ராஜபக்சாவின் அனைத்து வீடுகளிலும் காவல் துறையினர் அதிரடிச் சோதனை!
ராஜபக்சாவின் அனைத்து வீடுகளிலும் காவல் துறையினர் அதிரடிச் சோதனை! 10401417_850444921678419_542392290116072225_n
புலம்புகிறது குள்ள நரி!
********************************
மு.வே.யோகேஸ்வரன்
******************************
இன்று அதிகாலை முதல்... அம்பாந்தோட்டையில் உள்ள முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சாவின் வீடுகளிலும்..ஆயுத தளபாட நிலையங்களிலும்..ஸ்ரீலங்கா காவல்துறையால் அதிரடியாக சோதனை நடாத்தப் பட்டது..!
அதில் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள் இதுவரை வெளியாக வில்லை..ஆனால்..ஒரு வீட்டில் நடத்தப் பட்ட சோதனையின் போது ராஜபக்சாவின் மூத்த மகனும்(நாமல்) அங்கே இருந்துள்ளார்..அவரால்.கோடி கோடியாக வாங்கிக் குவிக்கப் பட்ட..வெளிநாட்டுப் பொருட்கள்,அங்கே இருந்ததாக தெரிகிறது..அவை கைப் பற்றப் பட்டதாக, எந்த தகவலும் இல்லை..
ஆனால்..இலங்கை அரசுக்கு சொந்தமான ஆயுத தளபாட நிலையங்களில் இருந்த அநேக ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாக..தேடுதல் வேட்டியை நடாத்திய காவல் துறை அதிகாரி ஒருவர்..ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்..அவை அனைத்தும் ராஜபக்சாவுக்கு கீழ் இருந்து செயல் பட்டவையாகும்....தனது வீட்டில் நடத்தப் பட்ட தேடுதல் நடவடிக்கை ஓர்,அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று..முன்னாள்..அதிபர் .தன் வீட்டின் சாளரத்துக்குள் மறைந்து நின்று,,ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்(மறைந்திருந்து பேசும் மர்மம் என்ன..?)..தனது குடும்பம் 1931ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் இருந்து வருகிறது..ஆனால்..ஒருமுறையாவது இப்படி யாரும், தன் குடும்பத்தின் மீது அரசியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொள்ளவில்லை என்று அவர் கொக்கரித்துள்ளார்.. அதுசரி, முன்னாள் ஜனாதிபதி அவர்களே..அந்த 1500 கோடி ரூபாவை ஏன் அலரி மாளிகையில் வைத்துவிட்டு,அலறி அடித்துக் கொண்டு, மறந்து, எடுக்காமல் வந்தீர்கள்?நீங்கள் மறந்து விட்டதே..1500 கோடி என்றால் ..காணாமல் போன..அந்த ..13000 ஆயிரம் கோடியை எங்கே மறக்காமல் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளீர்கள்?
அப்படி என்றால் தமிழர்களைப் பொறுத்தவரை மிருகத் தனமாக நடந்து கொண்டது யார்?..ராஜபக்சாவால் அவரது ஆட்சிக் காலத்தில் பழி வாங்கப் பட்ட சிங்களவர்களே அவருக்கு எதிராக இன்று..பழி வாங்கும் களத்தில் நிற்கிறார்களே தவிர..தமிழர்களின் பழி வாங்கும் நடவடிக்கை..அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதோடு மட்டும் தற்காலிகமாக நின்றுள்ளது..ஆனால்,..தமிழர்கள் எப்போது தம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவருக்கு எதிராக தொடங்குவார்கள்..? என்று ஊகிக்க முடியவில்லை?