TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க

Go down

மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க Empty மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க

Post by ஜனனி Thu May 27, 2010 7:15 am

மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின்
எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க சர்வதேசமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வேண்டுகோள்



வவுனியா "மனிக்பாம்"முகாமுக்குச் செல்லவிடாது தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பன்னிருவரையும் தடுத்த இலங்கை
அரசாங்கத்தின் எதேச்சாதிகாரச் செயலை, தக்கவாறு கவனத்தில் கொள்ளுமாறு
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
விடுத்த கூட்டறிக்கை யிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை முகாம்களில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப் பதற்கு விடாது தடுத்தமை ஜனாநாயக உரிமைகளை
கேவலப்படுத்தி, ஜனநாய முறைமைகளையும் உதாசீனம் செய்வதாகும் என்றும் அவர்கள்
தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளவை வருமாறு :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினு டைய 12 நாடாளுமன்ற உறுப்பினர்களால்
வன்னியில் பொதுமக்கள் வைத்திருக்கப் பட்டிருக்கின்ற பல முகாம்களையும்,
தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தடுப்பு
முகாம் களையும், மீள் குடியேற்றமும் புனர்வாழ் வும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகின்ற பிரதேசங்களையும் மக்களையும்
பார்வையிடுவதற்காக விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
உண்மையான நிலையை அறிந்து கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம். இந்த விஜயம்
குறித்து மாண்புமிகு ஜனா திபதிக்குக் கடிதங்கள் மூலமாக நாடாளு மன்றக்
குழுவின் தலைவர் இரா. சம்பந் தன் அவர்கள் அறிவித்து இந்த விஜயத் திற்குத்
தேவையான ஒழுங்குகளைச் செய்து உதவும்படியாகக் கேட்டிருந்தார். இது
சம்பந்தமாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியின்
செயலாளர் லலித் வீரதுங்க அவர்களுடன் தொடர்பாடலை வைத்திருந்தார்.
அதன் பிரகாரம் இந்த விஜயம் மே 21 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மே 22 சனி 23
ஞாயிறு தொடர இருந்தது. ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்
களுக்கு இத்தகவல் திருவாளர் சம்பந்த னால் அறிவிக்கப்பட்டு இந்த
விஜயத்திற்கு அவர் தனது முற்றுமுழுதான சம்மதத் தைத் தெரிவித்தார். இதன்
மூலம் இவ் விஜ யத்திற்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர் களின் சம்மதமும்
இருந்தது என்பது தெளிவு.
இந்த நிலையில் மே 22 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர், பொதுமக்கள் வைக்கப்பட்டி
ருந்த சில முகாம்களில் ஒன்றான வலயம் 4 இன் வாசலை வந்தடைந்தனர். அங்கே
அதற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடி யர் இந்த முகாம்களுக்குள்ளே செல்வ
தற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பாதுகாப்புச்
செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த விஜயத்தைத் தடுக்கும்படியாகக் கட்
டளையிட்டிருக்கின்றார் என்றும் நாடாளு மன்றக் குழுவுக்குக் கூறினார்.
உடனடியாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் லலித்
வீரதுங்கவுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியபோது வீரதுங்க இந்த
விடயத்தைத் தான் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகக் கூறி, அதுவரைக்கும் நாடா
ளுமன்றக் குழுவினை அங்கேயே தரித்து நிற்கும்படியும் கூறினார். அந்த முகாம்
வாசலிலே சுமார் ஒரு மணிநேரம் காத் திருந்த பின்னர் ஜனாதிபதியின் செயலாள
ரைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற் சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்
நிலையில் திரு. இரா. சம்பந்தன் அவர் களுடன் தொடர்புகொள்ளக்கூடிய தொலை பேசி
இலக்கங்களை ஜனாதிபதிச் செயல கத்திற்குக் கொடுத்துவிட்டு தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதன்
பின் னர் திரு. இரா. சம்பந்தனோடு எந்தவித மான தொடர்பும்
ஏற்படுத்தப்படவில்லை.
இந்த முகாம்களிலே தடுத்துவைக்கப் பட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்கு அவர்
களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி களைத் தடுக்கும் இச்செயலானது அந்த
மக்களுடைய நியாயபூர்வமான ஜனநாயக உரிமைகளைக் கேவலப்படுத்துகின்ற ஒரு
செயலாகும். அத்தோடு முழு ஜனநாயக முறைமையையும் உதாசீனம் செய்யும் ஒரு
செயலாகவும் இது அமையும். பாரிய பல விடயங்களை ஒளித்து மறைக்க விரும்பு
கின்றவர்களுடைய சர்வாதிகார செயல் இது என்பது தெளிவாகிறது. இலங்கை யிலும்
இலங்கையிலிருக்கின்ற எல்லா மக் களையும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன்
பல்வேறு அங்கங்களை உள்ளடக்கிய சர்வதேசம் முழுவதையும் கட்டுக்கடங் காத இந்த
எதேச்சதிகாரச் செயலைத் தங் களுடைய முழுமையான கவனத்திற்கு
எடுத்துக்கொள்ளுமாறு நாம் வேண்டுகின் றோம்.
இந்த சர்வாதிகாரச் செயலை நாம் வன் மையாகக் கண்டிப்பதுடன் இதனை உடன டியாக
நிவர்த்தி செய்வதற்குத் தக்க நட வடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத் திடம்
கோருகிறோம் என்றுள்ளது.
http://www.uthayan.c...hayan1274704213
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum