TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்!

2 posters

Go down

நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! Empty நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்!

Post by mmani Tue Jan 27, 2015 3:16 pm

ஷாப்பிங், சினிமா, கோயில், குடும்ப விழாக்கள்... என்று மணிக்கணக்கில் நீளும் நிகழ்வுகளுக்காக செல்லும்போது, சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்களில் பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது. 'பாத்ரூம் சரியில்லை...', 'நேரமே இல்லை...', 'பாத்ரூமே இல்லை... ரோட்டுலயா போகமுடியும்?' என்பது போன்ற கேள்விகளைத் தங்கள் தரப்பு நியாயங்களாக எழுப்பி, தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் இவர்கள் தவறுவதில்லை. இவர்களில் நீங்களும் ஒருவரா?
[You must be registered and logged in to see this image.]"இத்தகைய போக்கு, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி உங்களை இழுத்துச் சென்றுவிடும்'' என்று உங்களை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கிறார்... சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைமை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பி.சௌந்தரராஜன்.
''சிறுநீரக நோய்த் தொற்று என்பது ஆண்களைவிட பெண்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக் காரணம், வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கிக்கொள்ளும் பழக்கம்தான்!'' என்று சொல்லும் டாக்டர், சிறுநீர் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள், முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள், தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத் தொற்று நீக்கும் உணவு வகைகள், இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள் எனத் தொடர்ந்தார்.
ஆரோக்கியத்தின் முதல் படி... சீரான சிறுநீர் வெளியேற்றம்!
''உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று, இயல்பாக சிறுநீர் கழிப்பது. உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உடற்கழிவுகளுடன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறுநீர். தினமும் தேவையான அளவு நீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவைக்காமல் வெளியேற்றுவதும் ஆரோக்கியத்தின் முதல் படி. வெளியேற்றாமல் தேக்கும்போது, சிறுநீர்ப் பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். இதையே தொடர்ந்து செய்யும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும். எனவே, சிறுநீர் வந்தால் உடனடியாகக் கழிக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?!
கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரும், மற்ற பருவநிலைக் காலங்களில் 2 லிட்டர் தண்ணீரும் போதுமானது. குடிநீரைத் தவிர, பால், பழச்சாறு, காய்கறி போன்றவற்றில் இருந்தும் உடலுக்குத் தேவையான நீர் கிடைத்துவிடும். அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில் இருப்பவர்கள், ஏ.சி. வாகனங்களில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம் எடுக்காமல் இருக்கலாம். என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]தாகம் எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட கூடுதலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண்ணீர் குடிப்பது நல்லது என்று பிறர் சொல்வதற்காக இஷ்டம்போல குடிப்பது நல்லதல்ல. இப்படிக் குடிப்பது, சிறுநீரகத்துக்கு கூடுதல் பளு தருவதாகத்தான் அமையும். கூடவே, இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இதன் காரணமாக இதயமானது ரத்தத்தை சரிவர 'பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளிகளும் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும்போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும் என்பதால், அவர்களை மட்டும் மருத்துவர்கள் அதிக நீர் அருந்தச் சொல்வோம்.
சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள்!
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய சுத்தமின்மை, தாம்பத்யம்... என்று பல காரணங்களால் சிறுநீர்த் தொற்று ஏற்படக்கூடும். சாதாரணமாக 'யூரினரி இன்ஃபெக்‌ஷன்’ என்று இதைச் சொல்லி, எளிதாகக் கடப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்னைகளின் பட்டியல் நீளம். நீர்க்கடுப்பாக ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வெளியேறும்போது தாங்க முடியாத வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் உற்பத்தியாவது வரை கலங்கவைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், முதியவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ் பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம்... ஜாக்கிரதை! சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், சிறுநீர்த் தொற்று ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், 5 - 15 வயது வரை மீண்டும் மீண்டும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ ஆலோசனை நிச்சயம் பெற வேண்டும். குறிப்பாக, ஆண் குழந்தைகள். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தப் பிரச்னை தீவிரமாக இருக்கும்.
யூரிக் ஆசிட் உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பீர், வொயின் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப் பிரச்னைக்கான வாய்ப்பை அது அதிகரிக்கும்.
சிறுநீர்த் தொற்றைத் தவிர்க்க!
சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட பின்னும் சிறுநீரை அடக்கக் கூடாது.
நன்றாகக் கை கழுவுவது மிகமிக முக்கியம். குழந்தைகளுக்கு நகம் வெட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு எனும் வகையில் நாப்கினை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்குப் பிறகு, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தேவையான சிகிச்சையுடன் சிறுநீர் பெருக்கி உணவு வகைகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றை எல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, கிரேன்பெரி ஜூஸ் (cranberry juice) நல்ல பலன் தரும். உலகம் முழுக்கவே 150 வருடங்களுக்கு முன் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு இதுவே மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது''என்று விளக்கங்களைத் தந்த டாக்டர், ''சிறுநீரகங்கள்தான் நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலை. நம் கழிவறையில் பிரச்னை என்றாலோ, பழுதானாலோ, வீடே என்ன கதிக்கு ஆளாகிறது? நம் உடலின் கழிவறையில் பிரச்னை என்றால், உடல் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்!'' என்று கேட்டார்.
'இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்காமல், இனி 'நம்பர் ஒன்’ பிரச்னைக்கு கொடுங்கள் நம்பர் ஒன் முக்கியத்துவம்!


தினமும் எவ்வளவு தண்ணீர்?
கோடை காலத்தில் 3 லிட்டர்.
மற்ற பருவ காலங்களில் 2 லிட்டர்.
ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்களில் இருப்பவர்கள் 1  2 லிட்டர்
(தாகம் எடுக்காவிட்டாலும்)


எவ்வளவு சிறுநீர்?
ஆரோக்கியமான மனிதன் 4  6 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழித்தால், அது ஃப்ரீக்வன்ஸி என்கிற வகையில் வரும். (அதேசமயம் அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. வாகனங்கள் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை வருவதில் தவறில்லை). சிறுநீரக டி.பி, குடி, சிகரெட், முதுமை, சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஃப்ரீக்வன்ஸி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சிலர் ஏழெட்டு மணிநேரம் கூடத் தண்ணீரே குடிக்காமல் இருப்பார்கள். இதனால், வெளியேற வேண்டிய கழிவு தேங்கி யூரினரி இன்ஃபெக்‌ஷன், எரிச்சல் ஏற்படும். அதேபோல, ஒரு நாளில் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுவதுதான் இயற்கை. மூன்று லிட்டருக்கும் மேல் சிறுநீர் வெளியேறினால், அது பாலியூரியா (polyuria). அதாவது, அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும் நோய். பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் இருநூறு மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதுமானது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்! Empty Re: நம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்!

Post by மாலதி Thu Jan 29, 2015 8:33 am

hmmm hmmm hmmm hmmm


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum