தா கூறியது:
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை கல்வியாளர்கள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள்,
ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கொடுப்பது என்ற கொள்கையை திரிணமூல்
காங்கிரஸ் கடந்த காலங்களில் கடைபிடித்து வந்திருக்கிறது.
இப்போது தேர்வு செய்யப்படுபவர்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் நலனுக்காகப்
பாடுபடுவார்கள். ஏனெனில் இவர்கள் அனைவருமே சமூகத்தையும், சாமானியர்களின்
பிரச்னைகளையும் நன்கு உணர்ந்தவர்கள். எனவே மக்கள் நலனுக்காக கடுமையாக உழைப்பார்கள்
என்றார் மம்தா.
மம்தாவின் இந்த முடிவு காங்கிரûஸ அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு
வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 42 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 7
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலே அவர்கள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற
முடியும். ஆனால் காங்கிரஸýக்கு மம்தா ஆதரவு வழங்கவில்லை. மாநிலங்களவைத் தேர்தல்
குறித்து கூட்டணியில் உள்ள காங்கிரஸிடம் அவர் கலந்தாலோசிக்கவும் இல்லை.
மம்தாவிடம் சரணடைவதா? மம்தா தங்களை ஒரு பொருட்டாகக் கருதாததால் கடும்
அதிருப்தி அடைந்துள்ள மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஓ.பி.மிஸ்ரா, காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மம்தாவை கடுமையாக விமர்சித்துள்ளார். தேசிய கட்சியான காங்கிரஸூடன்
மாநிலத்தில் கூட்டணியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ், மனம்போன போக்கில் முடிவுகளை
எடுப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. எனவே மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும்
வேட்பாளரை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாம் அவர்களிடம் சரணடைந்து
விட்டதுபோலாகிவிடும் என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பே அதிகம்: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு,
ரயில்வே பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு, மேற்கு வங்கத்துக்கு நிதியளிக்கவில்லை என்ற
குற்றச்சாட்டு என ஏற்கெனவே மத்திய அரசுக்கும், காங்கிரஸýக்கும் பல்வேறு விஷயங்களில்
மம்தா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர், மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசியதை விட
அதன் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததே அதிகம்.
கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியே பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிராக
எதிர்க்கட்சிகளுடன் கைகோத்து செயல்படுவது காங்கிரஸýக்கு ஏற்கெனவே தலைவலியை
ஏற்படுத்தியுள்ளது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மம்தா பானர்ஜி உண்மை முகம்
» சிங்கூர் நில வழக்கில் விவசாயிகளுக்குத்தான் வெற்றி: மம்தா பானர்ஜி
» ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி
» சீர்திருத்தம் என்ற பெயரில் கொள்ளை: மம்தா பானர்ஜி
» நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கோபத்துடன் வெளியேறிய மம்தா பானர்ஜி
» சிங்கூர் நில வழக்கில் விவசாயிகளுக்குத்தான் வெற்றி: மம்தா பானர்ஜி
» ரயில் விபத்தில் சதி : சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் மம்தா பானர்ஜி
» சீர்திருத்தம் என்ற பெயரில் கொள்ளை: மம்தா பானர்ஜி
» நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கோபத்துடன் வெளியேறிய மம்தா பானர்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum