Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உயர் பாதுகாப்பு எண் பலகை டெண்டர் தள்ளிப் போவதன் பின்னணி என்ன?
Page 1 of 1

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக உத்தரவின்படி, வாகனங்களில், உயர்
பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்த, தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம்
வழங்குவதில், இழுபறி தொடர்கிறது.டில்லி, சண்டிகர், மகாராஷ்டிரா உள்ளிட்ட
மாநிலங்களில், உயர் பாதுகாப்பு எண் பலகைகள், படிப்படியாக
அமல்படுத்தப்பட்டுள்ளது.
தகுதிச் சான்று:உயர் பாதுகாப்பு எண் பலகைகளை வடிவமைக்கும்
நிறுவனங்கள், மத்திய சாலை ஆராய்ச்சி மையம் (சி.ஆர்.ஆர்.ஐ.,), "ஆட்டோமொடிவ்
ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா' (ஏ.ஆர்.ஏ.ஐ.,), வாகன ஆய்வு மற்றும்
வளர்ச்சி நிறுவனம் (வி.ஆர்.டி.இ., ), மத்திய இயந்திர பயிற்சி மற்றும் சோதனை
மையம் (சி.எப்.எம்.டி.டி.ஐ.,) ஆகிய நான்கு நிறுவனங்களில், ஏதாவது ஒரு
நிறுவனத்தின் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.நாடு முழுவதும் 18
நிறுவனங்கள் மட்டுமே, இந்த தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில்,
சென்னை நந்தனத்தில் உள்ள, "சைன்ஸ் இண்டியா லிமிடெட்' என்ற நிறுவனமும்
ஒன்று. தமிழகத்தை பொறுத்தவரை, இந்த ஒரு நிறுவனம் மட்டுமே, இதுவரை தகுதிப்
பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தள்ளிப் போன டெண்டர்:"உயர் பாதுகாப்பு எண் பலகைகள் பொருத்தும்
பணிக்காக, அக்., 21ம் தேதி ஒப்பந்த விண்ணப்பம் அளிக்கலாம். அன்று மாலையே
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு உத்தரவு
வழங்கப்படும்' என, முன்பு தெரிவிக்கப்பட்டது.அதன்பின், சில மாற்றங்களை
குறிப்பிட்டு, நவ., 15ம் தேதிக்குள், டெண்டர் விண்ணப்பங்களை அளிக்க
வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அந்த தேதியும் மாற்றப்பட்டு, நவ., 21ம்
தேதியை கடைசி நாளாக குறிப்பிட்டு, டெண்டர் விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன.ஆனால், எத்தனை விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டன; அவற்றில்
தகுதியான நிறுவனம் எது என்பதை, போக்குவரத்துத் துறை அறிவிக்கவில்லை.
பின்னணி என்ன?இதுகுறித்து, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பெயர் வெளியிட விரும்பாத அலுவலர் ஒருவர் கூறியதாவது:தமிழகம்
முழுவதும், அக்டோபர் மாத நிலவரப்படி, ஒரு கோடியே, 46 லட்சத்து, 40
ஆயிரத்து, 734 வாகனங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் ஒரே சமயத்தில் பதிவு எண்
பலகைகளை பொருத்துவதற்கு எளிதாக, ஆறு மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மண்டலத்திலும், 15 முதல், 20 வட்டார
போக்குவரத்து அலுவலகங்கள் சேர்க்கப்பட உள்ளன. பின்னர், மண்டல வாரியாக உள்ள
வாகனங்களின் எண் பலகைகளை மாற்ற திட்டமிடப்பட்டது.அதிக வருமானம் கிடைக்கக்
கூடிய திட்டம் என்பதால், பல்வேறு தரப்பினரும் போட்டி போடுகின்றனர். ஆனால்,
இவர்களில் பலரிடம் தகுதிச் சான்று இல்லை. இவர்கள் தகுதிச் சான்று
பெறுவதற்கு வசதியாக, டெண்டர் தேதி தள்ளிப் போகிறதோ என்ற சந்தேகம்
எழுந்துள்ளது. அதற்கேற்ப, டெண்டர் ஷரத்துக்களிலும், பல மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இருமுறை திருத்தம்:தமிழகத்தில், டெண்டர் கோரும்
நிறுவனங்களுக்கான விதிமுறைகள், இரு முறை மாற்றப்பட்டது. இது சில
நிறுவனங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் இருந்ததா என்ற, சந்தேகம்
எழுந்துள்ளது.
* டெண்டர் கோரும் நிறுவனம், ஆண்டுக்கு 40 கோடி ரூபாய்க்கு
வர்த்தகம் செய்திருக்க வேண்டும், என்ற விதி, 50 கோடியாக
உயர்த்தப்பட்டுள்ளது.
* இரண்டு நிறுவனங்கள் வரை கூட்டாக விண்ணப்பம் செய்யலாம், என்ற விதி, மூன்று நிறுவனங்கள் வரை கூட்டு வைப்பதற்கு மாற்றப்பட்டுள்ளது.
*
மாநிலம் முழுவதும், ஆறு டிவிஷன்களாக டெண்டர் வழங்கப்பட இருந்தது. தற்போது,
ஒரே நிறுவனம் தான் மாநிலம் முழுவதும் டெண்டர் பெற முடியும், என,
மாற்றப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட பல ஷரத்துக்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
- எஸ். கோவிந்தராஜ் -

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடை என்ன?- பட்டியலுடன் பலகை வைத்தது கோயில் நிர்வாகம்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதன் பின்னணி என்ன?
» வருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்! தடுமாறும் தமிழக அரசு
» உயர் போலீஸ் அதிகாரிகளின்ஆர்டர்லி, பி.எஸ்.ஓக்களுக்கு தடை: பாதுகாப்பு பணிக்கு அனுப்ப உத்தரவு; உள்துறை அமைச்சகம் அதிரடி..
» ஜெ., அடித்த ஹாட்ரிக்: குட்டிக்கதைகளின் பின்னணி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum