Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலண்டனில் இலங்கை சனாதிபதிக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்-காணொளி -படங்கள்-
Page 1 of 1

பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பின் தற்போதைய தலைவரான சிங்களப் பேரினவாதி சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனவை எதிர்த்துப் ஆயிரக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் மாபெரும் போராட்டத்தை நடாத்தினார்கள்
இன்று மார்ச் 9ஆம் நாள் மாலை 5 மணிக்கு லண்டன் Pall Mall இலுள்ள Marlborough House முன்பாக அணிதிரண்ட தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு ‘ பிரித்தானியாவே சிறீலங்காவை புறக்கணி’, ‘பொதுநலவாயஅமைப்பிலிருந்து சிறீலங்காவை விலக்கு’, ‘சிறீலங்கா அரசுத்தலைவர் இனப்படுகொலைக் குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி ‘ என்ற கருத்துகளை வெளிப்படுத்தும்விதத்தில் அமைந்த “Britain Britain say no to Sri Lanka”, ”commonwealth suspend Sri Lanka”, “Sri Lankan president wanted for genocidal crimes” என்ற கொட்டொலிகளை ஆவேசத்துடன் எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் சார்பாளர்களும் ஒன்று கூடும் விழாவிலே அவ்வமைப்பின் தலைமைப்பதவி வகிக்கும் தமிழினக் கருவறுப்பாளன் மைத்திரிபால சிறீசேன கலந்து கொள்ள வந்தபோது அதனை எதிர்த்தே , பிரித்தானியாவின் பல பகுதிகளிலுமிருந்து வந்த பெருந்திரளான தமிழர்கள் உணர்வோடு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமிழினப் படுகொலையாளன் மகிந்தவை அகற்றவே தமிழ் மக்கள் தமது வாக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்பதையும் தமிழினக் கருவறுப்பைத் தொடர்ந்து நடாத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் அதிபரான மைத்திரி பால சிறீசேனவை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பதையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் பெருந்திரளான தமிழ்மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழீழ மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியம் பற்றியும் மாவீரர்களின் ஈகம் பற்றியும் பேசி, மக்களை ஏமாற்றிப் பதவியேற்ற பின் சிங்கள இனவாத அரசின் செயற்திட்டங்களுக்குத் தற்போது ஊதுகுழல்களாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் மீதும் ,சிங்கள இனவாதத்திற்குத் துணை போகும் சில தமிழ் ஊடகங்கள் மீதும் கடுஞ்சினம் கொண்டவர்களாகப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
புலம்பெயர் தமிழ் மக்கள் லண்டன் வந்திருக்கும் மைத்திரிக்கு எதிராகப் போராட்டம் நடாத்தி சிங்கள அரச செயற்பாடுகளையும் தென்னிலங்கை சிங்கள மக்களையும் குழப்பவேண்டாம் என சுமந்திரன் புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டமை தொடர்பாகப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்தனர்.
இன்றைய நாளில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையாளன் மைத்திரிக்கெதிரான போராட்டத்தைக் குழப்பும் வகையில் சிறீலங்காவில் சில தமிழ் ஊடகங்களில் கூட பொய்ப்பரப்புரைகள் முன்வைக்கப் பட்டபோதும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் சார்பாளர்களின் வாகனங்களுடன் சிறீலங்காவின் தமிழினப்படுகொலையாளன் மைத்திரிபால சிறிசேனவின் வாகனமும் சென்றபோது மக்கள் மிக ஆவேசமாக கொட்டொலிகளை எழுப்பினர்.
வேலைநாளாக இருந்தபோதிலும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பெருமளவில் தமிழ்மக்கள் கலந்துகொண்டனர்.இன்றைய போராட்டத்தில் இளையோர் பெருமளவில் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை மணி7.30 அளவில் இன்றைய போராட்டம் முடிவடைந்தது
ஆட்சிமாற்றம் என்ற போர்வைக்குள் அரச பயங்கரவாதத்தையே மைத்திரியும் கட்டவிழ்த்துள்ளார் என்பதையும் வல்லாதிக்க அரசியல் சதுரங்கத்திற்குப் பலியாகாமல் தாயகமாம் தமிழீழத்தை மீட்டெடுக்கும் வரை தமிழர்கள் உறுதியோடு தொடர்ந்து போராடுவார்கள் என்பதையும் சிங்களப் பேரினவாத அரசின் தற்போதைய அதிபர் மைத்திரிக்கெதிராக நடாத்தப்பட்ட இன்றைய போராட்டம் பறை சாற்றியது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» மோடிக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா உருவப்பொம்மை எரிப்பு (படங்கள்)
» இலங்கை கிரிகெட் அணிக்கு எதிராக இளையோர் போராட்டம்: காணொளி !
» இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீது இலண்டனில் வழக்கு
» பிரிட்டனுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் _
» வழக்குரைஞர் புகழேந்தி தலைமயில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum